சமீப பதிவுகள்

செய்திப்பார்வை 17.08.2018

தலைப்புச்செய்திகள் :

1.பிரான்ஸ் முதல் டென்மார்க் வரை முகத்திரைகள் அணிவதற்கான தடைகள் ஐரோப்பா முழுவதும் பரவுகிறது.

2.சீனாவின் சுலபமான பிணை எடுப்பை பாகிஸ்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

3.அரிதாக அறியப்பட்ட போதகருக்காக அமெரிக்கா துருக்கி மீது வர்த்தக போர் தொடுக்கிறதா? அதில் ஒரு வார்த்தையும் உண்மையில்லை.

விவரங்கள் :

1.பிரான்ஸ் முதல் டென்மார்க் வரை முகத்திரைகள் அணிவதற்கான தடைகள் ஐரோப்பா முழுவதும் பரவுகிறது.

இந்த மாத துவக்கத்தில் ஐரோப்பாவில் ஐந்தாவது நாடாக டென்மார்க் முகத்திரைகளுக்கு தடையை விடுத்திருக்கிறது. இத்தடை முஸ்லிம்களை குறிவைக்கும் வகையில் அமைந்துள்ளது. மக்களின் போராட்டதையும் பொருட்படுத்தாமல் இத்தடை அமுலாக்கத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 3 அன்று 28 வயது பெண்மணி நிகாப் அணித்ததற்காக டேனிஷ் நாட்டு பெண்ணால் தாக்கப்பட்டதாக கார்டியன் பத்திரிகை செய்தி வெளியிட்டது. காவல் துறை முஸ்லீம் பெண் மீது 156  டாலர்கள் அபராதம் விதித்தது. கடந்த 3 ஆண்டுகளாக முகத்திரை தடைக்கான கோரிக்கை ஐரோப்பா முழுவதும் அதிகரித்துள்ளது. ஐரோப்பாவில் ஆறு நாடுகள் முகத்திரை அணிவதற்கு தடை விதித்துள்ளது. சமீபத்தில் நெதர்லாந்து, பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளில் முகத்திரைக்கு தடை விதித்துள்ளது . ஸ்பெயின் இத்தாலி போன்ற நாடுகளில் சில நகரங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தடைக்கான கோரிக்கை 2011 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் தோன்றியது.  அப்பொழுது பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸி , உடல் முழுவதியும் மறைக்கும் புர்கா, அடிமைத்தனத்திற்க்கான அடையாளமாக உள்ளது என்றார்.

எங்கள் நாடுகளில் புர்காவிற்கு வரவேற்பில்லை என்றார். இது எங்கள் சுதந்திரத்திற்க்கான எண்ணத்திற்கு எதிராக உள்ளது. இன்னும் முகத்தை மறைப்பது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக நியாயம் கூறுகின்றனர். லாட்வியா நாட்டில் 20 லட்சம் மக்களில் 3 பேர் மட்டுமே முகத்தை மறைக்கின்றனர். 2016 லாட்வியாவின் முன்னாள் அதிபர் வைர விகே அவர்கள் பொது ஏடுகளில் முகத்தை மறைப்பது சமூகத்திற்கு அச்சுறுத்தலை தருகிறது என்றார். முக்காடுக்குள் ராக்கெட்  மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் , இது விளையாட்டல்ல என்றார். பெரும்பாலான அரசியல்வாதிகள் முகத்திரைகள் ஐரோப்பாவின் மதிப்பிற்கு மாற்றமாகவுள்ளது என்கின்றனர். இந்த வருட தொடக்கத்தில் டென்மார்க் பாராளுமன்றத்தில, முகத்திரைகள் தடைக்கான சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு, முகத்தை மறைப்பது சட்டத்தை அவமதிப்பதாக கருதப்படுகிறது.  இத்தகைய நியாயங்களுக்கு மத்தியில் முகத்திரை தடைக்கான கோரிக்கைகள் ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்து கொண்டே இருக்கும். [மூலம் : வாஷிங்டன் போஸ்ட்]  எந்த நியாயங்களை ஐரோப்பிய அரசியல்வாதிகள் குறிப்பிட்டாலும், உண்மையில் இஸ்லாம் மீதான வெறுப்பே புர்கா தடைக்கு காரணமாகும் .

