சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

சீன-அமெரிக்க வர்த்தக போரானது அமெரிக்க மேலாதிக்கத்திற்கான போராட்டமாகும்.

செய்தி:

சமீபத்தில், அமெரிக்கா “வரலாற்றின் மிகப்பெரிய அளவிலான வர்த்தகப் போரை” துவக்கியிருப்பதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. டிரம்ப் நிர்வாகம் விதித்துள்ள 25% வரியானது தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் வாகன உதிரிபாகங்கள் என $34 பில்லியன் அளவுக்கான 800க்கும் மேலான சீன பொருட்கள் மீது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளையில், பீஜிங்கும் இதே விதத்திலான பதிலடியை கொடுக்கப்போவதாக உறுதிபூண்டுள்ளது. மிகப்பெரிய அளவிலான வர்த்தகப் போர் ஒன்றை அல்லது அதைவிட மிகவும் மோசமான ஒன்றை நாம் காண இருக்கின்றோமா?

கருத்து:

வாஷிங்டனுக்கும் பீஜிங்கிற்கும் இடையே தற்போது நடைபெற்று வரும் தகராறானது வெறுமனே வர்த்தகத்திற்கு தொடர்புடையது அல்ல. மாபெரும் போர் ஒன்று உடனடியாக ஏற்படும் அளவுக்கு இவ்விரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு முக்கிய பிரச்சனைகள் நிலவி வருகின்றன. பீஜிங் நாணயத்தை கையாளும் முறை, அணுசக்தி தொடர்பான அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு வடகொரியா இணங்க தயங்குவது, தாய்வான் சுதந்திரத்துக்காக வலியுறுத்துவது, சீனா தனது அண்டை நாடுகளுடன் கொண்டுள்ள எல்லை பிரச்சனைகள் மற்றும் தென்சீன கடற்பகுதியில் அமெரிக்க கடற்படையுடன் கொண்டுள்ள பதற்றங்கள் ஆகியவை அவர்களுக்கு இடையே மோதல் நடைபெற்று கொண்டிருக்கும் சில பகுதிகளாகும்.

போர் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று சிலர் கருதினாலும், அது தவிர்க்க முடியாதது என்றும் வல்லரசுகள் உருவாவதற்கும் அழிவதற்கும் இதுவொரு அங்கமாக விளங்குகிறது என்றும் சிலர் கருதுகின்றனர். பிந்தய வகையை சார்ந்தவர்கள் தமது மதிப்பீட்டிற்கு ஆதாரமாக மாற்றத்திற்கான கோட்பாட்டை முன் வைக்கின்றனர். போர் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருக்கின்றது என அதிகார மாற்றத்திற்கு ஆதரவாக இருப்பவர்கள் கருதுகிறார்கள், உயர்ந்து வரும் சக்தி ஒன்று எப்பொழுதெல்லாம் போதுமான சக்தியை தன்னகத்தே கொண்டிருக்குமோ அப்போதெல்லாம் அந்த பகுதியின் மேலாதிக்கத்திற்காக அந்த இடத்தில் அந்த சமயத்தில் அதிகாரத்தில் இருக்கும் சக்திக்கு சவால் விடும். ஆசிய பசிபிக்கின் தற்போதய ஒழுங்குமுறையில் ஆதிக்க சக்தியாக அமெரிக்காவும் அதற்கு சவால் விடக்கூடியதாக சீனாவும் இருக்கின்றன.
இந்த கண்ணோட்டத்தை கொண்டு பார்க்கையில், சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நடைபெறும் வர்த்தகப் போரானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது மேலும் இந்த பிராந்தியத்தின் பின் நிலையில் இருக்கும் சக்தியிலிருந்து அமெரிக்க ஏகாதிபத்தியத்தை மாற்றியமைக்கும் எண்ணத்தை கொண்ட சக்தியாக மாறும் பாதையை அமைத்துக் கொண்டுள்ளதை உறுதிபடுத்துகிறது. எளிமையாக கூற வேண்டும் என்றால், தற்போது நடைமுறையில் உள்ள சர்வதேச அமைப்புகளின் விதிமுறைகளை கொண்டு சீனாவை கட்டுப்படுத்த அமெரிக்கா திணரிக்கொண்டிருக்கிறது இது அமெரிக்கா உலகின் முன்னணி தேசம் எனும் அந்தஸ்து மறைகிறது என்பதற்கான அறிகுறியாக இருக்கின்றது.

