சமீப பதிவுகள்

இஸ்லாமிற்கான சரியான அழைப்பு மட்டுமே மனிதனால் உருவாக்கப்பட்ட அமைப்புகளின் (கேடுகெட்ட முதலாளித்துவ சித்தாந்தத்தின்) ஊசலாட்டதிலிருந்து மனிதகுலத்தை காப்பாற்ற ஒரே வழி.

செய்தி :

ஆல்கஹாலின் மிகக் குறைந்த அளவு கூட உங்கள் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

நோய் பற்றிய ஆய்வு குறித்த உலகளாவிய ஆராய்ச்சி, குறிப்பிட்ட நோய்களிலிருந்து பாதுகாக்கப்படுவதற்கு நோயின் சுமையினால் மிகக் குறைந்த அளவு குடிக்கலாம் என்பதை வெளிப்படுத்துகிறது. குறிப்பாக இதய நோய் மற்றும் நீரிழிவு போன்ற நோய்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியாக இது இருக்கும் நேர்மறை விளைவை முற்றிலும் “ஈடுசெய்யும் அபாயங்கள் மூலம் புற்றுநோய்கள் தொடர்புடைய அபாயங்கள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தலாம், இதை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

தி லான்சட் பத்திரிகையில் இந்த வாரம் வெளியிடப்பட்ட ஆய்வானது, அதன் தகவலின் நம்பகதன்மை மற்றும் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, இன்றுவரை மிகவும் முக்கியமானதாகும்.

15 முதல் 95 வயதிற்குட்பட்டவர்களிடமிருந்து 1990 முதல் 2016 வரையிலான காலப்பகுதியில் 195 நாடுகளிலிருந்தும் மற்றும் பிற பகுதியிலிருந்தும் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்.

ஆராய்ச்சியின் முடிவானது “ஆல்கஹால் பயன்பாடு காரணமாக உடல்நல குறைவை குறைக்கும் என்கிற சதவிகிதம் (பயன்பாட்டு அளவு) பூஜ்ஜியமாகும்,”.

மேலும் அவர்கள் “ஆல்கஹால் கட்டுப்பாட்டு கொள்கைகள் மூலம் மொத்த மக்கள்தொகை அளவிலான ஆல்கஹால் பயன்பாடு குறைக்கப்பட வேண்டும் என்று ஆராய்ச்சிகள் வலுவாக தெரிவிக்கின்றன,” என்று கூறுகின்றனர். (ஆதாரம்:http://www.euronews.com/2018/08/24/no-amount-of-alcohol-is-safe-for-your-health-study-finds)

கருத்து :

பல ஆண்டுகளாக, ஆல்கஹால், குறிப்பாக சிவப்பு ஒயின், சிறிய அளவுகளில் மனித உடல்நலத்தில் நேர்மறையான விளைவைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

முஸ்லீம்கள் ஆல்கஹால் அல்லாஹ்(சுபு)வால் தடை செய்யப்பட்ட  ஒன்று என உறுதியாக இருக்கும் அதேவேளையில் இஸ்லாமிலிருந்து பிரிக்கப்பட்டு (அப்புறப்படுத்தப்பட்ட) மதச்சார்பின்மைக்கு ஆதரவான மக்கள் (முஸ்லீம்கள்) சிலர் மதுவைப் பயன்படுத்துவதை வெளிப்படையாக ஆதரித்து தங்கள் வாதங்களை வைக்கின்றனர். சில முஸ்லீம்கள் தங்கள் வாதங்களுக்கு வலுசேர்க்கும் வகையில்  ஆதாரமாக குர்ஆன் வசனங்களை தன் மனோ இச்சைக்கு ஏற்றவாறு பின்வருமாறு கூறுகின்றனர்:

يَسْأَلُونَكَ عَنِ الْخَمْرِ وَالْمَيْسِرِ قُلْ فِيهِمَا إِثْمٌ كَبِيرٌ وَمَنَافِعُ لِلنَّاسِ وَإِثْمُهُمَا أَكْبَرُ مِنْ نَفْعِهِمَا

(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்: “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களும் உண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது” (அல் பகரா – 219)

இந்த வசனத்தில் மதுபானத்தை (ஆல்கஹால்) பற்றி அல்லாஹ்வின் ஆணை மிகச் சரியாகவே இருக்கிறது என்று அவர்கள் வாதிட்டனர்.

