சமீப பதிவுகள்

நபித்துவ வழிமுறையின் அடிப்படையிலான கிலாஃபத்தை கொண்டு மட்டுமே நாம் நமது இராணுவப்படையின் பலத்தை கொண்டு தீய நாவுகளையும் கரங்களையும் செயலிழக்கச் செய்து நபியவர்களின் கண்ணியத்தை பாதுகாக்க முடியும்.

செய்தி :

நெதர்லாந்தில் நபி முஹம்மது(ஸல்) அவர்களுடைய புனிதத்தன்மைக்கு  கலங்கம் ஏற்படுத்தும் வண்ணமாக கேலிச்சித்திரம் வரையும் போட்டிக்கு எதிரான போராட்டத்துக்காக பாகிஸ்தானிலுள்ள முஸ்லிம்களின் நன்மக்கள் ஒன்று கூடினார்கள், அதில் வெற்றி பெற்றவர்கள் யார் என்று நவம்பர் 2018ல் ஹேக் பாராளுமன்ற வளாகத்திலுள்ள மிகவும் பாதுகாக்கப்பட்ட பிவிவி (சுதந்திர கட்சி) அலுவலகத்தில் அறிவிக்கப்படவிருக்கின்றது. செயல்படுவதற்கு முன்வர தயாராக இருக்கும் முப்பது லட்ச இராணுவ வீரர்களின் மீது அதிகாரத்தை கொண்டிருக்கும் முஸ்லிம்களுடைய ஆட்சியாளர்கள் ஒட்டுமொத்தமாக, அல்லாஹ் (சுபு) மற்றும் நபி (ஸல்) அவர்களை நிந்திக்கும் மற்றும் அவர்களுடைய “கருத்து சுதந்திரத்திற்கு” ஆதரவாளர்களாக இருக்கும், மற்றும் மேற்கத்திய அரசுகளில் இருக்கும் ஷைத்தான்களை அச்சுறுத்துவதற்கு தேவையான இராணுவ நடவடிக்கைகளை ஒருபோதும் எடுக்கமாட்டார்கள். பயனற்ற அவர்களுடைய இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC) தனது வழக்கமான கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவிப்பதற்காக ஜூலை 24, 2018 அன்று தூக்கத்திலிருந்து விழித்தது.  குறிப்பாக உலகில் ஆற்றல் மிகுந்த முஸ்லிம் இராணுவப் படைகளை கொண்டுள்ள பாகிஸ்தானிய ஆட்சியாளர்கள் ஆகஸ்டு 20, 2018 அன்று அதன் அயலுறவு அமைச்சகம் மூலம் தமது கண்டனத்தையும் இந்த பிரச்சனையை தூக்கத்திலிருக்கும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பிடம் முறையிடுவதற்கு உறுதிபூண்டிருப்பதாக அறிவித்தது.

கருத்து :

கிலாஃபத் பலவீனமாக இருந்த காலகட்டத்திலும் கூட, அதன் இராணுவப் படைகளின் அச்சுறுத்தலானது தீய நாவுகளையும் கரங்களையும் அமைதியாக இருக்கச் செய்ய போதுமானதாக இருந்தது. கிலாஃபத் அழிக்கப்படுவதற்கு இருபது ஆண்டுகளுக்கு முன்னர், ரசூலுல்லாஹ் (ஸல்)  அவர்களை இழிவுபடுத்தும் வகையிலான நாடகம் ஒன்றை பிரான்சிலும் பிரிட்டனிலும் அரங்கேற்றப்படுவதாக இருந்தது. இந்த நாடகம் குறித்து அன்றைய கலீஃபாவான சுல்தான் இரண்டாம் அப்துல் ஹமீது அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது, அவருடைய தூதர் பிரான்ஸை எச்சரித்ததின் மூலமாக உடனடியாக அந்த நாடகத்தை  நிறுத்தச் செய்தது. பிறகு அந்த தீய நாவுகளும் கரங்களும் பிரிட்டனுக்கு சென்ற போது, கிலாஃபத்திலிருந்து பிரிட்டனுக்கு  அதேமாதிரியான எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இருந்தபோதிலும், அந்த நாடகத்துக்கான நுழைவுச்சீட்டுகள் அனைத்தும் விற்பனை செய்யப்பட்டு விட்டது என்றும் அந்த நாடகத்துக்கு தடை விதிப்பது என்பது அதன் குடிமக்களின் “சுதந்திரத்தில்”  அத்துமீறும் செயலாக இருக்கும் எனவும் பிரிட்டன் பதிலளித்தது. இதன் காரணமாக கலீஃபா இஸ்லாமிய உம்மத்திடம், “பிரிட்டன் நமது நபியை (ஸல்)  தாக்கி இழிவுபடுத்துகிறது,  நான் அவர்கள் மீது ஜிஹாதை தொடுக்கப்போகிறேன்… என்றும் அறிவித்து கட்டளையிடப் போகிறேன்” என்று அறிவித்தார்கள். இராணுவப்படைகளை திரட்டுவேன் என்ற அச்சுறுத்தலை கேள்விபட்ட உடன் “கருத்து சுதந்திரத்துக்கான” கோரிக்கை திடீரென காணாமல் போய்விட்டது, மேலும் அந்த அரங்கேற்றம் உடனடியாக நிறுத்தப்பட்டது.

ஆகையால், பாகிஸ்தானிலுள்ள முஸ்லிம்களே, நமது இராணுவப்படைகளின் பலத்தை கொண்டு நமது மாநபியவர்களின் (ஸல்)  கண்ணியத்தை பாதுகாப்பதற்காக  நபித்துவ வழிமுறையின் அடிப்படையிலான கிலாஃபத்தை மீண்டும் நிலைநாட்டுவதற்காக ஹிஸ்புத்தஹ்ரீருடன் இணைந்து பாடுபடுவதற்கான தருணம் இதுவல்லவா?

ஓ பாகிஸ்தானிய இராணுவப்படைகளில் உள்ள முஸ்லிம்களே, இதன்மூலம் உங்களுடைய ஆதரவை ஹிஸ்புத்தஹ்ரீருக்கு நீங்கள் கட்டாயம் வழங்க வேண்டும் என்பது தெளிவாக தெரிகிறது, அதன்மூலம் இறுதியாக கிலாஃபா ராஷிதாவானது இஸ்லாத்துக்கும் அதன் புனிதங்களுக்கும் தீங்கிழைக்கும் ஷைத்தான்களை அச்சுறுத்தி விரட்டுவதற்காக உங்களுடைய ஆயுதங்கள், இரத்தம் மற்றும் உலோகங்களை பயன்படுத்தும். அல்லாஹ் (சுபு) கூறுகிறான்,

إِنَّ الَّذِينَ يُؤْذُونَ اللَّهَ وَرَسُولَهُ لَعَنَهُمُ اللَّهُ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَأَعَدَّ لَهُمْ عَذَابًا مُهِينًا

எவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் துன்புறுத்துகிறார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் சபிக்கிறான். அன்றி, இழிவு தரும் வேதனையையும் அவர்களுக்காக தயார்படுத்தி வைத்திருக் கின்றான்.” (அல்குர்ஆன் : 33:57)

Comments are closed.