சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

இருபது லட்சத்திற்கும் அதிகமான தன் பிள்ளைகளை அபாயகரமான வீட்டில் வாழ வைக்கும் இந்த அமைப்புமுறையை எவ்வாறு வெற்றிப்பெற்றதாக காண முடியும்?

செய்தி :
ஜூலை 3 அன்று சிறுவர்கள் ஆணையர் வெளியிட்ட ஒரு அறிக்கையில், இங்கிலாந்தில் 21 லட்சம் குழந்தைகள் அதாவது ஆறில் ஒரு குழந்தை வளர கூடிய குடும்பத்தில் அவர்களுக்கான ஆபத்து அதிகமாக உள்ளது. இதில் 8 ,25 ,000 குழந்தைகள் குடும்பத்தில் வன்முறைகள் நடக்கும் வீடுகளில் வாழ்கின்றனர். 4 ,70 ,000 குழந்தைகள் குடிப்பழக்கம், போதை பழக்கம் மற்றும் பெற்றோர்களின் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் வசிக்கும் வீடுகளில் மன ரீதியான பிரச்சனைகள், சித்ரவதை மற்றும் குடிப்பழக்கம் என மூன்று கொடிய விஷங்கள் உள்ளன. நான்கு லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகளுக்கு பொருள்கள் பற்றாக்குறையுள்ளன. இன்னும் இந்த அறிக்கையின் படி 16 லட்சம் குழந்தைகள் தங்களை தாங்களே பார்த்துக்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். கல்வித்துறை வெளியிட்ட செய்தியில் இந்த வருடம் ஜனவரி மாதத்தில் ஆறு லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் கெட்ட நடத்தையால் சமூக சேவைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் , அதாவது 49 வினாடிக்கு ஒரு குழந்தை இந்த ஒழுங்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்தின் குழந்தைகள் ஆணையர் இந்த சூழலை பெரும் சமூக நீதிக்கான சவால் என விவரித்துள்ளார். நாம் விரும்பும் சமூகமே நமக்கு அமையும் , இச்சமயத்தில் நாம் பல்லாயிரக்கணக்கான குழந்தைகளின் எதிர்காலத்தோடு விளையாட தேர்வுசெய்துள்ளோம் என்றார்.

கருத்து:

இத்தகைய வருந்தத்தக்க சூழலை அரசியல் மற்றும் ஊடங்கங்களின் வாதங்களில் குழந்தைகளின் சேவைக்கென அரசு குறைவான தொகையை நிதி வழங்குவதாலேயே இத்தகைய குழந்தைகளை ஆதரித்து பாதுகாக்க முடியவில்லை என்கின்றனர். கடந்த ஆறு வருடங்களில் இத்தகைய செயல்களுக்கென நிதி கிட்டத்தட்ட நூறு கோடி பௌண்ட்ஸ்(POUNDS) குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகமான தொண்டு நிறுவனங்கள் உள்ளூர் அதிகாரிகள் குழந்தைகளுக்கான சேவைகளை ஒரு கை கட்டப்பட்ட நிலையில் வழங்க முயற்சிக்கன்றனர் என கூறுகின்றனர். நிச்சயமாக அரசாங்கத்தின் நிதி குறைப்பது, உள்ளூர் அதிகாரிகளால் இத்தகைய குழந்தைகளின் நலன்களுக்காக செயல்படும் ஆற்றலை குறைக்க செய்யும் என்பதே இந்த அரசு அந்நாட்டின் சிறுவர்களுக்கு அக்கறை செலுத்த விரும்பவில்லை என்ற போதிலும், மனித சமூகத்தை இத்தகைய சூழ்நிலைக்கு அழைத்து செல்லும் உந்து சக்தி எது என்பதை விளக்க வில்லை.

பொருளாதார அம்சத்தில் கவனம் செலுத்துவதால் முக்கியமான காரணங்களாக கருதப்படும் வாழ்க்கை முறை மற்றும் முதலாளித்துவ மதசார்பின்மை தாராள கொள்கையின் அடிப்படையிலான சட்டங்கள் ஆகியவை ஓரம் கட்டப்படுகின்றன.. இது ஆச்சர்யமாகவும் இல்லை.. ஏனெனில் தாராள சுதந்திர கொள்கையை ஊக்குவிப்பதால் சுகத்தை அனுபவிப்பதையே வாழ்க்கை லட்சியமாக தனி நபர்கள் நாடுகின்றனர். இதனால் குடிப்பழக்கம் மற்றும் போதை பழக்கம் மற்றும் குழந்தைகளை கவனிக்காத பெற்றோர்கள் போன்றவர்களை உருவாக்கினால் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. பெண்களை தாழ்வுபடுத்தி, ஒரு காட்சிப்பொருளாகவும் தங்களின் இச்சைகளை தீர்க்கும் பொருளாகவும் சித்தரிக்கும் இந்த சமூகத்தில் சித்ரவதை பெருகுவது ஆச்சர்யப்படக்கூடியவையல்ல. மேலும் நீங்கள் குறுகிய, பலவீனமான நிலையற்ற மனித அறிவினால் தோன்றும் அரசமைப்பின் மூலம் ஆட்சி செய்யப்பட்டால் தனி நபர்களையும் குழந்தைகளையும் உருகுலைய செய்யும் மலையளவு பொருளாதார சமூக மற்றும் அரசியல் பிரச்சனைகளை நீங்கள் உருவாக்கினால் ஆச்சர்யப்படாதீர்கள்.

