சமீப பதிவுகள்

செய்திப்பார்வை 01.09.2018

தலைப்புச்செய்திகள்  :                                                         

1.சிரிய எழுச்சிக்கு எதிரான அமெரிக்க சதியானது அதை வலுப்படுத்தவே செய்யும்.

2.ஏமனில் பொது மக்களை கொல்வதற்கான திட்டத்தை தீட்டிய அதே அமெரிக்கா அவர்கள் கொல்லப்பட்டதற்கு பிறகு கண்டிக்கின்றது.

3.ஈரானுக்கு எதிராக யூத அரசுடன் கூட்டு சேர்வதை முஸ்லிம் அரசாங்கங்கள் அவமானமாக கருதவில்லை.

4.டிரம்ப்பின் கனடாவுக்கு எதிரான செயல்திட்டம் இந்த வாரம் மேலும் தெளிவாகியுள்ளது.

 

விவரங்கள் :

1.சிரிய எழுச்சிக்கு எதிரான அமெரிக்க சதியானது அதை வலுப்படுத்தவே செய்யும்.

அசாதுடைய அரசு சிரிய எழுச்சியை நசுக்குவதற்கான தனது திட்டத்தின் இறுதிகட்ட நடவடிக்கைக்கு தயாராகிக் கொண்டிருக்கும் சமயத்தில்,  தத்தமது நலன்கள் பூர்த்தியாக வேண்டும் என்பதை ஏதுவாக்குவதற்காக வேண்டி அதன் ஆதரவாளர்களுக்கும்  உதவியாளர்களுக்கும் மத்தியில் குறிப்பாக அமெரிக்காவின் தரப்பிலிருந்து மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில்:

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் போம்பியோ டமாஸ்கஸ் எந்தவொரு இரசாயன தாக்குதலை நடத்தினாலும் வாஷிங்டன் அதற்கு தக்க பதிலடி கொடுக்கும் என வெளியுறவுத்துறை எச்சரித்துள்ள காரணத்தால் எழுச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் இத்லிபின் மீது சிரிய அரசு இராணுவ தாக்குதலை நடத்துவது சிரியாவில் நடைபெற்று வரும் மோதலை அதிகப்படுத்தும் என அமெரிக்கா கருதுவதாக கூறினார்.

சிரியாவின் மாகாணமான இத்லிப் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளும் ரஷ்யாவின் மிக நெருங்கிய கூட்டாளியான சிரிய அதிபர் பஷார் அல் அசாதை எதிர்க்கும் எழுச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் முக்கியமான பகுதிகளில் இறுதியானதாகும். இந்த மாகாணத்தை மீட்டெடுப்பதற்காக படிப்படியான தாக்குதலை தொடுக்க அசாத் தயாராகி வருகிறார் என ராய்ட்டர்ஸ்க்கு செய்தி கிடைத்துள்ளது.

சிரியாவில் நடைபெற்று வரும் போரை பின்தொடர்ந்து வருபவர் உண்மையில் இந்த எழுச்சியை நசுக்குவதற்காக அசாதுடைய அரசுக்கு அமெரிக்கா முழுமையான ஆதரவை வழங்கிவந்துள்ளது என இந்நேரத்தில் தெரிந்திருப்பார். நிச்சயமாக இந்த மோதலில் ஈடுபட்டுள்ள ரஷ்யா அல்லது ஈரான் அல்லது துருக்கி அல்லது சவூதி அரேபியா அல்லது ஐக்கிய அமீரகம் அல்லது கத்தார் என அனைத்து அயல்நாடுகளும் உண்மையில் அமெரிக்காவால் தமக்கு வழங்கப்பட்ட பணிகள் மற்றும் செயல்திட்டங்களை பின்பற்றியவாறு அமெரிக்காவுடைய கூட்டாளிகளாகவே செயல்பட்டு வருகின்றனர். ஆனால் கனீமத் பங்கை அதிகளவில் அடைய வேண்டும் என்பதற்காக அவ்வப்போது அவர்கள் ஒருவொருக்கொருவர் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆக மைக் போம்பியோவின் பேச்சில் தான் போருக்கு எதிரானவர் என்பதை போன்று  முன்வைத்தாலும், உண்மையில் அவர் அதற்கானவரே ஏனெனில் அவர் ரஷ்யாவிடமும் அசாதிடமும் இத்லிபை கைப்பற்றும் அமெரிக்காவின் திட்டம் மற்றும் கட்டளைகளை நிறைவேற்ற வேண்டும் என அழுத்தம் கொடுத்து வருகிறார், மேலும் அது அமெரிக்கா எந்தவிதத்திலும் போருக்கு எதிரானது என்பதை விளக்குவதற்காக அல்ல.

