சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

துருக்கியின் தேர்தலில் அமெரிக்காவின் தலையீடு

எர்துகன் இஸ்லாமுக்கு ஆதரவானவரா இல்லையா மற்றும் ஏகே கட்சி இஸ்லாமிய இயக்கமா இல்லையா மற்றும் இதுபோன்று துருக்கியுடைய தேர்தலின் விஷயத்தில் பல விஷயங்களை கொண்டு குழப்ப விரும்பாமல் அது தொடர்பான ஒரேயொரு கோணத்தை மட்டும் குறிப்பாக நாம் இங்கு தெளிவாக விவாதிப்போம். நாம் இங்கு துருக்கி மற்றும் இந்த தேர்தலில் அமெரிக்காவின் தலையீட்டை பற்றி குறிப்பிட முயற்சிக்கிறோம்.

அல்லாஹ்வை புகழ்ந்தவர்களாக…
குறிப்பிட்ட சில அரசியல் நிகழ்வுகளின் மூலம் இந்த தேர்தல் நடைபெறுவதற்கு முன்பிலிருந்தே அமெரிக்கா அங்கு தலையிட்டு வருவதை தெளிவாக காட்டுகின்றது என்பதையும் மேலும் இது நடைபெறுவதற்கு நீண்ட நாட்களுக்கு முன்பாகவே ஜனாதிபதி ஆட்சி முறையை தேர்ந்தெடுத்த எர்துகனின் நடவடிக்கையின் மூலம் இது இன்னும் தெளிவாகிறது என்பதையும் நாம் இங்கு குறிப்பிட விரும்புகிறோம்.

இந்த தேர்தல் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பாக நடைபெற்ற அரசியல் நிகழ்வுகளை பொறுத்தவரை, தேர்தல் நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக இரண்டு மிகமுக்கிய அரசியல் நிகழ்வுகள் நடைபெற்றன. அவை என்னவென்றால் அமெரிக்கா துருக்கிக்கு உலகின் மிக அதிநவீன அமெரிக்க போர் விமானமான எஃப்-35 ரக போர் விமானங்களை வழங்க அனுமதித்தது, பிறகு தேர்தலுக்கு முன்பாக அதை எர்துகனிடம் ஒப்படைத்தது, இதற்கு முன்பு இந்த போர் விமானமானது யூத அரசுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. அமெரிக்க அரசவை இதை எதிர்த்த போதிலும், டிரம்ப்புடைய நிர்வாகம் அரசவையின் எதிர்ப்பையும் மீறி பல போர் விமானங்கள் வழங்குவதற்கு ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் காரணமாக துருக்கிக்கு இந்த விமானங்களை வழங்குவதில் உறுதியாக இருந்தது.

அமெரிக்கா மற்றும் துருக்கிக்கு இடையேயான உறவில் பிளவு இருப்பதாகவும் விரோதம் நிலவி வருவதாகவும் எர்துகன் ஊடகங்களில் தெரிவித்துக் கொண்டிருந்த நிலையிலும் அவரால் அமெரிக்காவிடமிருந்து அதிநவீன போர் விமானத்தை பெற முடிந்தது என்பது எர்துகனுக்கு ஒரு முன்னேற்ற பாதையை வகுத்து தந்தது! மேலும் அதை எப்போது அவர் பெற்றார்? மிகவும் முக்கியமான இந்த நேரத்தில், மும்முரமாக தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இது எர்துகனால் பெரும் நாடுகளிடமிருந்து முக்கியமான விஷயங்களை பெற்றுத்தர முடியும் என்கிற சாதகமான அபிப்ராயத்தை வெகுஜனங்களிடத்தில் பெற்றுத்தந்தது. இது குறிப்பது என்னவென்றால் ஊடகங்களின் சமிக்கைகளானது அவர் அமெரிக்க முகாமுக்கு மாற்றமாக ரஷ்ய முகாமின் பக்கம் சாய்ந்துவிட்டதாக கூறினாலும், எர்துகனுடைய அரசியல் அறிவாற்றலினால் அவர் ரஷ்யா மற்றும் அமெரிக்கா என இருதரப்பிலிருந்தும் பலனை அடைவதில் வெற்றி கண்டார், என்று ஊடகங்களில் கூறப்படுகிறது.

இரண்டாவது நிகழ்வு : அயலுறவு அமைச்சர் மவ்லூத் ஜோவிஷோக்லு உட்பட துருக்கிய அதிகாரிகள் “அமெரிக்கா துருக்கிக்கு எதிராக குர்துகளை தூண்டி வருகிறது… அது குர்திய படைகளுக்கு ஆதரவளித்து துருக்கிய தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாகவே அமெரிக்காவிடமிருந்து துருக்கியை பின் வாங்க செய்தது.” என கூறினர். இந்த அறிவிப்புகளுக்கு பிறகு திடீரென அமெரிக்கா துருக்கிக்கு கட்டுப்பட்டதை போன்றதொரு தோற்றத்தை நாம் காண்கிறோம். மேலும் தீவிரவாதிகள் என துருக்கி கருதும் சிரிய ஜனநாயகப் படைகளை சார்ந்த குர்திய படைகள், பிகேகே கட்சி மற்றும் குர்தின் எதிர்கட்சிகளின் கட்டுப்பாட்டில் இருந்த மன்பிஜ் நகரில் துருக்கிய படைகளையும் அமெரிக்க படைகளையும் நிறுத்துவதற்கு ஒப்புக்கொண்டது, மன்பிஜிலிருந்து குர்து படை வீரர்களை அமெரிக்கா திடீரென வெளியேற்றி அமெரிக்க படைகளுடன் சேர்த்து தனது படைகளுடன் துருக்கியை அங்கு நுழையச் செய்தது மேலும் மன்பிஜில் துருக்கி படைகளுக்கு உறுதுணையாகவும் இருந்தது மேலும் துருக்கி படைகள் எந்தவிதமான சண்டையும் இல்லாமலே அங்கு நுழைந்தது. இது குறிப்பாக துருக்கி தேர்தல் நடைபெறுவதற்கு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது.

