சமீப பதிவுகள்

குர்ஆன் சுன்னா அடிப்படையிலான அரசு கிலாஃபா ராஷிதா அரசு தான். பெரும்பான்மை அடிப்படையில் சட்டம் இயற்றும் ஜனநாயக அரசு இல்லை.

கடந்த ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி இம்ரான் கான் பாகிஸ்தானின் 22 ஆவது பிரதமராக பதவியேற்றார். அப்போது உரையாற்றுகையில் பொற்காலமாக இருந்த நேர்வழிபெற்ற கிலாஃபாவை அவர் பேசியுள்ளார்.  பாகிஸ்தான் மக்கள் இஸ்லாமிய சட்டம்தான் இருக்க வேண்டும் என்று நினைகிறார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில் பலதரப்பட்ட சமூக மக்களிடம் முக்கிய விவாதம் என்னவெனில் அது  குர்ஆன் சுன்னா அடிப்படையிலான, மதினாவில் நிறுவிய கிலஃபாத் ஆட்சியா  என்பதாகும்.  மேலும், மக்கள் என்ன விரும்புகிறார்களோ அதனை தற்போதுள்ள ‘ஜனநாயக’ ஆட்சி ஒருபோதும் கொடுக்கப் போவதில்லை. இது ஏனெனில் ஜனநாயக ஆட்சியில் சட்டங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மையை பொறுத்தே நிறுவப்படுகின்றன. இது குர்ஆன் சுன்னாவிலிருந்து எடுக்கப்பட்ட சட்டங்களாக இருப்பதில்லை.  இதனால் தான் இதற்கு முன்னிருந்த ஆட்சியாளர்களும் இம்ரான் கான் கூறியது போல இஸ்லாமை சுட்டிக்காட்டியிருந்த நிலையில், ஜனநாயகம் மக்களை ஏமாற்றிவிட்டது. ஜுல்பிகர் அலி பூட்டோ முஸ்லிம்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று கூறினார். ஜெனெரல் ஜியா இஸ்லாமிய தண்டனை சட்டத்தை ஆதரித்தார். மேலும் நவாஸ் ஷரிஃப் ‘இஸ்லாமியமாக்கம்’ என்று கூறினார்.

எல்லா சட்டங்களையும் குர்ஆன் சுன்னா அடிப்படையில் எடுத்த கிலாஃபா ராஷிதா அரசு நீதத்தையும், செழிப்பையும் அதிகாரத்தையும் பெற்றிருந்தது. அதேபோல, கிலாஃபா ராஷிதாவில் நீதிபதிகள் குர்ஆன் சுன்னா அடிப்படையிலேயே தீர்ப்பளித்தனர். பிரித்தானிய தண்டனை சட்டங்களை பின்பற்றும்  ஜனநாயக அடிப்படையின்படி இல்லை. கிலாஃபாவில் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட அனைத்து சட்டங்களும் குர்ஆன் சுன்னா அடிப்படையிலேயே எடுக்கப்பட்டன. அதில் தற்போதுள்ள ஜனநாயகம் அங்கீகரித்தது போல் பொது உடமையை தனி உடமையாக மாற்றவுமில்லை, தற்போது பாகிஸ்தானில் இருப்பது போல வட்டியின் அடிப்படையிலான வங்கிகளும் இல்லை. கிலாஃபத்தில் உள்நாட்டு கொள்கை அல்லாஹ் (சுபு) ஏவியது போலவே இருந்தது. எனவே முஸ்லிம்களின் அனைத்து நிலங்களும் ஒன்றாக இருந்தது, தற்போதிருக்கும் ஜனநாயகத்தின் படி பிரிந்த நாடுகளாக இல்லை.   கிலாஃபா அரசின்  வெளியுறவு கொள்கையில் முஸ்லிம்களுக்கும் இஸ்லாமிற்கும் எதிரியாக இருக்கும் அமெரிக்கா போன்ற நாடுகளிடம் கூட்டணி வைப்பது தடுக்கப்பட்டதாகும். நபிவழியில் வரவிருக்கும் கிலாஃபா அரசும் இது (கிலாஃபா ராஷிதா)  போன்றே இருக்கும். எனவே நாம் விரும்புவது கிடைக்கவில்லை என்று வருத்தபடுவதை  தவிர்க்க கிலாஃபாத்தை நிருமானம் செய்ய நாம் பாடுபட வேண்டும். அதன் மூலம் இறை நம்பிக்கையாளர்களின்  உள்ளங்கள் குளிர செய்யும். நபி (ஸல்) கூறினார்கள்:

 «كَانَتْ بَنُو إِسْرَائِيلَ تَسُوسُهُمْ الْأَنْبِيَاءُ كُلَّمَا هَلَكَ نَبِيٌّ خَلَفَهُ نَبِيٌّ وَإِنَّهُ لَا نَبِيَّ بَعْدِي وَسَيَكُونُ خُلَفَاءُ فَيَكْثُرُونَ». قَالُوا: فَمَا تَأْمُرُنَا؟ قَالَ: «فُوا بِبَيْعَةِ الْأَوَّلِ فَالْأَوَّلِ أَعْطُوهُمْ حَقَّهُمْ فَإِنَّ اللَّهَ سَائِلُهُمْ عَمَّا اسْتَرْعَاهُمْ»

பனு இஸ்ரவேலர்கள் விவகாரங்களை நபிமார்கள் நிர்வகித்து வந்தனர். ஒரு நபி இறந்த பிறகு இன்னொரு நபி வருவார். எனக்கு பிறகு எந்த நபியும் கிடையாது. ஆனால் கலிஃபாக்கள் வருவார்கள் அவர்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருப்பார்கள்.” அதற்கு சஹாபாக்கள் கேட்டனர் “ (யாரசூலுல்லாஹ்) நீங்கள் எங்களுக்கு என்ன கட்டளையிடுகின்றீர்கள்?” என கேட்டனர் . அதற்கு நபியவர்கள் “ ஒருவர் பின் ஒருவராக அவர்களுக்கு பையத் கொடுங்கள். அவர்களுடைய உரிமையை அவர்களுக்கு விட்டு விடுங்கள், அவர்களின் பொறுப்பை பற்றி அல்லாஹ் கேள்வி கேட்கக் கூடியவனாக இருக்கின்றான்.” என கூறினார்.

Comments are closed.