சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

இம்ரான் கான் டாஸில் வென்றுவிட்டார் ஆனால் இப்போது பந்தயத்தில் வெல்வாரா?

“நான் அரசியலில் நுழைந்த போது, பாகிஸ்தான் எவ்வாறு இருக்க வேண்டும் என நமது தலைவர் முஹம்மது அலி ஜின்னா விரும்பினாரோ அதுபோன்றதொரு தேசமாக உருவாக வேண்டும் என நான் விரும்பினேன்… பாகிஸ்தானின் இப்போதய நிலையில், பாகிஸ்தானை இதுவரை யாரும் வழிநடத்தாத அளவுக்கு நாங்கள் வழிநடத்தப் போகிறோம் என்பதை கூறிக்கொள்கிறேன்… எம்மிடமிருந்தே அதை துவக்குகிறோம்… அல்லாஹ்வுக்கே நன்றி நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம் மேலும் ஆட்சி செய்வதற்கான ஆணையையும் பெற்றுள்ளோம்.”

முன்னாள் கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறியுள்ள இம்ரான் கானும் அவருடைய பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்ஸாஃப் கட்சியும் பாரம்பரியமிக்க கட்சிகளை துடைத்து எரிந்துள்ள காரணத்தால் பாகிஸ்தான் சந்தோஷம் அடைந்துள்ளது. தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கையில் இந்த நாட்டின் அரசியல் அமைப்பில் ஆதிக்கம் செலுத்தி வந்த பழைய தூண்களானது இம்ரான் கான் எப்போதும் பேசி வந்த சுனாமியால் தூக்கி எரியப்பட்டதை உலக ஊடகங்கள் கண்டன.

பாகிஸ்தானை பொறுத்தவரை தேர்தலில் ஜெயிப்பது என்பது எளிதான காரியமாகும், அந்த வெற்றியை தக்கவைத்துக் கொள்வதும் தமது பதிவிக்காலத்தை முழுமையாக பூர்த்தி செய்வதென்பது கடினமான காரியமாகும். இது ஏனெனில் பாகிஸ்தானுடைய வரலாற்றில் 2013ம் ஆண்டில் பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மட்டுமே முதல்முறையாக இராணுவத்தால் தூக்கி எறியப்படாமலும் மற்றொரு அரசுக்கு ஆட்சியை கைமாற்றப்படாமலும் தனது பதவி காலத்தை முழுமையாக பூர்த்தி செய்துள்ளது.

பெரும்பாலும் வென்றது யார் என்பதற்கு தேர்தல் முடிவுகளானது ஒரு பொருட்டல்ல, அவர்கள் வேரூன்றியுள்ள பன்முகத்தன்மை கொண்ட பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அரசமைப்பது யாராக இருந்தாலும் அவர்கள் மூன்று தசாப்தங்களின் தவறான நிர்வாகம் மற்றும் சூரையாடலினால் ஏற்பட்ட பாதிப்பை சீர்செய்யும் மாபெரும் காரியத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கும். வரலாற்று ரீதியில் பார்க்கையில் கடந்த மூன்று தசாப்தங்களில் பாகிஸ்தானின் ஆட்சியாளர்கள் அது இராணுவத்திலிருந்து வந்தவர்களாகட்டும் அல்லது பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாகட்டும் அனைவரும் தமது பணியை செய்ய தவறியுள்ளனர் மேலும் அவர்கள் பதவி ஏற்றபோது இருந்ததை விட பதவியிலிருந்து வெளியேரும் போது தேசத்தை மோசமான நிலையில் விட்டுச்சென்றுள்ளனர்.