இவ்விரு நிகழ்வை தான் இந்த தேர்தலுடன் இணைத்து பார்க்க வேண்டும். இந்த தேர்தலில் அமெரிக்கா மேற்கொண்ட நேரடி தலையீடாகும், அது எர்துகனுடைய செல்வாக்கை அதிகரிக்கச் செய்தது. இந்த செல்வாக்கு அதிபருக்கான தேர்தலில் அவருடைய நெருங்கிய போட்டியாளரான முஹர்ரம் அஞ்சே பெற்ற 30% வாக்குகளை காட்டிலும் அவருக்கு 52% வாக்குகளை பெற்றுத்தந்தது, அதேசமயம் ஏகே கட்சியினால் 42% மேலான வாக்குகளை பெற முடியாமல் போனது, ஆகவே எர்துகனுடைய கட்சியான ஏகே கட்சிக்கும் துருக்கிய தேசியவாத கட்சிக்கும் இடையே கூட்டணி அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இந்நிகழ்வுகளானவை அமெரிக்கா எர்துகன் வெற்றி பெற வேண்டும் என்பதில் கொண்டுள்ள ஆர்வத்தை ஊர்ஜிதப்படுத்துகிறது, மேலும் தேர்தல் நடைபெறுவதற்கு சில தினங்களுக்கு முன்னர் நிகழ்த்தப்பட்ட நிகழ்வுகளின் மூலம் அமெரிக்கா இந்த வெற்றிக்கு வழிவகைகளை ஏற்படுத்தி தந்தது.

எர்துகன் தேர்ந்தெடுத்துள்ள ஆரசியல் அமைப்பை பொறுத்தவரை… ஐரோப்பாவில் ஜனாதிபதி ஆட்சிமுறையை தழுவிய முதல் அரசு இதுதான் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஐரோப்பாவில் உள்ள அனைத்து அரசியல் அமைப்புகளும் பாராளுமன்றத்தை அடிப்படையாக கொண்ட ஜனநாயக அமைப்புகளாகும், மேலும் அவை அரசுகளை அமைப்பதற்கு பாராளுமன்றத்தில் நடத்தப்படும் வாக்குகளை சார்ந்திருக்கின்றன. துருக்கியை தவிர பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் இத்தாலிக்கு இடையே எந்தவிதமான வேறுபாடும் கிடையாது, அவையனைத்தும் பாராளுமன்ற ஜனநாயக அமைப்புகளை சார்ந்திருக்கின்றன இதுமட்டுமே அமெரிக்க அரசியல் அமைப்புக்கு மாறியுள்ளது அதுவொரு ஜனாதிபதி ஆட்சி முறையாகும் இந்த புதிய அமைப்பில் பிரதம மந்திரி இருக்க மாட்டார். அமெரிக்க ஜனாதிபதி ஆட்சி முறையை போன்று அங்கு துனை ஜனாதிபதிகள் இருப்பார்கள், அமைச்சரவை இருக்காது.

ஆக எர்துகனும் அவருடைய கட்சியும் எதனால் இந்த அமைப்பை தேர்ந்தெடுத்தனர்? ஏனெனில் அமெரிக்காவுக்கும் எர்துகனுக்கும் இடையே நல்ல முறையிலான உறவும் பிரத்யேகமான உபசரிப்பும் இருந்து வருகிறது, இல்லையெனில் அவர் ஐரோப்பாவில் காணப்படும் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு பொதுவான பாராளுமன்ற அமைப்பையே தேர்ந்தெடுத்திருப்பார். ஆனால் இந்த ஜனாதிபதி அமைப்பை அவர் தேர்ந்தெடுத்ததற்கு பல காரணங்கள் உள்ளன, அந்த காரணங்களில் முதலானது: இது தேசத்தில் இராணுவம் மற்றும் நீதித்துறை கொண்டுள்ள ஆதிக்கத்தை குறைப்பதற்கான முயற்சியாகும். துருக்கி கடந்து 60 அல்லது 70 வருடங்களாக இராணுவ மற்றும் நீதித்துறையின் தலையீடுகளால் பாதிக்கப்பட்டுள்ளது. எர்துகனுடைய கட்சி ஆட்சிக்கு கொண்டுவரப்பட்டபோது அமெரிக்கா எர்துகனை இராணுவத்திடமிருந்து பாதுகாப்பதாகவும், அவரை இராணுவத்திடமிருந்து பாதுகாப்பதற்காக ஜனாதிபதி ஆட்சி அமைப்பை ஏற்படுத்துவதற்கும் வாக்குறுதி அளித்திருந்தது, இந்த ஆட்சி அமைப்பு ஜனாதிபதிக்கு விரிவான அதிகாரத்தை வழங்குகிறது அதன் மூலம் அவர் இராணுவ வீரர்கள் முதற்கொண்டு தளபதிகள் மற்றும் நீதிபதிகளை வரை பதவி நீக்கம் செய்யலாம்.

எர்துகனுக்கு வழங்கப்பட்ட இந்த அதிகாரங்களானது எந்தவொரு அமெரிக்க அதிபருக்கும் வழங்கப்படுகின்ற அதே அளவை கொண்ட அதிகாரமாகும். எர்துகன் நடைமுறைப்படுத்திய இந்த ஜனாதிபதி அமைப்பானது துருக்கியுடைய எர்துகனும் அமெரிக்காவும் தமக்கு இடையே கொண்டுள்ள உறவின் அடையாளமாகும், அதாவது ஒரு நேரடி உறவு செயலாக்க அமைப்பு, சட்டங்கள் மற்றும் அரசியலமைப்பு என அனைத்திலும்.

