சமீப பதிவுகள்

செய்திப்பார்வை 25.08.2018

தலைப்புச்செய்திகள் :

1.பொம்பியோவின் வட கொரியா பயணத்தை டிரம்ப் ரத்து செய்து சீனாவின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கவுள்ளார்.

2.பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கும் தருணத்திலேயே தாலிபான் புதிய தாக்குதலை காஸ்ணி மீது மேற்கொண்டது.

3.துருக்கி நாணயம் லிராவின் மீதான அழுத்தத்துடன் சிரியாவின் இட்லிப் நகரின் மீதான ரஷ்யாவின் திட்டமும் சேர்ந்துள்ளது.

விவரங்கள் :

1.பொம்பியோவின் வட கொரியா பயணத்தை டிரம்ப் ரத்து செய்து சீனாவின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கவுள்ளார்.

லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் வெளியிட்ட செய்தியில் :

ஒரு ஆச்சிரிய அறிவிப்பில், வெள்ளிக்கிழமையன்று  ஜனாதிபதி டிரம்ப் அவர்கள் வட கொரியாவில் அணுசக்திக்   குறைப்பில் முன்னேற்றமில்லை என்பதை  ஒப்புக் கொண்டார். மேலும் மாநில செயலாளர் மைக்கேல் பொம்பியோவின் வடகொரியா பயணத்தை ரத்து செய்தார். இதன்மூலம் இருநாட்டிற்கு மத்தியிலிருந்து பேச்சுவார்த்தை தொய்விலுள்ளது.

வியாழக்கிழமையன்று பொம்பியோ நெடுங்காலமாக நிலவும் அணுஆயுத பேச்சுவார்த்தையை ஒரு முடிவுக்கு கொண்டு வர வட கொரியா பயணம் மேற்கொள்ளப்போவதாக அறிவித்திருந்தார்.

ஆனால் அரசு துறை, அவரின் பயணத்தை ரத்து செய்துள்ளது, ஏனெனில், டிரம்ப் நாம் அணுசக்தி குறைப்பு விஷயத்தில் போதிய முன்னேற்றத்தை காணவில்லை என ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

மேலும் இதற்கு ஒரு காரணமாக சீனாவையும்  குற்றம் சாட்டியிருந்தார், இரு நாட்டுக்குமிடையில் சமீபத்திய வர்த்தக பிரச்சனை நிலவும் நிலையில்  அவர் கூறியதாவது, அவர்கள் (சீனா) முன்பை போல் இப்பொழுது உதவுவதில்லை என தெரிவித்திருந்தார்.

ஆனால், அதே தருணத்தில் சமரசம் செய்ய வாய்ப்பு தரும் வகையில், ” வெகு சமீபத்தில், சீனா உடனான வர்த்தக உறவு சீரடைந்தவுடன் வட கொரியாவை சந்திக்க விரும்புவதாக தெரிவித்திருந்தார். மேலும் அதிபர் கிம் அவர்களை விரைவில் சந்திக்க  காத்திருப்பதாக கூறியிருந்தார்.

அமெரிக்கா, இங்கிலாந்தின் கொள்கையான பிரித்து ஆள்வது என்பதை தத்தெடுத்துள்ளது, இதன் மூலம் மற்ற நாடுகள் மத்தியில் பிரச்சனையை உருவாக்கி தன்னுடைய தலைமை பொறுப்பை பாதுகாத்துக்கொண்டிருக்கிறது.

வட கொரியா உடனான   அமெரிக்க கொள்கை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது, அதனை பயன்படுத்தி சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த பிரச்னையை உருவாக்குகிறது.  வட கொரியா, தென்கொரியாவிற்கு பாதையை திறந்துவிட்டதே அமெரிக்காவிற்கு கிடைத்த பெரும் அதிர்ச்சி செய்தியாகும், ஏனெனில் அமெரிக்கா கொரிய  தீபகற்பத்தில் அமைதியை விரும்பவில்லை. எனவே, இந்த இரு நாட்டின் உறவை சீர்குலைக்கும் விதமாகவே, வட கொரிய அதிபர்  கிம் ஜோங் அவர்களை சந்தித்து அதனை தொடர்ந்து செயலாளர் பொம்பியோ அவர்களை அனுப்ப நினைத்தார். ஆனால், இப்போது அமெரிக்கா இவ்விவகாரத்தில் மீண்டும் ஆதிக்கத்தை எடுத்துள்ளது, தன்னுடைய பழைய சூழ்ச்சியான அமைதியை நாசம் செய்யும் வேலையை தொடங்கியுள்ளது.