பொருளாதாரம்

பாகிஸ்தானின் பொருளாதாரம் வெகு காலமாக எந்தவொரு குறிக்கோளையும் கொண்டிருக்கவில்லை. தொடர்ச்சியாக வந்த அரசுகள் அதனை மண்டியிடச் செய்துள்ளன மேலும் அவசரகால பொருளாதார சவால்களை கையாள்வதை புறக்கணித்துள்ளன. பாகிஸ்தான் 200 மில்லியன் மக்கள் தொகையை கொண்டுள்ளது, ஆனால் அதன் மொத்த உற்பத்தி திறனோ வெறும் 300 பில்லியனாக உள்ளது. டென்மார்க்கும் ஐயர்லாந்தும் ஃபைஸலாபாத்தை விட குறைவான மக்கள் தொகையை கொண்டுள்ளன, ஆனால் அவை பாகிஸ்தானை விட பெரிய அளவிலான பொருளாதாரங்களை கொண்டுள்ளன. பாகிஸ்தானுடைய பொருளாதாரத்தில் 60% சேவைத்துறையை சார்ந்ததாக இருக்கின்றது (போக்குவரத்து, சரக்கு சேமிப்பு, தொலைதொடர்பு, நிதி, மொத்த மற்றும் சில்லரை வர்த்தகம்) மேலும் அதன் தொழிலாளர்களில் 42% விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். பாகிஸ்தானுடைய தொழிற்துறை அதிநவீன உற்பத்தி அல்லது கனரக உற்பத்தித்துறையில் பெருமளவில் பின்தங்கி இருக்கின்றது. பருத்தி ஜவுளி தயாரிப்பு மற்றும் ஆடை தயாரிப்பு 66% ஏற்றுமதியை கொண்டு பாகிஸ்தானின் பெரும் தொழில்களாக உள்ளன.

பாகிஸ்தான் அதன் பலத்தை கொண்டு உருவாக்கப்படவில்லை மேலும் அதன் பெரும்பாலான மக்களுக்கு பொருளாதாரம் எந்தவிதத்திலும் உதவுவதாக இல்லை. இதன் காரணமாகத்தான் அரசு நிதி நிலையை பொறுத்தவரை தொடர்ச்சியாக வந்த அரசுகள் பிரச்சனைகளை சந்தித்து வந்தன. பாகிஸ்தானின் 200 மில்லியன் மக்களில் 150 மில்லியன் மக்கள் நாளொன்றுக்கு $5.50 குறைவாக கொண்டுள்ள நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இந்த புதிய அரசு மக்களை பொருளாதாரத்திற்குள் கொண்டுவர வேண்டுமே தவிர முந்தய அரசுகள் செய்ததை போன்று தங்களுடைய செல்வத்தை அதிகரிப்பதில் மும்முரமாக செயல்பட்டு அம்மக்களை அடிமைத்தனத்தில் விட்டுவிடக்கூடாது. அரசு விதிக்கும் எந்தவொரு வரியையும் செலுத்தும் நிலையில் வெகுஜனங்கள் இல்லை, அந்த வரிகளானது அரசுடைய வருவாயை அதிகரிக்கும் ஆனால் பணக்காரர்கள் மிகச்சொற்பான அளவிலான வரிகளை செலுத்தியும் அல்லது வரிகளை அறவே செலுத்தாத நிலையில் இருக்கின்றனர். இந்த எதார்த்தத்தை மாற்றுவதற்கான அடிப்படையான திட்டங்களை இந்த புதிய அரசு கொண்டிருக்க வேண்டும், தொடர்ச்சியாக வந்த அரசுகள் இந்த எதார்த்தத்தை மாற்றாமல் அப்படியே விட்டுவிட்டன மேலும் பிரச்சனைகளை உருவாக்கிய அதே திட்டங்களை தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வந்தனர்.

பாகிஸ்தானுடைய நிதியில் அதிகமாக செலவிடப்படுவது கடனுக்காக தான். பாகிஸ்தான் தனது பட்ஜெட்டில் 30% அதாவது $11 பில்லியன்களை வருடாவருடம் கடனை திருப்பி செலுத்துவதற்காக செலவிடுகிறது. பாகிஸ்தானுடைய வெளிநாட்டு கடன் 2019ல் $100 பில்லியன்களை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ச்சியாக வந்த அரசுகள் நிதி மற்றும் பரந்த பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க தவறியதன் காரணத்தால் அடுத்தடுத்து வந்த அரசுகள் தாங்கள் தொடர்ந்து நீடித்திருக்க வேண்டும் என்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தை நாடின. 1958 முதல் பாகிஸ்தான் சர்வதேச நாணய நிதியத்தின் 16 திட்டங்களில் பங்கு கொண்டுள்ளது, இருந்தும் நாட்டின் பொருளாதார சூழ்நிலை மோசமாகவே இருக்கின்றது மேலும் கடன் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் பெற்று தனது பொருளாதார வளத்தை முன்னேற்ற நிலைக்கு கொண்டு சென்றதாக கூறும் தேசத்தின் உதாரணம் ஒன்றை கூட நாம் காணமுடியாது. பாகிஸ்தானுடைய ஏற்றுமதியானது மதிப்பு கூட்டு சங்கிலியின் கீழ்நிலையில் இருக்கின்ற காரணத்தால் அவை குறைவான நிதியையே கொண்டு வருகின்றன அது அரசின் நிதிநிலைகளுக்கு எந்த விதத்திலும் உதவி புரிவதாக இல்லை. முஷரஃப் அமெரிக்காவுடனான தனது கூட்டணியை பலப்படுத்திய போது, அது தனக்காக செலவு செய்த பணத்தை திருப்பி செலுத்துவதை கொண்டும் நிதியுதவி மற்றும் உதவிகளை அளிப்பதை கொண்டும் அவருடைய அரசுக்கு தேவையான பணத்தை அளித்தது. அதற்கு பின்பு இறுக்கிப் பிடிக்கும் கயிறுகளை கொண்ட கையேடுகள் வந்தன, அடுத்தடுத்து வந்த ஆட்சியாளர்கள் சர்வதேச நாணய நிதியத்தை நோக்கி சென்றனர் இதனால் கடனுடைய நிலை மேலும் மோசமடைந்தது.

