சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

செய்திப்பார்வை 11.07.2018

தலைப்புச்செய்திகள்

1. மத்திய கிழக்கு ஆசியா(வின் அரசியலில்)வில் சீனா
2. ப்ராக்ஸிட் மேலும் பலவீனம் அடைகிறது
3. சவூதி நவீனமயமாக்கள் வியுகத்தின்(கொள்கையின்) மூலம் தடுமாறுகிறது

மத்திய கிழக்கு ஆசியா(வின் அரசியலில்)வில் சீனா.
சீன அதிபர் ஜி ஜின்பிங் “எண்ணெய் மற்றும் எரிவாயு கலந்த கலவை” என்றழைக்கப்படும் ஒரு முன் மாதிரி திட்டத்திற்கு 20 பில்லியன் டாலர் கடனை வழங்கவும், மத்திய கிழக்கு நாடுகளுக்கு $ 106 மில்லியன் நிதியுதவி வழங்கவும் அறிவித்துள்ளார். பெய்ஜிங்கில், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், மத்திய கிழக்கில் இத்திட்டத்தை நிறைவேற்ற இரு நாடுகளுக்கிடையே உறவுகளை அதிகரிக்க சீனா மற்றும் அரபு நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பு நடைபெறுகிறது. உலகின் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளுடன் இருதரப்பு உடன்படிக்கை செய்ய சீனாவின் (எரி சக்திக்கான) பெரும் வேட்கை வழிவகுக்கிறது. மத்திய கிழக்கு ஆசியாவின் அரசியலில் சீனா அரிதாகவே ஈடுபட்டுள்ளது, ஆனால் ஜி ஜின்பிங்வின் அறிவிப்பு வெளிநாட்டில் (மத்திய கிழக்கு ஆசியாவின் அரசியலில் நுழைய) விரிவாக்க அதிக விருப்பம் தெரிவிக்கிறது. மத்திய கிழக்கின் பெரும்பகுதிகளில் உள்கட்டமைப்பின் பற்றாக்குறை சாலை வழியாக வியாபாரம் மேற்கொள்ளவிருக்கும் சீனாவின் வியாபாரத்தை பாதிப்பதுடன் அதன் முன்முயற்சிகளுக்கு தடையாக இருக்கக்கூடும். சீனா தனது இந்த இலட்சிய திட்டத்தை நடத்துவதற்கு தற்போது செயல்திறனுடன் இருக்க வேண்டும் என்று தீர்மானித்துள்ளது.

ப்ராக்ஸிட் (BREXIT) மேலும் பலவீனம் அடைகிறது
பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகுவதற்கு எட்டு மாதங்கள் முன்பிருந்தே பிரிட்டனின் அரசியல் அமைப்பு (ஒழுங்கற்று) சீர்குலைந்துள்ளது. 2016 ஜூன் மாதம் பொது வாக்கெடுப்பு போதிலும், மெல்லிய பெரும்பான்மை மூலம் ப்ராக்ஸிட்டை (பிரிட்டனை ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகுவது) நிர்ணயிப்பதில் அரசாங்கமும் அத்துடன் ஆளும் கட்சியும் இணைந்து முன்னெடுப்புகளை செய்து வருகின்றன. ஜூலை 6 ம் தேதி பிரதம மந்திரி தெரசா மே தலைமையிலான கூட்டம் நடைபெற்றது, கூட்டத்தில் வர்த்தகம் சம்பந்தமான பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கூட்டப்பட்டது. அதன்படி, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் பிரிந்தாலும் (வர்த்தக) சேவைகள் மீதும், சுங்க ஒன்றியத்திலும் இணைந்து மென்மையான போக்கை கையாண்டு ப்ராக்ஸிட்டை (பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் பிரிந்தாலும் இருவருக்குள்ளான நல்லுறவை சீராக) பராமரிக்கின்றன.  ஐரோப்பிய ஒன்றியம் இந்த திட்டத்தை மென்மையான ப்ராக்ஸிட் என்றழைப்பதன் மூலமாக பிரிட்டனை சமாதானப்படுத்த அது வடிவமைக்கப்பட்டுள்ளது, ஆனால் டோரிகளை (Tories – British political party) பொறுத்தவரை மிகக் கடுமையாக இது (பிரிட்டனை) அந்நியப்படுத்துவதாக கருதுகின்றனர். ஐக்கிய இராஜ்ஜியத்தின் பிரதான ப்ராக்ஸிட் பேச்சுவார்த்தையாளரான டேவிட் டேவிஸ் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பல சலுகைகளை அளித்துள்ளதை காரணம் காட்டி வாதிட்டு, ஜூலை 8 அன்று அதனை எதிர்க்கும் வகையில் பதவி விலகினார். மறுநாள் வெளியுறவு மந்திரி போரிஸ் ஜான்சன் தனது பதவியை விட்டு விலகினார். டேவிஸ் மற்றும் ஜான்சன் போன்ற கட்சியினரின் ராஜினாமாவானது சாத்தியமான வர்த்தக தடைகள் குறைக்க விரும்புவதும், முடிந்தவரை பிரிட்டன் சுயமாக வர்த்தகம் மேற்கொள்ள வேண்டுமென்பதை கன்சர்வேடிவ் கட்சியின் ராஜினாமா எடுத்துக்காட்டுகிறது. வரவிருக்கும் வாரங்களில், இந்த ராஜினாமா காரணமாக பெரும் சவால்களை எதிர்கொள்ள நேரிடும்.

