சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

பெண்களுக்கு அபாயகரமான உலகம்…!!!

செய்தி :

தாம்சன் ராய்ட்டர்ஸ் நிறுவனம் அதன் ஆராய்ச்சி முடிவில் வெளியிட்ட செய்தியில், இந்தியா பெண்களுக்கெதிரான பாலியல் குற்றச்சாட்டில் முதலிடத்திலுள்ளது. மேலும் மனித கடத்தல், கட்டாய திருமணம் பாலியல் அடிமைத்தனம் என பல விஷயங்களில் இது அடங்குகிறது.

மேலும் இந்த முடிவின் படி அதிகமான ஆசிட் தாக்குதல், பெண் பிறப்புறுப்பு உருச்சிதைவு, குழந்தை திருமணம் மற்றும் தாக்குதல் என அனைத்திலும் அபாயகரமான நாடாக இந்தியா விளங்குகிறது. இதே கருத்து கணிப்பின் படி 7 ஆண்டுகளுக்கு முன் இந்தியா நான்காவது இடத்திலிருந்தது.

10 நாடுகளில் 9 நாடுகள் ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவிலுள்ளது. பத்தாவது நாடாக அமெரிக்கா உள்ளது. இந்த முடிவு அனைத்தும்  இயக்கத்தோடு நேரடியாக தொடர்புடையதாக இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

கருத்து :

இன்று உலகம் முழுவதும் உள்ள பெண்கள் கலாச்சார மற்றும் மத நம்பிக்கை மற்றும் ஆதிக்கம் செலுத்தும் மதசார்பின்மை முதலாளித்துவ சித்தாந்தத்தின் நடைமுறைகளால், இன்னல்களுக்கு உள்ளாகின்றனர். இந்த கணிப்பின் வலிமை சர்ச்சை கூறியதாக இருப்பினும், பெண்களின் நிலைமை பல இடங்களில் மோசமாகவே உள்ளது.

பெண்கள் மற்ற குடிமக்கள் போல பாதுகாப்பு,கல்வி,மருத்துவம் போன்றவற்றின் தேவை பெற்றவர்கள். இவை அனைத்தும் அடிப்படை உரிமைகள். #மீடூ இயக்கத்தின் மூலம் அமெரிக்கா இந்த பட்டியலில் இடம் பெற்றிருந்தாலும், மேற்கத்திய மாதிரியான பெண்களின் முன்னேற்றம் என்பது தவறானது. இந்தியா ஜனநாயகத்தை நடைமுறை படுத்தி, இந்த பகுதியில் சிறந்த பொருளாதாரத்தை கொண்டதாக வெளிப்படுத்தினாலும், பெண்களை நடத்தும் முறையில் மோசமான சாதனையை கொண்டுள்ளது.

இந்த நிறுவனம் கூறியதாவது, “உலக தலைவர்கள் மூன்று ஆண்டுகளுக்கு முன் ஏற்ற பிராமனங்கள் படி 2030 ஆம் ஆண்டுக்குள் பெண்களின் மீதான குற்றங்கள் அழிக்கப்பட்டு சுதந்திரமாக வாழ்க்கையை மேற்கொண்டு, அரசியல் பொருளாதாரம் மற்றும் பொது வாழ்க்கையில் பங்கேற்க முடியும் என்றார்கள். ஆனால் இத்தகைய பிரமானத்திற்கு பிறகும் மூன்றில் ஒரு பெண் தாக்குதலுக்கோ அல்லது பாலியல் தாக்குதலுக்கோ உள்ளாகின்றனர்.” இந்த உலகம் விழித்து கொண்டு உணர வேண்டிய விஷயம் என்னவெனில் பெண்களின் நிலைமை தற்போதைய மத சார்பின்மை அரசியல் முறையை நீக்காமல் மாறாது. தலைவர்களின் உறுதி மொழி அர்த்தமற்றது மேலும் மக்களின் நடைமுறைகள் மாறவில்லை, நடைமுறைகள் தவறாக இருக்கும் பட்சத்தில் கூத்து கருத்துகள் மற்றும் சட்டங்கள் உண்மையான மாற்றத்திற்கு தேவைப்படுகிறது.

இந்த பத்து நாடுகளில் முஸ்லீம் நாடுகளும் அடங்கும். சில தருணங்களில் பெண்கள் சரியான முறையில் நடக்கப்படவில்லை. இது பெண்கள் பற்றிய பொதுவான பார்வையாகும், திரைப்பட துறையின் மூலம் பெண்களை காட்சி பொருளாக்குதல், போர் சந்தர்ப்பத்தில் பெண்களை பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்குதல், இஸ்லாத்தின் அடிப்படையற்ற கலாச்சார நடைமுறை என்பன காரணமாகும். இவைகளை மாற்றுவது சாத்தியமற்றது போல் தெரிகிறது.