அல்லாஹ்வின் அருளை கொண்டு, அமெரிக்காவின் தீமையான இந்த சூழ்ச்சி இந்த எழுச்சியை வலுப்படுத்தவே செய்யும், ஏனெனில் சிரியாவிலுள்ள முஸ்லிம்கள் அவர்களுடைய தலைவர்களில் உள்ளவர்களில் அமெரிக்காவுடனும் அல்லது அவளுடைய குற்றச்செயலுக்கு துணையிருப்பவருக்கு  ஒத்துழைத்தவர்களை  நிராகரித்துள்ளனர். மேலும் அனைத்து இடத்திலும் உள்ள முஸ்லிம்கள் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் தான் அடைந்த பேரழிவுக்கு பின்னர் தனது இராணுவத்தை மீண்டும் முஸ்லிம் உலகில் நுழைப்பதற்கு அச்சப்படுகின்ற  அமெரிக்காவுடைய பலவீனத்தையும் மற்றும் அது தான் நடத்தும் போரில் சண்டையிடுவதற்கு தன்னுடைய சார்பாக மற்றவர்களை நம்பியிருப்பதையும் அதேவேளையில் அமெரிக்காவுடைய திட்டத்திலிருந்து சற்றே விலகினாலும் அவர்களின் மீது வசை பாடி வருவதையும் உணர ஆரம்பிப்பார்கள்.

 

2.ஏமனில் பொது மக்களை கொல்வதற்கான திட்டத்தை தீட்டிய அதே அமெரிக்கா அவர்கள் கொல்லப்பட்டதற்கு பிறகு கண்டிக்கின்றது.

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் சிரியாவை பற்றி பேசிவரும்  அதேவேளையில் ஏமனுடைய போருக்கு  தலைமையேற்பதிலும், திட்டமிடுவதிலும் மற்றும் இயக்குவதிலும் அமெரிக்கா செயல்பட்டு கொண்டிருக்கும் நிலையில் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஏமனை பற்றி பேசியுள்ளார்.

வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ள செய்தியில்:

போரில் ஈடுபடாதவர்களை பாதுகாக்க வேண்டும் என்று சவூதி அரேபியா மற்றும் அதன் கூட்டாளிகள் மீதான அழுத்தம் அதிகரித்து வருவதன் காரணமாக ஏமனுடைய போரில் ஈடுபட்டு வரும் நாடுகளுக்கு இராணுவ உதவியானது அவர்கள் வெகுஜனங்களுக்கு பாதிப்பு உள்ளாக்குவதை தவர்ப்பதை பொறுத்தே தொடர்ந்து வழங்கப்படும், என பாதுகாப்பு அமைச்சர் ஜிம் மேட்டிஸ் செவ்வாயன்று கூறினார்.

அமெரிக்கா அளித்து வரும் உதவிகளான வான்வழியில் எரிபொருள் நிரப்புதல், ஆயுத விற்பனை மற்றும் உளவுத்தகவல் பரிமாற்றம் உட்பட இவையானது “எவ்வித நிபந்தனையும் இன்றி” வழங்கப்படுபவை அல்ல  என அவர் கூறினார்.

பென்டகனில் செய்தியாளர்களுடன் பேசுகையில், மேட்டிஸ் ஹவுத்தி போராளிகளுக்கு எதிராக தாக்குதல்களை மேற்கொண்டு வரும் நாடுகளுக்கு வழங்கப்படும் உதவியை பெற வேண்டுமானால் அந்த நாடுகள் “அப்பாவி மக்களின் உயிரிழப்பை தவிர்ப்பதற்கு வேண்டிய  அனைத்துவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் ஐநா தலைமையிலான அமைதி பேச்சுவார்த்தைக்கு அவர்கள் ஒத்துழைக்க வேண்டும்” என கூறினார்.

இந்த கருத்துக்களானது ஏமனிய மோதலில் ஈடுபட்டு வரும் அனைத்து தரப்பினர்களும் சர்வதேச விதிமுறையை மீறுவதாக குற்றம்சாட்டி ஐநாவுடைய மனித உரிமை ஆணையம் அறிக்கை வெளியிட்ட சில மணி நேரங்கள் கழித்து வெளிவந்தன.

