சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

செய்திப்பார்வை 13.07.2018

தலைப்புச்செய்திகள்

1. டாலருக்கு எதிரான துருக்கிய லிராவின் மதிப்பு குறைந்துள்ளது.
2. சிசி அளித்துள்ள சலுகைகள், எகிப்திய இராணுவதிற்க்கு (இராணுவ தடவாளங்களுக்கு) புத்துணர்வு.
3. பாகிஸ்தான் தனது பிராந்திய உளவாளிகளின் அசாதாரண(நிலையில்) கூட்டத்தை நடத்துகிறது.

டாலருக்கு எதிரான துருக்கிய லிராவின் மதிப்பு குறைந்துள்ளது
கடந்த 23.05.2018 புதனன்று டாலருக்கு எதிரான துருக்கி நாணய மதிப்பானது அதன் மே மாத மதிப்பை விட குறைந்துள்ளது. முதலீட்டாளர்களின் உணர்வுகளில் ஒரு மோசமான சரிவு ஏற்பட்ட நிலையில், டாலருக்கு 5 லிராவாக உள்ளது. ப்ளூம்பெர்க் தரவுப்படி நியூயார்க் வர்த்தக நாளில் புதனன்று லிரா, TL4.9743 குறியீட்டை அடைந்துள்ளது.  வர்த்தக நாளான மே 23 அன்று மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்த கட்டாயப்படுத்தியது இது பங்குசந்தை வர்த்தகத்தை கடுமையாக தாக்கியது, இறுதியில் குறைந்தபட்சம் TL4.9221க்கு கீழே லிராவை இறக்கியது. இந்த நாணயமானது சில வர்த்தக நாட்களில் பெரும் பரபரப்பை சந்தித்துள்ளது.
ஜனாதிபதி ரஜப் தையிப் எர்டோகன் தன்னுடைய அமைச்சரவைக்கு நாட்டிற்கு சாதகமான பங்குசந்தை அதிகாரிகளை நியமிப்பார் என்ற எதிர்பார்ப்பு முந்தைய வாரத்தில் இருந்தது. ஆனால் அவர் ஒரு மகத்தான பொருளாதார பதவிக்காக தனது மருமகனையே தேர்ந்தெடுத்தது அனைவரின் எதிர்பார்ப்பையும் ஏமாற்றமடைய செய்தது சர்வதேச முதலீட்டாளர்களுக்கு நன்கு தெரிந்த முன்னாள் துணை பிரதமர் முஹம்மது சிம்சேக்-க்கு, புதிய அரசாங்கத்தில் ஒரு பதவியையும் வழங்கவில்லை.

23.05.2018 புதன்கிழமை லிராவின் நாணய வீழ்ச்சி துவக்கிய பிறகு ரஜப் தையிப் எர்டோகன் வட்டி விகிதங்களை உயர்த்தினார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர், யாரும் எதிர்பாராத வண்ணம் ஏற்கனவே எரிந்துக் கொண்டிருக்கும் கொல்லியில் எண்ணெய் ஊற்றும் வேலையை செய்துக் கொண்டிருக்கிறார். இது முதலீட்டாளர்களின் கவலையை அதிகரிக்கிறது. பணவீக்கம் 15 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது, புதன்கிழமை வெளியிடப்பட்ட புள்ளி விவரங்கள் பொருளாதாரம் வெளிப்படையான அதிர்ச்சிகளை அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டுகிறது. (ஆதாரம் : FINANCIAL TIME)

துருக்கி அதன் பொருளாதாரத்தை உறுதிப்படுத்தவும் லிராவின் வீழ்ச்சியை தடுக்கவும் ஒரே வழி, இஸ்லாம் வரையறுத்த ஒரு பொருளாதார கொள்கையை ஏற்க வேண்டும். காகித பணத்திற்கு பதிலாக துருக்கி, தங்கத்தை மையமாக வைத்து மேற்கொள்ளப்படும் பொருளாதரத்திற்கு (தங்க தர நிலைக்கு) திரும்ப வேண்டும். இது பணவீக்கத்தை நிறுத்தி லிராவின் மதிப்பை அதிகரிப்பது மட்டுமல்லாமல் இது லிராவின் வாங்கும் திறனை மேம்படுத்துகிறது.

2. சிசி அளித்துள்ள சலுகைகள், எகிப்திய இராணுவதிற்க்கு (இராணுவ தடவாளங்களுக்கு) புத்துணர்வு.

