சமீப பதிவுகள்

செய்திப்பார்வை 26.08.2018

தலைப்புச்செய்திகள் :

1.யூத பத்திரிகையாளர் இஸ்லாத்தை தழுவியுள்ளார், யூத அரசை கடுமையாக விமர்சிக்கிறார்.

2.கீர்ட் வைல்டர்ஸ் போலவே டச்சு பிரதமரும் குற்றவாளி.

3.உயர் அதிகாரிகளுக்கான முதல் வகுப்பு விமான பயணத்தை இம்ரான் கானின் மந்திரி சபை தடை செய்துள்ளது.

விவரங்கள் :

1.யூத பத்திரிகையாளர் இஸ்லாத்தை தழுவியுள்ளார், யூத அரசை கடுமையாக விமர்சிக்கிறார்.

யூத பத்திரிகையாளர் மஹ்தி மஜீத் சில நாட்களுக்கு முன் இஸ்லாத்தை தழுவியுள்ளார் , யூத அதிகாரிகளுடன் நெருக்கமான உறவை மேற்கொண்ட போதிலும் இஸ்ரேல் நாட்டை கடுமையாக சாடுகிறார். நான் முஸ்லிமாக இருக்கவில்லை, ஆனால் இப்போது இஸ்லாத்தை நம்புகிறேன், மேலும் என்னை இந்த உண்மையின் பால் வழிநடத்திய இறைவனுக்கு நன்றி தெரிவிக்கிறேன். இஸ்லாமே சரியான மார்க்கமாகும், இறைவா  இஸ்லாத்தை சிதைக்கும் முஸ்லிம்களிடமிருந்து இஸ்லாத்தை பாதுகாத்துவிடு என்பதாக தன் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். மேலும் அப்பதிவில் அவர்  மெக்கா பயணம் செய்ய நாடியுள்ளதாகவும், அதற்கு அனுமதிக்குமாறு சவூதி அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வை தவிர வேறு இறைவனில்லை என சாட்சி கூறுகிறேன், மேலும் முஹம்மது (ஸல்) இறைவனின் தூதர் என சாட்சி கூறுகிறேன், மேலும் எந்த கொடுங்கோல் ஆட்சியாளருக்கும் நான் விசுவாசம் கொடுக்கவில்லை என சாட்சி கூறுகிறேன் என்றார். மத்திய கிழக்கில் இஸ்ரேல் நாடு ஜனநாயகத்தின் கலங்கரை விளக்காக இருக்கிறது என்று மஹ்திமஜீத் கடந்த பிப்ரவரி மாதத்தில் குறிப்பிட்டு இருந்த போதிலும் தற்போது அதே அரசை “சியோனிச அரசு” என்று அழைக்கிறார். யூத அரசையோ அல்லது யூத அதிகாரிகளையோ அவர்கள் எவ்வளவு இனிமையாக பேசினாலும் நம்பாதீர்கள், அவர்கள் விரும்புவது அவர்களின் சுயலாபத்தையே. இஸ்லாத்தை பற்றி பிடித்துக்கொள்ளுங்கள், மேலும் அதிலுள்ள கேடுகெட்ட போதகர்களை விட்டு விலகியிருங்கள் என தெரிவித்திருந்தார். மேலும் தன்னுடைய யூத நண்பரை இஸ்லாத்திற்கு அழைத்தார், அதற்க்கு அவர் உன் மதம் உனக்கு, எனக்கு என் மதம் இருக்கிறது என்றார்.

[மூலம் : எகிப்து இன்டிபேன்டென்ட்]

 (…وَلَكِنَّ اللَّهَ يَهْدِي مَن يَشَاء وَهُوَ أَعْلَمُ بِالْمُهْتَدِينَ)

ஆனால், அல்லாஹ் தான் நாடியவர்களை நேர்வழியில் செலுத்துகிறான் – மேலும் நேர்வழி பெற்றவர்களை அவன் நன்கறிகிறான். [28 : 56]

 

2.கீர்ட் வைல்டர்ஸ் போலவே டச்சு பிரதமரும் குற்றவாளி.

டச்சு பிரதமர் வெள்ளியன்று, தன்னுடைய அரசு , இந்த வருட இறுதியில் எதிர்கட்சி தலைவர் கீர்ட் வைல்டர்ஸ் அவர்களால் நடத்தவிருக்கும் நபி முஹம்மது (ஸல்) அவர்களுடைய கேலி சித்திரம் வரைதல் போட்டிக்கு பொறுப்பேற்காது என தெரிவித்தார். இது அரசால் நடத்தப்படும் நிகழ்வல்ல என தெரிவித்தார். இவருடைய கருத்து பாகிஸ்தானில் மக்கள் வெளிப்படுத்திய கோபத்திற்கு பிறகு வெளிவந்துள்ளது. பாகிஸ்தான் அதிகாரிகள் கீர்ட் வைல்டர்ஸ் அவர்களுக்கெதிராக போராட்டம் நடத்தினர், இதனை இஸ்லாத்தின் மீதான அவதூறு தாக்குதல் என குற்றம் சாட்டியிருந்தார்கள்.

