சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

மிருகத்தனமான சீன அரசு உய்குர் முஸ்லிம் பெண்களின் ஆடையை கிழித்துள்ளது

செய்தி:

சீனா கிழக்கு துர்கிஸ்தான் பகுதியில் வசிக்கும் உய்குர் சிறுபான்மையினருக்கு எதிராக நிகழ்த்தி வரும் அட்டூழியங்களின் நீண்ட பட்டியலில் பாகுபாட்டின் காரணமாக நடத்தப்பட்ட மற்றுமொரு நிகழ்வையும் சேர்த்துள்ளது, இந்த பகுதியை “போலிஸ் ஸ்டேட்” (அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்ட பகுதி) என்று கூறும் அளவுக்கு அதன் செயல் அமைந்துள்ளது. கிழக்கு துர்கிஸ்தானில் உள்ள காவல்துறையினர் முஸ்லிம் உய்குர் பெண்களின் ஆடைகள் “மிகவும் நீளமாக” இருப்பதாக கூறி நடுத்தெருவில் வைத்து கிழித்துள்ளனர் என டாக்குமெண்டிங் ஆப்ரேஷன் எகைன்ஸ்ட் முஸ்லிம்ஸ் (DOAM) எனும் அமைப்பு ஜூலை 13,2018 அன்று கூறியது மேலும் ஹாங்காங்கின் முஸ்லிம் கவுன்சிலும் தமது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

இது முஸ்லிம்களை பன்றி மாமிசத்தை கட்டாயப்படுத்தி உண்ண வைத்தது, ரமலான் மாதத்தில் நோன்பு நோற்க தடை விதித்தது, அவர்களிடம் தமது செல்வம் அல்லாஹ் ﷻ வின் புறத்திலிருந்து அல்லாமல் சீனாவின் புறத்திலிருந்து மட்டுமே வந்தது என பகிரங்கப்படுத்த கட்டாயப்படுத்தியது, இளம் யுவதிகள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்தது அல்லது ஆண்கள் தாடியை வைப்பதற்கு தடை செய்தது, மதுபானத்தை விற்பனை செய்ய கட்டாயப்படுத்தியது மற்றும் இதுபோன்ற பலவிதமான அடக்குமுறை மற்றும் மன சித்திரவதையின் வரிசையில் நடைபெற்றுள்ளது. உய்குர் ஆண்கள் சித்திரவதை முகாம்களுக்கு அனுப்பப்பட்டு உய்குர் முஸ்லிம் பெண்கள் சீன ஆண்களை திருமணம் செய்துகொள்ள கட்டாயப்படுத்தப்படுகின்றனர், மரபணு சுத்தகரிப்பு வேலை நடைபெற்று வருகிறது.

கருத்து:

முஸ்லிம் உய்குர் பெண்கள் நோன்பு நோற்க தடை விதிப்பது, இஸ்லாமிய உடைகளை உடுத்துவதற்கு தடை விதிப்பது, முஸ்லிமல்லாத ஆண்களை திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்துவது மற்றும் முஸ்லிம் பெண்களை கருச்சிதைவு செய்வதற்கு கட்டாயப்படுத்துவது உட்பட முஸ்லிம் உய்குர் பெண்களின் மீது இதுபோன்ற நடவடிக்கைகளானது முஸ்லிம்களுக்கு எதிரான சர்வாதிகார சீன அரசாங்கத்தின் சமீபத்திய இனவாத, பாகுபாட்டை கொண்ட கொள்கைகளாகும். இந்த கம்யூனிச அரசாங்கம் பெண்களுடைய கண்ணியம் குறித்தான எந்த கருத்தையும் கொண்டிருக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது, நீளம் அதிமாக இருக்கின்றது என்கிற ஒரே காரணத்திற்காக அவர்கள் காட்டுமிராண்டித்தனமாக உய்குர் பெண்களுடைய ஆடைகளை கத்தரித்துள்ளனர். என்னவொரு முட்டாள்தனமான அரசாங்கம் இது! சூறையாடுகின்ற இந்த சீன அரசாங்கம் உய்குர் பெண்களின் மீது தீய பாணிகளை பயன்படுத்தி கிழக்கு துர்கிஸ்தானில் இஸ்லாத்துடைய வளர்ச்சியை தடுத்து நிறுத்துவதற்கான கட்டாயத்தில் உள்ளதாக தெரிகிறது – இவையனைத்தும் அந்த அரசாங்கம் தனது பொருளாதார சாதனையை முன்னிறுத்தி உலகிற்கு தன்னை ஒரு நவீனமடைந்த நாகரீகமடைந்த தோற்றத்தை முன்வைப்பதற்கு முயற்சித்தாலும் இந்த அரசாங்கத்தின் உண்மையான காட்டுமிராண்டித்தனமான தோற்றத்தையே இவை வெளிப்படுத்துகிறது.

