சமீப பதிவுகள்

மின்னுவதெல்லாம் கடன்…!!!

செய்தி :

இஸ்தான்புலுடைய கட்டுமான வளர்ச்சியை கண்டு வருபவர்கள் கடந்த வாரம் அதனுடைய நாணய மதிப்பு சரிந்ததை கண்டு ஆச்சர்யமடைந்திருக்க மாட்டார்கள் .ஏனெனில் அவையனைத்தும் கடனை அடிப்படையாக கொண்டு அடைந்த  வளர்ச்சியாகும். அதில் பெரும்பாலான கடன்கள் இலாப நோக்கில் வழங்கப்பட்டதாகும் இருந்தும் இதுவரை அதனால் ஒருபோதும் அந்த நோக்கத்தை அடைய முடியவில்லை.  (ஆதாரம்: தி கார்டியன்)

விளக்கவுரை :

சமீபத்தில் துருக்கி பொருளாதார நெருக்கடி மற்றும் துருக்கியின் நாணயமான லிராவின் மதிப்பு புதிய அளவிலான சரிவை சந்தித்து வருவதன் காரணமாக அருகாமையில் இருக்கும் அனைத்து முஸ்லிம் நாடுகளில் கவலையும் அனுதாப அலையும் உணரப்பட்டு வருகிறது. வட்டியை அடிப்படையாக கொண்டு கடனை வழங்கும் அமெரிக்காவுடைய ‘தீய யுத்தியை’ ஒதுக்கி வைத்துவிட்டு இந்த பொருளாதார அமைப்புக்கு மற்ற பல நாடுகளை போன்று இந்த நாட்டையும் இரையாக ஆக்கியதற்கு அவைகளிடம் உள்ள பலவீனம் என்னவென்று நாம் அறியவேண்டும். துருக்கியின் வளர்ச்சியின் காரணமாக பாகிஸ்தான் போன்ற முஸ்லிம் நாடுகள் அதனை தமக்கு முன்னுதாரணமாக கருதுகின்றன. கெட்டுப்போன பொருளாதாரத்தின் துர்நாற்றத்தை செயற்கைத்தனத்துக்கு அடியில் மறைக்கப்பட்டு வரும் நிலையில் வளர்ச்சியானது வெறுமனே வானுயர் கட்டிடங்கள், ஆடம்பரமான வணிகவளாகங்கள் மற்றும் பாலங்களின் மூலமாக வெளிக்காட்டப்பட்டு வருகிறது, அந்த நுர்நாற்றத்தை மறைத்து வைத்திருக்க முடியாத ஒரு காலம் வரும். துருக்கியுடைய பொருளாதாரம் பெரும்பாலும் கட்டுமான துறையையே நம்பியுள்ளது, அந்த துறையானது கடனாக பெறும் பணத்தை கொண்டு செயல்படுகிறது. இஸ்தான்புல் விமானநிலைய கட்டுமானத்திற்காக 2015ல் பெறப்பட்ட €5.7 பில்லியன் கடனானது அன்று 18 பில்லியன் லிரா எனும் அளவுக்கு மதிப்பை கொண்டிருந்தது, ஆனால் அதுவோ இன்று 40 பில்லியன் லிரா எனும் அளவுக்கு அதன் மதிப்பை கொண்டிருக்கிறது. வட்டியின் அடிப்படையிலான கடன்கள் உலகளவில் ஏற்படுத்தும் பாதிப்புகளுக்கு இதுவொரு சிரிய உதாரணமாகும், இந்த அருவருப்பான பணத்தை பெறுபவர்களையும் உபயோகிப்பவர்களையும் அல்லாஹ் سبحانه وتعالى எங்ஙனம் கையாளுவான் என்று குர்’ஆனில் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது.