2.சீனாவின் சுலபமான பிணை எடுப்பை பாகிஸ்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இம்ரான் கான் பாகிஸ்தானின் பிரதம மந்திரியாக பதவியேற்கும் இத்தருணத்தில் ஒரு விஷத்தில் அவர் தெளிவாக இருக்க வேண்டும் தற்சமயம் சீனா பாகிஸ்தானின் நட்பு நாடாக இருக்கலாம், ஆனால் எந்நேரமும் இந்நிலை மாறலாம். அடுத்த மாதமோ அல்லது விரைவிலோ பாகிஸ்தான் சர்வதேச நாணய நிதியத்தில் நாட்டின் 13 வது பிணை எடுப்பு தொகையை பெற கூடும்.  பாகிஸ்தான் வங்கி தற்போது 1000 கோடி டாலர்கள் அந்நிய செலாவணி இருப்பை கொண்டுள்ளது, இது வெறும் இரண்டு மாத இறக்குமதிக்கே போதுமானதாக உள்ளது. ஆனால் சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது கடினமான ஒன்று. அவர்களிடம் கடன் பெற்றால் அதனை திருப்பி செலுத்த பல வார்த்தை கொள்கையை வகுக்க வேண்டும். பாகிஸ்தானிடம் அதிகமாக கடன் கொடுத்த அமெரிக்கா, பிணை எடுப்பு தொகை சீனாவின் கடனை அடைக்க பயன்படுத்தக்கூடாது என கூறியுள்ளது. சீனாவின் பெரும் திட்டமான ஒரு வழி பாதை பாகிஸ்தானை மற்றொரு வெனிசுலா நாடாக மாற்ற கூடும். எனவே இம்ரான் கான், சீனா திட்டங்களுக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்ட போதும் சவூதி அரேபியா அல்லது சீனாவின் உதவியை நாடக்கூடும். 200  கோடி டாலர்கள் மதிப்பிலான கடன் சலுகையை செய்ய தயாராகவுள்ளது, மேலும் சவூதி வங்கி 450  கோடி டாலர்கள் கடன் கொடுக்க ஒத்துக்கொண்டுள்ளது.  துருக்கி அதிபர் கத்தார் மூலம் 1500  கோடி டாலர்கள் முதலீட்டை பெறுவதன் மூலம் பயனடைவார். எனவே , அதே போல் ஏன் பாகிஸ்தான் சேர கூடாது ? சீனா பல நாடுகளுக்கு கடனுதவி அளித்துள்ளது. கடன் பெற்றவர் திரும்ப செலுத்த முடியவில்லையெனில் கடன் கொடுப்பவர் மேலும் கடனை கொடுத்து எந்த கடனும் கேட்டதாக கடன் பெற்றவர் புத்தகத்தில்  இருக்காது. இதன் மூலம் இரு தரப்பும் திருப்திபெறும். ஆனால் அதில் ஒரு சிக்கல் உள்ளது. சீனாவின் உடையக்கூடிய உள்ளூர் சந்தை அதிகமாக கடன் கொடுக்க ஊக்குவிக்கும் வகையிலுள்ளது. ஆனால் பாகிஸ்தானிடம் இத்தகைய அம்சமில்லை . மேலும் பாகிஸ்தானுக்கு கடன் கொடுக்கும்  வங்கிகள் பாரம்பரிய வணிக வங்கிகள் கிடையாது . சில கடன்கள் திருப்ப கிடைக்கவில்லையெனில், அவற்றை நிதி அமைச்சகம் தள்ளுபடி செய்துவிடும். இது நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்காது.

எனவே சீனாவிற்கு இதில் பெரும் இழப்பு இல்லை.  ஆனால் பாகிஸ்தானுக்கு அதிக பிரச்சனை உள்ளது. எனவே கடைசியில் சீனா கடனை தள்ளுபடி செய்கிறதா, அல்லது கடனை மறுகட்டமைப்பு செய்கிறதா என்பதே கேள்வி. ஒரு அறிக்கைபடி , அதிகம் கடன் பெற்ற 31 நாடுகளில் 28 நாடுகளின் கடனை சீனா தள்ளுபடி செய்துள்ளது. எனவே சீனாவின் கடன் சுலபமாக தெரிந்தாலும், அதில் அபாயகரமான பல சிக்கல்கள் உள்ளது. [மூலம் : ப்ளூம்பெர்க் ]

அமெரிக்காவின் கருவியான சர்வதேச நிதி நியாயமோ அல்லது சீனாவோ , பாகிஸ்தானை சுய பொருளாதார கொள்கையை செயல்படுத்த விடாது. பாகிஸ்தான் இஸ்லாமிய முறைப்படி தங்கம் மற்றும் வெள்ளி அடிப்படையில் நாணய மதிப்பை கொண்டு வந்தால் மட்டுமே பன்னாட்டு மேற்கத்திய தொழிற்சாலைகளை நம்பாமல் சுய பொருளாதாரத்தை சார்ந்து இருக்க முடியும்.

3.அரிதாக அறியப்பட்ட போதகருக்காக அமெரிக்கா துருக்கி மீது வர்த்தக போர் தொடுக்கிறதா? அதில் ஒரு வார்த்தையும் உண்மையில்லை.