இதுபோன்ற அடிப்படையான பொருளாதார சவால்களை முற்றிலும் மாறுபட்ட தீர்வுகளை கொண்டு இந்த புதிய அரசு கையாளாகாத வரை, அதன் முன்னோர்கள் எதிர்கொண்ட அதே விதியை தான் இதுவும் அடைய நேரிடும். மீண்டும் சர்வதேச நாணய நிதியத்தை நோக்கி செல்வதென்பது முன்பு எப்போதும் போலவே நிலைமையை மேலும் மோசமாக்கும். பாகிஸ்தான் சேவை துறையிலிருந்து உற்பத்தித்துறைக்கு மாறுவதற்கு ஏற்றவாறு மறுகட்டமைப்பு செய்யப்பட வேண்டும் மேலும் அதன் பரந்து விரிந்த பொருளாதாரத்தை தூண்டும் விதத்தில் தொழிற்சாலைகளை சுயமாக உருவாக்க வேண்டும். அரசுடைமைகளை தனியார்மயமாக்கல், வெளிநாட்டு நேரடி முதலீடு மற்றும் சர்வதேச சந்தைகளிலிருந்து கடன் பெறுவது போன்றவை ஏற்கனவே தோல்வியடைவதற்கான கலவையாக இருக்கின்றன. பாகிஸ்தான் தன்னகத்தே கொண்டுள்ள வளங்கள் மட்டுமே இதுபோன்றதொரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு போதுமானதாக இருக்கின்றது.

அரசியல்

அரசியல்ரீதியாக, பாகிஸ்தான் தேர்ந்தெடுக்கப்படாத “உயரடுக்கு” மக்கள் குழுவினால் சூழப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் இராணுவ தலைவர்கள் மற்றும் உளவுத்துறையின் இயக்குனரகம், பாகிஸ்தானுடைய அடிப்படையான கொள்கைகள் பலவற்றில் தமது ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றன. அவர்களை சுற்றி, ஒப்பிட்டளவில் சிறிய அளவிலான அரசியல்வாதிகள், மூத்த அதிகாரிகள் மற்றும் அரசுடன் நெருக்கத்தை கொண்டிருக்கும் தொழிற் குடும்பங்களை கொண்ட சேனை உள்ளது இவர்கள் 1947ல் இந்த தேசம் சுதந்திரம் அடைந்ததிலிருந்து பெரும்பாலான தேசத்தை தலைமையேற்றும், நிர்வகித்தும், சொந்தம் கொண்டாடியும் மற்றும் சீரழித்தும் வருகின்றனர். இந்த உயரடுக்கினர் பாகிஸ்தானை மக்களுக்கு சேவை புரிவதற்கு பதிலாக தமக்கு சேவை புரியக்கூடிய சொந்த வங்கியாக கருதுகின்றனர்.

இந்த உயரடுக்கினர் தங்களை சுற்றி சுயநலத்திற்கு சேவைபுரியும் இந்த அமைப்பை நிலைத்திருக்கச் செய்யும் பல சந்தர்ப்பவாதிகள், அரசியல் கட்சிகள் மற்றும் ஏனையோரை கொண்டுள்ளனர். எந்தவிதமான சீர்திருத்தங்களும், தேர்தல்களும் சர்வாதிகாரமும் இந்த அமைப்பை மாற்றப்போவதில்லை – உண்மையான மாற்றம் ஏற்படுவதற்கு இவைகளை வேரோடு தூக்கி எரிய வேண்டும்.

