சமீப பதிவுகள்

செய்திப்பார்வை 22.08.2018

தலைப்புச்செய்திகள் :

1.அமெரிக்க அரசியல்வாதிகள் (காங்கிரஸ்காரர்கள்) துருக்கியை கைவிட்டு விட்டனர்.

2.காலனித்துவ மேற்கிற்கு சமமான நாடு சீனா.

3.பிரச்சனை இருந்த பொழுதும் துருக்கி –அமெரிக்க உறவு நீடிப்பு.

விவரங்கள் :

1.அமெரிக்க அரசியல்வாதிகள் (காங்கிரஸ்காரர்கள்) துருக்கியை கைவிட்டு விட்டனர்.

அமெரிக்கக் காங்கிரஸ், எர்துகானை கைவிட்டு விட்டனர். துருக்கியிலிருந்து இறக்குமதியாகும் அலுமினியம் மற்றும் ஸ்டீல் பொருட்களுக்கு கூடுதல் வரியை அமெரிக்கா விதிப்பதை எதிர்த்து உலக வர்த்தக நிறுவனத்திடம் (WTO) துருக்கி புகார் அளித்தது. இது அமெரிக்காவின் வெள்ளை மாளிகை (டிரம்ப்) மற்றும் காங்கிரசில் உள்ள ரிபப்ளிக் கட்சியினருக்கும் நடந்த மோதல் காரணமாக வந்ததாகும். அதிபர் டிரம்ப் ரிபப்ளிக் கட்சியினரின் அதிபர் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட நாளிலிருந்து,   காங்கிரசில் இருக்கும் ரிபப்ளிக் கட்சியினர்  டிரம்பை சிறுமைபடுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.    ஐந்தாவது தலைமுறை F-35 ரக போர் விமானத்தை துருக்கியிடம் விற்பதை வெள்ளை மாளிகை கொண்டாடிக்கொண்டிருக்கும் வேளையில், அமெரிக்க பாதிரியார் ஆண்ட்ரிவ் புருன்சன் துருக்கியில் (2016ல்)கைது செய்யப்பட்டதை காரணம் காட்டி துருக்கிக்கு போர் விமானம் கொடுப்பதை தடை செய்யும் சட்டத்தை காங்கிரசில் அறிமுகப்படுத்தபட்டது. துருக்கி அரசு பாதிரியாரை சிறையிலிருந்து விடுவித்து வீட்டு காவலில் வைத்து டிரம்பிற்கு உதவி செய்தது, இருப்பினும் அமெரிக்காவில் உள்ள கிருஸ்தவ சமூகத்தின் கொதிப்பு காங்கிரஸில் பிரதிபளிக்கச்செய்தது, இதனால் அதிபர் டிரம்ப் நிர்பந்திக்கப்பட்டார். டிரம்ப் பதவிக்கு வர ஆதரவாக இருந்தவர்களே இந்த கிருஸ்தவ சமூகம். இதனாலேயே F-35 ரக விமானத்தை துருக்கிக்கு கொடுக்கும் தடை தொடர்பான பாதுகாப்பு அதிகார சட்டத்தில் அவர் கையெழுத்திட்டார். இன்னும் ஒரு படி மேலே போய் அலுமினியம் மற்றும் ஸ்டீல் பொருட்களுக்கு கூடுதல் வரியையும் விதித்துள்ளார். என்னதான் துருக்கி சிரியா மற்றும் பிராந்திய விவகாரங்களில் அமெரிக்காவிற்கு உதவி செய்திருந்தாலும், மூலாபாய ஆதாயம் (strategic interest) என்று  வரும்பொழுது அமெரிக்காவிற்கு இது ஒன்றும் பெரிதாக தெரிவதில்லை. எர்துகான் அமெரிக்காவிடம் எவ்வளவுதான் நெருக்கமாக இருந்த பொழுதும், இக்கட்டான சூழ்நிலையில் அமெரிக்க அரசியல்வாதிகள் (காங்கிரஸ்காரர்கள்) துருக்கியை கைவிட்டு விட்டனர்.

2.காலனித்துவ மேற்கிற்கு சமமான நாடு சீனா.