ஆயிரம் வருடங்களுக்கு மேலாக சர்வதேச உறவுமுறைகளை இஸ்லாமிய கிலாஃபா அரசு ஆதிக்கம்செலுத்தியிருந்த தருணத்தில், முஸ்லிம்களுக்கு சீனாவில் பிரச்சனையை உண்டு பண்ண வேண்டிய அவசியமிருந்ததில்லை. மாறாக சீனாவின் அச்ச நிலையை இஸ்லாமிய அரசு போக்கும் வகையில், சர்வதேச பாதுகாப்பை அளித்து, உள்நாட்டு பிரச்சனைக்கு உதவி, சீனாவை அதனுடைய வளர்ச்சிக்கு கவனம் செலுத்த வாய்ப்பளித்தது. இஸ்லாமிய அரசு நலிவடைந்த நிலையில் தான் சீனா மேற்கத்திய ஏகாதிபத்தியவாதிகளுக்கு இரையானது.

அல்லாஹ்வின் அனுமதியோடு, இவ்வுலகம் இஸ்லாயமிய கிலாஃபா மீண்டெழுவதை காணும், அப்பொழுது உலகம் சர்வதேச அமைதியின் உண்மையான அர்த்தத்தை உணரும்.

2.பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கும் தருணத்திலேயே தாலிபான் புதிய தாக்குதலை காஸ்ணி மீது மேற்கொண்டது. 

ரியூட்டர்ஸ் வெளியிட செய்தியில் :

ஆப்கானின் அரசு படைக்கும் தாலிபான் படைக்கும் இடையில் போர் வெடித்த நிலையில், காஸ்ணி நகரத்திற்கு அருகில் உள்ள பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது.

தாலிபான் படையினர் காஸ்ணி நகரத்திற்கு புறநகரிலுள்ள மூன்று கிராமங்களை கடந்த வியாழக்கிழமையன்று தாக்கியது, இதில் புதிதாக கட்டப்பட்ட சோதனை சாவடிகள் அழிக்கப்பட்டது மேலும் நகரில் சில பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

காவல்துறை தலைமை அதிகாரி பரித்  மசால் அவர்கள் அரசு படைகளை கொண்டு  பதில் தாக்குதல்கள் மேற்கொண்டு, கிளச்சியாளர்களை நகரத்தை நெருங்குவதை விட்டு தடுத்தனர் என்றார்.

ஆப்கானில் அபாயகரமான விளையாட்டு நடந்து கொண்டிருக்கிறது, தாலிபானின் தலைமைத்துவம் அமெரிக்கா, மற்றும் அமெரிக்காவின் திட்டங்களை சிரியாவில் நிகழ்த்திய ரஷ்யா உட்பட்ட அமெரிக்கா கூட்டாளிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது. முன்னர் நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தியில் : ஆப்கானின் தாலிபான் கிளர்ச்சியாளர்கள் தங்களுடைய தூதுவர்களை ரஷ்யாவிற்கு அமைதி பேச்சுவார்த்தைக்கு அனுப்ப உள்ளனர். இது இந்த 17 வருட போரில் நடைபெறும் தந்திர திருப்புமுனையாகும்.

செப்டம்பர் 4 இல் நடைபெறும் பேச்சுவார்த்தைக்கு தாலிபான் ஒத்துக்கொண்டிருப்பது இக்கூட்டத்தின் தலைகீழ் மாற்றமாகும், மேலும் ஆப்கான் அரசும் அதனுடைய ஆதரவாளருமான அமெரிக்காவும் இந்த அழைப்பை மறுத்த நிலையில் இது நிகழ்ந்துள்ளது.

தாலிபானின் பேச்சாளர் மூலம் அறிவித்த செய்தியில், கத்தார் நாட்டிலுள்ள அவர்களின் அரசியல் அலுவலகம் மாஸ்கோவிற்கு பேச்சுவார்த்தைக்கு நபர்களை வழிநடத்தும் என்றார்.

