சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

ஊழலையும் ஊழல் செய்பவர்களையும் பாதுகாக்கும் ஊழல் அமைப்பு. 

ஜோர்டான் உட்பட பல முஸ்லீம் நாடுகளில் ஊழல் மற்றும் ஊழல் செய்பவர்களை பற்றியும் அவர்களின் மீதுள்ள வழக்கை பற்றியும் அதிகமான பேச்சு நடைபெறுகிறது. ஊழலின் பற்றிய உண்மையையும், இஸ்லாத்தின் அதன் நிலைப்பாடையும் கண்டறிய நாம் சிலவற்றை கவனிக்கவேண்டும்.

ஊழலின் மூலம்,சாரம் மற்றும் அடிப்படை என்பது நம்மீது திணிக்கப்பட்டிருக்கும் முதலாளித்துவ அமைப்பிலுள்ளதாகும்,ஏனெனில்  இந்த அறிவார்ந்த தளத்திலிருந்து தான் அனைத்து ஊழல்களும் உருவாகின, மேலும் அல்லாஹ் (சுபு) அறிவார்ந்த தளத்தின் ஊழல் வானங்கள் மற்றும் பூமியை அழிக்கும் என பல இடங்களில் காட்டியுள்ளான்,

(لَوْ كَانَ فِيهِمَا آلِهَةٌ إِلَّا اللَّهُ لَفَسَدَتَا فَسُبْحَانَ اللَّهِ رَبِّ الْعَرْشِ عَمَّا يَصِفُونَ)

(வானங்கள், பூமி ஆகிய) இவற்றில் அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்கள் இருந்திருந்தால், நிச்சயமாக இவையிரண்டும் அழிந்தே போயிருக்கும், அர்ஷுடைய இறைவனாம் அல்லாஹ் (சுபு), அவர்கள் வர்ணிக்கும் (இத்தகைய) தன்மைகளிலிருந்து மிகவும் தூய்மையானவன்.

[21 :22]

ஊழல் மிக்க அறிவார்ந்த தளத்திற்கு பிறகு வருவது சட்டமியற்றும் அதிகாரத்தை அல்லாஹ்(சுபு)வை தவிர்த்து  மனிதனிடம் கொடுத்த ஊழல் மிக்க சட்டமன்ற அமைப்பு அல்லாஹ்(சுபு)  கூறுகிறான்

(وَلَوِ اتَّبَعَ الْحَقُّ أَهْوَاءهُمْ لَفَسَدَتِ السَّمَاوَاتُ وَالْأَرْضُ)

இன்னும் அந்த உண்மை அவர்களுடைய இச்சைகளைப் பின்பற்றி இருக்குமாயின் நிச்சயமாக வானங்களும்,பூமியும்அவற்றிலுள்ளவைகளும் சீர்கெட்டுப் போயிருக்கும் 

 [ஸூரத்துல் முஃமினூன்: 71]

எனவே, அல்லாஹ் (சுபு) அளித்த சட்டத்தை தவிர்த்து அனைத்தும்  இறைமறுப்பு, ஊழல்  சட்டமே, இதன் மூலம் மனிதருக்கு எந்த நிம்மதியான வாழ்க்கையையும் தர இயலாது. அல்லாஹ்(சுபு) கூறுகிறான்

(وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنْكًا)

 “எவன் என்னுடைய உபதேசத்தைப் புறக்கணிக்கிறானோ, நிச்சயமாக அவனுக்கு நெருக்கடியான வாழ்க்கையே இருக்கும்; மேலும், நாம் அவனை கியாம நாளில் குருடனாவே எழுப்புவோம்” என்று கூறினான்     (20:124)

மனிதர்களின் ஊழலும் அதற்க்கு அவர்கள் பயன்படுத்தும் கருவிகளும் ஊழலின் மிக குறைந்த சதவீதத்தையே சாரும், ஏனெனில் ஊழலின் மூலத்தின் முடிவே முதன்மையாகவும் அதன் பிறகே அதனுடைய தாக்கமும் அமையும். மூலம் மிக மோசமாகவும் திருத்த முடியாததாகவும் உள்ளது.

“மூலம்” நேர்மையானதாக இருக்கும் பட்சத்தில், இதனை சரி செய்ய இயலும். எனவே, இஸ்லாமிய அரசின் கீழுள்ள முஸ்லீம் திருடவோ அல்லது லஞ்சம் வாங்கவோ கூடும், ஆனால் இஸ்லாம் அதற்கென சரியான முறையில் அதனை கேள்விகேட்கும் அமைப்பை கொண்டுள்ளது. ஆனால் முதலாளித்துவ அமைப்பில், மக்களின் ஊழல்களும் அதற்கு அவர்கள் பயன்படுத்தும் கருவிகளும் தவிர்க்க முடியாததாகும், மேலும் அதனை சீர்செய்ய இயலாததாகவும் உள்ளது. அதனை சீர்செய்வதென்பது, ஊழலையும் அதனை பாதுகாக்கும் இந்த மனித அறிவால் உருவாக்கப்பட்ட சட்ட அமைப்பால் முடியாது. இந்த சட்ட அமைப்பு உண்மைக்கான அனைத்து அழைப்பையும் ஊழலின் அழைப்பென கருதுகிறது, இவ்வாறே  பிர்அவுன் மற்றும் அவனுடைய கூட்டத்தினரும் மூஸா (அலை) அவர்களின் அழைப்பை ஊழல் என அழைத்தனர்.

