சமீப பதிவுகள்

செய்திப்பார்வை 04.08.2018

1.சிரியாவின் விஷயத்தில் எர்துகனை இறுக்கி பிடிப்பதற்காக வேண்டி பாதிரியாரை சிறைபிடித்த விஷயத்தை அமெரிக்கா பயன்படுத்துகின்றது.

2.’நிர்வாகத்தின்’ முழுமையான ஆதரவை பெற்றிருந்தும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ இன்ஸாஃபின் இம்ரான் கான் அரசை அமைப்பதற்கு திண்டாடி வருகிறார்.

3.யமனுடைய ஹுதைதா துறைமுகத்தில் இரக்கமற்ற முறையில் அமெரிக்க ஆதரவுடன் செயல்படும் சவூதியின் தாக்குதல் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

1.சிரியாவின் விஷயத்தில் எர்துகனை  இறுக்கி பிடிப்பதற்காக வேண்டி பாதிரியாரை சிறைபிடித்த விஷயத்தை அமெரிக்கா பயன்படுத்துகிறது.

அமெரிக்க ரவுடி கும்பலில் முதன்மையானவரான அரசுத்துறை செயலாளர் மைக் போம்பியோ, வடகொரியாவை விவரிப்பதற்காக  உபயோகப்படுத்தும் வார்த்தைகளை உபயோகித்து  துருக்கியின் எர்துகன் மீது அழுத்தத்தை ஏற்படுத்துகிறார். நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின்படி: அரசுத்துறை செயலாளர் மைக் போம்பியோ “காலம் கடந்துவிட்டது” எனக்கூறி உளவு பார்த்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட அமெரிக்க பாதிரியாரை விடுவிக்க வேண்டும் என வெள்ளிக்கிழமை அன்று துருக்கியிடம் வலியுறுத்தினார், இந்த கைது நடவடிக்கையானது இரண்டு துருக்கிய அரசு அதிகாரிகள் மீது அமெரிக்கா தடை விதித்து உத்தரவிடுவதற்கு தூண்டியுள்ளது.

திரு. போம்பியோ ஆண்ட்ரூ ப்ரன்சன் எனும் பாதிரியாரின் விஷயம் குறித்து இதற்கு முன்பு தொலைபேசியில் குறைந்தபட்சம் மூன்று முறை அழுத்தம் கொடுத்த பிறகு துருக்கியின் அயலுறவு அமைச்சர், மெவ்லூத் சாவுஸோக்லூவுடன் சிங்கப்பூரில் நடைபெற்ற வடகிழக்கு ஆசிய பாதுகாப்பு மாநாட்டிற்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தினார்.

திரு. ப்ரன்சனை சிறையில் அடைத்திருப்பது நேட்டோ படையின் முக்கிய உறுப்பினரான துருக்கியுடனான உறவை மூழ்கடிக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. “காலம் கடந்துவிட்டது” என்றும் பாஸ்டர் ப்ரன்சனை திருப்பி அனுப்புவதற்கான நேரம் வந்துவிட்டது என்றும் துருக்கியர்களிடத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாம் இதில் தீவிரமாக இருக்கின்றோம் என்று அவர்கள் உணர்ந்திருப்பார்கள் என நான் நம்புகிறேன்,” என திரு. போம்பியோ அவர்களுடைய சந்திப்பு நடைபெறுவதற்கு முன்பு கோலாலம்பூரில் இருந்து சிங்கப்பூருக்கான தனது விமான பயணத்தின் போது பத்திரிக்கையாளர்களிடம் கூறினார்.