இம்ரான் கான் எதிர்கொள்ள போகும் சவால் என்னவென்றால் இதுபோன்ற ‘ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்கும் சக்தியை பெற்றவர்கள் தான்’ இவர்கள் தேசத்தின் அமைப்பின் சீர்கெட்டுப்போன பகுதியை சார்ந்தவர்களாக இருக்கின்றனர், இவர்கள் அனைவரும் இம்ரான் கான் கட்சியில் சேர அனுமதிக்கப்பட்டனர் இது தான் அவர் பதவியை அடைவதற்கான காரணமாக அமைந்தது. இராணுவ தலைமையானது நவாஸ் ஷரீஃபை ஊழலின் காரணமாக நீதிமன்றங்களுக்கு இடையே அலையும் நிலையை ஏற்படுத்தியது இது இம்ரான் கானுடைய வெற்றிக்கு வழிவகுத்தது. இம்ரான் கான் ஊழல் மிகுந்தது என எப்போதும் கூறிவரும் அதே அமைப்பின் அங்கமாக தான் தற்பொழுது ஆகியுள்ளார்.  2002 ல் வெற்றி பெற்று இராணுத்தின் ஆதிக்கத்தால் சூழப்பட்ட எர்துகன் (துருக்கி) எதிர்கொண்ட அதே சவாலை தான் இம்ரான் கான் தற்போது எதிர்கொள்ள விருக்கிறார். அவருக்கு தேர்தலில் கிடைத்த மாபெரும் வெற்றியை அரசியலமைப்பில் திருத்தத்தை மேற்கொள்ள பயன்படுத்திக் கொண்டார் மேலும் பொருளாதாரத்தை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச்சென்றார் இது அவருக்கு இராணுவ தலைமைக்கு சவால் விட அனுமதித்தது.

பாகிஸ்தானில் அதிகாரத்திற்கு வரும் எவரும் இந்த எதார்த்தத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் மேலும் பாகிஸ்தான் உருவாக்கப்பட்டதிலிருந்து இதுதான் நடைபெற்று வருகின்றது. சூழப்பட்டுள்ள இந்த அமைப்பு மாற்றப்படாவிட்டால் பாகிஸ்தான் இதே நிலையில் தான் அதாவது சிலருக்கு சிலரால் என்ற நிலையில் தான் தொடர்ந்திருக்கும்.

அயலுறவுக் கொள்கை

இந்த தேசம் பெருமளவிலான உள்நாட்டு பிரச்சனைகளை சரிசெய்ய வேண்டியிருக்கையில் இந்த புதிய அரசு எதற்காக வேண்டி அயலுறவுக் கொள்கையில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஒருவர் கேள்வி எழுப்பலாம். பாகிஸ்தான் உருவானதிலிருந்து அதன் பெரிய தோல்வியானது தனக்கென சொந்தமான ஒரு அரசியல் பாதையை கொண்டிருக்காமல் உலகளாவிய சக்திகளின் அரசியல் திட்டங்களில் பங்கு கொண்டிருப்பது தான். உலகளாவிய திட்டத்தை ஒருபோதும் கொண்டிருக்காத காரணத்தால் பாகிஸ்தான் தனது சொந்த பாதையில் ஒருபோதும் பயணித்தது கிடையாது. இஸ்லாத்தின் பெயரால் உருவாக்கப்பட்டிருந்தாலும், அதன் ஆட்சியாளர்கள் அயலுறவுக் கொள்கையின் விஷயத்தில் இஸ்லாத்தை ஒருபோதும் பயன்படுத்தியது கிடையாது

1956 ல் இஸ்கந்தியர் மிர்ஜா கவர்னர் ஜெனராலாக பதவியேற்று அதன்பின்னர் அதிபராக பதவியேற்று பாகிஸ்தானுடைய விதியை அமெரிக்காவின் கையில் ஒப்படைத்தார். அவர் தனது மகனை அமெரிக்காவின் தூதருடைய மகளுக்கு திருமணம் செய்து வைத்தார் மேலும் ஜெனரல் அயூப் கானை பாகிஸ்தானுடைய முதல் தலைமை இராணுவ சட்ட நிர்வாகியாக நியமித்தார். இந்த தூதரின் வழியாக, ஜெனரல் அயூப் கானின் விசுவாசத்தை அமெரிக்கா பெற்றது அதற்கு பிறகு மூன்று வாரம் கழித்து அதிபரை அவர் தூக்கி எரிந்து அவரை இங்கிலாந்துக்கு நாடு கடத்தினார்.