சுருங்கக்கூறின் இதுவே அமெரிக்கா மேற்கொண்ட நேரடி மற்றும் மறைமுக தலையீடாகும். நேரடி தலையீடானது எஃப்-35 ரக போர் விமானங்களை வழங்கியது மற்றும் துருக்கிய படைகளை மன்பிஜிக்குள் செல்ல அனுமதித்தது. மறைமுக தலையீடானது துருக்கிக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஒரேமாதிரியான ஜனாதிபதி ஆட்சி அமைப்பை ஏற்படுத்தியது. துருக்கியின் அரசை மாற்றியமைத்து இந்த செல்வாக்கை மறைந்து போகச் செய்வாயாக என அல்லாஹ்விடம் வேண்டுகிறோம் இதையே தான் அனைத்து பகுதியில் இருக்கும் முஸ்லிம்களும் அனைத்து அரசுகளையும் துடைத்தெரிந்து அவற்றின் இடிபாடுகளின் மீது இஸ்லாமிய கிலாஃபத்தை நிலைநாட்ட விரும்புகிறார்கள்.

கேள்வி: இந்த காரணங்களினால் தான், அதாவது துருக்கியின் மீது அமெரிக்கா கொண்டுள்ள செல்வாக்கின் காரணமாகத் தான் ஐரோப்பிய கூட்டமைப்பில் துருக்கி நுழைவதற்கு ஐரோப்பா மறுப்பு தெரிவித்து வருகிறதா?

பதில்: துருக்கி தன்னுடன் இணைவதை ஐரோப்பா இரண்டு காரணுங்களுக்காக மறுத்து வருகிறது: முதலாவது முக்கிய காரணம் என்னவென்றால் துருக்கியின் பெரும்பாலான மக்கள் முஸ்லிம்களாக இருப்பது. துருக்கி மிகப்பெரிய தேசமாகும். ஒருவேளை முஸ்லிம் பெரும்பான்மையுடன் கூடிய துருக்கி ஐரோப்பிய கூட்டமைப்பில் சேரும் பட்சத்தில், கிறித்துவ தோற்றத்தை கொண்ட ஐரோப்பிய கண்டத்தை இஸ்லாமிய தோற்றமாக மாற்றிவிடும் என ஐரோப்பா அஞ்சுகிறது, ஆகவே துருக்கி அதனுடன் இணைவதற்கு எர்துகன் வருவதற்கு முன்பிருந்தே தடங்களை ஏற்படுத்தி வருகிறது.

இரண்டாவது காரணம் என்னவென்றால் துருக்கிய அரசு செயல்படுத்தும் அமைப்பானது அமெரிக்காவுக்கு விசுவாசமானதாக இருக்கின்றது, ஆகவே ஐரோப்பா ஏற்கனவே தன்னுள் (அதன் கட்டமைப்புக்குள்) இயங்கி வரும் அமெரிக்காவுக்கு தொடர்புடைய அமைப்புகளுடன் மற்றொன்று கூடுவதை விரும்பவில்லை. ருமேனியா, ஹங்கேரி மற்றும் போலாந்து ஆகியவை கிழக்கு ஐரோப்பிய நாடுகளாகும், இங்குள்ளவை அனைத்தும் கம்யூனிய அரசாங்கங்களாக இருந்து தற்போது அமெரிக்காவுக்கு விசுவாசமாக இருந்து வருகின்றன. இப்போது ஐரோப்பாவின் இழப்பில் புதியதாக அமெரிக்காவுக்கு சாதகமான அரசு ஒன்று உருவாவதை ஐரோப்பியர்கள் விரும்பவில்லை, இதன் காரணமாகவே ஐரோப்பிய கூட்டமைப்பில் துருக்கி நுழைவதற்கு ஐரோப்பா மறுப்பு தெரிவித்து வருகிறது.

கேள்வி: அதிபர் எர்துகன் வெற்றி பெற்ற பிறகு அமெரிக்கா ஏன் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை? கத்தார் போன்று பிரட்டனை பின்பற்றும் நாடுகள் அவருக்கு வாழ்த்தையும் ஆதரவையும் தெரிவித்துள்ளனவே. இது எதை குறிக்கிறது?

இதற்கான பதிலானது: முதலில் அதிபர் டிரம்ப் மிகவும் தெளிவாக எர்துகனுக்கு வாழ்த்து தெரிவித்து செய்திகளை அனுப்பியுள்ளார் என்பதை குறித்தாக வேண்டும். தேர்தலில் வெற்றி பெற்றதற்கு பின்னர் அதை தாமதமாக அனுப்பியிருந்தாலும், நிச்சயமாக அது அனுப்பப்பட்டது.

