சமீப பதிவுகள்

முஸ்லீம் சமுதாய மக்களை காயப்படுத்தும் நிகாப் (முகத்திரை) மீதான தடை…!!!

நெதர்லாந்து நாட்டின் பாராளுமன்ற மேலவையில் சமீபத்தில் நடந்து முடிந்த வாக்கெடுப்பில் முஸ்லீம் பெண்கள் அணியும் நிகாப் மற்றும் அதுபோன்ற முகத்தை மறைக்கும் அனைத்து ஆடைகளுக்கும் தடை விதித்து சட்டம் கொண்டுவந்துள்ளனர்.

சட்டம் அமலுக்கு வரும் நிலையில், இனி பொது இடங்களில் “நிகாப் (முகத்திரை) அணியும் முஸ்லீம் பெண்களுக்கு அனுமதி இல்லை” மற்றும் “முகத்தை மறைக்க அனுமதி இல்லை” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் மக்கள் கூடும் இடங்களில் ஆங்காங்கே வைக்கப்படலாம். இத்தகைய சிகப்பு எச்சரிக்கை பதாகைகள் வைக்கப்படுவது நடக்குமோ இல்லையோ, ஆனால் இனி நிகாப் அணிந்த முஸ்லீம் பெண்கள் பாடசாலைகள், மருத்துவமனைகள், அரசு அலுவகங்கள் மற்றும் போக்குவரத்து வாகனங்களில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவர்கள் உள்ளே நுழைந்தால் வெளியேற்றப்படுவார்கள் இன்னும் அபராதமும் விதிக்கப்படுவார்கள்.

நடைமுறையில், நிகாப் அணிந்து பேருந்தில் பயணம் செய்யும் பெண் குற்றவாளி யாக கருதப்படுவார் ஆனால் குடிகாரனோ அல்லது பார்ட்டிக்கு செல்பவரோ மாஸ்க் அணிந்திருந்தால் அது குற்றமில்லை. தன் பிள்ளைகளை பள்ளியினுள் சென்று விடும் நிகாப் அணிந்த தாய் குற்றவாளி ஆனால் குளிருக்கு ஸ்கார்ப் அணிந்திருக்கும் பெண் குற்றவாளியல்ல. அதேபோல், நிகாப் அணிந்திருக்கும் பெண் மருத்துவமனைக்கு செல்ல அனுமதியில்லை. ஏனென்றால் அவள் முகங்களுக்கு முன்னாள் அணிந்திருக்கும் முகத்திரை.

அனைத்திற்கும் மேலாக, நிகாப் அணியக்கூடிய பெண்ணென்பவள் இனி பொதுவெளியில் அரசாங்க ரீதியாக தனிமைபடுத்தப்படுவாள். அதையும் மீறி வெளியவரும் பெண்களுக்கு அவர்கள் ஒதுக்கப்படுவதற்கும், கேலிசெய்ய படுவதற்கும் இன்னும் அவர்கள் தாக்கப்படும் அளவிற்கு ஆபத்து உள்ளது. நெதர்லாந்தில் முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரங்களை பல ஆண்டுகளாக அங்குள்ள அரசும் இதர அமைப்புகளும் செய்து வருவதை இங்கு குறிப்பிடவேண்டும்.

இது, வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டுமென்றால் – இதற்கு பெயர்தான் அடக்குமுறை. மதசார்பின்மை கொள்கையை தூக்கி பிடிக்கும் இவர்கள் “கருத்து சுதந்திரம்” “மத சுதந்திரம்” ஆகிய விஷயங்களை காற்றில் பறக்கவிட்டிருக்கிறது. இவை யாவும் வீண் வெற்று முழக்கங்களேயன்றி வேறில்லை என்பதற்கு இது போன்ற சம்பவங்களே சாட்சியாக இருக்கின்றன.

