சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

வாழ்வா – சாவா என்கிற நிலையில் 13,000 அகதிகளை சுடும் சஹாரா பாலைவனத்தில் தவிக்கவிடும் அல்ஜீரியா.

கடந்த 14 மாதங்களில் 13,000 க்கும் மேற்பட்ட மக்களை சோறும் தண்ணீரும் இல்லாத நிலையில், நடை மார்க்கமாக சஹாரா பாலைவனத்தில் ஆதரவற்றவர்களாக விட்டுவிட்டு வந்துள்ளது அல்ஜீரியா. சுட்டெரிக்கும் வெயிலில், சில நேரங்களில் துப்பாக்கி முனையில் கொண்டு சென்று விடப்படும் அவர்களில் கர்ப்பிணி பெண்களும் குழந்தைகளும் அடங்குவர். சஹாராவை கடக்கும் இந்த பயணத்தில் அனைவரும் வெற்றிகரமாக கடப்பதில்லை என்பதே உண்மை.

அணியணியாக நூற்றுக்கணக்கான அகதிகள் கொளுத்தும் 48 டிகிரி வரையிலான வெப்பத்தில் தங்களின் வாழ்விடம் தேடி திசையறியா பாலைவனத்தில் பயணம்  மேற்கொள்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் நைஜர் நாட்டை நோக்கி பயணம் மேற்கொள்கின்றனர். திறன்மிக்கவர்கள் ஆள் ஆரவாரமற்ற 15 கிலோமீட்டர் தூரத்தை ஒருவழியாக கடந்து அஸ்ஸமகா என்னும் எல்லையோர கிராமத்தை அடைந்துவிடுகின்றனர். மற்றவர்கள் வழிதெரியாமல் நாட்கணக்கில் ஐ.நா.வின் மீட்பு குழு அவர்களை கண்டுபிடித்து மீட்கும்வரை பாலைவனத்தில் சுற்றித்திரிகின்றனர் .

(Aljazeera.com செய்தி இணையதளத்திலிருந்து)

விளக்கம்:

அல்ஜீரிய அரசின் மனிதாபிமானமற்ற இந்த செயல் அவர்களை இதற்கு முன்னால் காலனியாதிக்கம் செய்திருந்த பிரான்சின் காட்டுமிராண்டித்தனத்திற்கு ஒப்பானது. இன்னும் இதே பிரான்ஸ் தான் உலகில் நிகழும் அகதிகள் பிரச்சனைகளுக்கு முக்கிய பங்காளனாகவும் இருக்கின்றது.

அல்ஜீரியா எண்ணெய் வளமும் (எரிவாயு) ஆப்பிரிக்கா கண்டத்திலேயே பொருளாதார ஸ்திரத்தன்மை கொண்டநாடு. இருந்தபோதிலும், கொடுங்கோலர்களின் அடக்குமுறையாலும் இன்னும் பஞ்சம், வறுமை காரணமாக அண்டைநாடுகளிலிருந்து தஞ்சமடையவரும் அகதிகளை மனிதாபிமானற்ற முறையில் விரட்டுகிறது. இவ்வாறு வரக்கூடியர்களின் நாடுகளில் வறுமையின் காரணமாக பெண்களை கட்டாய பாலியல் தொழில் செய்வதற்காக கடத்துவது  இன்னும் மலிவு விலைக்கு அங்குள்ள மக்களின் உறுப்புகளை திருடுவது என்று மக்களின் வாழ்வாதார நிலை அடிபாதளத்தை அடையும் நிலையில் அவர்கள் வாழ்விடம் தேடி அல்ஜீரியாவில் தஞ்சமடைகின்றனர்; இன்னும் சிலர் அல்ஜீரியா வழியாக ஐரோப்பாவை அடைகின்றனர். உலகில் சமாதானத்தையும் மக்களாட்சி மூலியமாக நல்லாட்சியையும் தருவதற்காக பாடுபடுவதாக வாய்சவடால் விடும்  ஐ.நா. இந்த மக்களின் துயரநிலைக்காக இதுவரை எந்த ஒரு தீர்வையும் தந்ததில்லை. ஐ.நா. சொல்லும் மனிதாபிமான சட்டங்கள் வெறும் வாய் வார்த்தைகளே தவிர வேறில்லை என்பதற்கு இம்மக்களே சாட்சியாக இருக்கின்றனர்.

பிறரால் ஆட்டிவைக்கப்படும் கைப்பாவை அரசு என்பதற்கு அல்ஜீரியா முக்கிய உதாரணமாக விளங்குகிறது. மக்கள் தொகையில் முழுவதும் முஸ்லிம்களை கொண்டிருக்கும் இந்நாடு, இஸ்லாம் சொல்லியிருக்கும் குறைந்தபட்ச மனிதாபிமான செயல்பாடுகளையும் இம்மக்களுக்கு மறுத்திருந்தது. மேற்கத்திய எஜமானர்களுக்கு சேவை புரிவதில் ஊறிப்போயிருக்கும் இவர்கள் வாழும் இந்த இடம்தான் வரலாற்றில் இஸ்லாமிய மார்க்க அறிஞர்களாலும் இஸ்லாமை நிறுவும் இஸ்லாமிய நிறுவனங்களாலும் நிரம்பியிருந்தன என்பது வெளிப்படையான உண்மை.

ஏமன் நாட்டு முஸ்லிம்களின் மீது காட்டுமிராண்டித்தனத்தை கட்டவிழ்த்திருக்கும் சவூதி அதேபோல் ஐரோப்பிய யூனியனின் அகதிகளுக்கு எதிரான சட்டத்திற்கு எதிராக எந்த ஒரு உறுதியான  நடவடிக்கையும் எடுக்காத எர்டோகன்  ஆகிய  இவர்களின் போக்கை போன்றே அல்ஜீரியாவில் இந்த முஸ்லிம்களாகிய  நம்மை  கவலை கொள்ள செய்கிறது.

முஸ்லிம்களாகிய நாம் இந்த தலைவர்களுக்கு எதிராக ஓரணியில் ஒன்றிணைந்து நம்முடைய  பிரச்சனைகள் அனைத்திற்கும் காரணம் அஹ்காம் ஷரியாவை இவ்வுலகில் நிறுவாததின் காரணமாக நம்மிடையே ஏற்பட்டிருக்கும் பிரிவினைவாதமும் பலஹீனமும் தான் என்பதை உணராதவரையில் நமக்கு இத்தகைய பிரச்சனைகளிலிருந்து தீர்வென்பது இல்லை என்பதை உணரவேண்டும்.

அல்லாஹ் (சுபு) திருமறை குர்ஆனில் சொல்கிறான்:

 மனிதனுக்கு முன்னாலும், பின்னாலும் தொடர்ந்து வரக்கூடிய (மலக்குகள்) இருக்கிறார்கள். அல்லாஹ்வின் கட்டளையால் அவர்கள் அவனைப் பாதுகாக்கிறார்கள்; எந்த ஒரு முதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை; இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை – அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை”

(அல் குர்ஆன் 13:11)

Comments are closed.