ஜூலை 3ம் தேதி எகிப்திய பாராளுமன்றம் இராணுவ ஆயுதப்படைகளின் மூத்த தளபதிகளுக்கு சிறப்பு சலுகையை வழங்கி ஒரு வரைவு சட்டத்தை அங்கீகரித்தது. இந்த வரைவுச் சட்டம் தளபதிகளுக்கு இதற்கு முன் இல்லாத பல முன்னோடி சலுகைகளை வழங்கியுள்ளதுடன், குடியரசுத் தலைவருக்கு இந்த படைகள் தங்கள் வாழ்நாள் முழுவதும் இராணுவப் படைகளை சேர்ப்பதற்கான அதிகாரத்தை வழங்குகிறது.

அதிபரால் வழங்கப்படும் இந்தச் சலுகைகள் மற்றும் உரிமைகள் அவரால் நியமிக்கப்பட்டவர்களுக்கும் பொதுவாக அமைச்சர்களுக்கு பரிந்துரைக்கப் படுவதையும், தூதர்கள் உளவு பிரிவு நடவடிக்கைகளின் தலைவர்களுடனும் உறுப்பினர்களுடனும் வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் போது அவர்கள் அனுபவிக்கும் சலுகைகள் மற்றும் உரிமைகள் ஆகிய விதிமுறைகளை அனுபவிக்க அனுமதிக்கும். இந்த வரைவுச் சட்டம் சர்ச்சைக்கு வித்திட்டது, ஏனெனில் அந்த மூத்த தளபதிகளின் தேர்வுக்கு ஒரு அளவுகோலை அமைக்கத் தவறிவிட்டது மற்றும் ஜனாதிபதி அப்துல் பட்டா அல்சிசி தனக்கு மட்டுமே தேர்ந்தெடுக்கும் அதிகாரம் இவ்வரைவு சட்டம் கொடுத்துள்ளது.
ஆயுதப்படைகளின் உச்ச கவுன்சிலின் அனுமதியுடன் தவிர, 2013 ஜூலை 3 முதல் ஜனவரி 10, 2016 அன்று பாராளுமன்றம் தனது கடமைகளை நிறைவேற்றும் வரை, அரசியலமைப்பு பாதிப்பு ஏற்படாத வரை அவர்கள் செய்த எந்த செயல்களுக்கும் வரைவுச் சட்டத்தின் எந்தவொரு நபருக்கும் எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்று வரைவு சட்டம் கூறுகிறது. பல அரசியல் ஆய்வாளர்கள், ஜூன் 30 ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தற்போதைய நாடாளுமன்றம், பாதுகாப்பு விதிமுறையின் வழிமுறைகளில் தற்சார்பு சட்டம் இல்லாதது, எந்த ஜனநாயக நாட்டிலும் ஒரு அடிப்படை விதிமுறைகளை தீவிரமாக பாதுகாக்கும் அதிகார பகிர்வை ஒப்புக்கொள்கிறது..
கெய்ரோ பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான பேராசிரியரான ஹாசன் நபா, இந்த மசோதாவில் “சர்வாதிகார ஆட்சிகளால் இத்தகைய வரைவு சட்டங்கள் மட்டுமே வழங்கப்படும் என்று அலட்சியப்படுத்தி தனது கோபத்தை வெளிப்படுத்தினார், மூத்த தளபதிகளை தேர்வு செய்வதற்கும், திரும்பப் பெறுவதற்கும் விதிமுறை இன்னும் குறிப்பிடப்படவில்லை. சிசி இந்த தளபதியை தேர்ந்தெடுப்பது என்பது மட்டும் தெளிவானதாக உள்ளது. அத்தகைய ஒரு மசோதாவை வழங்குவதற்கும் மக்களில் ஒரு குழுவிடம் வாழ்நாள் முழுவதும் சலுகைகளை வழங்குவதற்கும் ஒரே மாதிரியாக அரசியலமைப்பை திருத்திக் கொண்டு, வாழ்நாள் முழுவதும் அதிகாரங்களை வழங்க முடியும்”.
பாதுகாப்பு படைகளை உயர்த்துவதற்காகவும், அவரது ஆட்சியைப் பாதுகாப்பதற்கும் சிசி அனைத்து நிறுத்தங்களையும் எடுத்து வருகிறது. சிசி மக்களின் ஆதரவை இழந்துவிட்டார் என்பதை முழுமையாக அறிந்திருக்கிறார், ராணுவம் மட்டுமே தனது கொடுங்கோன்மையைக் காப்பாற்ற முடியும்.

