சமீப பதிவுகள்

சுதந்திரக் கொள்கை மேற்குலகிற்குக்கு புனிதமானது…!!!

செய்தி:

பாகிஸ்தானிய வெளியுறவு மந்திரி ஷா மெஹ்மூத் குரேஷி, இஸ்லாமை இழிவுபடுத்துவதும் வகையிலான டச்சில் திட்டமிடப்பட்ட நபி(ஸல்)யின் கார்ட்டூன் போட்டியின் பிரச்சனையை செவ்வாயன்று டச்சு வெளியுறவு மந்திரியிடம் எழுப்பியதாகவும், மறுபுறத்தில் தீவிர நிலைப்பாட்டை எடுக்க ஒரு அவசர அமர்வுக்கு இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பை (OIC) அழைத்த தாகவும் தெரிவித்தார்.

தலைநகரில் நடந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இவர் டச்சு மந்திரியிடம் பாராளுமன்ற உறுப்பினரான கீர்ட் வைல்டர்ஸின் அருவருப்பான இச்செயல் முஸ்லிம்களின் உணர்வை தூண்டியக்கூடியது என்று பேசியதாக கூறினார்.

கருத்து:

நெதர்லாந்தில் உள்ள சுதந்திரக் கட்சியின் சமீபத்திய அருவருப்பான விடையிருப்பிற்கு, பாகிஸ்தானில் உள்ள பொது மக்களை நெதர்லாந்தில் இருந்து வரும் பொருட்களை புறக்கணிக்க  சமூக ஊடகங்களில் செய்திகள் அழைப்பு விடுகின்றன. சிலர் YouTube மற்றும் Google யை 3 நாட்களுக்கு புறக்கணிக்க கேட்டுள்ளனர். மற்றவர்கள், முஸ்லீம்களை பொறுமையாக இருந்து இஸ்லாத்தையும்,  நபி (ஸல்) அவர்களின் போதனைகளையும் மக்களிடம் காண்பிக்க சுன்னத்துகளை சரியான முறையில் கடைபிடிக்க கூறியுள்ளனர். இன்னும் நெதர்லாந்துடன் பாகிஸ்தானிய அரசாங்கம் “இராஜதந்திர உறவுகளைக் முடிக்கும்” வரை பாகிஸ்தானின் தெஹ்ரீக்-ஏ-லப்பைக்  (TLP)  தலைமையிலான ஆர்ப்பாட்ட அணிவகுப்பு திரட்டுவதற்கு ஆன்லைன் மனுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

தூதரை(ஸல்) அவமதிக்கும் செயல்கள் கவனிக்கப்படாமல் போகவில்லை என்றாலும், இச்செயல்கள் புதியவை அல்ல. ஏதோவொரு அறிவுறுத்தலுக்கு உட்பட்ட மேற்கண்ட செயல்களால் முஸ்லீம்களின் கோபம் அகற்றப்படும். உண்மையான பிரச்சனை மேற்கத்திய அமைப்பு முறையிலுள்ள “கருத்துச்சுதந்திரத்தில்” உள்ளது. ஏனெனில், இதுதான் இந்த நடவடிக்கைக்கு பாதுகாப்பாக பயன்படுத்துகின்ற கருவியாக உள்ளது. இருப்பினும்,  சுதந்திர பேச்சும்,  வெறுக்கத்தக்க பேச்சும் இந்த அமைப்பில் தெளிவாக வரையறுக்கப்படவில்லை. இந்த தளர்வான விளக்கம் எவரை வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் தீர்மானிக்கவும், தங்களுடைய சொந்த நோக்கத்திற்காக  பயன்படுத்தவும் உதவுகின்றது.

சுதந்திரப் பேச்சு கருத்துக்கள் மற்றும் முன்னேற்றத்தை ஊக்குவிப்பதாக எனவும்,  தீவிர விவாதம் ஒடுக்குமுறை எனவும் நம்பப்படுகிறது.

கிறுஸ்துவ கோயிலும் முடியாட்சியும் கடந்த காலத்தில் இதை செய்தன, ஏனெனில்  சுதந்திரத்தை தடுக்க எந்த ஒரு மதத்தை காரணம் என ஏற்றுக்கொள்ளாமல் இருந்தது, மேலும், இந்த மனநிலை தான்  எந்த ஒரு நடைமுறையையும் எவர் வேண்டுமானாலும் கேலி செய்ய தூண்டியது.

இதில் உள்ள முரண்பாடுகள் மிகவும் நன்கு அறியப்பட்டவை, மறுக்கப்படுவதைப் பற்றி பேசுதல் அல்லது கலவரத்தைப் பற்றி கேள்வி கேட்பது கூடாது. சுதந்திரம் அளித்த இதே நாடுகள் தான் ஹிஜாப் மற்றும் நிகாபை தடைசெய்து, இந்த நடவடிக்கையில் அவர்கள் சுதந்திரம் அளிக்கும் முக்கியத்துவத்தை மறந்துவிட்டது என்பதையும் நாம் நினைவுபடுத்துகிறோம்.

முஸ்லீம் தலைவர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி, நெதர்லாந்தின் வெளியுறவு மந்திரியையும் தொடர்பு கொள்ளுகையில், அடிப்படை பிரச்சினையிலிருந்து ஒரு திசைதிருப்பல் உள்ளது, இது சுதந்திரத்திற்கான மதிப்பு மற்றும் சுதந்திரம் என்பது மேற்கத்திய வாழ்வில் அடிப்படையானது என்பதேயாகும்.