இரண்டாவதாக: அமெரிக்காவின் கைப்பாவைகளாக செயல்படும் இதர ஆட்சியாளர்களை தவிர துருக்கிக்கு மத்திய கிழக்கில் அமெரிக்க அச்சாணிக்கு தலைவராக செயல்படுவதற்கான பொறுப்பு ஒன்று தரப்பட்டுள்ளது. அதாவது, அமெரிக்கா அதிபர் சிசி அல்லது அதிபர் சல்மான் போன்ற அதிபர்களுடைய நிலையில் அல்லாமல் துருக்கி சுயமாக முன்னணி நிலையை அடைய வேண்டும் என்பதை விரும்புகிறது. அது இந்த பகுதியில் துருக்கிக்கு பெரும் பொறுப்பை கொடுக்க விரும்புகிறது. இதன் காரணமாகவே நாம் துருக்கி, ஈரான் மற்றும் ரஷ்யாவுக்கு மத்தியில் உறவுகள் நிலவி வருவதை காண்கிறோம் – இந்த மூன்று நாடுகளும் சிரியாவில் அமெரிக்காவுடைய நோக்களுக்காக சேவை புரிவதற்கான உத்திரவாதத்தை அளித்தவர்களாக இருக்கின்றனர். இந்த சேவையை புரிவதற்கு சவூதி அரேபியாவை போன்று எகிப்தை போன்று அமெரிக்காவுக்கு மிகவும் நெருக்கமாக இல்லாத நாடு தேவைப்படுகிறது, குறைந்தபட்சம் அதற்கும் அமெரிக்காவுக்கும் வெளிப்படையாக நெருக்கமற்றதாக இருக்க வேண்டும், இதன் காரணமாகவே துருக்கி தன்னிச்சையாக செயல்படும் ஒரு நாடாக தென்படுகிறது. துருக்கியின் விஷயத்தில் அமெரிக்கா இந்த யதார்த்தத்தை தான் நாடுகிறது. கத்தார் மற்றும் ஜோர்டான் போன்று பிரித்தானியரை பின்பற்றும் நாடுகள் உட்பட முக சுளிப்பை கொண்டுள்ள நாடுகள் அனைத்தும் துருக்கியிடம் உதவியை நாடி செல்கின்றன. மன்னர் இரண்டாம் அப்துல்லாஹ்வை எடுத்துக்கொள்வோம், அவருடைய நாடும் அரசும் பிரத்தானியருக்கு ஆதரவானவை என்பது நன்கறிந்த விஷயமாகும், இருந்தும் அவர் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாட்டிற்கு ஆதரவு தெரிவித்தார் – அதன்மூலம் அவர் மீது விழ தயாராக இருக்கும் அமெரிக்க ஆபத்திலிருந்து தன்னை காப்பாற்றக் கூடிய நிலையில் இருப்பதாக எண்ணியவாறு.

எனவே, அமெரிக்கா சவூதி மற்றும் எகிப்திய நாடுகளை நேரடி முகவர்களாகவும் சிறிய நாடுகள் மற்றும் கைப்பாவை அரசுகளை கவர்வதற்காக வேண்டி துருக்கி மற்றும் ஈரான் போன்ற நாடுகளுக்கு சுதந்திரமாக செயல்படுவதற்கான இடத்தை அளிக்கிறது. இது தான் காரணம்.

கேள்வி: எர்துகனை தனிப்பட்ட முறையிலும் அவருடைய கட்சியையும் ஏன் அமெரிக்கா ஆதரிக்கின்றது?

பதில்: காரணம் சாதாரணமானது தான், முஸ்தபா கமாலை தொடங்கி 2003 வரை துருக்கியில் இருந்த ஆட்சி அமைப்பு தான். அது பெரும்பாலும் ஆங்கிலேயர் மற்றும் ஐரோப்பியர்களின் கட்டுப்பாட்டில் இருந்த இராணுவத்தால் ஆட்சி செய்யப்பட்டு வந்தது. ஆங்கிலேயர் மற்றும் ஐரோப்பியர்களின் பிடியிலிருந்த அரசை விடுவிக்க அமெரிக்கா பலமுறை முயன்றது ஆனால் அதில் வெற்றி பெற முடியவில்லை, அதற்கான முயற்சியில் ஈடுபட்ட அத்நான் மெந்தெரெஸ் தூக்கிலிடப்பட்டார், துர்குத் ஓஜால் விஷம் வைத்து கொல்லப்பட்டார். அமெரிக்காவுக்கு வேறு வழியில்லாமல் மக்களுடைய நன்மதிப்பை பெற்ற ராணுவத்திற்கும் ராணுவத்தின் பலத்தை எதிர்கொள்ளக்கூடிய இஸ்லாமிய பின்புலத்தை கொண்ட கட்சிகளை சார்ந்திருக்கும் நிலை ஏற்பட்டது. அமெரிக்கா தான் எதிர்பார்த்தவற்றை எர்துகனிடமும் அவருடைய கட்சியிடமும் கண்டது. தனது முழு பலத்தை கொண்டு அவருக்கு ஆதரவாக செயல்பட்டது மேலும் இராணுவம் அவரை தூக்கி எறிய முற்பட்ட சமயத்தில் எல்லாம் அமெரிக்கா தலையிட்டு அவரை கொல்வதிலிருந்தும் அவருக்கு மரணதண்டனை விதிப்பதிலிருந்தும் தடுத்தது. அதிபரிடம் அத்துமீறி செயல்பட்டவர்கள் அனைவருக்கும் இராணுவம் மரணதண்டனை விதித்தது.

