சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

அமெரிக்காவுடைய ஆக்கிரமிப்புக்கு பேச்சுவார்த்தைகள் மூலமாக அரசியல் ரீதியிலான பாதுகாப்பை வழங்குவதற்கு பதிலாக ஆப்கானிஸ்தானிலிருந்து அதை வெளியேற்றுவதற்கான தருணம் இது

செய்தி:

ஜூலை 15, 2018 அன்று, நேரடி பேச்சுவார்த்தை நடத்தவதற்காக தாலிபான்களுக்கு அழைப்புவிடுக்குமாறு டிரம்ப் தனது உயரிய தூதர்களிடம் கூறினார் என டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டது, இது உடனடியாக பேச்சுவார்த்தையை துவக்கி 17 வருடங்களாக தான் நடத்திவரும் போரை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் எனும் நம்பிக்கையில் ஆப்கானிஸ்தானுக்கான கொள்கையின் விஷயத்தில் அமெரிக்கா கொண்டிருக்கும் குறிப்பிடத்தக்க மாற்றமாகும். “ஆப்கான் தலைமையிலான, ஆப்கான் தனியாக” மேற்கொண்ட பேச்சுவார்த்தை முயற்சிகள் தோல்வியை தழுவியதன் காரணமாக அமெரிக்கா தாலிபானுடன் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்துவது என தனது முன்னுரிமையை மாற்றியமைத்தற்கு ஆப்கானிஸ்தானுக்கான டிரம்ப்புடைய புதிய உத்தியானது தாலிபான்களுடைய முன்னேற்றத்தை திரும்பப் பெறுவதில் எந்தவொரு அடிப்படையான மாற்றமும் ஏற்படவில்லை என்பதை ஆப்கான் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் உணர்ந்ததன் காரணமாக உருவானது.

கருத்து:

அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் தனது இராணுவ இருப்புக்கு அரசியல் தீர்வு ஒன்றை எட்டுவதற்காக வேண்டி முந்தய ஒபாமாவின் நிர்வாகம் முதல் காபூலில் இருக்கும் தனது கைப்பாவை அரசுடன் ஆப்கானிய தாலீபான்களை பேச்சுவார்த்தையில் அமருமாறு அமெரிக்கா நிர்பந்தித்து வருகிறது. இதனை செயல்படுத்தும் விதமாக, அமெரிக்கா ஆப்கானிய படையை விரிவாக்கியது மேலும் ஆப்கானிஸ்தானுக்குள் இருக்கும் ஆப்கானிய முஜாஹிதீன்கள் மீது இரவில் மோசமான முறையில் சோதனைகள் மேற்கொள்வது உட்பட, மூர்க்கத்தனமான தாக்குதல்களை மேற்கொண்டது. அமெரிக்காவுடைய கங்காணிகள் இந்தோனிசியா மற்றும் சவூதி அரேபியாவில் உலமாக்கள் மாநாடுகளை நடத்தினர், அங்கு அரசுடைய ஆதரவை பெற்ற “இஸ்லாமிய” அறிஞர்கள் ஆப்கானிய முஜாதீன்களிடம் போரை முடிவுக்கு கொண்டு வந்து ஆப்கானிய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டனர். அமெரிக்காவுடைய கோரிக்கை மற்றும் திட்டத்திற்கு அடிபணிய ஆப்கானிய தாலீபான்களை நிர்பந்திப்பதற்காக பாகிஸ்தானிய அரசியல் மற்றும் இராணுவ தலைமையில் இருக்கும் அதன் கங்காணிகளை அரசியல், புலனாய்வு மற்றும் இராணுவ தந்திரங்களை பிரயோகிப்பதற்காக அமெரிக்கா பயன்படுத்தியது. இருப்பினும், அமெரிக்காவுடைய இந்த அனைத்து முயற்சிகள் மற்றும் அழுத்தங்களை மீறியும் காபூலில் உள்ள அமெரிக்காவுடைய கைப்பாவை அரசுடன் ஆப்கானிய தாலிபான்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட தொடர்ந்து மறுத்து வருகின்றனர். அவர்கள் அனைத்து அந்நிய ஆக்கிரமிப்பாளர்களும் வெளியேற வேண்டும் எனவும் அது விஷயமாக அமெரிக்காவுடன் நேரடியாக பேச்சுவார்த்தையை மேற்கொள்ள வேண்டும் எனவும் தொடர்ந்து கோரி வருகின்றனர்.