இது பாகிஸ்தானுடைய விதியை அமெரிக்காவுக்கு கீழ்படிந்த தேசமாக முத்திரையிட்டுள்ளது மேலும் அந்நாள் முதற்கொண்டு பாகிஸ்தான் தனது ஆதாயங்கள் அல்லது தேசத்திற்கு ஏற்படக்கூடிய இழப்பை பொருட்படுத்தாமல் அமெரிக்காவின் அனைத்து புவியரசியலின் திட்டங்களில் பங்கு பெற்றுள்ளது. தெற்காசியாவில் கம்யூனிசத்தின் எழுச்சிக்கு எதிரான அரணாக பாகிஸ்தான் விளங்கியது, அது 1979 ல் ஆப்கானிஸ்தான் வழியாக இந்த பகுதியில் சோவியத்தின் படையெடுப்புக்கு எதிரான அரணாக அது விளங்கியது. 2001 ல் அமெரிக்க படையெடுப்பானது அமெரிக்காவின் ஆக்கிரமிப்பதற்கான மற்றும் நீண்டகாலம் இந்த பகுதியில் தனது இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்கான திட்டத்தை பாகிஸ்தான் செயல்படுத்தியது.

உலக சக்திக்கு அடிமையாய் இருக்கும் இந்த செயலானது பாகிஸ்தானுக்கு பெருத்த இழப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான போரானது £123 பில்லியன் மற்றும் 50,000 உயிர்களை இழக்கச் செய்துள்ளது. இந்த நாடு வறுமையில் வாடிக்கொண்டிருக்கும் அதேவேளையில் இராணுவ தலைமையும் அரசியல்வாதிகளும் அமெரிக்க கையூட்டுகள் மூலம் தனிப்பட்ட முறையில் பயனடைந்துள்ளனர், ‘பாகிஸ்தான் முதன்மையானது’ போன்ற கோஷங்கள் மூலம் அமெரிக்காவிடமிருந்து ரொட்டி துண்டுகளை அதிகமாக பெறுவதற்கான எந்தவிதமான முயற்சியும் அமெரிக்காவுக்கு அடிமையாக இருப்பதால் அது ஏற்படுத்தும் சேதத்தை மாற்ற முடியாது.

சீனா முன்னேறி அமெரிக்காவுக்கு சவால் விடும் சமயத்தில் உலகத்தின் அதிகாரம் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி மாறி வருகின்ற சமயத்தில், மத்திய ஆசிய எரிசக்தி முன்னிலையில் இருக்கும் சமயத்தில் மேலும் இந்தியா இந்த பிராந்தியத்தில் உயர்ந்து வரும் சமயத்தில் மேலும் உலகின் பெருமளவிலான சமநிலை மாறிவரும் சமயத்தில் அமெரிக்காவின் அடிமையாக அதனுடன் உறவுகளை மேற்கொள்வது என்பது மிகவும் குறுகிய பார்வையை உடையதாக இருக்கின்றது. இஸ்லாமாபாத்தில் எந்த கட்சி அல்லது நபர் அதிகாரத்தில் இருந்தாலும் இது தான் அப்பட்டமான உண்மையாகும்.

ஐந்தாவது நேர்வழி பெற்ற கிலாஃபத்தை நிறுவப்போவதாகவும் ரசூலுல்லாஹ் ﷺ அவர்களுடைய மதீனாவை முன்மாதிரியாக கொண்ட அரசை நிறுவப்போவதாகவும் இம்ரான் கான் அறிவித்துள்ளார். அதுபற்றிய விரிவான விளக்கங்கள் அல்லது திட்டங்களை ஒருபோதும் அவர் முன்வைக்கவில்லை. இருப்பினும், பாகிஸ்தானுடைய ஆட்சியாளராக யாராக இருந்தாலும் அவர்கள் ஒரேமாதிரியான கேள்வியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் அதாவது பாகிஸ்தானுடைய வரலாற்றில் மற்றுமொரு அடிக்குறிப்பாக இருக்க விரும்புகின்றனரா அல்லது தோற்றுப்போன இந்த அமைப்பை அடியோடு பிடுங்கி எறிந்து உண்மையான மாற்றம் ஒன்றை ஏற்படுத்த போகின்றனரா? பாகிஸ்தானின் நீண்டகால மற்றும் கொந்தளிப்பான வரலாற்றில், தற்போதய ஆட்சியாளர் எதிர்கொள்ளும் சவால் இதுதான்.

Comments are closed.