அமெரிக்காவின் இந்த நிலைபாடு டிரம்ப்புடைய மதபோதகர்களின் ஓட்டு வங்கியிடம் நற்பெயரை பெற்றுத் தரலாம் ஆனால் இந்த அமெரிக்க பாதிரியாரோ 2016 ஆம் ஆண்டு முதலே துருக்கியால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்; அவருடைய விஷயத்தில் துருக்கியின் மீது இந்த நேரத்தில் அழுத்தம் தருவதற்கான உண்மையான காரணம் சிரியாவிலுள்ள சூழ்நிலையாகும். அமெரிக்கா சிரியாவின் களத்தில் தனது சொந்த படையை அனுப்புவதற்கு பயந்த நிலையில் அதன் காரணமாக  மற்றவர்களுடைய இராணுவத்தினரை நம்பியிருக்கும் நிலையில் சிக்கலான திட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகிறது. நிச்சயமாக அமெரிக்கா அந்த நாட்டின் வெவ்வேறு பகுதிகளுக்கு பல நாடுகளின் படைகளை பயன்படுத்தி தனக்கு நேரக்கூடிய அபாயத்தை குறைத்துக்கொள்ள முயற்சித்தது, ஆனால் சிலநேரங்களில் குறிப்பிட்ட ஒரு  படையை அதன் எல்லைகளை தாண்டாமல் இருக்கும் வகையில் நிறுத்தி வைப்பதற்கு கடுமையான அளவில் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இந்த வகையில் கடந்த வருடம் அமெரிக்கா ஈரானை இறுக்கிப்பிடித்தது, இப்பொழுதோ அமெரிக்காவுக்கு சிரியாவிலுள்ள குர்து பகுதி முழுவதின் மீது ஆசையை கொண்டுள்ள எர்துகனை இழுத்துப் பிடிக்க வேண்டியுள்ளது.

ஜூன் 25ம் தேதி ராய்டர்ஸ் வெளியிட்ட அறிக்கையின்படி : திங்கட்கிழமை அன்று தேர்தலில்  வெற்றி பெற்ற பின்னர் ஆற்றிய சொற்பொழிவில் அகதிகள் சிரியாவுக்குள் பத்திரமாக திரும்பி வருவதற்காக வேண்டி துருக்கி தொடர்ந்து “சிரியாவின் நிலப்பரப்புகளை விடுவிக்கும்” என அதிபர் ரஜப் தய்யிப் எர்துகன் கூறினார்.  எர்துகன் கடந்த காலத்தில் பலமுறை செய்ததை போன்று மீண்டுமொரு முறை அமெரிக்க எஜமானர்களுக்கு முன் மண்டியிடுவார் என்பது எதிர்பார்க்கப்பட்டது தான்.

வெள்ளியன்று ராய்ட்டர்ஸ் வெளியிட்ட செய்தியின்படி :  துருக்கியின் அதிபர் தய்யிப் எர்துகன் சிரியாவின் வடபகுதியில் இருக்கும் மன்பிஜ் நகர் குறித்து அமெரிக்காவுடனான கூட்டுத்திட்டமானது நேட்டோ கூட்டணியினருக்கு மத்தியில் நிலவும் பதற்றத்தினால் பாதிப்பு அடையாது என தான் எதிர்பார்ப்பதாக வெள்ளியன்று கூறினார்.

தீவிரவாதத்தை ஆதரிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டு அமெரிக்க பாதிரியாரின் மீது விசாரணை நடத்திவருவதற்கு எதிராக இரண்டு துருக்கிய மந்திரிகளின் மீது தடை விதித்ததற்கு இரண்டு நாட்கள் கழித்து தான் அங்காராவில் ஆற்றிய உரையில் எர்துகன்  கருத்து தெரிவித்தார். இந்த தடை ஏற்புடையது அல்ல என துருக்கி கூறியது.

 

2.’நிர்வாகத்தின்’ முழுமையான ஆதரவை பெற்றிருந்தும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்ஸாஃபின் இம்ரான் கான் அரசை அமைப்பதற்கு திண்டாடி வருகிறார்.