எர்டோகனின் உண்மையான குற்றங்கள் ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணையை துருக்கிக்காக வாங்கியது, அமெரிக்காவின் குர்திஷ் இன கூட்டாளிகளுக்கு அமெரிக்காவின் ஆதரவை பெற மறுத்தது மற்றும் துருக்கி எல்லை வழியாக சிரியாவிற்கு இஸ்லாமிய போராளிகளை ஆயுதங்களுடன் அனுமதித்தது. வயதான எர்டோகன் மனதை மேன்மைப்படுத்தி ஒரு மேன்பட்ட பக்குவம் தேவை. எர்டோகன் 50 ,000  துருக்கியர்களை சிறைபிடித்தார், அதில் அமெரிக்க போதகரும் ஒருவர், ஆனால் இதேபோல் எகிப்து அதிபர் சிசி இவரின் சாதனையை முறியடிக்கும் வகையில் 60 ,000  இஸ்லாமியர்களை தன்னுடைய சிறையில் அடைத்தார். மனித உயிர்களை பற்றி கவலைப்படாத டிரம்ப் , திடீரென துருக்கி மீது நடுநிலையான கொள்கையை மேற்கொள்வார் ? அதுவும் தற்போது அமெரிக்காவில் தஞ்சம் புகுந்துள்ள எர்டோகனின் முன்னாள் தோழர் இமாம் முகமத் குலனுடன் சேர்ந்து ஆட்சிக்கவிழ்க்க உதவிய  போதகர் அன்டுரவ் பிரன்சன் அவர்களை வீட்டு காவலில் வைத்த பிறகு டிரம்ப் நடவடிக்கை எடுத்தார் என்பது நம்பக்கூடியதா ? இதில் ஒரு வார்த்தை கூட நம்பும் வகையில் இல்லை. டிரம்ப் ஆரம்பத்தில் இவரின் சிறைபிடிப்பை பற்றி சில காலம் பேசிக்கொண்டிருந்தார். தற்போது மத்திய கிழக்கில் நிலவும் சூழ்நிலையை நாம் கவனிக்கலாம். எர்டோகன் புடின் மற்றும் ஈரானுடன் நட்பை வலுப்படுத்தியுள்ளார், சவூதி அரேபியாவுடன் கருத்து வேறுபாடிலிருக்கும் கத்தாருடன் நல்ல நட்பிலுள்ளார். மேலும் கத்தார் அமீர் 1500 கோடி டாலர்கள் மதிப்பிலான முதலீட்டை துருக்கி நாட்டுக்கு வாக்களித்துள்ளார். சவூதி அரேபியாவின் கத்தார் மீதான போர் அதற்க்கு வருத்தம் தரும் வகையிலுள்ளது. துருக்கி நாட்டு படைகள் சிறிய நாடான கத்தார் நாட்டிலுள்ளது. மேலும் சிரியா மற்றும் கத்தார் நட்பு மீண்டும் அதிகரிக்கும் நிலையில் இதில் யார் அதிகம் பயனடைவார். பஷார் அல் அசாத் ? ரஷ்யா ராணுவம் சிரியா இஸ்ரேலிய எல்லையில் ரோந்து வந்துகொண்டிருக்கிறது. மேலும் ரஷ்யா இஸ்ரேலுக்கு கொடுத்த வாக்குறுதிப்படி ஈரானிய படைகள் குறைந்தது 50 மைல்களுக்கு மேல் தான் இருக்கும். ரஷ்யாவின் கூட்டான சிரியா போராளிகளை நசுக்கும் கடைசி நிலையிலுள்ளது. கத்தார் சிரியாவை சீரமைக்கும் செல்வத்தை கொண்டுள்ளது. மேலும் கத்தார் துருக்கி மீது இன்னும் அதிக பணத்தை செலவழிக்க முடியும், இதன் மூலம் இரு நாட்டுக்கும் ஒரு தந்திர கூட்டு உருவாகும். மேலும் எர்டோகன் மற்றும் அசாத் மத்தியில் குடும்ப நட்பு மீண்டெழக்கூடும். [மூலம் : தி இன்டெபேன்டென்ட்]

சிரியாவில் நடுக்கும் நிகழ்வுகள் முடிவுக்கு வரும் நிலையில், அமெரிக்கா தன்னுடைய கூட்டாளிகளான துருக்கி, ஈரான், சவூதி அரேபியா மற்றும் மற்ற நாடுகளின் பங்கை குறைக்க நினைக்கிறது.  இந்த போருக்கு பிறகு அமெரிக்கா சொல்வதை கேட்பதை பொருட்டே இந்த போரின் தீர்வுகள் நிறைவேறும்.

Comments are closed.