சமீப பதிவுகள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அதிபர் பதவியிலிருந்து அகற்றப்படுவாரா..?

அதிபர் டிரம்ப் முன்பை விட இப்போது பதவியில் இருந்து அகற்றப்படுவதற்கு அதிகமான நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறார். இந்த செயல்முறை, அதிகமான கண்டன தீர்மானங்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் உள்ளாக்கப்படுகிறது. இது செனட்டின் முன் நாட்டின் அதிபரை விசாரணைக்கு அழைத்து வர பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மையால் (இந்த அவமதிப்புக்கு)  ஒப்புக் கொள்ளப்பட வேண்டும். முல்லர் விசாரணை டிரம்பும் அவரது பிரச்சாரமும் 2016 அதிபர் தேர்தலில் ரஷ்ய முகவர்களுடன் உள்ளடி (மோசடி) வேளைகளில் ஈடுபட்டதாக நிரூபிக்க முற்படுகிறது, மற்றும் டிரம்ப் மீதான குற்றச்சாட்டுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமா இல்லையா என்பதை முடிவு செய்ய ஜனநாயக கட்சி (The Democrat Party ) விசாரணை முடிவிற்காக காத்திருக்கிறது.

இந்த வாரம், முல்லர் விசாரணையில் முல்லரின் தற்போதைய விசாரணை வளையத்தின் விளைவாக, டிரம்ப் பிரச்சார ஆதரவாளர்களின் பட்டியலில்  முன்னாள் தேசிய பாதுகாப்புத் தலைவர் மைக்கேல் ஃப்ளைன் மற்றும் ஜார்ஜ் பாபடோபோலோ பால் மனாஃப்போர்ட் மற்றும் மைக்கேல் கோஹன் ஆகியோர் சேர்க்கின்றனர். இவர்களை டிரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது தவறாக தவறாக பயன்படுத்தி வந்ததாக தெரிகிறது. இதற்கு பதிலளிக்கும் வகையில் ஜனநாயகக் கட்சி மாநாட்டின் தலைவரான அல் கிரீன் “அதிபரை பதவிநீக்கம் செய்வதற்கான நாட்கள் எண்ணப்படுகின்றன  என்று நான் நினைக்கிறேன்.” என்று கூறினார்.

ஒரு வருடத்திற்கும் மேலாக அமெரிக்கா மீது இந்த தலைப்பால்  விவாதம் நடத்தப்பட்டு வருகிறது, ஆனால் டிரம்ப் தானே இதனை சாத்தியம் என்பதை ஒப்புக் கொண்டது இது தான் முதல் தடவையாகும்: “ஒரு மிகப்பெரிய வேலையைச் செய்த நபரை எவ்வாறு நீங்கள் இழிவுபடுத்த முடியும் என்று எனக்குத் தெரியவில்லை” என்று ஃபாக்ஸ் நியூஸிடம் டிரம்ப் கூறினார். “நான் இதற்காக  பதவி விலகியிருந்தால், (அமெரிக்க) பங்கு சந்தை சரிந்திருக்கும் எல்லோரும் மிகவும் ஏழ்மையானவர்களாக இருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் இதை நம்ப மாட்டீர்கள் ஏனென்றால் இந்த எண்ணம் இல்லாமல், நீங்கள் இந்த பிரச்சனையை பார்க்க வேண்டும். அவரைத் தாக்கும் அரசியல் எதிர்ப்பை பயமுறுத்த டிரம்ப் தனது முயற்சியில் தீவிரமாக இந்த விசயத்தை எடுத்துக் கொள்கிறார், அவர் ஒரு தேசிய நெருக்கடியை விவரித்து இந்த பிரச்சனை தனியாக இல்லை என்று நிறுவ முயல்கிறார்.. முன்னால் நியூயார்க் மேயர் ரூடி கியுலியானி அதிபர் பதவிக்கு ஆபத்து வந்தால் அமெரிக்காவில் “கலகம்” வெடிக்க இருப்பதாக எச்சரித்தார். கடந்த மாதம் டிரம்ப்பின் சட்ட குழுவுடன் சேர்ந்துகொண்ட அவர், அரசியல் குற்றச்சாட்டுக்கள் அரசியல் காரணங்களுக்காக நிரூபிக்கப்படும் என்று அவர் விளக்கினார்: “அரசியல் காரணங்களுக்காக [டிரம்பிற்கு] நீங்கள் இழைக்கும் கொடுமைகளுக்கு எதிராக, அமெரிக்க மக்களுடன் இணைந்தது  போராடுவேன்,” என்று அவர் கூறினார்