எதிர்க்கட்சி தலைவர் கீர்ட் வைல்டர்ஸ் இஸ்லாத்தின் மீதான விமர்சனங்களுக்கு பெயர்போனவர். பல அச்சுறுத்தலால் எப்போதும் பாதுகாப்போடவே உள்ளார்.

பிரதமர் ருட்டே, கீர்ட் வைல்டர்ஸின் நோக்கத்தை வினவினார், அவருடைய நோக்கம் இஸ்லாத்தை பற்றி விவாதிப்பதல்ல. அவரது நோக்கம் மக்களுக்கு ஆத்திரமூட்டுவதாகும். எனினும், நெதர்லாந்து மக்களுக்கு பேச்சுரிமையுள்ளது என்றார். இந்த மனிதர் , கீர்ட் வைல்டர்ஸ் மக்களின் பேச்சு சுதந்திரத்தின் எல்லையை சோதிப்பதற்கு பெயர்போனவர். அது அவருடைய சுதந்திரம். என்னுடைய அரசு,  இது அரசுடைய முயற்சியல்ல என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறது. இதற்கு பதிலாக கீர்ட் வைல்டர்ஸ் வெளியிட்ட செய்தியில் , நாம் இஸ்லாமிய ஆதரவாளர்களால் ஆளப்பட்டுக்கொண்டிருக்கிறோம் என்பதை தெளிவுபடுத்துகிறது. இந்த போட்டி, நாம் நம் சுதந்திரத்தோடு பேரம் செய்பவர்களல்ல என்பதை தெளிவுபடுத்தவே என்றார்.

[மூலம்: வாஷிங்டன் போஸ்டல்]

இத்தகைய வெறுக்கத்தக்க நிகழ்வுகளை ஊக்குவித்தது ருட்டேவின் குற்றம். அவரும் கீர்ட் வைல்டர்ஸும் இஸ்லாத்தை சுதந்திரத்தின் பெயரால் அவமதிக்கின்றனர். எனினும், பாகிஸ்தானில் நடைபெறும் போராட்டங்கள் ருட்டே போன்றவர்களை ஒன்றும் செய்ய இயலாது. இஸ்லாமிய ஆட்சியாளர்களுக்கு துணிச்சல் இருப்பின் , ஹொலண்ட் நாட்டிற்க்கான எண்ணெய் கப்பல்களை நிறுத்துவர். ஆனால் எவருக்கேனும் அந்த துணிச்சல் இருக்கிறதா ?

 

3.உயர் அதிகாரிகளுக்கான முதல் வகுப்பு விமான பயணத்தை இம்ரான் கானின் மந்திரி சபை தடை செய்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமர், இம்ரான் கானின் மந்திரி சபை உயர் அதிகாரிகளான ஜனாதிபதி, தலைமை நீதிபதி, செனட் தலைவர் மற்றும் தேசிய சட்டசபை பேச்சாளர்களுக்கு முதல் வகுப்பு விமான பயணத்தை தடை செய்துள்ளது. இந்த செய்தி , பாகிஸ்தான் அரசு, வேலை நேரங்களில் மாற்றத்தை கொண்டு வந்து, பிரதமரின் சுயேச்சையான நிதியை ஒழித்ததற்கு பிறகு வெளிவந்தது. பிரதமர் தன்னுடைய அதிகார பூர்வ விமானத்தை உள்ளூர் பயணத்திற்கு மட்டுமே பயன்படுத்த முடியும். மற்ற முக்கியமான முடிவாக நாட்டிலுள்ள குடிசைபகுதிகளை  மாற்றுவதும், முக்கிய நகரங்களில் மரங்களை நடுவதும் எடுக்கப்பட்டுள்ளது . மேலும் மூலதனம் நிர்வாக அமைச்சரவையை நீக்கி அதனை மற்ற அமைச்சரகத்தோடு இணைத்துள்ளது. முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தன்னுடைய சுய அதிகாரத்தின் பெயரில் 5000 கோடி பாகிஸ்தானிய ரூபாயை செலவளித்துள்ளார் என டாவ்ன் நியூஸ் செய்தி வெளியிட்டிருந்தது.

முதல் வகுப்பு பயணத்தை ரத்து செய்வதும், பிரதமர் இல்லத்தில் வசிக்காமல் இருப்பதும் பாகிஸ்தானுக்கு செழிப்பை தராது. பாகிஸ்தானை மதினா நகரத்தை போல் எவ்வாறு மேம்படுத்தலாம் என துல்லியமான  திட்டத்தை இம்ரான் கான் வெளிப்படுத்த வேண்டும்

Comments are closed.