சமீப பதிவுகள்

செய்திப்பார்வை 15.08.2018

தலைப்புச்செய்திகள் :

1.தாலீபான் மீண்டும் தாக்கியது.

2.எர்துகானுடைய பொருளாதார  மாதிரி சிதைந்துள்ளது.

விவரங்கள் :

1.தாலீபான் மீண்டும் தாக்கியது.

தாலீபான் தனது பலத்தை வெளிப்படுத்தும் விதமாக கடந்த மூன்று நாட்களில் (15.08.18) நான்கு வெவ்வேறு பிரிவுகள் மீது பல இடங்களில் தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தியுள்ளது. அதில் கடுமையாக பாதிக்கப்பட்டது தென்கிழக்கு பகுதியில் இருக்கும் காஸ்ணி நகரமாகும், ஞாயிரன்று அங்கு 100க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகளும் போர் வீரர்களும் கொல்லப்பட்டனர் என மருத்துவமனை அதிகாரி ஒருவர் கூறினார், மேலும் சில முக்கியமான அரசு வளாகங்களை தவிர புவியியல் ரீதியாக மிகமுக்கியமான இந்த நகரத்தின் பெரும்பாலான பகுதிகளை கிளர்ச்சியாளர்கள் தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதாகவும் தெரிகிறது. காஸ்ணி மாகாணத்திலிருந்து 90 மைல்களுக்கு மேற்கில் உள்ள அஜ்ரிஸ்தான் மாவட்டத்தை தாலீபான்கள் தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். இந்த மாவட்டத்தை பாதுகாத்து வந்த பலமிக்க இராணுவ கமாண்டோக்கள் இரண்டு நாட்களாக காணாமல் போயுள்ளனர், அவர்களுடைய உயர் அதிகாரிகளின் நிலையானது சந்தேகத்திற்குரியதாக இருக்கின்றது. ஞாயிறன்று அவர்களுடைய கணக்கின்படி 40 முதல் 100 நபர்கள் வரை இறந்திருக்கலாம் என்று கண்டறிந்துள்ளனர். மலைகளில் காணாமல் போனவர்களில் உயிர் தப்பிய 22 நபர்களை கண்டெடுத்த  மீட்புப்பணியினர் அவர்களை பாதுகாப்பான இடத்துக்கு கழுதைகளில் கொண்டு சென்றனர். அங்கிருந்து தென்மேற்கு நோக்கி 250 மைல்கள் தொலைவிலுள்ள ஃபர்யாப் மாகாணத்தில் 100 வீரர்களை கொண்ட தனிமைப்படுத்தப்பட்ட இராணுவத்தளம் ஒன்று ஞாயிறு காலை முடிவுற்ற தாலீபானின் தாக்குதலின் காரணமாக பாதிக்கும் மேற்பட்ட நபர்களை இழந்துள்ளது. அடுத்த நாளுடைய இரவை அடைவோம் என்று தாம் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை என்று உயிர்தப்பிய பாதுகாப்பு அதிகாரிகள் கூறினர்.

சமீபத்திய இந்த நடவடிக்கைகளை அமெரிக்கா அதிகமாக வெளிப்படுத்தவில்லை, ஆனால் அது தாம் இழந்துள்ள இராணுவத்தளங்களுக்கு அமெரிக்காவால் பயிற்சியளிக்கப்பட்ட படைகளை மீண்டும் அனுப்பவோ அல்லது வலுப்படுத்தவோ முடியாது எனும் அதன் நிலையை வெளிப்படுத்தியுள்ளது. அதேபோல் அமெரிக்காவால் பயிற்சியளிக்கப்பட்ட வீரர்களையும் அவர்களது உபகரணங்களையும் தாலீபான்கள் எளிதில் கைப்பற்ற முடியும் என்பதையும் வெளிப்படுத்தியுள்ளது.

2.எர்துகானுடைய பொருளாதார மாதிரி சிதைந்துள்ளது.

ஆகஸ்டு 14 திங்களன்று, இரு நாடுகளுக்கு இடையே பதற்றநிலை அதிகரித்ததன் காரணமாக அங்காராவுக்கான இராணுவ விமானத்தின் விற்பனை மீது அமெரிக்கா தற்காலிகமாக தடைவிதித்த சில மணிநேரங்கள் கழித்து அதிபர் ரஜப் தய்யிப் எர்துகன் அமெரிக்க மின்னணு பொருட்களை துருக்கி புறக்கணிக்கப்போவதாக அறிவித்தார். “அமெரிக்க மின்னணுப் பொருட்களை நாங்கள் புறக்கணிக்கப்போம்” என எர்துகான் தொலைக்காட்சி ஒன்றில் ஆற்றிய தனது உரையில் கூறினார். “அவர்கள்  ஐ ஃபோன் வைத்திருக்கிறார்கள், அதற்கு மாற்றாக மறுபுறம் சாம்சங் உள்ளது,” என அமெரிக்காவின் மாபெரும் வியாபார சின்னமான ஆப்பிள் கைப்பேசி மற்றும் தென்கொரியாவின் முன்னணி பிராண்டான சாம்சங்கை குறிப்பிட்டு கூறினார்.

எர்துகான் நீண்டகாலமாக தனது வெற்றிக்கு தனது பொருளாதார செயல்பாடு தான் காரணம் என்று பெருமைப்பட்டுக் கொண்டிருந்தார். ஆனால் உண்மையில் வெளிநாட்டு கடனை அடிப்படையாக கொண்ட உமது பொருளாதார மாதிரி வெற்றிக்கான செய்முறையாக ஆகாது மேலும்  கோழிகள் இப்போது  தமது தங்குமிடத்திற்கு வந்தடைந்துள்ளது. கடுமையான சீர்திருத்தங்கள் செய்ய வேண்டிய தேவையிருக்கும் இத்தருணத்தில் அவர் தனது வாக்குவன்மையை பிரயோகித்து வருகிறார். இவையனைத்தும் அவருடைய பொருளாதார செயல்பாடு எப்போதும் குறுகிய காலத்திற்காகவே இருந்தது என்பதை தவிர வேறு எதுவுமில்லை என்பதை காட்டுகிறது.

Comments are closed.