சமீப பதிவுகள்

துருக்கி தேசத்தின் மீதான அமெரிக்காவின் டாலர் விளையாட்டு…!!!

செய்தி :

துருக்கிக்கு எதிரான பொருளாதாரப் போரை அமெரிக்கா ஆரம்பித்துள்ளது.

கருத்து :

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பதவியேற்றதில் இருந்து, அமெரிக்கா தனது மேலாதிக்கத்தில் மிகவும் அப்பட்டமாகவும், அதன் பேராசை  மற்றும் அதிகாரத்திற்காக வெளிப்படையாகவும் மாறியுள்ளது. டிரம்ப்பின் “அமெரிக்காவிற்கே முன்னுரிமை” என்பது வெறுமனே ஒரு கோஷம் அல்ல,  மாறாக இது  அதன் வெளியுறவுக் கொள்கையின் அடிப்படையாகும். அது முன்னர் இல்லாமல் இல்லை, ஆனால் இப்பொழுது அது ஒரு புதிய பரிமாணத்தை கொண்டுள்ளது, அங்கு  அதன் இராஜதந்திரத்திற்கான இழிவான விதிமுறைகளாக மாறிவிட்டது.

எந்தவித உறுதியும் இல்லாத நிலையில் அமெரிக்கா உலகிற்கு ஒரு தெளிவான செய்தியைக் கொடுக்கிறது, அது அனைத்து நாடுகளிலும் சர்வதேச அமைப்புகளிலும் தனது விருப்பத்திற்கு அடிபணிய வேண்டும் என்பதாகும். இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற அதன் “கூட்டாளிகளும்”  இதில் விதிவிலக்கு அல்ல. இப்படியிருக்க ஈரான் மற்றும் துருக்கி போன்ற நாடுகள் எல்லாம் எம்மாத்திரம்.

2008 ல் பேரழிவு தரும் பொருளாதார நெருக்கடிகளுக்குப் பின்னர் அதன் பொருளாதார வலிமையையும், டாலரின் மதிப்பை அதிகரிப்பதற்கு அமெரிக்கா தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மத்திய வங்கிகளும் பிற மத்திய வங்கிகளும் பூகோள நிதி நெருக்கடியை உறுதிப்படுத்துவதில் மேலாதிக்க பங்கு வகித்தன. நிதி சந்தைகளை அமெரிக்க டாலர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள அனைத்து அமெரிக்க கடன்களாலும் நிரப்பப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் பொருளாதாரங்கள் (நாடு/நிறுவனம்) அமெரிக்க டாலர்களை எளிதாக 0-0.25 சதவிகித வட்டி விகிதத்தில் கடனாக பெறலாம். 2014ல்  4.5 டிரில்லியன் டாலர்கள் வரை கிட்டத்தட்ட நான்கு மடங்கு கடன் அதிகரித்துள்ளது. 2017 ஆம் ஆண்டில் அமெரிக்க டாலர்களை நிதி சந்தைகள் மற்றும் வட்டி விகிதங்களை உயர்த்துவதன் மூலம் அதன் டாலரின் இருப்பை  “இயல்பானதாக்க” தொடங்கியது.

அமெரிக்காவின் இந்த செயல் மற்ற நாடுகளின் உள்ளூர் நாணயங்களின் மதிப்பை குறைக்கும் வண்ணமாக நேரடி விளைவை உண்டாக்கியது. மேலும் மற்ற நாடுகள் வாங்கிய அமெரிக்க டாலரின் கடன் எண்ணிக்கை அதிகரித்து அதை திருப்பி செலுத்த முடியாத நிலைக்கு உள்ளது. தங்கள் சொந்த நாட்டு பணத்தின் மதிப்பு குறைந்ததாலும், திருப்பி செலுத்த போதிய டாலர் இல்லாததாலும் அவர்களால் கடனை திருப்பி கொடுக்க முடியாத சூழலில் உள்ளனர். இதே தான் துருக்கிக்கும் நடந்துள்ளது.

துருக்கி தனது பொருளாதார அமைப்பை முதலாளித்துவ கொள்கையின் அடிப்படையில் அமைத்துள்ளதால், இதுபோன்ற பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் என்பது ஆச்சர்யமான விஷயம் அல்ல. துருக்கி தேசத்தின் எஃகு மற்றும் அலுமினியம் மீதான இறக்குமதி வரிகளை உயர்த்துவதற்கான டிரம்பின் ஒரு ட்வீட், துருக்கிய லீராவை வினாடிக்குள் குறைப்பதற்கு போதுமானதாக அமைந்துள்ளது.