சமீபத்தில் நடத்தப்பட்ட இராணுவ புரட்சியை தவிர்த்து மற்ற இராணுவ புரட்சிகளுக்கு இடையேயான வித்தியாசம் என்னவென்றால், அதில் முக்கியமான விஷயம் என்னவெனில் அமெரிக்கா அவரை 2003 முதல் தனது முழு பலத்துடன் ஆதரித்து வருகிறது மேலும் நீதித்துறை மற்றும் இராணுவத்தின் அனைத்து தலைமையையும் கையகப்படுத்துவதற்கான வழிவகைகளை ஏற்படுத்தி தந்தது. அதை அவருடைய கட்சிக்கும் எர்துகனுக்கும் வழங்கியது, மேலும் கடந்த இருபது ஆண்டுகளில் படிப்படியாக முன்னேறி சட்டரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் எந்தவிதமான தடையும் இல்லாமல் அதிபர் பதவியை அவரால் அடைய முடிந்தது. அவர்கள் அனைவரும் அமெரிக்காவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர், அமெரிக்கா அவருக்கு தனது ஆதரவை அளிக்கவில்லை என்றால், எர்துகனால் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு மேல் அதிகாரத்தில் நீடித்திருக்க முடியாது. ஏனென்றால் கடந்த காலங்களில் துருக்கிய அமைப்பின் யதார்த்தம் அது தான், மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எந்தவொரு அதிபரும் தூக்கி எறியப்படுவார். குடியரசுக்கு உத்திரவாதியாக இராணுவம் செயல்படுகிறது. மாற்றத்தை ஏற்படுத்த விரும்பிய அனைத்து அதிபர்களையும் இராணுவம் கொன்றுவிட்டது, இந்த யதார்த்தத்திற்கு கூடுதலாக நீதிபதிகளை கொண்டு அவர்கள் தடை செய்யப்பட்டார்கள், இராணுவத்திலும் நீதிபதிகள் இடம்பெற்றிருந்தனர், எர்துகனால் மட்டுமே இராணுவத்தில் பிரித்தானியருக்கு ஆதரவாக இருந்த நீதிபதிகளை துடைத்தெரிய முடிந்தது, இதன் காரணமாகவே அமெரிக்கா அவருக்கு ஆதரவாக இருக்கின்றது. ஆனால் இதிலிருந்து அமெரிக்கா எவ்விதத்தில் பயனடைய போகிறது? இந்த அரசு சுதந்திரத்தின் அடிப்படையில் மதசார்பற்ற அமைப்புடையதாக தொடர்ந்து நீடிக்கும் என்று எர்துகன் அளித்த உத்திரவாதத்தின் மூலம் அது பலனடைகின்றது. ஆகவே, நீங்கள் துருக்கியில் வழிபாட்டாளர்களை வரவேற்கும் பள்ளிவாசல்களை காணலாம் அதேசமயம் அதற்கு எதிரே குடிகாரர்களை வரவேற்கும் மதுபான விடுதிகளையும் காணலாம். நீங்கள் பெண்கள் ஹிஜாப் அணிவதை காணலாம் மறுபுறம் அதன் கடற்கரைகள் நிர்வாணமாகவும் மற்றும் அரை நிர்வாணமாகவும் திரியும் பெண்களால் நிரம்பி வருவதையும் காணலாம்.

இந்த சுதந்திரங்களானது எர்துகன் அமெரிக்காவுக்கு தந்த உத்திரவாதங்களாகும் அதாவது அரசுடைய அமைப்பை மாற்ற மாட்டேன் என்றும் ஜனாதிபதி அரசியல் அமைப்பை செயல்படுத்துவதில் உறுதியாக இருப்பேன் என்றும் இதுதான் அவர் அமெரிக்காவுக்கு கொடுத்த மாபெரும் வாக்குறுதியாகும் மேலும் அவர் இஸ்லாத்தை பற்றி உணர்வுபூர்வமாகவும் உணர்ச்சி வேகத்துடன் பேசி வருவது அரசியலில் எந்தவொரு விளைவையும் கொண்டிருக்கவில்லை.

கேள்வி: தேர்தலுக்கு முன் துருக்கி லிராவின் பரிமாற்ற விகிதம் பலவீனமடைந்தது தேர்தலில் எர்துகனுடைய வெற்றிக்கு ஏதாவதொரு வகையில் உதவி புரிந்ததா?

பதில் : ஆம், இந்த பரிமாற்ற விகிதத்தின் பலவீனமானது எர்துகன் ஏற்று நடைமுறைபடுத்தும் முதலாளித்துவ அமைப்பு ஏற்படுத்திய ஊழலினால் ஏற்பட்டதாகும். இந்த அமைப்பானது உலகமயமாக்கல் மற்றும் கடனை பின்புலமாக கொண்ட அமைப்புமாகும். இந்த அமைப்பின் மூலம் வெளிநாட்டு கடனை உள்நாட்டு கடனாக மாற்றியது இந்த பண மதிப்பிழப்பிற்கு இட்டுச் சென்றது. எர்துகன் இந்த இழப்பை தவிர்ப்பதற்கு விரைந்தார், ஏனெனில் இவருடைய ஆட்சி காலத்தில் தான் சில மாதங்களில் மட்டும் லிரா 50% அளவுக்கு தனது மதிப்பை இழந்தது, இந்த பிரச்சனையை சரிசெய்வதற்கு தேர்தலை முன்கூட்டி நடத்தலாம் என்றும் அதற்கு பின்னர் லிராவை சரி செய்வதற்கான சூழலை கண்டெடுக்கலாம் என அவர் கூறினார், இந்த பிரச்சனைக்கு ஜனாதிபதி ஆட்சி அமைப்பு இல்லாதது தான் காரணம் என்றும் அதை தீர்த்து வைப்பதற்கான அதிகாரம் தன்னிடம் இல்லை எனவும் கூறி தேர்தலை நடத்துவதற்கு விரைந்தார். லிராவுடைய வீழ்ச்சிக்கு வெளிநாட்டு தலையீடு தான் காரணம் என்று கூறி ஜனாதிபதி ஆட்சி அமைப்பையும் அது கொண்டிருக்கும் முழுமையான அதிகாரத்தையும் கையில் எடுப்பதன் மூலம் லிராவை வலுப்படுத்த முடியும் என்றும் அது முன்பிருந்த வலுவான நிலைக்கு கொண்டு செல்ல முடியும் என்று கூறினார், ஆனால் யதார்த்த நிலை என்னவென்றால் பணபரிமாற்ற அமைப்பும் துருக்கிய பொருளாதாரமும் பலவீனமாகவும் எளிதல் உடையக்கூடியதாகவும் இருக்கின்றது ஏனென்றால் அனைத்து முதலாளித்துவ அமைப்புகளும் இவ்வாறே இருக்கின்றன. அமெரிக்காவும் கடனில் தான் இருக்கின்றது.

கேள்வி: துருக்கிய பொருளாதாரம் ஸ்திரத்தன்மையை அடையுமா?