இது காஸா, சிரியா, பாகிஸ்தான், மியான்மர் மற்றும் இதர பகுதிகளில் உள்ள கண்ணியமிக்க முஸ்லிம் பெண்கள் கொல்லப்பட்டு வருகின்ற அதேசமயத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கிழக்கிலிருந்து மேற்கு வரை, இந்த உம்மத்தின் புதல்விகள் அவர்களுடைய இரத்தத்தையும், கண்ணியத்தையும் மற்றும் இஸ்லாமிய நம்பிக்கைகளை பாதுகாக்கும் தலைமைத்துவம் இல்லாத காரணத்தால் நரிகளின் கரங்களில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நிச்சயமாக, அவர்களுடைய கேடயமும் பாதுகாவலனுமாகிய “கிலாஃபத்” அழிக்கப்பட்ட பிறகு, ஒன்பது தசாப்தங்களுக்கும் மேலாக முஸ்லிம் பெண்கள் தங்களுடைய வாழ்வை கண்ணியமற்ற நிலையிலும் மிகுந்த துன்பத்தை அனுபவிக்கின்ற நிலையிலும், பாதுகாப்பற்ற நிலையிலும் மற்றும் துன்புறுத்தல், மரணம் மற்றும் பேரழிவு ஆகியவற்றை அனுபவிக்கின்ற நிலையிலும் வாழ்ந்து வருகின்றனர். ஜனநாயக மற்றும் சர்வாதிகாரிகளின் கீழ் இவர்கள் உதவியற்ற நிலையில் இவர்களுடைய இரத்தத்தையும் கண்ணியத்தையும் பொருட்படுத்தாத தற்போது இயங்கிவரும் உலக ஒழுங்கினால் இவர்களை அடக்குமுறைக்கு உட்படுத்தவும் கொல்லவும் அனுமதித்த நிலையில் இரையாடும் குஃப்பாரிய ஆட்சியாளர்கள் மற்றும் அரசுகளால் பாதிக்கப்பட்டவர்களாக ஆகியுள்ளனர் – இந்த உலக ஒழுங்கானது தமது சகோதரிகளை கைவிட்ட, தமது மனிதநேயத்தை கைவிட்ட மேலும் அழுகிப்போன இந்த தேசியவாத மதசார்பற்ற மற்றும் முதலாளித்துவ உலக அமைப்பின் அடிவருடிகளாக இருக்கும் முஸ்லிம் உலகின் கைப்பாவை ஆட்சியாளர்களையும் உள்ளடக்கியுள்ளது. நிச்சயமாக, இதுபோன்ற பல ஆட்சியாளர்களின் கரங்களானது நமது சகோதரிகளின் இரத்தத்தால் நனைந்ததாக இருக்கின்றது.

இதயத்தையும், செவியையும் மற்றும் பார்வையையும் கொண்டிருக்கும் ஒருவர் முஸ்லிம்களுடைய விவகாரங்களை பார்த்துக்கொள்ளும் ஒரு பொறுப்பாளரை இழந்துள்ளனர் என்பதை உணர்ந்துகொள்வார். நமது கேடயம் இல்லாத நிலையில், இஸ்லாமிய நிலங்களானது வயோதிகர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் தூய்மையான இரத்தத்தை சிந்துவதற்கான இடமாகவும், பாதிக்கப்பட்டவர்களின் அபயக் குரல்களை கேட்கும் இடமாகவும், பிரவினைக்கும் மற்றும் துண்டாடப்படுவதற்கும் மற்றும் எதிரிகள் மற்றும் அதன் கூட்டணிகளால் கட்டுப்படுத்தப்படுகின்ற நிலமாகவும் மட்டுமே கருதப்படுகிறது. அவர்கள் தங்களை பாதுகாக்கும் மற்றும் அவருக்கு பின்னால் இருந்து இவர்கள் போர் புரியும் இமாமை இழந்துள்ளனர், ரசூலுல்லாஹ் ﷺ கூறினார்கள்,

«إنَّمَا الْإِمَامُ جُنَّةٌ يُقَاتَلُ مِنْ وَرَائِهِ وَيُتَّقَى بِهِ»

“இமாம் என்பவர்  கேடயம்  ஆவார்.  அவர்  பின்னால் நின்று (மக்கள்) போர்புரிவார்கள். இன்னும் அவரைக்கொண்டே தங்களை பாதுகாத்துக்கொள்வார்கள்”. (முஸ்லிம்)

எமதன்பு உய்குர் சகோதரிகளே! உங்களுடைய புனித மார்க்கத்தை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று இந்த இரட்டை சர்வாதிகார அரசுகளின் இந்த இரக்கமற்ற அடக்குமுறை மற்றும் கட்டாயப்படுத்துவதின் விஷயத்தில் பொறுமையாக இருங்கள்! கிலாஃபத்தின் உதயமானது வெகு சமீபத்தில் இருக்கின்றது மேலும் நாம் அனைவரும் ஓர் உம்மத்தை சார்ந்தவர்கள், நாம் அனைவரும் ஓரே தீனை சார்ந்தவர்கள், நமது தூதர் ﷺ ஒருவரே, நமது குர்’ஆன் ஒன்று, நமது கொடி (ராயா) யும் ஒன்று, மேலும் நமது போராட்டமும் ஒன்று. கிலாஃபத் மட்டுமே கிழக்கு துர்கிஸ்தான் நிலப்பரப்புகளில் அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டவர்களை விடுவித்து உங்கள் அனைவரையும் முழுமையான கண்ணியத்துடன் அரசுடைய பாதுகாப்புடன் உங்களுடைய கிமாரை அணியும் உரிமையை பெற்றுத்தருவது உட்பட அல்லாஹ் ﷻ வின் அனைத்து விதமான கட்டளைகளின் படி வாழச்செய்யும்

Comments are closed.