சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

“குழந்தைகள் விற்பனைக்கு” என்பது  முதலாளித்துவவாதிகள் மனித ஒழுக்கங்களை விட இலாபத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு  மற்றொரு உதாரணமாகும்…!!!

செய்தி :

ஜூலை 8 , நியூ யார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தியில் அமெரிக்க ஜனாதிபதி புதிய ஒப்பந்தத்தின் மூலம் தாய்ப்பாலே குழந்தைகளுக்கு சிறந்த உணவு என்பதற்கு, அதை ஆதரிக்கும் ஐ. நா. வின் தீர்மானத்தை தடுக்க முயல்கிறது. அமெரிக்காவின் பிரதிநிதிகள், பல எதிர்மறை விளைவிக்கும் குழந்தைகளுக்கான ஆகாரங்களை ஆதரிக்கும் வகையில், தாய்ப்பால் ஊட்டுதலை பாதுகாப்போம் ஆதரிப்போம் எனும் தீர்மானத்தை எதிர்க்கின்றனர்.

கருத்து :

தாய்ப்பால் ஊட்டுதலை ஆதரிக்கும் நாடுகளின் மீது பொருளாதார தண்டனைகளை அமெரிக்கா விதிக்க கட்டளையிட்டிருப்பதன் மூலம் முதலாளித்துவ சித்தாந்தம்  மனிதாபிமானமற்றது என்பது வெளிப்படையாக தெரிகிறது. இத்தண்டனைக்கு உள்ளாகும் முதல் நாடு எக்குவடோர் ஆகும். அமெரிக்கா தண்டைக்குரிய வர்த்தக முறைகளும் அவர்களுக்கான முக்கியமான ராணுவ நிதி குறைப்பும் ஏற்படும் என எச்சரித்துள்ளது. இதன் மூலம் உடனடியாக எக்குவடோர் தன்னுடைய நிலையை மாற்றியது. ஜனநாயக போர்வையில் கொடுங்கோல் சட்டங்களை விதிப்பதே முதலாளித்துவ நாடுகளின் யுக்தியாகும். இதன் விளைவாக உயிர், ஆரோக்கியம் மற்றும் மக்களின் நலன் ஆகியவையே காட்டினும் செல்வ இலாபத்தையும் அரசியல் ஆதாயத்தையுமே முக்கியமாக கருதப்படும். அமெரிக்காவை பகைக்கும் நாடுகளின் மீதும் அதன் கோபம் நேரடியாக இறங்கும் என்பது தெளிவாகிறது.

 

ஜனநாயக நாடுகளால் விமர்சிக்கப்படும் மூன்றாம் நாடுகளிலிருந்தே , அவர்கள் தங்களின் ஆதாயத்தை நாடுகின்றன. இதன் மூலம் எவ்வளவு சீர்திருத்தம் செய்தாலும், முதலாளித்துவம் எதை கொடுக்கிறதோ அதுவே மனித சமுதாயத்தை வந்தடையும் எனும் நயவஞ்சகத்தன்மை வெளிப்படுகிறது.

 

இத்தகைய செயலை மனிதாபமிக்க இஸ்லாமிய கொள்கைகளோடு ஒப்பிடும்போது பெரும் வேறுபாடை காணமுடியும். இஸ்லாம் எவ்வாறு மனிதர்களின் இயற்கையோடு ஒத்துப்போகிறதென்றும் அவர்களின் நிலையை எவ்வாறு உயர்த்துகிறதென்றும் காண முடியும். இஸ்லாம் குறிப்பிட்ட செல்வந்தர்கள் பயனடையும் வகையில் மற்றவர்களை நோவினை செய்வதை அனுமதிக்காது. இஸ்லாமிய கிலாஃபத்திற்குள் இருந்த அனைத்து நாடுகளும் பல வகையில் முன்னேற்றமடைந்தது, இஸ்லாம் அரசியல் மாதிரியாக அழிந்த பிறகும், மக்கள் முஸ்லிம்களாகவே இருந்தனர். மேலும் அதனுடைய நேர்மறை தாக்கம் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு பிறகும் அதனை நடக்கூடியதாகி இருக்கிறது.

 

மேற்கத்திய காலனியாதிக்க நாடுகளில் அத்தகைய பெருமை கிடையாது. அவர்களின் ஆட்சிக்கு பிறகு மனித உரிமை மீறல்கள் அதிகரிக்கவே செய்கிறது. முன்னரும், இன்றும் போர் மற்றும் பஞ்சத்தின் மூலமே இந்த நாடுகளை கட்டுக்குள் வைத்திருக்கின்றனர் தவிர மக்களின் ஆதரவோடு அங்கு அதிகாரம் செலுத்த முடியவில்லை.

 

இத்தகை கொடுங்கோல் அரசிடமிருந்து மக்களை காப்பாற்றும் கிலாஃபா ஆட்சியை முஸ்லீம் பூமியில் அல்லாஹ் (சுபு) தர நாம் பிரார்த்திப்போமாக…

 

அல்லாஹ் (சுபு) இந்த ஆட்சியை தூய்மையானதாக குறிப்பிட்டுள்ளான்.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُونُوا قَوَّامِينَ بِالْقِسْطِ شُهَدَاءَ لِلَّهِ وَلَوْ عَلَىٰ أَنفُسِكُمْ أَوِ الْوَالِدَيْنِ وَالْأَقْرَبِينَ إِن يَكُنْ غَنِيًّا أَوْ فَقِيرًا فَاللَّهُ أَوْلَىٰ بِهِمَا فَلَا تَتَّبِعُوا الْهَوَىٰ أَن تَعْدِلُوا وَإِن تَلْوُوا أَوْ تُعْرِضُوا فَإِنَّ اللَّهَ كَانَ بِمَا تَعْمَلُونَ خَبِيرًا

முஃமின்களே! நீங்கள் நீதியின்மீது நிலைத்திருப்பவர்களாகவும், உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள்; (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும் ஏழைகளாக இருந்தாலும் (உண்மையான சாட்சியம் கூறுங்கள்); ஏனெனில் அல்லாஹ் அவ்விருவரையும் காப்பதற்கு அருகதையுடையவன்; எனவே நியாயம் வழங்குவதில் மன இச்சையைப் பின்பற்றி விடாதீர்கள்; மேலும் நீங்கள் மாற்றிக் கூறினாலும் அல்லது (சாட்சி கூறுவதைப்) புறக்கணித்தாலும், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான். [4 : 135 ]

இதன் மூலம் நபித்துவ முறையில் அமையும் இஸ்லாமிய அரசே அனைத்து மனிதர்களுக்கும் சிறந்த ஆட்சியை தரமுடியும் என்பதை உணரலாம்.

 

 

 

Comments are closed.