சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

முஸ்லிம்களின் மனதில் எர்டோகன் மதச்சார்பின்மையின் சின்னமாகவே  உள்ளார்.

செய்தி :

அமெரிக்க ராணுவ செயலாளர் ஜேம்ஸ் மட்டில் கூறியதாவது,அமெரிக்க போதகர் அண்ட்ரூவ் ப்ரோன்சன் அவர்களின் கைதாலும்,டொனால்ட் டிரம்ப் தடைகள் விதிப்பதை அச்சுறுத்தியதாலும் ஏற்பட்ட பதற்றம்  அமெரிக்கா துருக்கி ராணுவத்தின் ஒத்துழைப்பில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது மேலும் எங்களின் இறுக்கமான ஒத்துழைப்பு தொடர்கிறது என்றார். அமெரிக்க காங்கிரஸ் புதிய எஃப்-35 வகை விமானத்தை விநியோகிக்க தடை விதிக்க முயற்சித்ததை பற்றி வினவியபோது : அந்த முயற்சியால் எந்த பயனுமில்லை, நான் ஏற்கனவே கூறியவாறு எங்கள் இரு நாடுகள் மத்தியில் ராணுவ ஒத்துழைப்பில் எந்த பிரச்சனையும் இல்லை, நாங்கள் எங்கள் நேச நாடுகளுடன் தொடர்ந்து பணியாற்றுகிறோம் என்றார்.

கருத்து:

ஜூன் 24, 2018  அன்று ரஜப் தய்யிப் எர்டோகன் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றார். அன்றிலிருந்து இதுவரை முஸ்லிம்கள் மத்தியில் எர்டோகன் பற்றிய விவாதங்கள் தொடர்கின்றன, உண்மையில் எர்டோகன் யார்? முஸ்லீம் உம்மாவின் பாதுகாவலரா அல்லது அதன் நலன்களுக்கு துரோகம் இழைப்பவரா?

சில முஸ்லிம்களின் மனதில் எர்டோகன் முஸ்லீம் உம்மாவின் நலனை பாதுகாப்பவர் போல் மதிப்பை பெற்றிருக்கிறார். இதற்கு காரணம் அவர் மேற்கத்திய நாடுகளுக்கெதிராக பேசிய ஆக்ரோஷ வசனங்களாகும்.

2009 வருடம் காசா நகரத்தை தாக்கிய யூத நாட்டிற்கெதிராக ஆக்ரோஷமாக பேசியது,ரஷ்யாவிற்கெதிராக பேசியதும் அதனை தொடர்ந்து அதன் விமானத்தை 2015 ஆம் ஆண்டு சுட்டு வீழ்த்தியது, நெதர்லாந்து அரசை 2017 ஆம் ஆண்டு விமர்சித்தது, ஜெர்மனிய தலைவர் மேர்க்கெல் அவர்களை 2017 ஆம் ஆண்டு விமர்சித்தது மேலும் அமெரிக்காவிற்கெதிராக பல சமயங்களில் பேசியது குறிப்பாக ஃபித்துல்லா குலனை நாடுகடத்த மறுத்தது என இவை அனைத்தும் எர்டோகன் முஸ்லிம்களை அவரின் அற்புதமான பேச்சாற்றலால் ஈர்த்த சம்பவங்களில் சிலவற்றாகும். ஆனால் அமெரிக்கா துருக்கியின் ராணுவ ஒத்துழைப்பு குறித்து மேற்கூறப்பட்ட அமெரிக்க பாதுகாப்பு செயலாளரின் பேச்சு மற்றும் இஸ்ரேல் உட்பட துருக்கியின் விரோத நாடுகளென சித்தரிக்கப்படும் நாடுகளின் தலைவர்களின் பேச்சு என அனைத்தும் எர்டோகனின் வார்த்தைகள் அவரின் செயல்களுக்கு மாற்றமாக உள்ளதை உணர்த்துகிறது.