இம்ரான் கானுடைய பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்ஸாஃபிற்கு ஆதரவாக தேர்தலுக்கு முன்னரும் தேர்தல் நடைபெற்ற அன்றும் அதிகப்படியான மிரட்டல்கள் விடப்பட்டும், சூழ்நிலைகளை திறமையாக கையாண்டும் மற்றும்  கட்டுப்பாட்டை கொண்டிருந்தும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்ஸாஃப் அடுத்த அரசை அமைப்பதற்கு திண்டாடி வருகிறது. ராய்ட்டர்ஸ் வெளியிட்ட செய்தியின் படி : ஜூலை 25ம் தேதி நடைபெற்ற பாகிஸ்தானிய பொது தேர்தலில் வென்ற முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரம் இம்ரான் கானுடைய கட்சி, மற்ற கட்சிகள் மற்றும் சுயேட்சை அரசியல்வாதிகளுடன் ஒரு வாரத்துக்கும் மேலாக பேச்சுவார்த்தைளை மேற்கொண்டும் தேசிய அரசவையை உருவாக்குவதற்கு தேவையான போதிய ஆதரவை கொண்டிருக்கவில்லை என வெள்ளியன்று கூறியது.

இம்ரான்கானுடைய தெஹ்ரீக்-இ-இன்ஸாஃப் கட்சி அல்லது பாகிஸ்தான் நீதி கட்சி 16.86 மில்லியன் வாக்குகளை பெற்று 12.89 மில்லியன் வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்தை பிடித்த முன்னாள் பிரதம மந்திரி நவாஸ் ஷரீஃபுடைய கட்சியை தோற்கடித்து எதிர்பார்த்ததை விட சிறப்பாக வெற்றிபெற்றுள்ளது.

ஆனால் பெண்களுக்கும் சிறுபான்மையாக இருக்கும் மற்ற மதத்திற்கு ஒதுக்கப்பட்ட 70 இடங்கள் உட்பட 342 இடங்களை கொண்டுள்ள தேசிய அரசவையில் கானுடைய கட்சி 116 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது கூட்டணியினரின் பங்கு இல்லாமல்  அவருக்கு பெரும்பான்மையை வழங்கவில்லை.

பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்ஸாஃப் கட்சியின் செய்தி தொடர்பாளர், ஃபவாத் சவுத்ரி கூட்டணி கட்சிகள் மற்றும் இதர பிரவினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வெற்றி பெற்றவர்கள் உட்பட 180 நாடாளுமன்ற உறுப்பினர்களுடைய ஆதரவை கொண்டிருப்பதாக தனது கட்சி நம்புகிறது என வெள்ளியன்று பத்திரிக்கையாளர்களிடத்தில் கூறினார்.

உலகனைத்திலும் உள்ள ஊடகங்கள் தற்பொழுது இம்ரான் கானுடைய வெற்றிக்கு ‘நிர்வாகம்’ என்று பொதுவாக குறிப்படப்படுகின்ற பாகிஸ்தானின் அதிகாரமிக்க இராணுவம் தான் காரணம் என்று கருத்து தெரிவித்து வருகின்றன. நிச்சயமாக, இந்த நிர்வாகமானது பாகிஸ்தானுடைய ஜனநாயக தேர்தல்கள் நடைபெறும் போதெல்லாம் தலையிட்டுள்ளது ஆனால் இம்முறை அதற்கு அதிகப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது ஏனெனில் அது நவாஸ் ஷரீஃபின் பிஎம்எல் மற்றும் ஆசிஃப் ஜர்தாரியின் பிபிபி ஆகிய முக்கியமான இரு கட்சிகள் ஆட்சியை கைப்பற்றாமல் தடுப்பதற்கான காரியத்தை கையில் எடுத்துள்ள காரணத்தால் சிறிய கட்சியான இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்ஸாஃபுடன் ஈடுபடும் நிலை ஏற்பட்டது, ஆக மேற்குறிப்பிட்ட கட்டுரை சுட்டிக்காட்டுவது என்னவென்றால் :  ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழு ஒன்றின் முதற்கட்ட மதிப்பீடானது இதற்கு முன்பு ஆட்சி செய்த நவாஸ் ஷரீஃபின் கட்சியின் வலிமையை குறைப்பதற்காக “முறைப்படுத்தப்பட்ட முயற்சியை” மேற்கொண்டு சமமற்ற முறையில் இந்த  தேர்தலுக்கான பிரச்சாரம் நடைபெற்றுள்ளது என விவரித்துள்ளது, ஆனால் இந்த வாக்கெடுப்பின் சட்டப்பூர்வ நிலையை பாகிஸ்தானின் மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என அது கூறியது.

