சமீப பதிவுகள்

சவூதிகள் ஏமனில் மேற்கொண்டு வரும் தமது குற்றங்களை மறைத்து ஹஜ்ஜுடைய தமது ஏற்பாடுகள் குறித்து பெருமை பட்டுக்கொண்டிருக்கின்றனர்…!!!

செய்தி :

22 குழத்தைகள் மற்றும் 4 பெண்களை பலி வாங்கிய சவூதி தலைமையிலான கூட்டணி ஏமன் மீது நடத்திய மற்றுமொரு கொடிய வான்வழி தாக்குதல் குறித்து ஐ.நா.உடைய உயர் அதிகாரி ஒருவர் கண்டனத்தை தெரிவித்துள்ளார் என ஆகஸ்டு 25ம் தேதி பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

இதில் பாதிப்படைந்தவர்கள் துறைமுக நகரமான ஹுதைதாஹ்வுக்கு தெற்கேயுள்ள அல்- துரைஹிமி மாவட்டத்தில் நடைபெற்று வரும் சண்டையிலிருந்து தப்பியோடிய போது அவர்களுடைய வாகனம் தாக்குதலுக்கு உள்ளானது.

அதேநாளில் நடைபெற்ற மற்றொரு தாக்குதலில் நான்கு குழந்தைகள் பலியாயினர் என ஐ.நா.வின் மனிதநேய பிரிவின் தலைவர் மார்க் லவ்காக் கூறினார். பேருந்து ஒன்றின் மீது தாக்குதல் நடத்தி 40 குழந்தைகளை கொன்றதற்கு சில வாரங்களிலேயே இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.

ஹவுத்தி போராளிகளுடனான இந்த போரில் ஏமனிய அரசுக்கு ஆதரவளிக்கும் சவூதி தலைமையிலான கூட்டணி, இந்த மரணங்கள் குறித்து இதுவரை எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்கவில்லை.

அதேநாளில், ஹவுத்தி போராளிகளுடன் எமனில் போர் புரிந்து வரும் சவூதி தலைமையிலான கூட்டணி போர் குற்றங்கள் குறித்தான புகார்களை சரியான முறையில் விசாரணையை மேற்கொள்ள தவறியுற்றது என மனித உரிமை கண்காணிப்பகம் கூறியதாக பிபிசி செய்தி வெளியிட்டது.

“விசாரணையை மேற்கொள்பவர்கள் இந்த போர் குற்றங்களை மறைப்பதை விட ஒரு படி மேலாக செயல்படுகிறார்கள்,” என மனித உரிமை கண்காணிப்பகத்தின் சாராஹ் லே வைட்சன் கூறினார்.

சம்பவங்களை மதிப்பிடும் கூட்டு குழு (JIAT) என்று அறியப்படும் தனிப்பட்ட முறையில் விசாரணையை மேற்கொள்ளும் இந்த கூட்டணியுடைய அதிகாரிகள் “சர்வதேச தரநிலையில் மிகவும் தாழ்ந்த நிலையில் இருக்கிறார்கள்” என்றும் “நம்பகத்தன்மையை கொண்டிருக்கவில்லை” என்றும் அவர் கூறினார்.

பெரும்பாலான JIAT யின் முடிவுகளானது இந்த கூட்டணி சட்டப்பூர்வமாக செயல்பட்டுள்ளது என்றும், இந்த தாக்குதலுக்கு பொறுப்பானவர்கள் அல்லர் என்றும் அல்லது “எதிர்பாராதவிதமாக” தவறொன்றை புரிந்துள்ளது எனவும் கூறியுள்ளது.

மனிதநேய கண்காணிப்பகத்தின் மத்திய கிழக்கின் இயக்குனரும் சவூதி அரேபியாவுக்கு ஆயுதங்களை வழங்கும் அரசுகளிடத்தில் “இதுபோன்ற விசாரணைகளானது” ஏமன் மீதான சட்டமீறல்களில் அலட்சியமாக இருக்கும் அவர்களை பாதுகாக்காது என  எச்சரித்தார்.

கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக செயல்படும் கூட்டணி தளவாடங்கள் மற்றும் புலனாய்வு உதவியை அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்சிடமிருந்து பெறுகின்றன.

இந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளானது அமெரிக்காவால் விநியோகிக்கப்பட்டது என்று சி.என்.என் வெளியிட்டதை தொடர்ந்து பள்ளிப் பேருந்தின் மீது நடத்தப்பட்ட இந்த கொடிய தாக்குதலானது ஏமனில் நடைபெறும் மோதலில் அமெரிக்க ஈடுபாட்டை குறித்து அரசவை உறுப்பனர்களில் சிலரை கேள்வி எழுப்பச் செய்தது.

அதேவேளையில் பிரித்தானிய அயலுறவு செயலாளர் ஜெரிமீ ஹண்ட் “மிக மிக முக்கியமான இராணுவ நட்பு நாடு” என்று விவரித்து சவூதி அரேபியாவுடனான இங்கிலாந்தின் உறவை ஆதரித்தார்.

 

விளக்கவுரை :

இந்த வருட ஹஜ் முடிவடைந்தவுடன், சவூதி அரசாங்கத்தின் புள்ளியியல் துறை  அதிகாரி “தமது இராஜ்ஜாங்கம் எங்ஙனம் உலகை அரவணித்தது” என்று புள்ளிவிவரங்கள் அடங்கிய தொகுப்பை வெளியிட்டார். அவர்களும் அவர்களுடைய ஆதரவாளர்களும் அதிக அளவிலான பணியாளர்கள் பல பகுதியிலிருந்து வருகைபுரிந்த 24 லட்ச ஹாஜிகளுக்கு உதவிபுரிந்ததை கொண்டு பெருமைபட்டுக் கொண்டிருக்கின்றனர். எனினும், மனிதாபிமான உதவியை நாடியிருக்கும் 22 மில்லியன்

ஏமனிக்கள் குறித்தும், கொடிய காலராவினால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்தும், காயமுற்ற 55,000 நபர்கள் குறித்தும் மற்றும் கொல்லப்பட்ட 10,000 நபர்கள் குறித்து எதையும் குறிப்பிடவில்லை.