அமெரிக்க வரலாற்றிலேயே மிக நீண்ட காலமாக நடைபெறும் போரான ஆப்கானிஸ்தானிய போரை துவக்கி பதினேழாம் ஆண்டில் இருக்கும் நிலையில் ஆப்கானிய தாலிபான்களின் இந்த பிடிவாதமானது டிரம்ப்புடைய நிர்வாகத்தில் குழப்பத்தை ஏற்படுத்த துவக்கியுள்ளது. இந்த போரானது மக்களுடைய வெறுப்பை பெற்றுள்ளது மேலும் கடந்த வாரம் புரூசல்ஸில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டில் ஆப்கானிய போரினால் “மக்கள் விரக்தியடைந்துள்ளார்களா” எனும் எண்ணத்துடன் கேட்கப்பட்ட நிருபரின் கேள்வி ஒன்றுக்கு ஒப்புக்கொள்ளும் விதமாக ஆம் என்று டிரம்ப் பதிலளித்தார். டிரம்ப், “ஆம்,… அதை நான் ஒப்புக்கொள்கிறேன். நான் இதில் பெரும்பாலும் உடன்பாட்டை கொண்டிருக்கிறேன். இந்நிலை நீண்டகாலமாக நிலவி வருகிறது.” என கூறினார். இந்த நெடிய அதிக செலவை கொண்ட போரினை தொடர்ந்து நடத்தினால் அமெரிக்காவால் தாங்க முடியாது என்கிற அளவுக்கான பொருளாதார பாரமாக உருவாகியுள்ளது. தனது நெடுநாள் நேட்டோ கூட்டணி நாடுகளை நேட்டோவுடைய நிதிச் சுமையில் அதிகமான அளவில் பங்களிக்குமாறு நிர்பந்திக்கும் அளவுக்கு அமெரிக்க பொருளாதார நிலை சிதைந்துள்ளது. மேலும் அமெரிக்க பொருளாதாரமானது ஐரோப்பிய கூட்டமைப்பு, கனடா மற்றும் மெக்ஸிகோவுடன் வர்த்தகப் போரை துவக்குகின்ற அளவுக்கு கடுமையான அழுத்தத்தில் உள்ளது. அமெரிக்காவுடனான வர்த்தகத்தில் அநியாயமான முறையில் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதாக தனது முன்னாள் கூட்டணிகள் மீது குற்றம் சுமத்தியது. அது உலக வர்த்தக மையத்தின் விதிமுறைகளை மீறி செயல்பட்டும் இறக்குமதிகளுக்கான வரிகளை விதித்தும் பாதுகாப்புவாத கொள்களை செயல்படுத்தி வருகிறது.

தான் ஆதிக்கத்தில் இருக்கும் இந்த சமயத்தில் அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மற்றும் இராணுவ ரீதியாகவும் அமெரிக்கா மிகவும் பலவீனமான நிலையில் இருப்பது தெளிவாக தெரிகிறது. சிறிய படையை கொண்டுள்ள ஆப்கானிய தாலிபானின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளும் கட்டாயத்தில் வாஷிங்டன் இருப்பது அதன் பலவீனமாக இருக்கின்றது என்பதற்கான மற்றொரு அறிகுறியாகும். சிறிய படை ஒன்று அமெரிக்காவை மண்டியிட செய்துள்ளது என்றால், இதனை செய்வதற்கான ஆற்றலை பாகிஸ்தான் அதிகமான அளவில் கொண்டுள்ளது. மார்க்கத்திற்கு உண்மையாக இருக்கக் கூடிய மக்கள் பாகிஸ்தானிய தலைமைத்துவத்தை அமெரிக்காவுடைய கங்காணிகளிடமிருந்து கைப்பற்றுவதற்கும் மேலும் இந்த பகுதியில் நிலவும் அமைதியின்மைக்கு மூலகாரணமான அமெரிக்க இருப்பை வெளியேற்றி மீண்டும் இங்கு அமைதியை ஏற்படுத்துவதற்காக தங்களுடைய முழுமையான ஆதரவை அவர்களுடைய சகோதரர்களான ஆப்கானிய முஜாஹிதீன்களுக்கு வழங்குவதற்கான தருணம் இது. இதனை எளிதாக அடைவதற்கு பாகிஸ்தானின் இராணுவத்திலுள்ள உண்மையான மக்கள் நபித்துவ வழிமுறையின் அடிப்படையிலான கிலாஃபத்தை நிலைநாட்டுவதற்கு தங்களது ஆதரவை ஹிஸ்புத்தஹ்ரீருக்கு வழங்க வேண்டும். அதன் பிறகு அந்த நேர்வழி பெற்ற கலீஃபா (கிலாஃபா ராஷிதா) தன்னிடமுள்ள அனைத்து வளங்களையும் அமெரிக்காவை வெளியேற்றுவதற்காக பயன்படுத்தி மேலும் அவர் மேற்கொள்ளும் நடவடிக்கையானது தற்போது பலவீனமாக உள்ள அமெரிக்காவுடைய சவப்பெட்டியில் அடிக்கப்படும் ஆணிகளில் இறுதியானதாக இருக்கும் என்பதை உறுதிபடுத்தும்.

﴿فَلاَ تَهِنُواْ وَتَدْعُوۤاْ إِلَى ٱلسَّلْمِ وَأَنتُمُ ٱلأَعْلَوْنَ وَٱللَّهُ مَعَكُمْ وَلَن يَتِرَكُمْ أَعْمَالَكُمْ﴾

“(போர் புரியும் நம்பிக்கையாளர்களே! இழிவு தரக்கூடிய விதத்தில்) நீங்கள் தைரியமிழந்து சமாதானத்தைக் கோராதீர்கள். (ஏனென்றால்,) நீங்கள்தாம் வெற்றி பெறுவீர்கள். அல்லாஹ் உங்களுடன்தான் இருக்கின்றான். உங்களுடைய நன்மைகளில் ஒன்றையும் அவன் குறைத்துவிடமாட்டான்.”
(அல்குர்ஆன் : 47:35)

Comments are closed.