பதில் : ஆம், ஒரளவுக்கு அது ஸ்திரத்தன்மையை அடையும், ஆனால் அது வலுவடையாது, மேலும் துருக்கிய பொருளாதாரம் முன்னேற்றமடையாது. வட்டியையும் முதலாளித்துவத்தையும் அடிப்படையாக கொண்டதொரு பொருளாதாரம், எவ்வாறு வெற்றியடைய முடியும்? அவ்வாறு பெறும் வெற்றியானது வட்டியை வாங்குபவர்களுக்கு மட்டுமே வெற்றியாக இருக்கும், கோடீஸ்வரர்களுக்கு வெற்றியாக இருக்கும், இந்த வெற்றியானது செல்வத்தை அதிகமாக குவித்து வைத்துள்ளவர்களுக்கு வெற்றியாக இருக்கும் ஏழை மக்களுக்கான வெற்றியாக இருக்காது.

கேள்வி: எர்துகனுடைய வெற்றியில் சிரியா கொண்டிருந்த தொடர்பு என்ன?

பதில் : தேசிய அளவில் எர்துகன் சிரியாவுடைய பிரச்சனையில் கவனம் செலுத்தியது என்பது உண்மை தான். அவர் துருக்கியரிடம் சிரியாவிலிருந்து குர்துகளின் மூலம் ஆபத்து வருகிறது அதாவது குர்திய தேசம் ஒன்று உருவாகும் ஆபத்து வரவிருப்பதாக நினைவூட்டினார். ஆக குர்துகளுக்கு எதிராக சண்டையிடுவதற்கான தேவை ஏற்பட்டுள்ளது, இதற்காக வேண்டி குர்துகளுக்கு எதிராக சண்டையிடுவதற்கு சிரிய போராளிகளை பயன்படுத்தினார், இது எர்துக்கனுடைய அரசியல் சாணக்கியத்தனம் என்றும் அவருடைய அரசியல் வெற்றி என்றும் கருதப்படுகிறது. தேசிய அளவில் நன்மதிப்பை பெறுவதிலும் தேசியவாதிகளின் அபிப்ராயத்தை பெறுவதிலும் வெற்றிபெற்றார். துருக்கியர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர் மேலும் துருக்கியின் பிரவினையை ஏற்படுத்தக்கூடிய குர்திய தேசம் உருவாவதிலிருந்து நம்மை பாதுகாத்தார் என்று கூறினர்.

ஆனால் இஸ்லாமிய கண்ணோட்டத்தில் அவர் துருக்கிய தேசியவாதத்திற்காக சிரியாவையும் இந்த எழுச்சியையும் தியாகம் செய்துள்ளார், எர்துகனை ஆதரிக்கும் மக்கள் அவர் தேசியவாதத்திற்காக அறியாமை காலத்தை நோக்கியும், இனவாதத்தை நோக்கியும், துருக்கிய தாய்நாட்டை நோக்கியும் மற்றும் துருக்கிய கொடியை நோக்கியும் அழைக்கிறார் என்பதனை அறியாமல் அல்லது மறந்து இருக்கின்றனர்.

ஆக இது எங்ஙனம் சிரியர்களையும் அரபுகளையும் பாதிக்கும்?
நீங்கள் (எர்துகன்) துருக்கியர்களுடைய அந்தஸ்தை உயர்த்த வேண்டும் என்று விரும்புகிறீர். சரி, நாங்கள் துருக்கியர் அல்லர், ஆக இதிலிருந்து நாங்கள் எதையும் பெறப்போவதில்லை என்பதை குறிக்கிறது! சரி, எதற்காக வேண்டி நாங்கள் இரவும் பகலும் பெருமையுடன் அல்லாஹ்வின் மீது ஆணையாக, துருக்கி ஒரு நல்ல தேசம் என்று கூறி வருகிறோம். அரபுகளை போன்று மற்ற மக்களுக்கு அல்லாமல் அதன் மக்களுக்கும், துருக்கிய தேசியவாதத்திற்கும், துருக்கியர்களுக்கு நன்மை பயக்கும் என்கிற யூகத்தின் அடிப்படையில் தான். எர்துகன் உபயோகிக்கும் வார்த்தையை அவர்கள் செவியுற்றாலும் அடிப்படைவாத தேசியவாத இயக்கத்தின் கட்சியுடன் அவர் கூட்டணி வைத்துள்ளதை பார்த்தால் இதுவொரு தேசியவாத போக்கு என்றும் இஸ்லாமிய போக்கு அல்ல என்பதும் தெரியவரும்.

கேள்வி:
யூத அரசு இந்த தேர்தலின் முடிவை கண்டு திருப்தி அடைந்துள்ளதா இல்லையா?

பதில்:
துருக்கியுடைய அரசியல் நாடகம் குறித்து யூத அரசு அறிந்துள்ளது யூத அரசுக்கு எதிராக பேசிவரும் இந்த வேளையில் துருக்கி மற்றும் யூத அரசுடனான உறவானது சுற்றுலா, பொருளாதாரம், வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் இராணுவம் போன்ற துறைகளில் வலுவாகவே உள்ளது. எர்துகனுடைய வாய்ச்சவடாலை யூதர்கள் நன்கறிந்துள்ளனர், இது அவர்களுக்கு எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை, இவரை பற்றி அவர்கள் நன்கறிந்துள்ளனர், அதற்கான ஆதாரமானது அவர்கள் துருக்கியர்கள் மற்றும் ஏனையோரை கொன்ற போது அவர் நடந்து கொண்ட விதமாகும். மக்கள் கொல்லப்பட்டிருந்தும் துருக்கியின் தூதரகம் இன்னமும் டெல் அவீவில் செயல்பட்டு கொண்டிருக்கின்றது மற்றும் யூத விடுமுறை நாட்களில் துருக்கியுடைய தூதரகத்தில் விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. அங்காராவிலுள்ள யூத தூதரகத்திலும் கொண்டாடப்படுகின்றன, இது குறிப்பது என்னவென்றால் யூத அரசு மீதான அவருடைய வாய்ச்சவடால் எந்தவிதமான தாக்கமும் கொண்டிருக்கவில்லை என்பது தான், அது வெகுஜனங்களின் அபிமானத்தை பெறுவதற்காக வேண்டியே பிரயோகிக்கப்படுகிறது ஆனால் யதார்த்தமானது துருக்கி மற்றும் யூத அரசுக்கு இடையிலான உறவுகள் வேறு எந்தவொரு நாடுடன் கொண்டிருக்கும் உறவை போன்று வலுவாகவே இருக்கின்றது.