டோங்கா(Tonga) இது சுமார் 107,000 நபர்களை கொண்ட ஒரு குட்டி தீவு. இதன் பொருளாதார ஜிடிபி (GDP) வெறும் $426 மில்லியன் டாலராகும். தற்பொழுது இந்நாடு சீனாவின் கடனிற்கு இறையாகியுள்ளது. சீனாவிடம் இது அதிகமாக கடனாகியுள்ளது. தன்னுடைய மொத்த பொருளாதாரத்தில் (GDP யில்) 24% சதவீதம் சீனாவிடம் கடனாகியுள்ளது. ஒரு சகாப்தத்திற்கு முன்பு வாங்கிய இக்கடன் வரும் செப்டம்பர் மாதம் அதன்  தவணை முடிவடைய உள்ளது. ஆனால் அந்நாடு கடனை திருப்பி அடைக்கும் தவணை கால அளவை இன்னும் கூட்ட, இன்னும் சொல்லபோனால் அக்கடனையே ரத்து செய்ய   சுற்றியிருக்கும் தென் பசிபிக் நாடுகளுடன் இணைந்து சீனாவிற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது. கடந்த 2008 மற்றும் 2010ல் டோங்கா சீனாவிடம் 120 மில்லியன் டாலர் கடன் வாங்கியிருந்தது. அன்றிலிருந்தே அதனை திருப்பி அடைக்க அந்நாடு மறுத்து வருகின்றது. 2008 கடனின் முதல் தவணை 2013 லியே முடிந்து விட்டது. அப்பொழுது டோங்கா சீனாவிடம் கடனை தள்ளுபடி செய்ய கேட்டுக்கொண்டது, இதற்கு சீனா மறுத்துவிட்டது. 120 மில்லியன் டாலர் என்பது பல பில்லியன் டாலர் கொடுக்கும் சீனாவிற்கு ஒன்றும் பெரிய தொகை அல்ல. மாறாக, சுற்றியிருக்கும் தென் பசிபிக் நாடுகளை தன் ஆதிக்கத்தில் வைத்திருக்க சீனா அந்நாடுகளை கடனாளியாக்கியுள்ளது.  2006 முதல் 2016 வரை சீனா தென் பசிபிக் நாடுகளுக்கு சுமார் 2.2 பில்லியன் டாலருக்கும் மேல் கடனளித்துள்ளது. டோங்காவிற்கு கடன் தள்ளுபடி செய்தால் அது ஒரு கெட்ட முன்மாதிரி ஆகிவிடும் என்றும் தன்னுடைய கட்டுப்பாட்டில் இருந்து அது விலகிவிடும் என்பதனால் கடனை தள்ளுபடி செய்ய மறுத்து வருகின்றது. இது சீனாவிற்கும் மேற்குலகில் இருக்கும் ஏகாதிபத்திய வல்லாதிக்க சக்திக்களுக்கும் எந்த மாற்றமும் இல்லை என்பதை குறிக்கின்றது. என்ன வித்தியாசம் எனில் சீனா மென்மை போக்கை கையாளுகின்றது. இலங்கையிலுள்ள அம்பாந்தோட்டை (Hambantota) துறைமுகத்தை பொறுத்தவரை அங்கு எந்த லாபத்தையும் ஈட்ட முடியாது என ஆய்வுகள் குறிப்பிட்டிருக்கும் நிலையில், சீனா வேண்டுமென்றே இலங்கைக்கு துறைமுகத்தை மேன்படுத்துகிறோம் என்று கூறி கடன் வழங்கியது. எதிர்பார்த்த மாதிரியே இலங்கை கடனை திருப்பி அடைக்க முடியவில்லை. இறுதியில்  அத்துறைமுகத்தையும் 15,000 ஏக்கர் நிலத்தையும்   இலங்கை சீனாவிடம் 99 வருடம் லீசிற்கு விட நிற்பந்தப்படுத்தபட்டது.

3.பிரச்சனை இருந்த பொழுதும் துருக்கி–அமெரிக்க உறவு நீடிப்பு.