ஏமனில் நிகழும் பொதுமக்களுடைய மரணங்களுக்கு அமெரிக்கா பொறுப்பாளியாக இருக்கின்றது ஏனெனில் அமெரிக்கா தான் தனது கைப்பாவையான சவூதி அரசின் மூலம் இந்த போரை துவக்கி, தலைமையேற்று மற்றும் இயக்கி வருவது மட்டுமல்லாமல் அது பொதுமக்களுக்கு  அடிப்படை தேவைகள் கிடைக்காமல் செய்வது உட்பட  புதிய வகையிலான போர் யுத்தி ஒன்றையும் வடிவமைத்துள்ளது. இன்றைய உலகில் அமெரிக்கா தன்னகத்தே எந்தவிதத்திலும் தார்மீக நிலையை கொண்டுள்ளது என்று எண்ணும் அளவுக்கு மேட்டிஸின் பேச்சு யாரையும் ஏமாற்றிவிட வேண்டாம். சலாஹுத்தீன் போன்ற மாபெரும் முஸ்லிம் தளபதிகள் மேற்குலகுக்கு பயிற்றுவித்த போரின் நெறிமுறைகள் அனைத்தையும் முற்றிலும் அது  கைவிட்டுள்ளது, மேலும் அது சிலுவையுத்தங்கள் தொடங்கியபோது சாலைகளில் உதிரங்களை சிந்தியவாறு முஸ்லிம் உலகினுள் நுழைந்தபோது  கடைபிடித்த அதனுடைய வழிமுறைகளை மீண்டும் கடைபிடிக்க தொடங்கியுள்ளது.  சிலுவையுத்தக்காரர்களின் சில குற்றச்செயல்களை முன்னால் அதிபர் கிளிண்டன் 9/11 சம்பவத்திற்கு பின்னர் ஒருமுறை ஆற்றிய தனது உரையில் விளக்கினார்:

வெவ்வேறு ஐரோப்பிய வம்சாவழியிலிருந்து வந்த நம்மில் உள்ளவர்கள் குற்றமற்றவர்களாக ஆகமாட்டோம். உண்மையில், கிருஸ்துவ படை வீரர்கள் ஜெரூசலேத்தை கைப்பற்றிய முதலாம் சிலுவையுத்தத்தின் போது, முதலில் அவர்கள் 300 யூதர்கள் உள்ளே இருந்த நிலையில் சினகாக் (யூதர்களின் வழிபாட்டு தளம்) ஒன்றை எரித்தனர், மேலும் அல் அக்ஸாவிலுள்ள ஹரம் ஷரீஃபுக்கு முன்னேறிச்சென்ற அவர்கள்  வழிநெடுகிலும் இருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரையும் கொன்று குவித்தனர்.

கிருஸ்துவர்களின் புனித பூமியில் உள்ள அந்த ஆலயத்திற்கு படைவீரர்கள் தங்களுடைய முழங்கால்கள் அளவுக்கு இரத்தத்தில் மூழ்கிய நிலையில் வந்தடைந்தனர் என்று அந்த நிகழ்வு குறித்த சமகால விளக்கங்கள் குறிப்பிடுகின்றன. இந்த கதையானது மத்திய கிழக்கில் இன்றளவும் கூறப்பட்டு வருகிறது எனவும் அதற்கான விலையை நாம் இன்றளவும் கொடுத்து வருகிறோம் எனவும் என கூறுகிறேன்.

இஸ்லாம் மட்டுமே அதன் உயரிய விழுமியங்கள் மற்றும் ஜிஹாதில் கடைபிடிக்க வேண்டிய கண்டிப்பான அஹ்காம் (சட்டங்கள்) மூலமாக போர் புரிதல் என்றாலே மனிதனின் மோசமான செயல்கள் தான் என்றிருக்கும் நிலையிலிருந்து நீதம் மற்றும் வழிபாடு எனும் வழிமுறைக்கு மீண்டும் மாற்றியமைக்கும் நபித்துவ வழிமுறையின் அடிப்படையிலான நேர்வழி பெற்ற இஸ்லாமிய கிலாஃபத்தை மீண்டும் நிலைநாட்டுவதன் மூலமாக இஸ்லாம் நீதம் மற்றும் உயரிய விழுமியங்களை நோக்கி மீண்டும் இந்த உலகை தலைமையேற்று நடத்திச் செல்லும்.

 

3.ஈரானுக்கு எதிராக யூத அரசுடன் கூட்டு சேர்வதை முஸ்லிம் அரசாங்கங்கள் அவமானமாக கருதவில்லை.

மிடில் ஈஸ்ட் மானிட்டர் வெளியிட்ட செய்தி ஒன்று:

எடியோத் அஹ்ரோநோத் “உலகின் மிகப்பெரிய கடற்படை போர் பயிற்சியில்  இஸ்லாமிய நாடுகளுடன் இணைந்து இஸ்ரேல் கலந்து கொண்டது” என அறிவித்தார்.