எனவே, நாம் எதிரிபார்ப்பதென்னவெனில் காஸ்ணி நகரித்தின் மீதான தாக்குதல் ஆப்கான் முஜாஹிதீனுடன் இறுதி கட்ட பேச்சுக்காக நிகழ்ந்த திட்டமிட்ட தாக்குதலாக இருக்க கூடாது, அமெரிக்காவின் இருப்பை ஒத்துக்கொள்வதற்காக நாட்டின் ஒரு பகுதியை அவர்கள் பெற்று கொள்வார்கள்.

ஆப்கானின் நெடும் போராடட்டமும் பெரும் தியாகமும்  அமெரிக்காவை பெரும் துயரத்திற்குள்ளாக்கியது. எனினும் நம் பகுதியிலிருந்து அந்நிய சக்திகளை முழுமையாக வெளியேற்ற சக்தி பெற்ற நாடாளும் அதனுடைய படைகளால் மட்டுமே முடியும். முஸ்லீம் உலகத்திலுள்ள மற்ற பிரச்சனைகள் போலவே ஆப்கான் ஆக்கிரமிப்பும் இஸ்லாமிய அரசை எதிர்பார்த்தே இருக்கிறது, இஸ்லாமிய கிலாஃபா அரசே முஸ்லீம் நாடுகளை ஒன்றிணைக்க முடியும்.

3.துருக்கி நாணயம் லிராவின் மீதான அழுத்தத்துடன் சிரியாவின் இட்லிப் நகரின் மீதான ரஷ்யாவின் திட்டமும் சேர்ந்துள்ளது.

ரியூட்டர்ஸ் செய்தி படி :

துருக்கி அதிகாரிகளுக்கு வட மேற்கு சிரியாவிலுள்ள பிரச்சனைகளை தீர்க்க ரஷ்யா தன்னுடைய திட்டத்தை வழங்கியுள்ளது என இன்டெர்ப்பஸ் செய்தி நிறுவனம் வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டிருந்தது.

ரஷ்ய ராணுவ அமைச்சர் செர்கெய் ஷாயிகு துருக்கி ராணுவ அமைச்சர் ஹலூஸி அகர் அவர்களை மாஸ்கோவில் வெள்ளியன்று சந்தித்து பேசினார்.

துருக்கி சில கிளர்ச்சி குழுக்களை வட சிரியா பகுதியான இட்லிபில் ஆதரித்ததோடு, சில ராணுவ கவனிப்பு கம்பங்களை நிறுவியுள்ளது. ரஷ்யாவின் ஆதரவுபெற்ற சிரிய அதிபர் பஷார் அவர்களின் படைகள் தங்கள் மீது தாக்குதல் நடத்துவதை தடுக்க முயற்சிக்கிறது.

அமெரிக்கா இந்த உலகை சதுரங்க பலகை போல கருதி தன்னுடைய காய்களை நகர்த்துகிறது. சிரிய புரட்சியை சமாளிக்க துருக்கியை ஒரு காயாக பயன்படுத்தியது. இப்போது அந்த போர் முடிவடையும் தருவாயில், போர் மற்றொரு கட்டத்தை எட்டுவதால் அமெரிக்கா தனது இறுதி தீர்வுக்காக காய்களை நகர்த்துகிறது. துருக்கி நாணயத்தின் மீதான அமெரிக்க தாக்குதலும் இந்த சூழ்ச்சியின் ஒரு பகுதியே. அமெரிக்காவே துருக்கியை சிரியாவிற்குள் நுழைய செய்தது, இப்பொழுது அது முழுவதுமாக அங்கிருந்து வெளியேற ரஷ்யாவின் மூலம் செய்தியை பரிமாறுகிறது.

அல்லாஹ்வின் அனுமதியோடு இந்த சிரிய புரட்சி ஒரு போதும் முடியாது, ஏனெனில் அமெரிக்கா இந்த புரட்சியின் சில பகுதிகளையே போரிட்டது, ஆனால் உண்மையான புரட்சி மக்களின் மனதில் ஏற்கனவே உண்டாகிவிட்டது, இதுவே நேர்வழிப்பெற்ற இஸ்லாமிய கிலாஃபாவை  உருவாக்க திறவுகோலாக விளங்கும்.

Comments are closed.