சமீப பதிவுகள்

செய்திப்பார்வை 27.06.2018

தலைப்புச்செய்திகள்

எர்டோகன் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றார்…!!!

ஈரானில் மக்களின் எதிர்ப்பு…!!!

அமெரிக்க உச்ச நீதிமன்றம் டிரம்ப் விதித்த தடையை அங்கீகரிக்கிறது…!!!

எர்டோகன் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றார்…!!!
ஜூன் 24 துருக்கியில் நடந்த அதிபர் தேர்தலில் தற்போது பதவியில் இருக்கும் ரெசிப் தாயிப் எர்டோகன் ஜனாதிபதியாக வெற்றிப் பெற்றுள்ளதால் இன்னுமொரு ஐந்து ஆண்டுகள் பதவி வகிப்பார்.
.
எர்டோகன் ஜனாதிபதியாகவும், 2028 வரை இரு ஐந்து ஆண்டுகளுக்கு கூடுதலாகவும் இருக்க முடியும். ஏனெனில் துருக்கியில் ஒருவர் இரு முறை மட்டுமே அதிபர் தேர்தலில் போட்டியிடலாம் என்ற விதிமுறை இருந்தாலும் அண்மையில் அவர் இயற்றிய புதிய சட்டத்தின் படி அவருக்கு இது தான் முதல் அதிபர் தேர்தல் என்பதால் அடுத்த தேர்தலிலும் போட்டியிட்டு வரும் 2028ம் ஆண்டு வரை அவரால் அதிபர் பதவியை வகிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
எர்டோகன் தற்போது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் அவரது அதிகாரங்கள் மேலும் விரிவாக்கியுள்ளது பதவியில் இருந்த காலத்தில், அவர் செய்த அரசியலமைப்பு திருத்தங்கள் நவீன துருக்கிய வரலாற்றில் மிக சக்தி வாய்ந்த ஜனாதிபதிகளில் ஒருவராக அவரை உருவாக்கியுள்ளது.
இது மட்டுமல்லாது எர்டோகன் தற்போது பாராளுமன்ற ஒப்புதல் இல்லாமல் தனது ஆணை மூலம், அமைச்சரவை உறுப்பினர்களை நியமித்தல், துருக்கி வரவுசெலவுத்திட்டத்தை எழுதுதல் மற்றும் நீதிபதிகள் நியமனம் செய்தல் – போன்ற அதிகாரத்தையும் கொண்டுள்ளார்.
மேலும், எதிர் தரப்பினரால் ஜனாதிபதி பதவியிலிருக்கும் எர்டோகனை விசாரிக்க தேவையான 360 சட்டமன்ற வாக்குகளை திரட்ட முடியாது அல்லது நாட்டின் மிக உயர் நீதிமன்றத்தில் அவரை விசாரிக்க அவர்களுக்கு மேலும் 400 வாக்குகள் தேவை.

 

ஈரானில் மக்களின் எதிர்ப்பு…!!!
ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் அரசுக்கு எதிர்ப்புகள் அரசுக்கு எதிரான குரல்கள் உச்சத்தை அடைந்துள்ளது, ஈரானின் தேசிய நாணயம் சரிந்துவிட்டதே இதற்கு காரணம். தலைநகரின் முக்கிய பெரும் பஜாரில் இருந்து ஆயிரக்கணக்கான வர்த்தகர்கள் 2012ல் இருந்து அரசுக்கு எதிரான மிகப்பெரிய எதிர்ப்புக்களில் பங்கு பெற்றனர். பல தசாப்தங்களுக்குப் பின்னர் பொருளாதாரத்தை புத்துயிரூட்டும் நம்பிக்கையில் அமெரிக்காவுடன் அணுசக்தி உடன்படிக்கைக்குள் தற்போது நடந்து வரும் மதகுருக்களின் ஆட்சி கைகோர்த்தது (நுழைந்தது). அணுசக்தி ஒப்பந்தம் இன்னும் அதிகமான பொருளாதார நன்மைகளை உருவாக்கும் என்று பெரிய வாக்குறுதிகளை அது அளித்தது. ஆனால் சமீபத்திய அணுசக்தி உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா 90,000 ரியாலிலிருந்து டாலருக்கு 43,000 ஆக உயர்ந்துள்ளது. 1979 ஆம் ஆண்டில் புரட்சி செய்து ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து மதகுருக்களின் ஆட்சி நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யத் தவறிவிட்டது, இப்போது அதன் பொருளாதாரம் படுத்தேவிட்டது. மதகுரு ஆளுமைகள் 2019ல் அதன் 40 வது ஆண்டு நிறைவை எட்டும் தருணத்தில், அதன் நிலை எப்பொழுதும் போலவே நிலையற்றதாகவே காணப்படுகிறது.