ஆக இது துருக்கியை போன்று அரபு நாடுகளும் யூத அரசுடன் வலுவான உறவுகளை கொண்டிருப்பதை குறிக்கறதா? இல்லை, அவ்வாறு எதுவுமில்லை. எகிப்தும் ஜோர்டானும் யூத அரசுடன் இறுக்கமான உறவுகளை கொண்டுள்ளன ஆனால் துருக்கியுடைய உறவோ பொருளாதார ரீதியிலும் பாதுகாப்பு, இராணுவம், விமான போக்குவரத்து/வான்வெளி மற்றும் இதர துறைகள் முதற்கொண்டு உறவுகளானது சுமூகமான முறையில் நிலவி வருகிறது.

ஆகவே, எர்துகனுடைய வெற்றி இஸ்லாமுடைய வெற்றி என கூறும் மக்கள் அறியாமையில் உள்ளனர் அதிலும் ஷேக் ஒருவர் எர்துகனை இஸ்லாமுடைய சுல்தான் என்றும் முஸ்லிம்களுடைய கலீஃபா என்றும் கூறியுள்ளார். இவர்கள் அறியாமையிலுள்ளார்கள் அதற்கும் மேலாக நயவஞ்சகர்களாக இருக்கின்றனர் ஏனெனில் யூத அரசுடனான எர்துகனின் உறவானது ஒரு அரசியல் முக்கயத்துவம் வாய்ந்த உறவாகும், அதை அவர் துண்டித்து விட முடியாது. சரி, எதன் காரணமாக அவர் நேட்டோ கூட்டணியுடன் உறவை வைத்திருக்கிறார், என இந்த அப்பாவி மக்களிடம் நாம் கேட்கிறோம். நேட்டோவுடனான அவருடைய உறவானது இந்த கூட்டணி அமைப்பின் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த கூட்டணியில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய இராணுவ படையை அவர் கொண்டுள்ளார். மேற்கை பாதுகாப்பதற்காகவும், ஐரோப்பாவை பாதுகாப்பதற்காகவும் மேலும் அமெரிக்காவை பாதுகாப்பதற்காகவும், துருக்கிய நிலப்பரப்புகளிலும் அதன் கடல்களிலும் 26 அமெரிக்க இராணுவ தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாம் கேள்விபட்டுள்ள ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் மீது குண்டுகளை வீசுவதற்கு போர் விமானங்களை செலுத்துவதற்காக பயன்படுத்தப்பட்டு வருகின்ற இன்சிர்லிக் இராணுவதளம் மட்டும் கிடையாது, இதுபோன்று கருங்கடலுக்கு அருகிலுள்ள மர்மரா, மத்திய தரைக்கடல் மற்றும் துருக்கிய நிலப்பரப்பின் நீளம் மற்றும் அகலம் நெடுகிலுள்ள இஸ்தான்புல் முதல் அங்காரா வரையிலும் அதிலிருந்து இஸ்மிர் மற்றும் அதானா வரையிலும் மேலும் 25 இராணுவத்தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. துருக்கிய நிலப்பரப்புகள் மற்றும் கடற்பரப்புகள் அனைத்தும் அமெரிக்க இராணுவ தளங்களால் நிரம்பியுள்ளன இவ்வாறு இருக்கும் போது அறியாமையில் உள்ள ஒருவர் வந்து துருக்கி ஒரு இஸ்லாமிய நாடு என்று கூறுகிறார்! துருக்கி? நேட்டோவுடைய கிழக்கு பிரிவை பாதுகாக்கின்ற, 26 அமெரிக்க இராணுவ தளங்களை கொண்டுள்ள இது எந்த மாதிரியான இஸ்லாமிய நாடு? அப்போது மேற்கை கம்யூனிஸ்ட்டுகளிடமிருந்து பாதுகாப்பதற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்கிய நாடு இப்போது மேற்கை இஸ்லாமியர்களிடமிருந்து பாதுகாப்பதற்கு முக்கியத்துவம் வாய்ந்த நாடாக விளங்கி வருகிறது. இது தான் துருக்கி.

எதுவும் உம்மீது திணிக்கப்படவில்லை, உம்முடைய ஆற்றல்களை கொண்டு, உம்முடைய சித்தாந்தத்தின் பலத்தை கொண்டு உம்முடைய கொள்கையின் பலத்தை கொண்டு தைரியமாகவும் துணிவாகவும் முடிவை எடுப்பீராக. அல்லது நீர் அந்த பதவியை ஏற்று கைப்பாவையாக இருக்காதீர், மேற்கை பாதுகாப்பதற்காக வேண்டும் என்கிற நிர்பந்தத்தில் இருக்கிறேன் என்றும் யூதர்களுடனான உறவை சீராக்க வேண்டும் என்பதற்காக என் மீது இவ்வாறு செயல்படுவதற்கு நீர்பந்திக்கப்பட்டுள்ளேன் என்று கூறி நான் ஒரு கைப்பாவையாக இருந்து தான் ஆக வேண்டும் என்று கூறாதீர்கள்! இது ஏற்புடையதல்ல.