அமெரிக்காவிற்கும் துருக்கிக்கும் உள்ள உறவு மோசமாகியிருக்கும் சூழ்நிலையில், குர்து இன உயர்மட்ட போராளியை தாக்க  துருக்கி அரசிற்கு அமெரிக்கா உளவு தகவலை பரிமாறி உதவியதாக துருக்கி அதிகாரி ஒருவர் The Middle East Eye (MEE) என்ற பத்திரிக்கைக்கு கூறியுள்ளார்.   என்னதான் இருநாடுகளுக்கு மத்தியில் வரியை கூட்ட போகிறோம் என்றும் துருக்கி பொருளாதாரத்தை பயமுறுத்த சில ட்வீட்களை பதிந்திருந்தாலும், நேட்டோ கூட்டுறவின்படி இரு நாடுகளுக்கு மத்தியிலான ஒத்துழைப்புகள் ஈராக் முதல் சிரியா வரை இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்பதற்கு இத்தாக்குதல் சான்றாக இருக்கிறது.   கடந்த ஆகஸ்டு 15 ல் துருக்கி விமான படையின் சின்ஜார் கிளர்ச்சி குழுக்களுக்கு (Sinjar Resistance Units (YBS) எனபது குர்து இன (PKK) கட்சியின் கிளை குழு) எதிரான இரட்டை தாக்குதலில் இஸ்மாயில் ஒச்தன் என்பவர் கொல்லபட்டார். இதில் அமேரிக்கா துருக்கி அரசிற்கு உளவு தகவலை கொடுத்ததற்கு பிறகே, இராக்கில் உள்ள வட சின்ஜார் பகுதியில்  ஒச்தன் இருக்கும் வாகனத்தில் குண்டு போடப்பட்டுள்ளது.

பென்டகனின் செய்திதொடர்பாளர் எரிக் பஹான் (Eric Pahon) MEE விற்கு அளித்த பேட்டியில் “நாங்கள் PKK (குர்து போராளிகள்) விற்கு எதிரான துர்கியின் நடவடிக்கையை நாங்கள் ஆதரிக்கின்றோம். துருக்கியின் பாதுகாப்பிற்கு PKK பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றது என்பதை நாங்கள் ஏற்றுகொள்கிறோம்” என கூறியுள்ளார்.

சிரியாவில் உள்ள மன்பிஜ் மற்றும் இராக்கில் உள்ள சின்ஜார் போன்ற துருக்கிய எல்லைகளில் இருக்கும் நான்கு துருக்கி அதிகாரிகள் MEE விற்கு அளித்த பேட்டியில், அமெரிக்க பாதிரியார் அன்டுரூவ் பிரன்சன் சிறை செய்யப்பட்ட விவகாரத்தில் இருநாடுகளுக்கு மத்தியில் பிரச்னை ஏற்பட்டிருந்த பொழுதும், இருநாடுகளுக்கு மத்தியிலான ராணுவ ஒத்துழைப்பு தொடரும் என அவர்கள் கூறியுள்ளனர்.   “துருக்கியின் கவலைகள் பற்றி பொதுவாக பென்டகன் அக்கறை கொண்டுள்ளது, நாங்கள் நிலத்தில் அவர்களுடன் ஒத்துழைப்பு வைத்து கொள்வோம்” என ஒரு அதிகாரி கூறினார்.  பென்டகனும் இரு நாடுகளுக்கு மத்தியிலான ராணுவ உறவு வலிமையாக நீடிக்கும் என உறுதி அளித்துள்ளது. ஆகத்து 20 ல் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கலோனல் ராப் மானிங் (Rob Manning) கூறுகையில், “துருக்கி உடனான எங்கள் உறவில் எந்த தடையும் இல்லை” என கூறினார்.

மாநிலத் திணைக்களத்தின் (State Department) தற்போதய மத்திய கிழக்கு தலைவரும் அடுத்த துருக்கிகான அமெரிக்க தூதுவருமான டேவிட் சட்டர்பீல்டும்  (David Satterfield) இரு நாடுகளுக்கு இடையேயான மன்பிஜ் ஒப்பந்தம் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என உறுதி செய்தார்.

“மன்பிஜ் திட்டப்பணி சம்பந்தப்பட்ட அனைத்துக் கட்சிகளின்  பங்களிப்பானது மென்மையாகவும், மிகவும் ஊக்கமளிக்க கூடியதாகவும்  உள்ளது. வேறுபட்ட இருதரப்பு சிக்கல்களின் எந்த விளைவோ அல்லது தாக்கமோ  இங்கே இல்லை.” என அவர் கூறியுள்ளார்

Comments are closed.