நிச்சயமாக பாஸ்டர் பிரன்சன் பற்றி அமெரிக்கா மற்றும் துருக்கி இடையே நிலவும் கருத்து வேறுபாட்டிற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது வெறுமனே ஒரு புகைப்பொறியாகும், இது துருக்கியின் மீது தனது செயல்பாட்டை அமைப்பதற்காக  அமெரிக்கா பயன்படுத்தியுள்ள ஒரு கருவியாகும். வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் இவ்வாறு கூறியுள்ளார் : “ஸ்டீல் மீது இருக்கும் கட்டணங்கள், போதகர் பிரன்சனின் வெளியீட்டில் அகற்றப்பட மாட்டாது. இந்த கட்டணங்கள் அனைத்தும் தேசிய பாதுகாப்பு சம்பந்தப்பட்டவை. எனவே “டிரம்ப் தனது வலதுசாரி கிறிஸ்தவ மற்றும் தேசியவாத அரசியல் வாதிகளுக்கு உத்தரவாதம் அளிக்கிறார்.” பாஸ்டர் ஆண்ட்ரூ பிரன்சன், அமெரிக்காவின் சிறந்த மனிதர் மற்றும் கிறிஸ்தவத் தலைவர் துருக்கியில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு,  துன்புறுத்தப்படுவதற்கு எந்த காரணமும் இல்லை. எர்டோகன், “வெளிநாட்டு” சக்திகளின் மீது குற்றம் சாட்டிக்கொண்டும், மேலும் “அவர்கள் டாலர் வைத்திருந்தால், எங்களுக்கு அல்லாஹ் இருக்கிறான்” போன்ற பொய்யான இஸ்லாமிய உணர்வுகளை கிளறிவிட்டு, கடந்த பத்தாண்டுகளில் அவரது பேரழிவுகரமான பொருளாதாரக் கொள்கைகளை எல்லாம் மறைத்து,  முதலாளித்துவ பொருளாதார மாதிரியை பெருமளவில் நடைமுறைப்படுத்தியதின் விளைவாக துருக்கிற்கு அதிகமான கடனை ஏற்படுத்தி வைத்துள்ள விஷயத்தை விட்டு மக்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்.

முன்கூட்டியே திட்டமிடப்பட்ட பொருளாதார நெருக்கடியை துருக்கி சந்திக்கும் என்று எர்டோகனுக்கு தெரியும். புதிய துருக்கிய லிரா கவிழ்ந்து போவதற்கு முன்பே வரவிருக்கும் பொருளாதார எதிர்ப்பை எதிர்பார்த்ததன் மூலம் 18 மாதங்களுக்கு முன்பே எர்டோகன் பொதுத் தேர்தலை முன்னெடுத்தார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி முறை பாதுகாக்கப்பட்டது, சிரியாவில் துருக்கியின் பங்கைக் குறைத்து அமெரிக்கா தனது மேலாதிக்கத்தையும் செல்வாக்கையும் பாதுகாப்பதன் மூலம் அதன் இலக்குகளை அடைந்தது, பின்னர் அது துருக்கிக்கு எதிரான பொருளாதாரப் போரை ஆரம்பித்தது.

மற்ற மாநிலங்களுடன் அமெரிக்காவின் உறவு லாபத்தையும் நன்மைகளையும் அடிப்படையாகக் கொண்டது, ஆனால் அமெரிக்காவின்  இலக்குகள் அல்லது அது அடையும் லாபம் கேள்விக்குறியாகும்போது அந்த நாட்டுடன் வைத்திருந்த உறவு கேள்விக்குறியாகிறது.எனவே, துருக்கியர்கள் குஃப்ர் ஆட்சியாளர்கள் ஒருபோதும் எப்போதும் நண்பர்களாகவோ அல்லது முஸ்லீம்களாகவோ இருக்க மாட்டார்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அவர்கள் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் எதிரிகள்.

துருக்கியில் முஸ்லீம்களுக்கு ஒரு பழைய உதுமானிய  கூற்றை நான் நினைவில் வைக்க விரும்புகிறேன்:

“Domuzdan post gavurdan dost olmaz”

“பன்றியிலிருந்து அதன் முடியை நாம் பயன்படுத்தமுடியாது அதே போன்று காஃபிர்களிலிருந்து நண்பரை எதிர்ப்பாக்க முடியாது”

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا لَا تَتَّخِذُوا ٱلْيَهُودَ وَٱلنَّصَٰرَىٰٓ أَوْلِيَآءَۘ بَعْضُهُمْ أَوْلِيَآءُ بَعْضٍۚ وَمَن يَتَوَلَّهُم مِّنكُمْ فَإِنَّهُ‌و مِنْهُمْۗ إِنَّ ٱللَّهَ لَا يَهْدِى ٱلْقَوْمَ ٱلظَّٰلِمِينَ

முஃமின்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர். உங்களில் எவரேனும் அவர்களைப் பாதுகாவலர்களாக ஆக்கினால் நிச்சயமாக அவரும் அவர்களைச் சேர்ந்தவர்தான். நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்.

(அல் மாயிதா:51)

Comments are closed.