ஆட்சி செய்வதற்கும் மக்களுக்கு தலைமை ஏற்பதற்கும், உம்மத்துடைய தலைமையை ஏற்பதற்கும் உமக்கு தகுதியில்லை என்றால் அதிகாரத்தை கையில் எடுக்காதீர், கைப்பாவையாக செயல்படும் ஆட்சியாளர் எமக்கு தேவையில்லை, எம்மிடம் போதுமான கைப்பாவையான ஆட்சியாளர்கள் இருக்கின்றார்கள்.

கேள்வி: எர்துகன் மீதும் அவருடைய வாதங்களின் மீதும் மக்கள் நேர்மறையான நிலையை கொண்டிருப்பதற்கும் மற்றும் எர்துகனுடைய கட்சிக்கு ஆதரவாக அவர்களை இருக்கச் செய்வதற்கும் இந்த தேர்தலில் அவருடைய வெற்றியை கண்டு அவர்கள் மகிழச்சி அடைவதற்குமான காரணம் என்ன?

பதில்: அவர்கள் அவர்களுடைய உணர்வுகளை பின்பற்றுகிறார்கள், இஸ்லாத்திற்கு சாதகமாக பேசுபவரை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள், எர்துகன் பேசுவது உணர்ச்சிபூர்வமானதாக மட்டுமே இருந்தாலும் அவரின் பக்கம் அவர்கள் சாய்வது இயல்பானதே, அதன் காரணமாக தான் அவரை ஆதரிக்கிறார்கள். அவர்கள் தமது ஆட்சியாளர்கள் அனைவரும் துரோகம் எனும் புதைக்குழியில் இருப்பவர்களாகவும் கைப்பாவைகளாகவும் மேலும் அவர்களுடைய தவறுகள் அம்பலப் படுத்தப்பட்டவர்களாகவும் மேலும் அவர்களுடைய முகத்திரைகள் அகற்றப்பட்டவர்களாகவும் தான் காண்கிறார்கள். ஆனால், அவர்களை பொறுத்தவரை எர்துகன் அவ்வாறில்லை அவர் அம்பலப்படுத்தப்படாதவராகவும் முகத்திரை அகற்றப்படாதவராகவும் தான் இருக்கிறார். ஆகவே இவர் அவர்களுக்கு நல்லவராக தெரிகிறார், அதாவது இது யார் அவர்கள் மிகவும் மோசமானவர் என ஒப்பிட்டு பார்க்கிறார்கள் என்பதை குறிக்கிறது. எர்துகன் மற்றவர்களை காட்டிலும் நல்லவர் என அவர்கள் கூறுகிறார்கள். இதற்கு முந்தய மதசார்பற்ற அரசு பெண்களை ஹிஜாப் அணிவதிலிருந்து தடுத்து வந்த நிலையில் எர்துகன் பெண்களின் ஹிஜாபை பாதுகாக்கிறார். எர்துகன் பெண்களை ஹிஜாப் அணிவதற்கு அனுமதித்து மாபெரும் சாதனை படைத்துள்ளார் என்று கூறுகின்றனர். ஏதோ முகத்திரை மட்டும் தான் இஸ்லாம் என்பது போல். அதனால் என்ன… சிசியும் அரபு நாடுகளின் ஆட்சியாளர்களும் ஹிஜாபை அணிவதற்கு அனுமதிக்கின்றனர். சிசி ஹிஜாபை அணிவதற்கு அனுமதித்த சமயம் முதல் யாரும் அவர் இஸ்லாத்துக்கு ஆதரவாளராக ஆகிவிட்டார் என யாரும் கூறவில்லை.

இது துருக்கியில் அவர்கள் வட்டி, தவறான முறையிலான உடலுறவு மற்றும் விபச்சாரம் நடைபெற்று வருவதை பார்க்கவில்லை என்பதை குறிக்கின்றதா; அவர்கள் துருக்கியின் நகர்ப்புறங்களுக்கு சென்று பார்த்தார்களேயாயின் ஐரோப்பிய நகரங்களுக்கு நிகராக இவைகள் நடைபெறுவதை காண்பார்கள், இதை அவர்கள் முன்னேற்றம் என்று கூறுகிறார்களா? முன்னேற்றத்தை எவ்வாறு அளவிடுவது என்பதில் அவர்கள் கொண்டிருக்கும் இது ஒரு வகையான அறியாமையாகும். நாம் ஒரு தேசத்தின் முன்னேற்றத்தை அளவிட வேண்டும் என்றால், ஹலால் மற்றும் ஹராம் தான் நமது அளவுகோலாக இருக்க வேண்டும் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இந்த அளவுகோலை அவர்கள் புரிந்துணர்ந்து துருக்கியின் விஷயத்தில் இந்த அளவுகோலை பயன்படுத்தினார்கள் என்றால், துருக்கி இந்த அளவுகோலை விட்டு வெகுதூரம் சென்றிருப்பது தெரியவரும், அங்கு ஹலாம் அல்லது ஹராம் கிடையாது, அங்கு இருப்பதெல்லாம் சுதந்திரங்கள் தான்!

ஆனால் மக்கள் கொண்டுள்ள அறியாமையும் அவர்கள் விழிப்புணர்வு கொள்ளாமல் இருப்பதும் அவர்களை எர்துகனுடைய கயிற்றை பற்றிப்பிடிக்கும் நிலைக்கு ஆளாக்கியுள்ளது, எனினும் இந்த கயிறு அறுந்து போகும் நிலையில் தான் இருக்கின்றது, ஏனெனில் மக்கள் எந்தவொரு ஆட்சியாளரும் அவர்களுடைய மனங்களை ஆறுதல் படுத்தக்கூடியவராகவும் எச்சரிக்கக்கூடியவராகவும் பார்க்க முடியவில்லை.

Comments are closed.