சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

உண்மையான இஸ்லாமிய கல்வி கொள்கையை உணர்ந்து கொள்ளுதல்.

 

செய்தி :

மலேசியாவில் 70 நாட்களுக்குப் பின்னர், பக்காத்தான் ஹராபன் அரசாங்கம் மலேசிய மக்களுக்கு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இன்னும் தன்னிறைவு (முழுமை பெறவில்லை) அடையவில்லை.

ஒருபுறம், புதிய அரசாங்கத்தின் பல்வேறு கொள்கைகள் வெவ்வேறு அளவுகளில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன; மற்றொருபுறம், வாக்களிக்கப்பட்ட செய்தி ஊடக சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரம் ஆகியவை, மலேசியாவைப் பண்படுத்துவதற்கு பதிலாக மிகவும் வித்தியாசமான சமுதாய மாற்றதிற்கு  மலேசியாவை இழுக்கும் என்பன போன்ற கருத்துக்களையும் யோசனையையும் சமூகத்தில் வெளிப்படையாக வெளிப்படுத்தியுள்ளன.

குறிப்பாக இஸ்லாமியர்களால் தங்கள் மீது குண்டுவீச்சினை போன்ற பாதிப்பை அரசாங்கம் வாக்களித்துள்ள சுதந்திர (தாராளவாத) கருத்துக்கள் மூலம் எதிர்கொண்டுள்ளதால், இது போன்ற தாக்குதலுக்கு எதிரான அவர்களின் எதிர்வினையை ஆற்றுவதற்கு அவர்கள் ஒருபோதும் சலிப்படைந்து விடவில்லை.

இதில் குறிப்பிடபடவேண்டிய சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் தஹ்ஃபிஸ் (தஹ்ஃபிஸ் – இஸ்லாமிய கொள்கையை போதிக்கும் பள்ளிகள்) பள்ளிகள் மூடப்பட வேண்டும் என்று முன்னாள் தகவல் தொடர்பு அமைச்சர், டான்  ஜைனுத்தீன் மைதீன்(Zam) சமீபத்திய பரிந்துரை தான். உண்மையில், தனியார் தஹ்ஃபிஸ் பள்ளிகளை திறம்பட கண்காணிக்க கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு இல்லாததால் அதன் மீது முக்கிய கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று வலிவயுறுத்துகிறார்.

இருப்பினும், ஜைனுத்தீன் மைதீன்(Zam)  தஹ்ஃபிஸ் பள்ளிகளை ‘முற்போக்கானது’ என்று அந்த பள்ளிகள் சம்மந்தமாக விமர்சித்து(ஏளனம் செய்து), இந்த பள்ளிகள் மூடப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

இந்த விமர்சனத்திற்கு அவர் பல காரணங்களை விளக்கி இருந்தாலும், மத நிறுவனங்கள் மற்றும் இஸ்லாம் மீது மேலும் பல தாக்குதல்களை அவரது கருத்து ஊக்குவிக்கிறது.

கருத்து :

எதிர்கால சந்ததியினரின் வளர்ச்சிக்கு கல்வி என்பது மிகவும் முக்கியம். உம்மத்தின் எதிர்காலமும் புதிய (அடுத்த) தலைமுறையின் (அறிவும்) தரமும் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த தலைமுறை தலைவர்கள், மக்களை வலுவான இஸ்லாமிய ஆளுமை கொண்ட தலைவர்களாகவும், மக்களாகவும் இருப்பதற்கு நாட்டின் கல்வி கொள்கையை நிறுவுவதில் கவனம் செலுத்த வேண்டும்.

ஜைனுத்தீன் மைதீன்(Zam), தஹ்ஃபிஸ் மற்றும் இஸ்லாமிய அடிப்படையிலான பாடசாலைகள் ஆகியவற்றை பற்றிய பொதுவான பார்வையானது, குறுகலான, ஒருசார்புடைய மற்றும் வஞ்சகமான பார்வையை அடிப்படையாகக் கொண்டது. முன்னர் குறிப்பிட்டுள்ளபடி, சில தனியார் தஹ்ஃபிஸ் பள்ளிகளும் சிக்கல் வாய்ந்தவை. அவை மட்டுமல்லாது தஹ்ஃபிஸ் ஒருங்கிணைந்த இஸ்லாமிய அடிப்படையிலான பள்ளிகளும் உள்ளன, இவை நன்கு ஒழுங்கமைக்கப்பட்டவை மற்றும் சிறந்த மாணவர்களை உருவாக்குகின்றன.

சிக்கல்களை ஆழமாக கண்டறிந்தால், பிரச்சனையின் ஆணி வேர் இஸ்லாமிய கல்விக்கூடங்கள் இல்லை. இது போன்ற பள்ளிகளை கண்காணிப்பதில் அரசாங்கத்திற்கு போதிய  திறமை இல்லாமல் கண்காணிப்பதில் இருந்து பிரச்சினைகள் எழுகின்றன, அதே போல் பள்ளி செயல்படும் விதம் மற்றும் நிதி நிர்வாகத்தை கையாளுதல் போன்ற விசயங்களில் பலவீனத்தையும் தனியார் தஹ்ஃபிஸ் பள்ளிகள் கொண்டுள்ளன.

தஹ்ஃபிஸ் பள்ளிகளை மூட வேண்டும் என்பது இதற்கு தீர்வாகாது, மாறாக இந்த தனியார் இஸ்லாமிய பள்ளிகளை மறுசீரமைப்பதற்கும், கண்காணிப்பதற்கும், தஹ்ஃபிஸ் நிறுவனங்களுக்கான ஒரு நிலையான பாடத்திட்டத்தை உருவாக்குவதும் இந்த பிரச்சனையின் வீரியத்தை குறைக்கும்.