3. பாகிஸ்தான் தனது பிராந்திய உளவாளிகளின் அசாதாரண (நிலையில்) கூட்டத்தை நடத்துகிறது
பயங்கரவாத எதிர்ப்பு பற்றி விவாதிக்க ரஷ்யா, சீனா மற்றும் ஈரானில் இருந்து புலனாய்வு அமைப்புகளின் தலைவர்கள் புதன்கிழமை தங்களுக்குள் சந்திப்பை நடத்தினர். இது கொந்தளிப்பான குழப்பமான சூழல் நிலவி வரும் ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய அரசு கட்டமைப்பதில் அமையவிருப்பதைப் பற்றி அவர்கள் கவனம் செலுத்தினர்.
இஸ்லாமாபாத்தில் வாய்ஸ் ஆப் அமெரிக்காவிற்கு கொடுத்துள்ள அதிகாரப்பூர்வ தகவல்படி, மத்திய கிழக்கு நான்கு நாடுகளின் எல்லைகளை அச்சுறுத்தியதில் இருந்து ஆப்கானிய ஆதரவு பயங்கரவாதக் குழுவின் மிரட்டலையும் தாக்குதலையும் சமாளிக்க(எதிர்க்க) நிறுத்துவதற்கு கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள விரிவான கலந்துரையாடல்களை நடத்தியது.
ஐ.எஸ். தலைமையிலான பயங்கரவாதத்தால் “நேரடியாக பாதிக்கப்பட்ட” நாடுகளில் இருந்து உளவு (அமைப்பின்) தலைவர்கள் அதற்கு எதிரான கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள அவர்களை ஒன்றாகக் கொண்டு வந்தது. எவ்வாறெனினும், அது “வேறு எந்த நாட்டிற்கும் எதிராக எந்த நோக்கத்திற்காகவும் இலக்கு வைக்கப்படவில்லை,” ரஷ்யா, சீனா மற்றும் ஈரானை உள்ளடக்கிய ஒத்துழைப்பு ஐ.எஸ்க்கு எதிரான அதே வேளையில் ஆப்கானிஸ்தானை(நிலைப்படுத்துவதற்கான) உறுதிப்படுத்துவதற்கான அமெரிக்க தலைமையிலான முயற்சிகளை மட்டப்படுத்துவதற்கு உண்டான முயற்சியில் வலியுறுத்தப்பட்டது.
மாஸ்கோவின் வெளியுறவு புலனாய்வு சேவையின் செய்தித் தொடர்பாளர் ஆப்கானிஸ்தானில் ஐஎஸ்-ன் எழுச்சி இஸ்லாமாபாத்தில் நடைப்பெற்ற விவாதங்களுக்கு மூல காரணமாக இருந்ததை உறுதிப்படுத்தினார்.
ஐ.எஸ் தீவிரவாதிகள் சிரியா, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து இருந்து வருவதை தடுக்க ஒருங்கிணைந்த வழிமுறைகளின் முக்கியத்துவத்தை இந்த மாநாடு புரிந்து கொண்டது. இவர்களால் அண்டை நாடுகளுக்கு ஆபத்துக்கள் ஏற்படுகின்றன, என்று செர்ஜி இவானோவ், டாஸ் ஊடக வெளியீட்டில் கூறினார். ரஷ்ய உளவு நிறுவனத்தின் இயக்குனர் செர்ஜி நரிஷ்கின், சீன மற்றும் ஈரானிய போன்ற தீவிரவாத எதிர்ப்பாளர்களுடன் இஸ்லாமாபாத் கூட்டத்தில் கலந்து கொண்டார். ஆப்கானிஸ்தானில் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான “முயற்சிகளில் பிராந்திய சக்திகளை இன்னும் கூடுதலாக சேர்ப்பதற்கான தேவையை அவர்கள் வலியுறுத்தினர்.”
இந்த விவாதங்கள் பல மாதங்களாக அமெரிக்கா மீது ரஷ்யா தனது குற்றச்சாட்டுகளை தொடர்ந்து வந்தன, அவை ஐ.எஸ்-க்கு பின்னால் அமெரிக்காவின் செல்வாக்குக்கு உள்ளன, குறிப்பாக மத்திய ஆசிய நாடுகளுடன் எல்லைக்கு அருகில் உள்ள வடக்கு ஆப்கானிய மாகாணங்களில் என்று குற்றம் சாட்டுகின்றன. தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை அமெரிக்கா மறுத்தது மேலும் இந்த குற்றச்சாட்டு தாலிபான் கிளர்ச்சிக்கான மாஸ்கோவின் தொடர்புகளை நியாயப்படுத்தும் ஒரு முயற்சி என்று கூறியது. கடந்த மாதம் ஆப்கானிஸ்தானில் நடந்த பாதுகாப்பு மன்றக் கூட்டத்தில் உரையாற்றிய யு.என்.என். ரஷ்ய தூதர் வாஸ்லி நெபென்சியா, மத்திய ஆசிய நாடுகளிலிருந்து வந்தவர்கள் உட்பட, போராளிகளுக்காக நாட்டில் பயிற்சியளிப்பு முகாம்களை உருவாக்கி வருவதாக கூறினார்.
ஆதாரம் : வாய்ஸ் ஆப் அமெரிக்கா

Comments are closed.