ஏமனில் அமெரிக்காவின் காலனியாதிக்க நடவடிக்கையில் அவர்களுடைய மிகமுக்கியமான பங்களிப்பை வெளிப்படுத்தாமல் இருப்பதற்காக இதுபோன்று வெட்கக்கேடான புள்ளிவிவரங்களானது மறுக்கப்படுகின்றன அல்லது மறைக்கப்படுகின்றன.

இது தான் பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான் பெருமையுடன் அறிவித்த சவூதி அரசாங்கத்தின் தாராளமயமாக்கல் ஆகும். அமெரிக்க அதிபர் டிரம்ப்பினால் தொலைக்காட்சி நேரலையின் போது முஹம்மது பின் சல்மான் அவமானப்படுத்தப்பட்டபோது அமெரிக்க நலன்களுக்கான சவூதியின் அடிபணிதலானது தெளிவாக தெரிந்தது, அப்போது அவர் (டிரம்ப்) இவரை (எம்பிஎஸ்) ஒரு  நம்பிக்கையிழந்த மற்றும் தனக்கு தேவையுடைய வாடிக்கையாளராக மட்டுமே கையாண்டார்.

மேலும், முஸ்லிம்கள் ஐ.நா. மற்றும் மேற்கத்திய ஆதரவு பெற்ற சர்வதேச அமைப்புகளிடமிருந்து வெற்று கண்டனங்களைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்கக்கூடாது. அவர்கள் சவூதி அரசு போன்ற தங்களுடைய அடிவருடி அரசுகளின் குற்றங்களை வெளிப்படுத்தினாலும், அவைகள் நிகழ்த்தும் பெரும்பாலான குற்றங்களை அவர்களுடைய தீர்மானங்கள் மூலமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட குறிப்பிட்ட சில தலையீடுகள் மூலமாகவும் சட்டப்பூர்வமாக்கி விடுகின்றனர். காலனித்துவ எஜமானர்களின் நலன்களுக்கு எதிராக உள்ள இராணுவ நடவடிக்கைகளை சட்டப்பூர்வமாக்க மறுத்து வரும் ஐ.நா . தம்மை சட்டத்துக்கு புறம்பாக செயல்படுகிறோம் என்று கருதக்கூடும் என்கிற காரணத்தால் மற்ற முஸ்லிம் இராணுவங்கள் சாமானிய மக்களை பாதுகாப்பதற்காக வேண்டி நீதிக்கு ஆதரவாக தலையீடு செய்வதற்கு  அஞ்சுகின்றன.

உலக மக்களை ஏமாற்றுவதற்காகவும் உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களுடைய இழப்பில் மேற்கத்திய சக்திகள் மட்டுமே  பயன்பெறும் வகையிலான காலனியாதிக்க அடக்குமுறை திட்டங்களை தொடர்வதற்காகவும் காலனியாதிக்க முகவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

கொடுங்கோலர்கள் மற்றும் அடக்குமுறையை மேற்கொள்பவர்களுக்கு எதிராக முஸ்லிம்கள் ஒன்றுசேர்ந்து போராடுவதற்கு அல்லாஹ் (சுபு) ஏற்கனவே அனுமதியளித்துள்ளான்.

(وَإِن طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا فَإِن بَغَتْ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى فَقَاتِلُوا الَّتِي تَبْغِي حَتَّى تَفِيءَ إِلَى أَمْرِ اللَّهِ فَإِن فَاءتْ فَأَصْلِحُوا بَيْنَهُمَا بِالْعَدْلِ وَأَقْسِطُوا إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ)

நம்பிக்கையாளார்களிலுள்ள இரு வகுப்பார் தங்களுக்குள் சச்சரவு செய்துகொண்டால், அவர்களை சமாதானப்படுத்தி    விடுங்கள். அவர்களில் ஒரு வகுப்பார், மற்றொரு வகுப்பாரின் மீது வரம்பு மீறி அநியாயம் செய்தால், அநியாயம் செய்தவர்கள் அல்லாஹ்வுடைய கட்டளையின் பக்கம் வரும் வரையில், அவர்களுடன் நீங்கள் போர் செய்யுங்கள். அவர்கள் (அல்லாஹ்வின் கட்டளையின் பக்கம்) திரும்பிவிட்டால், நியாயமான முறையில் அவ்விரு வகுப்பார்களுக்கிடையே சமாதானம் செய்து, நீதமாகத் தீர்ப்பளியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்பவர்களை நேசிக்கின்றான்.”(அல்குர்ஆன் : 49:9)

ஆக இங்கு எழும் கேள்வி என்னவென்றால் : முஸ்லிம்கள் தங்களுக்குள் பிளவுபட்ட நிலையில்  அட்டூழியங்களுக்கு மேல் அட்டூழியங்களை கண்டு, ஐ.நா.உடைய வெற்று கண்டனங்கள் மூலம் நிராசையாகி தலையசைத்து, தமது எல்லைகள் மற்றும் தேசிய கொடிகளின் காரணமாக செயலற்று போய் மேற்கத்திய காலனியாதிக்க அத்துமீறல்களால் பாதிகப்பட்ட அப்பாவி மக்களுக்கு உதவ இயலாமல் இன்னும் எத்தனை காலத்திற்குத் தான் செயலற்று இருக்கப் போகிறது என்பது தான்?

Comments are closed.