அமெரிக்காவுடைய பலவீனமான நிலை மற்றும் சீனா, ரஷ்யா மற்றும் ஐரோப்பா போன்ற பெரும் சக்திகளுடைய சவால்களை சர்வதேச அமைப்புகள் கொண்டுள்ள கட்டுப்பாடுகளின் காரணமாக எதிர்கொள்ள முடியாது என்பதை டிரம்ப் நிர்வாகம் நன்கறிந்துள்ளது. ஒற்றை முனையிலிருந்து பன்முறையாக மாறிவரும் உலகில் விதிமுறைகளை மாற்றியமைக்கும் செயலானது அமெரிக்க நலன்களுக்கு சிறந்தமுறையில் செயலாற்றும் என டிரம்ப் நிர்வாகம் நம்புகிறது. சர்வதேச வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் உலக வர்த்தக மையம் போன்ற வர்த்தக அமைப்புகளை அது பெருமளவில் அக்கறை கொள்வதில்லை. சீனா உலக வர்த்தக மையத்திடம் எவ்வளவு வேண்டுமென்றாலும் முறையிடலாம்,ஆனால் அதன்மூலம் டிரம்ப்புடைய அமெரிக்கா ஒரு அங்குல அளவுக்குக் கூட அசைய போவதில்லை.

இந்த நிலையிலிருந்து பார்க்கும்போது, டிரம்ப் புதினுடன் மறைமுகமாக அமைதியை மேற்கொள்ள விரும்பும் செயல் மற்றும் பாரம்பரிய கூட்டணிகள் மீது அவர் கொண்டுள்ள மனக்குறையானது புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கின்றது. ரஷ்யாவுடன் புதிதாக கூட்டணி அமைப்பது உலகளாவிய சவால்களின் நீரோட்டத்துக்கு முட்டுக்கட்டை ஏற்படுத்துவதற்கு உதவும் என்றும் சீனா மற்றும் ஐரோப்பாவின் முன்னேன்றத்தை எதிர்ப்பதற்கான அரணாக விளங்கும் என்றும் டிரம்ப் நம்புகிறார். இது சீனாவுடான வர்த்தகத்தின் மீது டிரம்ப்புடைய கடுமையான அணுகுமுறையை மேற்கொள்வதற்கு தூண்டுகோலாக அமைகிறது மேலும் ஐரோப்பிய கூட்டமைப்பின் நம்பகத்தன்மை குறித்தும் நேட்டோவுடைய பயன் குறித்தும் தொடர்ந்து கேள்வி எழுப்புவதற்கு தூண்டுகிறது. இவையனைத்தும் டிரம்ப் நீண்டகால நட்பு நாடுகளுடனான உறவுகளை குறைக்கவும் மேலும் உலகளாவிய உறவுகளை மாற்றியமைப்பதற்கு தயாராக உள்ளார் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.

சீனா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்புக்கு எதிராக வர்த்தகப் போர் குறித்தான அறிவிப்பானது ஐரோப்பியர்களை சீனாவுடனான தங்களது உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதற்கான வழிகளை ஆய்வு செய்யும் அளவுக்கு சலிப்படையச் செய்துள்ளது. டிரம்ப்புடைய அமெரிக்கா பிரதானமானது எனும் சொற்பிரயோகம் முஸ்லிம் உலகை தவிர்த்து அனைத்து உலக நாடுகளுக்கும் விழித்துக்கொள்வதற்கான அழைப்பாக வெகுவேகமாக மாறி வருகிறது.

அமெரிக்காவின் மறைவு குறித்தும், சர்வதேச அமைப்புகள் கட்டவிழ்வது குறித்தும் மற்றும் உலகளாவிய உறவுகள் மாற்றியமைக்கப்படுவது குறித்தும் இஸ்லாமிய உலகம் அறியாமையில் உள்ளது. இஸ்லாமிய உலகின் தற்போதய தலைமையானது அந்நிய சக்திகளுக்கு அடிபணிவதில் ஆழ்ந்துள்ளது, தனது மக்களை அடிமைத்தனம் மற்றும் சுரண்டலிலிருந்து மீட்டெடுக்க முடியாமல் இருக்கின்றது. எவ்வளவு காலத்திற்கு இந்த சூழல் நீடிக்கும் என்பது முழுமையாக முஸ்லிம் உம்மத்தை சார்ந்துள்ளது. அல்லாஹ் ﷻ கூறுகிறான்:

(إِنَّ اللَّـهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّىٰ يُغَيِّرُوا مَا بِأَنفُسِهِمْ)

“மனிதர்கள் தங்களை மாற்றிக்கொள்ளாத வரையில் நிச்சயமாக அல்லாஹ் அவர்களுடைய நிலையை மாற்றி விடுவதில்லை.”  (அல்குர்ஆன் : 13:11)

Comments are closed.