சவூதி நவீனமயமாக்கல் வியுகத்தின்(கொள்கையின்) மூலம் தடுமாறுகிறது.
சவூதி இளவரசர் முகமது பின் சல்மானின் சவூதிமயமாக்கல் (தாராளமயமாக்கல் அல்லது தேசியமயமாக்கல்) கொள்கையால் சவூதிவாழ் அயல்நாட்டு மக்கள் சவூதியை விட்டு வெளியேறுவதுடன் மற்றும் வெளிநாட்டு முதலீட்டில் வீழ்ச்சியும் அடைந்துள்ளது. சவூதி தொழிலதிபர்கள் பல வெளிநாட்டவர்கள் “குறைந்த நிலை ஊதியத்தில் வேலை செய்தார்கள்” தற்போது உள்ளூர் மக்கள் (சவூதி குடிமக்கள்) குறைந்த ஊதியத்தில் வேலை செய்ய மறுக்கிறார்கள் என்று புகார் உள்ளது – தற்போதைய பொருளாதாரம் ஒரு உண்மையான பிரச்சினையை உருவாக்குகிறது.
நவம்பர் மாதம், சர்வதேச நிதி நிறுவனத்தின் அறிக்கை, நாட்டின் மொத்த மூலதனத்தை 2017 ஆம் ஆண்டில் $ 101 பில்லியன், அதில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 15% என்ற அளவிலேயே வெளியிட்டுள்ளது. சவுதி இளவரசர் முகம்மது பின் சல்மான் சவூதியை நவீனமயமாக்கிக் கொள்ளும் வகையில், நாட்டின் சமூக கட்டுப்பாடுகளை பயனற்ற வகையில் மீண்டும் சுமந்து கொண்டார் – அதனால் அவர் பொருளாதாரத்தின் நெருக்கடியை சுமக்கிறார், அதுமட்டுமில்லாமல் நாட்டின் நிதிநிலையை மாற்றியமைக்க போராடி வருகிறார்.
கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, சவூதிக்கு அதன் மூலதன வெளியேற்றத்தின் காரணமாக தற்போது வெளிநாட்டு முதலீட்டிலும் சரிவு ஏற்பட்டுள்ளது இதற்கு காரணம் சவூதியின் சர்வதிகார இளவரசர் வளர்ந்துவரும் மன்னர் முகமது பின் சல்மான் என பொதுவாக எல்லோராலும் அறியப்படுகிறது. சவூதி தனது அதிகாரத்தை ஒருங்கிணைப்பதற்கும் ஒரு புதிய பொருளாதார பாதையை திசை திருப்புவதற்கும் முயற்சி மேற்கொண்டு வருகிறது.
முகமது பின் சல்மான் சவூதிவாழ் வெளிநாட்டு தொழிலாளர்களின் வெளியேற்றத்தை விரைவுபடுத்த முயல்கிறது. ஏனெனில் அவர்கள் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர், சவுதிசேஷன் என்றழைக்கப்படும் (சவூதிமயமாக்கல் அல்லது தாராளமயமக்கள் அல்லது தேசிய மயமாக்கல் கொள்கையால்) செயல்முறையை விரிவாக்குவதன் மூலம் – குறிப்பாக உற்பத்தித் திறன்மிக்க உள்ளூர் பணியாளர்களை உருவாக்குகிறது.
ஆனால் சவூதி வணிக உரிமையாளர்கள் உள்ளூர் துறைசார்ந்த பணியாளர்களை பெறுவதில் சிரமப்படுகின்றனர், அரசுத்துறை மற்றும் தாராளமய வேலையின்மை நலன்களுக்காக தற்காலிகமாக வேலை செய்வதற்கு அவர்களுடைய விருப்பமின்மையை காட்டுகிறது. சவூதி வணிக உரிமையாளர்களின் குற்றச்சாட்டு அவர்களுக்காக வேலை செய்வதற்கு ஆட்கள் கிடைக்காமல் இருப்பதும், அவர்கள் கிடைத்தாலும் குறைவான ஊதியத்திற்கு வேலை செய்வதற்கும், குறைந்த நிலை வேலைகள் தயாராக இல்லை என்று கருதுபவையாக இருப்பதை தெரிவிக்கின்றன. ஆட்சேர்ப்பு பிரச்சினைகள் வெளிப்படையாக அவர்கள் நாட்டில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை பாதித்துள்ளது. இது மிகவும் கவலையளிக்கக் கூடியது. அரசாங்கத்தின் ஊதுகுழலாக, வரவுசெலவுத் திட்டத்தில், பொதுவாக நாட்டின் சாராரி வாழ்க்கை பற்றிய கட்டுகதைகள் இடம்பெறும்.

Comments are closed.