ஓ முஸ்லிம்களே!
இவர்கள் இவ்விஷயத்தில் காட்டும் தீவிரம், இன்னும் இந்த சட்டத்தில் உள்ள அம்சங்களை பார்க்கும் போது இஸ்லாத்திற்கு எதிராக இவர்களின் உள்ளங்களில் ஒளித்துவைத்திருக்கும் வெறுப்புணர்வு வெளிப்படுகிறது. இஸ்லாம் என்று வரும்பொழுது, அதில் அதிக தீவிரம் காட்டுபவர்களாகவும் இவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் கூறும் பாதுகாப்பு காரணங்கள் எல்லாம் வெறும் கண்துடைப்பு வாதங்கள்தான்.

சகோதரர்களே,

நமது முஸ்லீம் பெண்கள் தங்களின் அல்லாஹ்வை கட்டுப்படவேண்டும் என்ற விஷயத்தில் யார் தடை விதித்தாலும் அதை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்க்கவேண்டும் முகத்தை மறைக்கும் விஷயத்தில் நம்மில் சிலர் மாற்று கருத்து கொண்டிருந்தாலும் சரியே! ஏனென்றால், முகத்தை மறைப்பது இஸ்லாமிற்கு உட்பட்ட விஷயமாக இருப்பதனால் இதற்கு எதிராக செய்யப்படும் பிரச்சாரங்களும், போடப்படும் சட்டங்களும் இஸ்லாத்திற்கு எதிரானதாகவே கருதப்படவேண்டும்.

சகோதரர்களே,

நெதர்லாந்தில் இஸ்லாமிற்கு எதிராக செய்யப்படும் அனைத்து பிரச்சாரங்களையும் ஹிஸ்புத் தஹ்ரீர் தொடர்ச்சியாக எதிர்த்தும் அது குறித்து எதிர்ப்பிரச்சாரங்களும் செய்து வருகிறது. நிகாபுடைய விஷயத்திலும் ஹிஸ்ப் பல்வேறு போராட்டங்களையும் எதிர்ப்பு பிரச்சாரங்களையும் மேற்கொண்டு, உலகிற்கு முஸ்லிம்களின் நிலையை உணர்த்தி வருகிறது.

2017ல், முஸ்லீம் அறிஞர்கள், தலைவர்கள் மற்றும் மக்களுடன் இணைந்து அரசின் இந்த சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினோம். இந்த சட்டம் சமூகத்தில் வாழும் முஸ்லிம்களுக்கு எதிராக பாகுபாடு காட்டக்கூடிய வகையில் இருப்பதாக அந்த ஆர்ப்பாட்டத்தில் பதிவு செய்தோம். இந்த பதிவு அப்போது பாராளுமன்ற மேலவைக்கு சென்று இந்த சட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்க செய்தது. எனினும், பல்வேறு எதிர்ப்புகள் ஆர்பாட்டங்களையும் மீறி இன்று அது சட்டமாக இயற்றப்பட்டுவிட்டது.

நாம் இங்கு விளங்கிக்கொள்ள வேண்டியது ஒன்றுதான் – இஸ்லாமின் மாண்பினையும் இஸ்லாமிய சட்டங்களையும் நாம் பாதுகாக்க வேண்டுமென்றால், முஸ்லிம்களாகிய நாம் ஒருங்கிணைந்து அல்லாஹ்வின் மார்க்கமாகிய தீனுல் இஸ்லாமை இவ்வுலகில் நிலைபெற செய்வதுமட்டும் தான் என்றும் நமக்கு நாம் நேசிக்கும் இஸ்லாமிய வாழ்வியலை நிம்மதியாக பின்பற்றும் சூழலை தரும், அதனல்லாத மற்ற ஆட்சியமைப்புகள் நிச்சயம் இஸ்லாமிற்கு என்றுமே சவாலாக இருக்கும் இன்னும் அத்தகைய ஆட்சியமைப்பில் வாழ்வது மற்றும் பங்குபெறுவதை அல்லாஹ் முற்றிலுமாக தடுத்துள்ளான் என்பதையும் நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.

முஸ்லிம்களாகிய நாம் இஸ்லாமை நிலைநாட்டும் விஷயத்தில் ஒருங்கிணைந்து அல்லாஹ்வின் மார்க்கத்தை மறுநிர்மாணம் செய்வதுதான் நம் முன் இருக்கும் பிரதான பணியாகவும் அதிமுக்கிய பிரச்சனையாகவும் இருக்கிறது.

Comments are closed.