வருடம் வருடம் இந்த முதலாளித்துவ நாடுகளில் பெண்கள் உரிமைகள் கொண்டாட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன அதேவேளையில் பெண்களின் மீதான வன்முறைகளும் அடக்குமுறைகளும் அதிக அளவில் உள்ளன. ஒரு பக்கம் பெண்கள் உரிமைகள் குறித்து சட்டங்கள் இயற்றப்படும் வேலையில், மற்றொருபக்கம் பெண்கள் இழிவாக நடத்தப்பட்டு நிம்மதியான வாழ்க்கை வாழ வழியில்லாமல் உள்ளனர். இத்தகைய நடைமுறைகள் கிழக்கு நாடுகளிலும் சில பின்தங்கிய வழக்கங்களாலும் , வளர்ச்சிபெற்றதாக கூறும் மேற்கு நாடுகளில் பெண்களை காட்சி பொருளாக பார்ப்பதாலும், துன்புறுத்துவதாலும் நிலவுகிறது. சில சட்டங்களை மாற்றுவதால் எந்த பயனும் இல்லை. தலைகீழ் மாற்றங்களை கொண்டுவரும் சிறந்த கருத்துகளே தேவைப்படுகிறது

கடந்த காலத்தில் இஸ்லாம் ஒரு பெரும் சக்தியாக உருவெடுத்து பெண்சிசு கொள்ளுதல், திருமண உறவினால் பெண்களை கொடுமைப்படுத்துதல் மற்றும் சமூகத்தில் பெண்களை பாகுபடுத்தல் போன்ற செயல்களை நிறுத்தியது. ஆரம்பத்தில் இத்தகைய செயல்களை குர்ஆன் கேள்வியெழுப்பி அதனை அவமானப்படுத்தியது , இதன் மூலம் இத்தகைய செயல்களுக்கு மக்கள் மத்தியில் எதிர்மறை கருத்துகளை உருவாக்கியது

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பெண்களுக்கெதிரான தடைகளை எவ்வாறு நீக்குவது என்பதை செய்து காட்டியுள்ளார்கள். உதாரணம் தன் தத்துப்பிள்ளையின் மனைவியை அவரது விவாகரத்திற்கு பிறகு திருமணம் மேற்கொண்டார், இத்தகைய செயல்கள் அக்காலத்தில் சிந்திக்க முடியாத ஒன்று. மேலும் இஸ்லாமிய சட்டங்கள், பெண்களுக்கு உதவும் வகையில் சொத்துரிமை, திருமணம்,விவாகரத்து,அவதூறிலிருந்து தடுத்தல் போன்ற விஷயங்களுக்கு அருளப்பட்டது. மேலும் இஸ்லாமிய அரசு மதினாவில் நிறுவப்பெற்ற பிறகு பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

பெண்கள் மரியாதைக்குரியவர்கள் எனும் கருத்து கிலாஃபத் ஆட்சிமுறையில் உண்மையாக நடைமுறைப்படுத்தப்பட்டது என்பதற்கு ஆதாரம் கலீஃபா முஃதஸிம் அவமானப்படுத்தப்பட்ட ஒரு பெண்ணின் குறளுக்காக தன்னுடைய ராணுவத்தை அனுப்பியது மூலம் அறியலாம்.

மேலும் இஸ்லாமிய சமூகம் என்பது பெண்களை சமூகத்தில் ஒரு பகுதியாக பார்த்து அவர்களுக்கு ஷரியா அனுமதித்த அனைத்து துறைகளிலும் பொறுப்பை கொடுத்துள்ளது. உதாரணம் ஒரு பெண் ஆட்சியாளரை கேள்விகேட்கலாம்,நீதிபதியாக செயல்படலாம்,தன்னுடைய செல்வத்தை முதலீடு செய்யலாம் போன்றவையாகும்.

இன்று, இந்த மதசார்பற்ற அரசு முறையே இந்த உலகை பெண்களுக்கு ஆபத்தாக ஆக்கியுள்ளது. முஸ்லீம் நாடுகளில் கூட அல்லாஹ்வின் சட்டங்களை வாழ்வியலிருந்து பிரிக்கும் இந்த கேடுகெட்ட அரசுமுறையே தான் நீக்க வேண்டிய அபாயமாக உள்ளது, இதற்க்கு மாற்றாக மனிதர்களை கண்ணியப்படுத்தும் சட்டம் தேவைப்படுகிறது. இறைவனுக்கு பதில் சொல்லவேண்டும் என்பதை அடிப்படையாக கொண்டு செயல்படும் அரசமைப்பும், சட்டங்கள் மட்டுமே இத்தகைய கொடுமைகளை கட்டுப்படுத்த கூடும், மேலும் எவராலும் மாற்ற முடியாத நிலையான சட்டங்களை நடைமுறைப்படுத்த முடியும்.

Comments are closed.