(وَقَالَ فِرْعَوْنُ ذَرُونِي أَقْتُلْ مُوسَى وَلْيَدْعُ رَبَّهُ إِنِّي أَخَافُ أَن يُبَدِّلَ دِينَكُمْ أَوْ أَن يُظْهِرَ فِي الْأَرْضِ الْفَسَادَ)

மேலும் ஃபிர்அவ்ன் கூறினான்: “மூஸாவை கொலை செய்ய என்னை விட்டு விடுங்கள்! இன்னும் இவர் தம்முடைய இறைவனை அழை(த்துப் பிரார்த்தி)க்கட்டும்; நிச்சயமாக இவர் உங்கள் மார்க்கத்தை மாற்றிவிடுவார்; அல்லது இப்பூமியில் குழப்பத்தை வெளியாக்குவார் என்று நான் அஞ்சுகிறேன்” (40:26)

மேலும் அல்லாஹ் (சுபு) கூறுகிறான்

(وَقَالَ الْمَلأُ مِن قَوْمِ فِرْعَونَ أَتَذَرُ مُوسَى وَقَوْمَهُ لِيُفْسِدُواْ فِي الأَرْضِ وَيَذَرَكَ وَآلِهَتَكَ)

அதற்கு, ஃபிர்அவ்னின் சமூகத் தலைவர்கள் (அவனை நோக்கி) “மூஸாவும் அவருடைய சமூகத்தாரும் பூமியில் குழப்பம் உண்டாக்கி, உம்மையும் உம் தெய்வங்களையும் புறக்கணித்து விடும்படி நீர் அவர்களை விட்டு வைப்பீரா?” என்று கேட்டார்கள்.  (7:127)

ஊழல்களில் மிக பெரிய ஊழல் அரசியலில் ஊழலாகும், அதுவே ஆட்சியிலும் அதிச்சியாளரின் பொறுப்பிலும் நடக்கும் ஊழல், ஏனெனில் இதுவே அனைத்து ஊழல்களுக்கு வேறாகவும் அடித்தளமாகவும் உள்ளது, இதுவே சமூகத்தில் நிலவும் அனைத்து ஊழல்களுக்கு மூலமாகும், ஒழுக்கமின்மை,தீயசெயல்கள், அல்லாஹ்வின் புனிதத்தை கெடுக்கும் செயலில் ஈடுபடுதல் என அனைத்து செயல்களுக்கும் காரணமாகிறது. எனவே, யூதர்களிடம் போரிட்டு புனித பாலஸ்தீன் பூமியிலிருந்து வெளியேற்றாமல் நட்பு பாராட்டுதல் ஊழலாகும். குஃப்ர் அமைப்புகளின் தலைமையை வகிக்கும் அமெரிக்காவின்  உதவியை நாடுவதும்,  முஸ்லீம் நாடுகளுக்குள் நுழைய அனுமதித்து முஸ்லிம்களை ஆதிக்கம் செலுத்த விடுவதும் மிக பெரிய ஊழலாகும், மேலும் சர்வதேச நிதி நிர்ணய அமைப்பையே நாட்டின் பொருளாதாரத்தை வழி நடத்தும் தலைமையாக ஏற்பதும் ஊழலாகும்.

ஜோர்டானில் ஊழலுக்கு எதிராக இந்த ஊழல் அமைப்பின் மூலம் போராடமுடியாது, ஊழல் செய்யும் மனிதர்களை ஊழலுக்கு வழி வகுக்கும் அதன் மூலத்தை எதிர்கொள்ளாமல் போராடி பயனில்லை. இதனை எதார்த்த நிலையில் ஊழலுக்கு எதிரான போராட்டங்களில் ஏற்படும் விளைவுகளை வைத்தே அறியலாம்.

ஊழலுக்கு எதிரான தலைகீழ் மாற்றத்தை ஜோர்டானிலும் மற்ற முஸ்லீம் நாடுகளில் இஸ்லாமிய அகீதாவின் அடிப்படையில் கொண்ட அரசியல் அமைப்பில் மட்டுமே ஒழிக்க முடியும். பொருளாதாரம், சமூகம், அரசியல் மற்றும் ஆட்சி, வெளிநாட்டு விவகாரம் என அனைத்திலும் இஸ்லாம் மட்டுமே முழுமையான தீர்வை தர வல்லமைகொண்டது. இதுவே இறைவனின் கருணையாகும். அல்லாஹ்(சுபு) கூறுகிறான்

 (أَلَا يَعْلَمُ مَنْ خَلَقَ وَهُوَ اللَّطِيفُ الْخَبِيرُ)

(அனைத்தையும்) படைத்தவன் அறிய மாட்டானா? அவன் நுணுக்கமாக கவனிப்பவன்; யாவற்றையும் நன்கு தெரிந்தவன்.  (67:14)

இதனை சாத்தியப்படுத்த நபி (ஸல்) அவர்கள் நடைமுறைப்படுத்திய அரசியலமைப்பை செயல்படுத்தி கிலாஃபத்தை நிலைநாட்டுவதில் மட்டுமே முடியும்.  முஸ்லிம்களே இத்தகைய மாற்றத்திற்க்கே உங்களை அழைக்கிறோம் , இதன் மூலம் ஊழலை வேரோடு அகற்ற முடியும்.

Comments are closed.