நிச்சயமாக எர்டோகன் குறித்து இறுதி தீர்ப்பை நாம் எடுக்கும்முன், இஸ்லாமிய உம்மாவின் சித்தாந்த அடிப்படையான குர்ஆன் மற்றும் சுன்னாவை நாடவேண்டும். ஏனெனில் அல்லாஹ்(சுபு) கூறுகிறான்

فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللّهِ وَالرَّسُولِ إِن كُنتُمْ تُؤْمِنُونَ بِاللّهِ وَالْيَوْمِ الآخِرِ

நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள்; உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் – மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் – அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் – இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும். [4:59].

முஸ்லிம்களுக்கு நிகழும் அனைத்து நிலைகளையும் குர்ஆன் மற்றும் சுன்னாவின் வழியாக காணவேண்டும். ஆனால் கடந்த நூறாண்டுகளுக்கு மேலாக  முஸ்லிம்கள் மேல் குப்ர் ஆதிக்கமுள்ளதால், முஸ்லிம்கள் இபாதா மற்றும் ஒழுக்க விஷயங்களுக்கு மட்டுமே இவற்றை நாடுகின்றனர். ஆனால் பொருளாதாரம்,அரசியல் முஸ்லிம்களின் நிலையை பற்றி சிந்தித்தல் போன்றவற்றிற்கு ஷரீஆவின் மூலமான குர்ஆன் மற்றும் சுன்னாவை தவிர்த்து அனைத்தையும் நாடுகிறோம்.

இது உண்மையே, ஏனெனில் எவரேனும் ஐவேளை தொழுகைக்கு பதிலாக இரண்டு அல்லது மூன்று வேளை மட்டும் தொழுதால் அவரை குற்றவாளியாக கருதுவதில் முஸ்லிம்களுக்கு எந்த ஆட்சேபனையுமில்லை.

ஆனால் இதே போல் அரசியலிலோ அல்லது சர்வதேச நிகழ்வுகளிலோ நிகழ்ந்தால், உதாரணத்திற்கு எதிரி நாடுகளோடு முஸ்லீம் நாடுகள் நேட்டோ போன்ற நிறுவனங்களோடு ஒத்துழைத்தாலோ அல்லது நட்புரீதியாக ரஷ்யாவோடு அல்லது முஸ்லிம்களுக்கெதிராக வட காகாசுசீல் குற்றமிழைத்த பூட்டினோடு நட்பு பாராட்டினாலோ முஸ்லிம்களிடையே இது அனுமதிக்கப்பட்டதா அல்லது தடைசெய்யப்பட்டதா என கருத்து வேறுபாடு நிலவுகிறது.

மதசார்பின்மை கொள்கை முஸ்லிம்கள் மனதில் அதிகமாக புகுந்துள்ளதால், குறிப்பாக அரசியல்,பொருளாதாரம் மற்றும் அரசமைப்பு போன்ற விஷயங்களில் இஸ்லாத்தை நாடுவதில் விருப்பமின்மையினாலும், முஸ்லிம்கள் “இரு தீமைகளில் குறைந்த தீமை” போன்ற தர்க்கத்தினாலும்,அர்த்தமற்ற வாதங்களினாலும் முஸ்லீம் ஆட்சியாளர்களின் நிலையை நியாயப்படுத்துகிறார்கள்.

அல்லாஹ் (சுபு), இத்தகையான செயல்களினால் ஏற்படும் அபாயகரமான நிலையை குறித்து முஸ்லிம்களை எச்சரித்துள்ளான்

أَفَتُؤْمِنُونَ بِبَعْضِ الْكِتَابِ وَتَكْفُرُونَ بِبَعْضٍ فَمَا جَزَاء مَن يَفْعَلُ ذَلِكَ مِنكُمْ إِلاَّ خِزْيٌ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَيَوْمَ الْقِيَامَةِ يُرَدُّونَ إِلَى أَشَدِّ الْعَذَابِ

