சமீப பதிவுகள்

நமது கற்பனைக்கு எட்டாத அளவுக்கு நிரம்பியிருக்கின்றது அவர்களுடைய பைகள்

செய்தி:

பாகிஸ்தானிய அரசியல்வாதிகள் அவர்களுடைய நிதி விஷயங்களில் வெளிப்படைத்தன்மையை காட்டுவதற்காக தங்களுடைய சொத்துக்களை பாகிஸ்தானிய தேர்தல் ஆணையத்திடம் அறிவிக்க சட்டப்பூர்வமாக பிணைக்கப்பட்டிருக்கிறார்கள். இது வேட்பாளர்களுடைய விண்ணப்பத்தில் அறிவித்துள்ள சொத்துக்களின் விவரத்தை தேர்தல் அதிகாரிகள் வெளியிட்டதன் மூலமாக வாக்காளர்களுக்கு தங்களுடைய தலைவர்களின் வங்கி கணக்குகள் மற்றும் சொத்து விவரங்களை காணும் வாய்ப்பை வழங்கியிருக்கிறது. (ஆதாரம்: the national.ae)

கருத்து:

பாகிஸ்தான் உருவாகிய 71 வருடங்களில் இந்த தேசத்தை வலுவானதொரு பொருளாதாரமாக உருவாக்குவதில் அயராது உழைத்ததன் காரணமாக ஒருவருடைய செல்வம் குறைந்து போனது எனும் நிலையை கொண்ட தலைவர் எவரையும் அதனுடைய மக்கள் இதுவரை கண்டதில்லை. பாகிஸ்தானுடைய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் பலவந்தமாக உருவான அரசுகளின் வரலாறு எவர் பதவிக்கு வந்தாலும் பொது மக்களுக்கு அடிப்படை தேவைகள் கிடைக்கப்படாத நிலையில் அதன் தலைவர்கள் மிகப்பெரிய அளவிலான சொத்துக்களை குவித்துள்ளதாக கூறுகிறது. பொதுமக்கள் தங்களுக்கு அளிக்கப்பட்டு வரும் மோசமான சேவைகள் மற்றும் தரம் குறைந்த பொருட்களுக்காக அதிக அளவிலான நேரடி மற்றும் மறைமுக வரிகளை செலுத்தி வருகின்றனர். பாகிஸ்தானின் அடித்தட்டில் உள்ள 10 சதவீத மக்கள் தங்களுடைய மொத்த வருவாயில் 17 சதவீதத்தை மறைமுக வரிகளாக (வாங்கும் பொருட்களில்) செலுத்தி வருகின்றனர் அதேவேளையில் மேல்தட்டில் உள்ள 10 சதவீத மக்கள் தங்களுடைய மொத்த வருவாயில் 10 சதவீதத்தை மறைமுக வரிகளாக செலுத்தி வருகின்றனர். பிரதம மந்திரியின் வீட்டிற்காக நாள் ஒன்றுக்கு ஏறக்குறைய 2.3 மில்லியன் ரூபாய் செலவிடப்படுவது என்பது இந்த வரியின் மூலம் பெறப்பட்ட வருவாய் எவ்வாறு செலவிடப்படுகிறது என்பதற்கு நல்லதொரு உதாரணமாகும்.

இந்த அரசியல்வாதிகள் தங்களுக்கு சொந்தமானவை என்று அறிவித்த விவசாய நிலங்கள், சொத்துக்கள், சொகுசு கார்கள், குதிரைகள், வங்கி கணக்குகளின் விவரங்களானது உண்மையில் அவர்கள் சொந்தம் கொண்டாடுபவற்றைக் காட்டிலும் மிக சொற்பமானதே. டெய்லி மெயிலின் சமீபத்திய அறிக்கை ஒன்று, மியான் நவாஸ் ஷரீஃப் மற்றும் அவருடைய மகன்கள் £32 மில்லியன் மதிப்புமிக்க சொத்துக்களை லண்டனின் பளபளப்பான முகவரிகளில் கொண்டுள்ளதாக தெரிவித்தது. அனைத்தும் முஸ்லிம்களுடைய தசைகளிலிருந்தும் இரத்தத்திலிருந்தும் மற்றும் இந்த உம்மத்திற்காக அல்லாஹ் (சுபு) வழங்கிய வளங்களிலிருந்தும் வடிகட்டி எடுக்கப்பட்டதாகும். தற்போதய ஆட்சியாளர்கள், முந்தய ஆட்சியாளர்கள், ஆட்சியாளர்களாக ஆகப்போகிறவர்கள், அனைவரும் பகட்டான முறையில் வாழ்ந்து வருகின்றனர், அவர்களுடைய பிள்ளைகள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பயின்று வருகின்றனர், மற்றும் அவர்களில் நோயுற்றுள்ளவர்கள் வெளிநாட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் அதேவேளையில் அவர்களுடைய மக்கள் வளங்களை சிக்கனமாக பயன்படுத்துமாறும் கடினமாக உழைக்குமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