அனைத்தும் நன்றாக சென்றுக் கொண்டிருக்கிறது, ஆனால்…!? இஸ்லாமிய அடிப்படை கொள்கைகளை விரிவாக கற்பதற்கு இஸ்லாமிய கல்வி நிறுவனங்களை ஸ்தாபிப்பது(உருவாக்குவது) தொடர்பான அடிப்படை விவகாரங்களை ஒருவர் ஆய்வு செய்தால், இந்த பள்ளிகள் ஏன் வளர்ந்து வருகின்றன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும், ஏனெனில் இஸ்லாமிய ஆளுமை இல்லாத இளைய தலைமுறைகளை வளர்ப்பதில் மதச்சார்பற்ற கல்வியின் தன்மை காரணமாக அவர்களிடம் இஸ்லாம் இல்லாமல் போவதை முஸ்லிம்கள் நன்கு அறிந்துள்ளனர்.

இதன் விளைவாக, இது சம்பந்தப்பட்ட (நபர்கள், குழுக்கள்) கட்சிகள் இஸ்லாமியக்கல்விகளை மையமாகக் கொண்ட இஸ்லாமியக் கல்வியை நிறுவுகின்றன. இஸ்லாத்தில் கல்விக்கான இந்த நிலைமை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இஸ்லாமிய அதிகாரத்தின் கீழ், இஸ்லாமிய கிலாஃபா என்ற ஒரே ஒரு கல்விக் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது (ஹிஸ்புத்தஹ்ரீரால் முன்மொழியப்பட்ட கிலாஃபாவின் வரைவு அரசியலமைப்பின் 177 வது பிரிவு):

தவ்லாவின் (இஸ்லாமிய அரசு) பாடத்திட்டம் ஒன்றுதான் அங்கீகரிக்கப்பட்டது. அதையல்லாமல் வேறு ஒரு பாடத்திட்டத்தைப் பயிற்றுவிப்பதற்கு அனுமதியில்லை. தவ்லாவிற்கு அந்நியமில்லாத தனியார் கல்விக் கூடங்கள் தவ்லாவின் பாடத்திட்டத்தை ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் அனுமதிக்கப்படும். அவைகள் தவ்லாவின் கல்விக் கொள்கையை நிலை நிறுத்த வேண்டும். மேலும் தவ்லா நிர்ணயித்த கல்வியின் குறிக்கோளை நிலை நிறுத்த வேண்டும்.  மாணவர்களாக இருந்தாலும் அல்லது ஆசிரியர்களாக இருந்தாலும் கல்விக்கூட அமர்வின்போது ஆண்களும் பெண்களும் ஒன்று சேர்ந்து இருப்பதற்கு அனுமதியில்லை. மேலும் தனியார் கல்விக் கூடங்கள் குறிப்பிட்ட மதத்தையோ, மத்ஹப்பையோ, இனத்தையோ அல்லது நிறத்தையோ முக்கியத்துவப் படுத்தக்கூடாது

ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட பள்ளி அமைப்பு இருப்பதால் மட்டும் நாட்டின் குடிமக்கள் மத்தியில் ஒற்றுமையை வளர்ப்பது இயலாத காரியம் மாறாக, இஸ்லாமிய கல்வி நோக்கங்களை அடைவதில் ஒரு சீரான பாடத்திட்டத்தை உறுதிப்படுத்துவது மட்டுமல்லாமல் கூடுதலாக, கல்வி கொள்கையில் இஸ்லாமை நிலைநிறுத்த வேண்டும்.

பாடத்திட்டத்தின் சீரான தன்மை, தாராளவாதம் (சுதந்திரம்) போன்ற வெளிப்புற கூறுகளின் தாக்கத்தை  கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது உறுதி செய்யப்படலாம், மேலும் இஸ்லாமிய கலாச்சாரத்தை பரப்புவதும், மற்றவர்களுடன் குர்ஆனை மனனம் செய்வதும் அடங்கும். திடமான, சீரான பாடத்திட்டமும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் அடிப்படை அம்சங்களை ஒருங்கிணைக்கும்.

மேலும் தனியார் பள்ளிகள் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன, ஆனால் (இஸ்லாமிய) நாட்டின் கல்வி கொள்கையின் பாடத்திட்டத்தையும் ஒழுங்குமுறைகளையும் தனியார் பள்ளிகள் பின்பற்ற வேண்டும். இஸ்லாமிய அரசின் கல்வி கொள்கை ‘உலக’ விவகாரங்களுடன் ‘உக்ராய்’ (மறுமை வாழ்க்கை) விவகாரங்களில் கவனம் செலுத்துகின்ற போக்குகளை வேறுபடுத்தாது. இரு பாகங்களுக்கிடையிலான பிளவு, வாழ்வியல் நடைமுறையிலிருந்து மதத்தை பிரிக்கும் மதச்சார்பின்மையிலிருந்து பிறக்கிறது.

இஸ்லாமிய அறிஞர்கள், விஞ்ஞானிகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் வைத்து மட்டுமே சாதித்து விடவில்லை. மாறாக, அவர்கள் மிக இளம் வயதில் இருந்து குர்ஆனின் நினைவூட்டிகளாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், குர்ஆனை மனனம் செய்வதோடல்லாமல், குர்ஆனை முக்கிய ஆதாரமாக எடுத்துக்கொண்டு சுன்னா,இஜ்மா ஸஹாபா மற்றும் கியாஸ் ஆகியவற்றிற்கு மேலதிகமாக அனைத்து அம்சங்களையும் ஒழுங்குபடுத்துகிறது. இஸ்லாமிய அரசின் கல்விக் கொள்கையானது இந்த மனநிலையை கட்டமைக்க விரும்புகிறது.

Comments are closed.