பாகிஸ்தானிய ஜனநாயாகமானது உலகின் மற்ற பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்படுபவைக்கு  மாற்றமானது கிடையாது. ‘பிரதிநிதித்துவ ஜனநாயகம்’ எனும் சொற்றொடரானது உண்மையில் மேற்கத்திய முதலாளித்துவ சிந்தாந்தத்தின் ஆட்சி அமைப்பான தன்னலக் குழுவை பாதுகாப்பதற்கானதாகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். உண்மையான ஜனநாயகம் அதாவது  ஒட்டுமொத்த மக்களும் உண்மையாக பங்குகொள்ளும் ஆட்சியமைப்பு என்பது நடைமுறைக்கு சாத்தியப்படாததாகும், அது உலகின் எந்த இடத்திலும் ஒருபோதும் நடைமுறைபடுத்தப்படாத  ஒரு கற்பனையாகும். அனைத்து மக்களும் பங்குகொண்ட பண்டைய ஏதென்ஸிலும், ஏதென்ஸ் மக்களில் சிறுபான்மையான மக்களை மட்டுமே அந்நகரத்தின் குடிமக்களாக வரையறுத்திருந்தது. இருப்பினும் அப்போதிருந்த அறிஞர்களான சாக்ரடீஸ், ப்ளேட்டோ, அரிஸ்டாட்டில் ஆகியோர் ஜனநாயக ஆட்சிக்கு திடமாக எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

 

3.யமனுடைய ஹுதைதா துறைமுகத்தில் இரக்கமற்ற முறையில் அமெரிக்க ஆதரவுடன் செயல்படும் சவூதியின் தாக்குதல் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தியின் படி : சவூதி தலைமையிலான கூட்டணிப் படைகளின் போர் விமானங்கள் வியாழனன்று கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் யமனுடைய துறைமுக நகரின் மீது டஜன் கணக்கில் குண்டுகளை வீசி தாக்கின, அந்த தாக்குதலில் மீன் மார்க்கெட், முக்கிய மருத்துவமனையின் நுழைவுவாயில் மற்றும் பாதுகாப்பு வளாகம் ஆகியவை பாதிக்கப்பட்டு, குறைந்தது 30 நபர்கள் கொல்லப்பட்டுள்ளதாக மருத்துவ குழுவினர் கூறினர்.

மோதல்களை அதிகப்படுத்தும் இந்த ஏவுகனை தாக்குதல்களானது சவூதி அரேபியா அல் ஹுதைதாவை ஆக்கிரமித்துள்ள அதன் யமனிய எதிரியினரான ஹவூதி போராளிகள் செங்கடலின் கப்பல் பாதையில் சவூதியின் எண்ணை கப்பலை தாக்கியதாக குற்றம்சாட்டியதால் வாரங்களாக நிலவிவரும் பதற்றத்திற்கு பிறகு நடைபெற்றதாகும்.

அதேநேரத்தில், இந்த கூட்டணி சில மாதங்களாக படையெடுக்கப்போவதாக அச்சுறுத்தி வரும் இந்நகரத்தின் பொதுமக்களை துன்பத்துக்கு ஆளாக்கியிருப்பதாக  உதவிக்குழுக்கள் சவூதி கூட்டணியின் மீது கடுமையாக விமர்சித்துள்ளன.