தலைமைத்துவம் எனும் இந்த பதவியானது நம்பிக்கைக்குரியது என்றும் மாபெரும் பொறுப்பை கொண்ட நிலையை உடையது என்றும் மேலும் இதனை வலுவான ஆளுமை மற்றும் திறமையுடன் “தக்வா” வை உடைய ஒருவரிடம் மட்டுமே வழங்க வேண்டும் என்பதனை இந்த உம்மத்துடைய மக்கள் உணர வேண்டும். இவ்வகையான மக்கள், தங்களிடத்தில் ஆட்சியமைக்கும் பொறுப்பு வழங்கப்பட்டால், அவர்கள் தங்களுடைய தனிப்பட்ட வியாபாரங்களில் மேம்பாட்டை கொண்டு வருவதற்கு பதிலாக தாங்கள் ஆட்சி செய்யும் மக்களுடைய வாழ்வில் மேம்பாட்டை கொண்டு வருவார்கள். உமர் இப்னு அப்துல் அஜீஸ் அவர்கள், தனது பதவியேற்பு விழா நிறைவுற்று, கலீஃபாவாக பைஅத் பெற்று திரும்புகையில், அரசு குதிரைகள் அவருக்காக காத்திருப்பதை கண்டார்கள். “எனக்கு இவை தேவையில்லை,” என உமர் கூறினார்கள். “எனது கோவேறு கழுதையே எனக்கு போதுமானது. இந்த குதிரைகளை விற்று அதன் வருவாயை பொதுக் கருவூலத்தில் (பைத்துல்மால்) சேர்த்து விடுங்கள்.” “நான் எனது மக்களிடமிருந்து விலகியிருக்க விரும்பவில்லை” எனக் கூறி அவர் தனது பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்ட வீரரையும் அனுப்பி வைத்தார்கள். “அனைத்து ஆடம்பர பொருட்களையும் விற்று அதன் மூலம் வரும் பணத்தை பொதுக் கருவூலத்தில் சேர்த்து விடுங்கள்” எனக் கூறி அனைத்து ஆடம்பரங்களையும் தவிர்த்து விட்டார்கள். உமர் பின் அப்துல் அஜீஸ் அவர்கள் விட்டுச்சென்ற பாரம்பரியத்திற்கான காரணம் அவர் ரசூலுல்லாஹ் ﷺ வுடைய உதவியாளர் எனும் பொறுப்பை உண்மையாக செயல்படுத்தினார் என்றும் அல்லாஹ் ﷻ வுக்கு மட்டுமே பதிலளிக்க வேண்டும் என்று அவர் செயல்பட்டது தான் என்றும் நாம் அனைவரும் அறிவோம்.

எகிப்து பகுதியிலுள்ள மக்கள் ஏற்கனவே எர்துகனை தேர்ந்தெடுத்துள்ளனர் சிரியாவிருந்து வந்த அகதிகள் கூடாரங்களில் அழுகிக் கொண்டிருக்கும் நிலையிலும் அதன் மூக்குக்கு கீழே பாலஸ்தீனர்கள் கொடுமைப்படுத்தப்பட்டு வரும் நிலையிலும் அவர் 700 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமான மதிப்பை கொண்ட மாளிகையில் வாழ்ந்து வருகிறார், அதேநேரத்தில் பாகிஸ்தானிலோ ஆஃபியா ஸித்தீகீயை திரும்ப கொண்டு வருவதாக வாக்குறுதியை அளித்து 2013ல் வாக்குகளை பெற்ற மியான் நவாஸ் ஷரீஃபுக்கும் அதை நிறைவேற்ற தவறியதற்காக அவரை விமர்சித்து வரும் இம்ரான் கானுக்கும் மத்தியில் இருவரில் ஒருவரை தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய சூழ்நிலை தான் இருக்கின்றது. தேர்தலில் போட்டியடுபவர்களில் எவரும் இவ்விஷயத்தை தமது திட்டத்தில் தற்போது கொண்டிருப்பதாக தெரியவில்லை. இந்த கைவிடும் செயலானது மேலும் அதிகமாகி அவர்கள் பாதுகாக்க முற்படும் விஷயங்களை அடையும் காலம் வரை எந்தவொரு முயற்சியும் எடுக்காமல் வெற்று கையுடன் நிற்பார்கள். ஆகவே முதலில் இதுபோன்ற துரோகிகளை கைவிட வேண்டும் இதன் காரணமாக எதையாவது நாம் இழப்போமேயானால் அது இழப்பாக இருக்காது ஏனென்றால் நாம் அதிபதிகளுக்கெல்லாம் அதிபதியான அல்லாஹ் (சுபு)வுடன் வர்த்தகத்தை மேற்கொள்பவராக இருப்போம்.

«إِنَّكُمْ سَتَحْرِصُونَ عَلَى الإِمَارَةِ وَإِنَّهَا سَتَكُونُ يَوْمَ الْقِيَامَةِ حَسْرَةً وَنَدَامَةً فَنِعْمَتِ الْمُرْضِعَةُ وَبِئْسَتِ الْفَاطِمَةُ»

“நீங்கள் ஆட்சிப் பதவியை அடைய பேராசைப்படுகின்றீர்கள். ஆனால், மறுமை நாளில் அதற்காக வருத்தப்படுவீர்கள்.பாலூட்டுபவை (தாம் சுகங்)களிலேயே பதவி(ப் பால்) தான் இன்பமானது. பாலை மறக்க வைப்ப(தன் துன்பத்)திலேயே பதவி(ப் பாலை நிறுத்துவது)தான் மோசமானது. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்” புஹாரி.

Comments are closed.