எதிர்பாராத விதமாக முஸ்லீம் உம்மாவாக நம்முடைய குடும்பமும் வீடும் இத்தகைய சித்ரவதைகளையும், கவனிப்பின்மையையும் நம்முடைய குழந்தைகளுக்கு கொடுக்கின்றோம், இதனால் நாமும் மேற்கத்தியவர்களை போன்றே துயரங்களுக்கு உள்ளாகின்றோம். இதற்க்கு காரணம் அவர்களின் சீர்கெட்ட பாதிக்க கூடிய மதசார்பின்மை மற்றும் முதலாளித்துவ கொள்கையை மேற்கத்திய அரசாங்கம் நமக்கு தங்க சாயமிட்டு விற்றுவிட்டமையாகும். இறை நம்பிக்கையாளர்களாகிய நாம் ஸுரா அத்தீனில் வரக்கூடிய வசனத்தை நினைவில்கொள்ள வேண்டும்

(لَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ * ثُمَّ رَدَدْنَاهُ أَسْفَلَ سَافِلِينَ * إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَلَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ )

திடமாக, நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம். பின்னர் (அவன் செயல்களின் காரணமாக) அவனைத் தாழ்ந்தவர்களில், மிக்க தாழ்ந்தவனாக்கினோம். எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கைளைச் செய்தார்களோ அவர்களுக்கு என்றும் முடிவில்லாத (நற்)கூலியுண்டு. [ஸூரத்துத் தீன்: 4-6]

எனவே நிச்சயமாக இது நாம் கண் விழிக்க வேண்டிய நேரமாகும், நம்முடைய சமுதாயத்தையும் நிலத்தையும் இந்த சமூக சீர்குலைவிலிருந்து பாதுகாக்க மேற்கத்திய கொள்கைகளையும் அமைப்பு முறையையும் தவிர்த்து, உன்னதமான கொள்கையையும், சட்டங்களையும் அமைப்பு முறையையும் தரும் இஸ்லாத்தின் மூலம் நம்மை ஒழுங்குபடுத்தி, நம்முடைய குடும்பங்களையும் நிலத்தையும் ஆட்சி செய்ய வேண்டும். இஸ்லாமிய வாழ்க்கைமுறை மட்டுமே நம்முடைய மன நிலையை இறையச்ச முறையில் உருவாக்கி, கேடுகெட்ட இன்பத்தை மட்டுமே அளவுகோளாக கொள்ளும் இந்த மேற்கத்திய வாழ்க்கைமுறையிலிருந்து பாதுகாத்து இறைவனுக்கு அடிபணிந்து வாழக்கூடிய சூழலை உருவாக்கும். மேலும் நபித்துவ முறையில் உருவாக்கப்படும் கலீஃபாவால் நடைமுறைப்படுத்தப்படும் இந்த இஸ்லாமிய அமைப்பே அகிலத்தின் இரட்சகனின் சட்டத்தின் மூலம் அணைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வை தந்து, சமூகத்தை ஒற்றுமையாகவும் பாதுகாப்பாகவும் வழி நடத்தும்.

இதன் காரணமாகவே முஸ்லீம் அல்லாதவர்களும் இஸ்லாமிய நாகரீகத்தை புகழ்ந்துள்ளனர். புகழ் பெற்ற எழுத்தாளர் எச். ஜி. வெல்ஸ் அவர்கள் தன்னுடைய புத்தகத்தில், இஸ்லாம் கொடூரங்கள் மற்றும் ஒடுக்குமுறையற்ற பெரும் சமூகத்தை உருவாக்கியுள்ளது இது மற்ற எந்த சமூகத்திலும் அதற்க்கு முன் காணப்பட்டவையல்ல என குறிப்பிட்டுள்ளார். நிச்சயமாக இத்தகைய எதிர்காலத்தையே நம் குழந்தைகளுக்கும் நம் குடும்பத்திற்கும் நாம் நாடுகின்றோம். ஆனால் இத்தகை சூழல் நம் நிலத்தில் மீண்டும் கிலாஃபத்தை நிலைநாட்டினால் மட்டுமே சாத்தியமாகும்.

 

Comments are closed.