ஏவுகனை தாகலகுதல்கள் தொடுக்கப்பட்ட சில மணிநேரங்கள் கழித்து, யமனுக்கான ஐக்கிய நாட்டு சபையின் பிரதிநிதி நியூயார்க்கில் பாதுகாப்பு சபையிடம் யமனில் அமைதிக்கான பேச்சுவார்த்தை மீண்டும் நடப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக விவரித்தார், அங்கு நடைபெறும் நிகழ்வுகளை உலகின் மோசமான மனிதகுல பேரழிவு என ஜக்கிய நாட்டு சபை அறிவித்திருந்தது.

அமெரிக்கா முஸ்லிம்களுக்கு எதிரான போரை தொடுப்பதற்கு மற்றவர்களை பயன்படுத்திக் கொண்டதற்கான மற்றுமொரு உதாரணமாக யமன் விளங்குகிறது. ஹுதைதா துறைமுகத்தை தாக்குவதற்கான நோக்கம் என்னவென்றால் அமெரிக்க கட்டுப்பாட்டிற்கு அடிபணிய செய்வதற்காக உணவு மற்றும் அடிப்படைத் தேவைகள் கிடைக்காதவாறு பொதுமகக்களை வாட்டியெடுக்கச் செய்யும் புது விதமான போராகும்.

ஆதிக்க சக்திகள் தங்களிடையே போட்டியிட்டுக் கொள்வது தவிர்க்க முடியாதது ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்லாம் ஆதிக்கம் செலுத்தி வந்த காலகட்டத்தில், இராணுவங்கள் மட்டுமே தங்களுக்கிடையே போரை நடத்தி வந்தன, மேலும் அதனை உயர்ந்த அளவிலான நெறிமுறைகள் மற்றும் தீரச்செயலின் அடிப்படையில் நடத்தப்பட்டன. சிலுவை யுத்தங்களின் போது முஸ்லிம் படையினரின் அணுகுமுறையால் மிகவும் கவரப்பட்டு  இறைநம்பிக்கையற்ற ஐரோப்பிய நாடுகளும் தங்களுக்கிடையே சண்டையிட்டுக் கொள்ளும்போது கூட இந்த தரநிலையை கடைபிடித்து வந்தனர். படையெடுத்து வந்த கிருஸ்த்துவர்கள் பாலஸ்தீன மக்களை கொன்று குவித்தனர் ஆனால் சலாஹுத்தீன் அய்யூபி அவர்களை நடத்திய விதத்தை கண்டு வியப்பில் ஆழ்ந்தனர், அவர்கள் இன்றளவும் நினைவில் கொண்டிருக்கும் அரிதான ஒரு வரலாற்று நிகழ்வாகும். ஆனால் உலகின் ஆதிக்க நிலையிலிருந்து  உதுமானிய கிலாஃபாவான இஸ்லாமிய அரசு வீழ்ந்த உடன் மற்றும் உலகின் விவகாரங்களை மேற்கத்திய மதசார்பற்ற முதலாளித்துவம் ஆதிக்கம் செலுத்த தொடங்கியது முதல், இந்த இறைமறுப்புக் கொள்கையுடைய மேற்குலக இராணுவம் எதிரிகளின் இராணுவத்திற்கு பொதுமக்கள் தரும் ஆதரவை துண்டிப்பதற்காக வன்முறையை கட்டவிழ்க்கும் தங்களுடைய முந்தய ஜாஹிலீய்ய (அறியாமை) வழிமுறைகளை மீண்டும்  மேற்கொள்ள தொடங்கினர். அல்லாஹ் (சுபு) வின் அனுமதியோடு நபித்துவத்தின் வழிமுறையின் அடிப்படையில் மீண்டும் நிறுவப்படும் நேர்வழி பெற்ற இஸ்லாமிய கிலாஃபத்தானது போர்களத்தில் ஈடுபட்டிருக்கும் போதும் கடைபிடிக்க வேண்டிய நன்னெறிகள், மனிதநேயம் மற்றும் ஆன்மீகம் என்னவென்று இந்த உலகுக்கு மீண்டும் கற்பிக்கும்.

 

 

Comments are closed.