இஸ்லாமிய ஆட்சியில் சட்டமியற்றுவதைப் போலல்லாமல், ஜனநாயக நாடுகளின் ஆட்சியாளர்கள் தங்கள் மீது நீதிமன்றத்தில் உள்ள குற்றங்களுக்கு பொறுப்பு ஏற்பது இல்லை, ஏனென்றால் அவர்களே தங்கள் நாட்டு சட்டத்தின் ஆதாரமாக இருக்கிறார்கள். அவற்றின் குற்றங்கள் அவற்றின் சக உறுப்பினர்களால் ஒரு அரசியல் செயல்பாட்டிற்கு உட்பட்டிருக்க வேண்டும், எனவே முக்கியத்துவம் வாய்ந்த மற்ற பிரச்சினைகளில் இருந்து அமெரிக்கா கவனத்தைத் திசைதிருப்பக்கூடிய இந்த விசாரணை  மாதங்கள் பல கடந்தும்  ஊகங்களின் அடிப்படையில் மேலும் பல மாதங்கள் தொடரும். இந்த செயல்முறையின் அரசியல் தன்மை என்பது நீதி என்பது மெதுவாகவும் விலையுயர்ந்ததாகவும் மட்டுமல்ல, நீதி உடனடியாக வழங்கப்பட முடியாததாகவும் உள்ளது. டிரம்ப் முன்னால் தலைமை மூலோபாயவாதி ஸ்டீவ் பன்னன் கூறுகையில், “நவம்பர் என்பது குற்றச்சாட்டின் மீதான வாக்கெடுப்பு நடக்கபோகின்ற மாதம் ஆகும் – வாக்கெடுப்பில் ஒவ்வொரு டிரம்ப் ஆதரவாளரும் அதிகமான அல்லது குறைவான வாக்குகளை பெற வேண்டும். அதைப்பொருத்து “நவம்பர் மாதம் என்ன நடக்கிறது? இது இடைக்காலத் தேர்தல்களுக்கான தேதியா,,?, இந்த கூட்டத்தொடரில்  டிரம்ப் தனது பெரும்பான்மையை நிருப்பிக்கிறதா இல்லையா என்பதை தீர்மானிக்கும்!

பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சியின் தலைவரான மிஸ் நான்சி பீலோசி, தேர்தல்கள் அதிபரின் விசாரணை அவமதிப்புக்கு முன் நடக்க வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்: “சிறப்பு ஆலோசகர்களின் குழு மற்றும் நியூயார்க்கில் உள்ள வழக்கறிஞர்கள் எந்த குறுக்கீடுகளும் இல்லாமல் நியாயமான மற்றும் நேர்மையான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். “அவர் சமீபத்திய இந்த அதிர்ச்சியான சம்பவத்திற்கு பிறகு நம்பிக்கையுடன் தீர்வை நோக்குவதாக சக ஜனநாயக கட்சியினரிடம் கூறினார். “நவம்பர் மாதத்தை நாம் விரைவாக அணுகும்போது  நாம் அமெரிக்கா முழுவதும் கடினமாக  உழைக்கும் அனைத்து அமெரிக்க குடும்பங்களுக்கும் நமது வலுவான பொருளாதார செய்தியை வழங்குவதில் கவனமாக இருக்க வேண்டும்”.

ஜனநாயகக் கட்சியின் தலைவர்கள் டிரம்பிற்கு எதிரான குற்றச்சாட்டுக்கு தங்கள் அழைப்பை தாமதப்படுத்துகின்றனர், ஏனெனில் அவர்கள் காங்கிரஸில் ஒரு வலுவான நிலைப்பாட்டைக் மேற்கொண்டிருப்பதால், அவர்கள் நவம்பர் மாதத்திற்காக  காத்திருக்கின்றனர். செனட்டில் ஜனநாயகக் கட்சியின் தலைவர் சக் ஸ்குமர் கடந்த ஆண்டு, டிரம்ப்பிற்கு எதிராக “ஒரு காலம் இருந்தது. அது முன்கூட்டியே விசாரணைக்கு அழைப்பதாக இருந்தது.  தற்போது அது நடக்கும் ஒரு நல்ல வாய்ப்பு இருக்கும் போது நீங்கள் உங்கள் தகுதியை (மரியாதையை) இழக்க நேரிடும். இது தீவிரமானது, மேலும் தீவிரமானது, இன்னும் தீவிரமானது. எனவே…… [இடைநிறுத்தம் செய்து, தன்னை அசுவசப்படுத்திக் கொண்டு] … நீங்கள் காத்திருங்கள் நானும் காத்திருக்கிறேன். “எனவே நீதி, காத்திருக்கிறது, இதன் விளைவாக நீதி என்பது அரசியல் காரணிகளால் மேற்கொள்ளப்படுகிறது, சட்டபூர்வமானதாக அல்ல.

ஆயினும்கூட, டிரம்ப்பைப் பற்றி குற்றச்சாட்டும் அதைப்பற்றிய  தகவலும் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இப்பொழுது, டிரம்ப் அமைப்பின் தலைமை நிதி அதிகாரி அலென் வெய்செல்பெர்க் பெடரல் வழக்குரைஞர்களால் விதிவிலக்கு வழங்கப்பட்டுள்ளார், அதாவது இந்த நிகழ்வானது டிரம்ப்பின் சட்டவிரோத தேர்தல் நடைமுறைகள் பற்றிய கூடுதல் சான்றுகள் வெளிச்சத்திற்கு வரலாம் என்பதற்கான சான்றாகும். டிரம்ப் ஆதரவாளரான டேவிட் பெக்கர், தேசிய வக்கீல் தலைமை நிர்வாகிக்கு ஃபெடரல் வக்கீல்கள் விதிவிலக்கு அளித்துள்ளனர். டிரம்ப்பின் பாலியல் விவகாரங்களைப் பற்றி அவரது தலைமை நிறுவனம், அமெரிக்கன் மீடியா இன்க், தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது, ​​அமெரிக்க வாக்காளர்களுக்கு வெளிப்படுத்தப்படுவதைத் தடுக்க, மோசமான பல கதைகளை கட்டவிழ்த்து விட்டது. டிரம்ப்பின் மீதான அழுத்தம் அதிகரித்து வருகிறது, மற்றும் அமெரிக்க அரசியல் பிரச்சாரங்களுக்கு நிதியளிப்பவர்கள் டிரம்ப் உடன் என்ன செய்ய வேண்டும் என்பதை விரைவில் முடிவு செய்வார்கள்.

– டாக்டர் அப்துல்லா ராபின்

Comments are closed.