(الَّذِينَ يَأْكُلُونَ الرِّبَا لاَ يَقُومُونَ إِلاَّ كَمَا يَقُومُ الَّذِي يَتَخَبَّطُهُ الشَّيْطَانُ مِنَ الْمَسِّ)

“வட்டி (வாங்கித்) தின்பவர்கள் ஷைத்தான் பிடித்துப் பித்தம் கொண்டவர்கள் எழும்புவது போலன்றி (வேறு விதமாக மறுமையில்) எழும்பமாட்டார்கள்.”  (அல்குர்ஆன் : 2:275)

முஸ்லிம்கள் எந்திரப்புரட்சியின்  பிரம்மிப்பிலிருந்து இன்னும் மீளவில்லை என்பது போல தெரிகிறது மேலும் வளர்ச்சி குறித்து தவறான பொருளையே  அது இன்னும் கொண்டு வருகிறது அதனிடத்தில் பெரும் பொருளாதார பிளவை ஏற்படுத்தி இருந்தும் கூட அது முதலாளித்துவத்தையே பற்றிப்பிடித்து வருகிறது. வளர்ச்சித் திட்டங்களை மேற்கோள்ளும் பொறுப்பு ஆளும் வர்க்கத்தினருக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது அதிலிருந்து அவர்கள் தமக்கு மிகப்பெரிய அளவிலான பணத்தை சம்பாதித்து கொள்கிறார்கள்; ஆனால் அரசோ மக்களுக்காக ஆடம்பரமான திட்டங்களை வழங்கியுள்ளோம் என பெருமைபட்டு கொள்கிறது பிறகு இந்த ஆட்சியாளர்கள் செய்த தவறை நிவர்த்தி செய்வதற்கான முயற்சியில் புதிய வரிவதிப்புகளின் மூலம் இந்த பாரத்தை சாமானிய மக்களின் மீது சுமத்தப்படுகிறது. வளர்ச்சிக்கான இந்த நிலைபாட்டை கொண்டதற்காக எர்துகன் கதாநாயகனாக சித்தரிக்கப்பட்டார் அதன் முடிவானது இப்போது துருக்கி இந்த பொருளாதார சிக்கலின் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. துருக்கிய பொருளாதாரத்தை ஸ்திரத்தன்மையை அடைவதற்கு உதவிபுரிந்தாலும் அது மீண்டும் மேற்குலகிடம் தங்களது இதயங்களை விற்றுள்ள மற்றும் இதே பாணியை மேற்கொள்ளப்போகும் இந்த ஊழலுற்றவர்களின் கரங்களில் தான் சென்றடையும் என்பதை கூட அறியாத நிலையில் உம்மத்துடைய அப்பாவி மக்கள் துருக்கிக்கு உதவுவதற்காக  துருக்கியின் லிராவை வாங்குமாறு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன.

துருக்கிக்கும் ஒட்டுமொத்த உம்மத்துக்கும் கண்ணியமிக்க மற்றும் உண்மையான ஒரே தீர்வு என்பது அவர்கள் இஸ்லாமிய பொருளாதாரத்தை ஏற்று அமலாக்கம் செய்து கிலாஃபத்தின் கொடியின் கீழ் அவர்களை இணைத்துக் கொள்வதில் தான் உள்ளது. மேற்குலகில் காணப்படும் தற்போதய மாதிரியான வட்டியினை அடிப்படையாக கொண்ட, ஊகத்தினால் உந்தப்பட்ட நிதி சந்தையை இஸ்லாம் அங்கீகரிக்காது. இஸ்லாமிய பொருளாதாரம் தங்கம் மற்றும் வெள்ளியின் அடிப்படையிலான தரநிலையை கொண்டு ஒரு பாதுகாப்பான மற்றும் நிலையான பணவியல் கொள்கையை கொண்டுள்ளது. முஸ்லிம்களின் பொருளாதாரக் கொள்கையானது குர்’ஆன் மற்றும் சுன்னாஹ்வை அடிப்படையாக கொண்டதாகும்.

நிச்சயமாக அது வளர்ச்சியையும் நவீன முன்னேற்றங்களையும் கொண்டு வரும் ஆனால் அது பட்டினியாலும் காயமுற்று இருக்கும் மற்றும் அவமானப்படுத்தப்பட்டு கிடக்கும் உம்மத்தின் இழப்பினால் அடைந்ததாக இருக்காது. மேலும் உண்மையான முஸ்லிம் தலைத்துவம் என்பது புனிதமிகு நபிகளாரின் ஸல் அடிச்சுவட்டை அடிப்படையாக கொண்டும் அது பாசாங்கு காட்டி தனக்குத்தானே ஏமாற்றிக்கொள்ளும் எர்துகானை போன்றல்லாமல் மக்களுக்கு தூய்மையான முறையில் செயலாற்றும்.

Comments are closed.