ஆல்கஹாலின் முழுமையான தீங்கு அதன் நன்மையின் வெளிப்பாட்டை விட அதிகம் என இந்த வசனம் வலியுறுத்தியது என்பதை பின்வரும் இரண்டு தகவல்கள்  தெளிவான உண்மையை உறுதிப்படுத்துகிறது:

1.மனிதனால் உருவாக்கப்பட்ட அமைப்புகளின் (கேடுகெட்ட முதலாளித்துவ சித்தாந்தத்தின்) நிழலில் ஒரு விஷயம் அல்லது ஒரு நிகழ்வுக்கான அணுகுமுறை எதிர்மறையாக மாறுகிறது: நேர்மறையிலிருந்து எதிர்மறையாகவும் அல்லது எதிர்மறையிலிருந்து நேர்மறையாகவும் கருத்துக்கள் மாறுவது இது ஒன்றும் முதல் முறை அல்ல. தெளிவான வழிகாட்டுதல் இல்லாததே இதற்கு காரணம், அதே சமயம் சமுதாயத்தினதும் தனிநபர்களிடமிருந்தும் சரியான தீர்வுகளை தேடுவதற்கு முதலாளித்துவ சித்தாந்தத்தை தொடர்ச்சியான ஊசலாட்டதிற்கு அவர்களை (முதலாளித்துவ சித்தாந்தத்தை பின்பற்றுபவர்களை) இட்டுச் செல்கிறது. (ஆனால் இறுதிவரை அவர்களால் தீர்வை எட்டவே முடியாது என்பது நிதர்சனம்)

இதற்கு பின்வரும் சம்பவத்தை உதரணமாக கூறலாம். “டூரிங் இயந்திரம்” கண்டுபிடித்த புகழ்பெற்ற கணிதவியலாளரும் கிரிப்டோகிராஃப்டருமான ஆலன் டூரிங், 1952 ஆம் ஆண்டில், ஓரினச்சேர்க்கைக்கு எதிராகக் குற்றம் சாட்டப்பட்டார், மேலும் அது பிரிட்டனில் குற்றவியல் குற்றமாக இருந்ததால், அவர் இரசாயன சித்திரவதைக்கு உட்படுத்தப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதன் விளைவாக அரசாங்க தொலைதொடர்பு தலைமையகத்தில் (GCHQ) இருந்து ராஜினாமா செய்தார், பின்னர் இதுவே அவரது தற்கொலைக்கு வழிவகுத்தது.

இருப்பினும், 2009 ல், ஒரு இணைய பிரச்சாரத்தைத் தொடர்ந்து, பிரிட்டிஷ் பிரதம மந்திரி கோர்டன் பிரௌன் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் சார்பில் “அவர் மோசமாக நடத்தப்பட்டதற்காக” பொதுமக்களிடம் மன்னிப்புக் கோரினார்,  ராணி எலிசபெத் II அவருக்கு 2013 ஆம் ஆண்டில் ஒரு மரணதண்டனையை ரத்து செய்து பொதுமன்னிப்பு வழங்கினார்.

இன்று, அதே ஓரினச்சேர்க்கை பாலியல் சிறுபான்மையினரின் ஒரு பகுதியாகவும், அத்தகைய சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்பதற்கும், மேற்கு நாடுகளில் முன்னேற்றத்திற்கான அறிகுறியாகவும் கருதப்படுகிறது. LGBT இன் உரிமைகள் பாதுகாக்கப்படுவது மேற்கு நாடுகளில் வளரும் நாடுகளில் குறிப்பாக முஸ்லீம் உலகில் ஊக்குவிப்பதற்கு அனைத்து சீர்திருத்தங்களுக்கும் இது ஒரு அடித்தளமாகும்.

இது மனிதனால் உருவாக்கப்பட்ட அமைப்புகளின் சாராம்சமாகும், நேற்று தடை செய்யப்படுவது இன்றைய தினம் அனுமதிக்கப்படுவதும், கட்டாயமாக்கப்படுவதும், மனிதகுலத்தை இருட்டு உலகிலேயே வைத்து சுழன்று வருவதை கட்டாயப்படுத்துகிறது.