பிரதம மந்திரி இம்ரான் கான் இத்தகைய சம்பவங்கள் கூட்டு  முஸ்லிம் நாடுகளின் தோல்வியின் காரணம் என்று குற்றம் சாட்டி , இந்த விஷயத்தை வரவிருக்கும்  ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையின் கூட்டத்தில்  எடுத்துச் பேசுவார் என்று கூறினார்.

“இது முழு முஸ்லீம் உலகின் ஒரு கூட்டு தோல்வி,” பிரதமர் இம்ரான் கான் திங்களன்று செனட்டில் தனது முதல் முகவரி பேச்சில் கூறினார்.

OIC (இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு) நீண்ட காலத்திற்கு முன்பே இந்த விஷயத்தை எடுத்துக் கொண்டு நடைமுறைப்படுத்தும் மூலோபாயத்தை உருவாக்கியிருக்க வேண்டும்.

ஆனால் முஸ்லிம்களின் உணர்வுகளைத் துன்புறுத்த நடத்தப்படும் வெறுக்கத்தக்க நடவடிக்கைகளுக்கு நிறுத்த OIC இன்னும் முழிக்கவில்லை “என்றார் கான். (The Express Tribune 27/8/2018)

இம்ரான் கான் மேற்கத்திய அமைப்பான ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு பகுதியாக இருக்கும் OICயை பயன்படுத்த முஸ்லிம் நாடுகளை பரிந்துரைக்கிறார். இது சுதந்திரங்களின் கொள்கைகளை பராமரிப்பதற்காக நிறுவப்பட்டது, மேலும் உலகின் தனித்துவமான பார்வையை ஊக்குவிக்க முற்படுகிறது. இந்த அமைப்பில் சரி தவறு, நல்லது கெட்டது, நெறிகள் மதிப்புகள் எல்லாம் மதச்சார்பின்மை என்ற ஒரு தொகுப்பு தரத்தால் அளவிடப்படுகிறது.

மேற்கு நாடுகளின் வாழ்க்கை முறையை நிலைநிறுத்தி ஊக்குவிக்கும் எந்த ஒரு மேற்கத்திய அரசாங்கத்திடமும் அல்லது கட்சியிடமும் அல்லது அமைப்பிடமும் வேண்டுகோளை விடுவதில் ஒரு பலனும் கிடைக்காது, ஏனெனில் இது இஸ்லாமிற்க்கு முற்றிலும் முரணாக இருக்கின்ற ஒரு வழிமுறையாகும்.

இந்த நிகழ்வால் முஸ்லிம்கள் இப்பொழுது கொள்ளுகின்ற காயம், கோபம் மற்றும் சினமூட்டுதல் நமது ஈமானை சார்ந்துள்ளது. முஹம்மது நபி (ஸல்) மற்றும் மற்ற அனைத்து தூதர்கள் மீதும் (அலை) நேசத்தையும் மதிப்பையும் முஸ்லிம்கள் வைத்துள்ளனர், இது நமது அடிப்படை நம்பிக்கையின் ஒரு பகுதியாக உள்ளது.

சுதந்திரத்தை தனது அடிப்படை நம்பிக்கையாக வைத்திருப்பவருக்கு இது  ஒருபோதும் பெரிதாக குறிக்காது, ஏனென்றால் எது அவமானமாக ஏற்றுக்கொள்ளுவதும் மற்றும் எது புனிதமானது என்பதையும் தீர்மானிக்க மனிதனையே முடிவு செய்ய இந்த அமைப்பு முறை விட்டு வைத்துள்ளது.

முஸ்லீம்களுக்கு ஒரு தெளிவான தலைமை கிடைக்கும் வரை, நாம் எப்போதுமே ஒழுங்கற்ற பதில்களை, வழிகாட்டுதல், நம் தீன் மற்றும் உம்மத்திற்க்கு எதிராக புதிய புதிய தாக்குதல்களைப் பார்த்துக்கொண்டே இருப்போம். நாம் ஒழுக்கமானதாக என்று கருதுகின்ற மதச்சார்பற்ற சுதந்திரத்தை ஊக்குவிக்கும் அமைப்புகள் அல்லது நாடுகளிடம் மேல்முறையீடு செய்யவும் முடியாது. இஸ்லாம் மற்றும் அதன் ஆதரவாளர்களின் உணர்வுகளுடன் விளையாடும் குஃப்பார் நாடுகளுக்கு சரியான பதில்  ஒரு உண்மையான சிந்தனையுடனான தலைமைத்துவத்தால் மட்டுமே கொடுக்க முடியும். நபி(ஸல்) யின் முறையிலான  கிலாஃபால் மட்டுமே இஸ்லாமை உலகிற்கு வழங்கி, மேலும்  இஸ்லாமையும் அதன் நபி(ஸல்) யையும் பாதுகாக்க முடியும்.

அதுவரை முஸ்லிம் ஆட்சியாளர்கள் உம்மத்தின் உணர்ச்சிகளோடு விளையாடுவதையும், அதே நேரத்தில் மேற்கிலிருந்து உத்தரவுகளையும் வழிநடத்துதலையும் எடுத்துக் கொண்டு, அவர்களிடமே தீர்வை கேட்டு அதன் படி வாழ்ந்து வருவதை நாம் பார்த்து கொண்டே இருப்போம். இன்னும், நபி (ஸல்) அவர்களை வெறுமென உணர்வுரீதியாக நேசிப்பதைப் பற்றி உலகிற்கு கூறுவதை இதுவரை பார்த்தோம். இனி மேலும் பார்ப்போம்…!

Comments are closed.