நீங்கள் வேதத்தில் சிலதை நம்பி சிலதை மறுக்கிறீர்களா? எனவே உங்களில் இவ்வகையில் செயல்படுகிறவர்களுக்கு இவ்வுலக வாழ்வில் இழிவைத் தவிர வேறு கூலி எதுவும் கிடைக்காது. மறுமை(கியாம) நாளிலோ அவர்கள் மிகக் கடுமையான வேதனையின்பால் மீட்டப்படுவார்கள்; இன்னும் நீங்கள் செய்து வருவதை அல்லாஹ் கவனிக்காமல் இல்லை. [2:85]

இபாதா மற்றும் ஒழுக்க சட்டங்கள் மட்டுமல்லாமல் இஸ்லாமிய ஷரீஆவின் அனைத்து சட்டங்களையும் ஏற்றுக்கொள்ளுதல் மட்டுமே எர்டோகனின் கவர்ச்சியான நடத்தையில் மயங்கியிருக்கும் முஸ்லிம்களை அவரின் குர்ஆன் ஓதும் அழகையோ அல்லது அனாதை சிறுவனின் வேண்டுகோளுக்கிணங்க அவரின் தந்தை போல் பள்ளியில் பெற்றோர்களை சந்திக்கும் சந்திப்பில் வருகைத்தந்ததையும் மட்டும் கவனம் செலுத்தாமல், இஸ்லாத்தின் பார்வையில் அவரின் உள் மற்றும் வெளி அரசியல், பொருளாதார மற்றும் அரசமைப்பு சட்டம் ஆகியவையும் மதிப்பீடு செய்ய இயலும் .

அனாதை குழந்தை மீது எர்டோகனின் செயல் சிலருக்கு இரண்டாம் கலீபா உமர்(ரழி) அவர்கள் தன்னுடைய முதுகில் உணவை சுமந்துகொண்டு சென்று ஒரு பெண்மணியிடம்   அவரின் குழந்தைகளுக்கு உணவூட்ட கொடுத்ததை நினைவுப்படுத்தலாம். ஆனால் மத சார்பின்மை கொள்கையால் மாசுபட்டதால் எர்டோகனால் கவரப்பட்ட நபர்களுக்கு உமர் (ரழி) எர்டோகன் போன்று அல்லாமல் ஆட்சியாளராக இஸ்லாத்தை அரசாக முழு உலகிற்கும் கொண்டு சென்று இஸ்லாத்தை மட்டுமே நடைமுறைப்படுத்தி, நேட்டோ போன்ற முஸ்லிம்களின் எதிரிகளோடு எந்த கூட்டணியையும் மேற்கொள்ளவில்லை. மேலும் புடின் போன்று முஸ்லீம் அல்லாதவர்களிடம் எந்த நண்பர்களையும் கொள்ளவில்லை, மேலும் இருபதாம் நூற்றாண்டின் அபு ஜஹல், முஸ்தபா கமால் போன்றவரை ரசிக்கவுமில்லை .

யார் எர்டோகன் என்பதை பற்றிய விவாதம் மேற்கத்திய உலக பார்வையை விட்டு நம் மனது விடுபடாதவரை தொடர்ந்துகொண்டேயிருக்கும்,  தெளிவடையும் நிலையில் இந்த விவாதம் முடிவடையும் நிலையில் ஈமான் மற்றும் குப்ர், உண்மை மற்றும் பொய், உம்மாவின் நலன் மீதான அக்கறை மற்றும் துரோகம் போன்ற வற்றின் வேறுபாடை உணர்த்தி, முன்னோடியான உண்மையான முஸ்லீம் ஆட்சியாளர் நபிவழியில் வரவிருக்கும் இரண்டாவது நேர்மையான கிலாஃபத்தின் தலைவரை தெளிவுபடுத்தும்.

பாசில்  அம்ஜாஎவ்.

உக்ரைன்.

Comments are closed.