2.இந்த கண்டுபிடிப்பு, முஸ்லிம்களுக்கு விஞ்ஞான கண்டுபிடிப்புகள் மற்றும் அறிவியல் உண்மைகள் என்பனவற்றால் அல்லாஹ்வின் கட்டளைகளையும், தடைகளையும் வாதிடுவது தவறானது என்பதை நிரூபிக்கிறது. மக்களை இஸ்லாத்தை நோக்கி அழைக்கும் போது நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் ஆரோக்கியத்திற்காக ஐவேளை தொழுகை, நோன்பு மற்றும் இன்னப்பிற ஷரியா சட்டங்களின் மூலம் அவர்களுக்கு அழைப்பு விடுத்தபோது, ​ நாம் அனைவரும் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு சாட்சியாக இருக்கிறோம்.

அடிக்கடி மக்களை இஸ்லாத்தின் பக்கம் கவர்ந்திழுக்க சில அழைப்பு(குழுக்களின்) பணியின் முயற்சிகள் ஷரியா நூல்களை தங்கள் வார்த்தை ஜாலத்தால் வழிவகுக்கிறது.

உதாரணமாக, சூதாட்டம் மற்றும் ஆல்கஹால் ஆகியவற்றை தடை செய்வது குறித்த நன்மைகள் ஆரோக்கியத்திற்கான நன்மையைப் பற்றிக் குறிக்கவில்லை. ஆனால் அது வேறு ஒரு நன்மையைப் பற்றிக் குறிப்பிட்டன.

பிரபலமான முஃபஸ்ஸிர் தபரி, இந்த வசனத்தின் விளக்க உரையில் இந்த வசனம்  குறிப்பிடும் நன்மை என்பது சூதாட்டம் மற்றும் மது விற்பதிலிருந்து மக்கள் சம்பாதிக்கக்கூடிய பொருள் சார்ந்த நன்மை (சம்பாத்தியம்) என்று பொருள் கொள்கிறது என்று கூறுகிறார் . ஷரியா சட்டங்களை அமல்படுத்துவதில் சுகாதார நலனுக்கான பிரசாரம் ஒரு தவறான வழியில் இந்த விவாதத்தை மாற்றியமைக்கிறது, இதன் மூலமாக (உதாரணம் : உடல் சார்ந்த பொருள் சார்ந்த நன்மை) இஸ்லாமிற்கு அழைப்பு விடுக்கின்றது,  இப்பேர்பட்ட அழைப்பு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் செய்யப்படவில்லை. அழைப்பு பணிக்கு மிகச் சிறந்த உதாரணமான முஹம்மது (ஸல்) அவர்களின் சிறந்த அழைப்புப் பணியில் அறிவியல் கண்டுபிடிப்புகள் மூலம் அவர் இஸ்லாத்தை பற்றிய அழைப்பு பணியை அவர் ஒருபோதும் மேற்கொண்டதில்லை.

இதன் விளைவாக, முஸ்லிம்களின் முதல் தலைமுறையினரைப் போல, நேர்மையும், பயபக்தியுடனும் அல்லாஹ்(சுபு)வை ஏற்றுக் கொள்வதை நாம் விரும்பினால், இஸ்லாம் அதன் ஆரம்ப நூற்றாண்டுகளில் மக்களிடம் சென்று சேர்ந்ததைப்போல அழைப்புப் பணி செய்தால் மட்டுமே மக்கள் இஸ்லாத்தை கூட்டம் கூட்டமாக ஏற்றுக்கொள்வார்கள்.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பாதையில் இருந்து ஒரு அடிக் கூட பிறளாது, அப்படியே பின்பற்ற வேண்டியது நம் தலையாய கடமை ஆகும்.

மாறக்கூடிய  விஞ்ஞான கண்டுபிடிப்புகளால் நிரூபிக்கப்பட வேண்டிய அவசியம் இஸ்லாத்திற்கு தேவையில்லை. அல்லாஹ்(சுபு)வின் இறைத்தன்மை முஹம்மது (ஸல்) அவர்களின் தூதுத்துவம் அவரின் தீர்க்கதரிசன நோக்கம் மற்றும் குர்ஆன் ஆகியவற்றுக்கு இஸ்லாம் அதன் பகுத்தறிவு மூலமும் மற்றும் குர்ஆன் மூலமும் சொந்த அறிவுப்பூர்வ  ஆதாரங்கள் நிறைய உள்ளன.

Comments are closed.