 

அமெரிக்க உச்ச நீதிமன்றம் டிரம்ப் விதித்த தடையை அங்கீகரிக்கிறது…!!!
அமெரிக்க ஜனாதிபதி டோனால்ட் டிரம்ப் முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளிலிருந்து முஸ்லிம்கள் அமெரிக்கவிற்க்குள் நுழைவதற்கு தடை விதித்திருந்தார். தற்போது உச்சநீதிமன்ற தீர்ப்பு அவருக்கு சாதகமாக அவரது தடையை அங்கீகரிப்பது போல் வந்துள்ளது. கீழ் நீதிமன்றங்கள் தடையுத்தரவை அரசியலமைப்பு சட்டமாக்குவதற்கு தடைவிதிருந்தது, ஆனால் அமெரிக்க உயர் நீதிமன்றம் இந்த முடிவை, 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் 4 நீதிபதிகள் அதிபர் டிரம்பின் உத்தரவுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தனர் 5ல்-4 பெரும்பான்மையான தீர்ப்பில் மாற்றியது. வெள்ளை மாளிகையில் நடைபெற்ற சந்திப்பில் அமெரிக்க எல்லை சுவரை உறுதியாக்க அதிபர் ட்ரம்ப் முன்மொழிந்த இந்த தீர்மானத்தை உயர்நீதி மன்றமும் அங்கீகரிப்பதை அவர் “மிகப்பெரிய மகத்தான வெற்றி” என பாராட்டினார்.
உயர் நீதிமன்றத்தின் இந்த தலைகீழ் ட்ரம்ப் நிர்வாகத்தின் வெற்றியாக கருதப்படுகிறது. ஈரான், லிபியா, சோமாலியா, சிரியா மற்றும் யமன் ஆகிய நாடுகளில் இருந்து முஸ்லிம்கள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

டிரம்ப் உச்சநீதிமன்றத் தீர்ப்பு நாட்டிற்கும் அரசியலமைப்பிற்கும் “பெரும் வெற்றி” என்று கூறியுள்ளார். “நாங்கள் கடுமையாக இருக்க வேண்டும், நாங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும், நாங்கள் பத்திரமாக இருக்க வேண்டும்,” என குடியரசுக் கட்சியின் தலைவர் அதிபர் ட்ரம்ப் செவ்வாயன்று அரசியலமைப்பு சட்டமியற்றுபவர்கள் கூட்டத்தில் கூறினார். “ஆளும் ஊடகங்கள் மற்றும் ஜனநாயகக் கட்சி அரசியல்வாதிகளின் அனைத்து தாக்குதல்களும் தவறு என்று நிரூபிக்கின்றன, மேலும் அவை மிகவும் தவறாகவும் மாறிவிட்டன,” என்று அவர் கூறினார். மேலும் அவர் கூறினார்: “நீங்கள் ஐரோப்பிய யூனியனைப் பார்த்தால், அவர்கள் இப்போது குடியேற்ற கொள்கைகளை கடுமையாக எதிர்த்து நிற்கிறார்கள், ஏனெனில் அவர்கள் அதிக மக்களை குடியமர்த்தியதால் எண்ணிக்கை எல்லை மீறி சென்று விட்டது. இதனால் அவர்கள் அதிக சிக்கலுக்கு ஆளாகி உள்ளனர்.

Comments are closed.