யொஆவ் ஜிதூன் எனும் இராணுவ நிபுணர் சனியன்று “RIMPAC” என்றழைக்கப்படும் இந்த பயிற்சியானது உலகளாவிய அளவில் மிகப்பெரியதாகும். ஹொர்மூஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் விடுத்த அச்சுறுத்தலை போன்று நீர்வழித்தடங்களை எதிரிப் படைகள் கையகப்படுத்துவதை போன்று உருவகப்படுத்தும் வகையில் நடைபெற்றது என கூறினார்.

மேலும் ஜிதூன் RIMPAC 2018 ல் 26 நாடுகளிலிருந்து 25 ஆயிரம் வீரர்கள், 47 போர் கப்பல்கள், 200 போர் விமானங்கள  மற்றும் 5 நீர்மூழ்கிக் கப்பல்கள் பங்கு கொண்டதாக கூறினார். ஹவாய் தீவை சுற்றி பசிபிக் பெருங்கடலில் இந்த பயிற்சி நடைபெற்றது.

இஸ்ரேல் தனது கடற்படையின் பிரதிநிதிக் குழு ஒன்றுடன் முதன்முறையாக இதில் பங்கேற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஒரு மாத காலம் நீடித்து இரண்டு வாரங்களுக்கு முன்னர் முடிவுற்ற இந்த பயிற்சியை குறிப்பிட்டு 1970 ஆம் ஆண்டு முதல் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை இது நடைபெற்று வருவதாகவும் ஒவ்வொரு பயிற்சியின் போதும் புதிய நபர்கள் கலந்து கொண்டு வருகிறார்கள் எனவும் அந்த நிபுணர் விவரித்தார்.

மேலும் அவர்: ” மலேசியா, இந்தோனேசியா மற்றும் புரூணை போன்ற முஸ்லிம் நாடுகள் உட்பட  வியட்நாம் மற்றும் இலங்கை போன்ற இஸ்ரேலுடன் அதிகாரப்பூர்வ இராஜாங்க உறவுகளை  கொண்டிராத நாடுகளின் அதிகாரிகள் இஸ்ரேலிய அதிகாரிகளுடன் இணைந்து இதில் பங்கேற்றனர்” என கூறினார்.

இந்த கடற்படை பயிற்சியின் மூலம் அமெரிக்கா இரண்டு நோக்கங்களில் முன்னேற்றத்தை கண்டது, முதலாவதாக முஸ்லிம் நாடுகளுடைய இராணுவங்களை அமெரிக்காவுக்கு ஆதரவாக ஓத்துழைக்க வைப்பது அது  இன்னொரு முஸ்லிம் நாட்டிற்கு எதிராக செயல்பட வேண்டும் என்பதாக  இருந்தாலும் சரியே மற்றும் இரண்டாவதாக, அவர்கள் சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டு வரும் யூத தேசத்தை உள்நாட்டு அரசியல் நிர்பந்தத்தின் காரணமாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க முடியவில்லை என்றாலும் தமது அணியில் வரவேற்க பழகிக்கொள்ள வேண்டும் என்பது.

அமெரிக்கா முஸ்லிம் நாடுகளுடைய இராணுவங்களை சார்ந்திருக்கும் நிலையானது அமெரிக்காவுடைய பலத்துக்கு மாறாக அமெரிக்காவுடைய  பலவீனத்தையே தெளிவாக சுட்டிக்காட்டுகிறது, ஆனால் முஸ்லிம் நாடுகளில் உள்ள அதிகாரவர்க்கத்தினர் தமது மேற்க்கத்திய எஜமானர்களுக்கு சவால் விடும் விதமாக கனவைக்கூட காணமுடியாமல் இன்னமும் தாம்  காலனியாதிக்கத்தின் சேவகர்கள் எனும் மனோநிலையையே கொண்டுள்ளனர். முஸ்லிம் ஆட்சியாளர்கள் தம்மிடத்தில் பலத்தை கொண்டிருந்தாலும், சர்க்கஸில் தமது பார்வையாளர்களுக்கு முன் நடனமாடுவதற்கு பயிற்சியளிக்கப்பட்ட  சிங்கத்தை போல மேற்குக்கு அடிபணிந்தவர்களாக தொடர்ந்து  அவமானப்பட்ட நிலையிலேயே உள்ளனர். இவர்கள் அனைவரும்  ஒட்டுமொத்தமாக தூக்கி எரியப்பட்டு நமது தீனுக்காக மட்டுமே சேவைபுரியும், இந்த தீனை உள்நாட்டளவில் நடைமுறைப்படுத்தி அதன் ஒளியை உலகுக்கு ஏந்திச்செல்லக்கூடிய  உண்மையான, உள்நாட்டு, சித்தாந்த ரீதியிலான தலைமைத்துவத்தால் ஆளப்படாத வரை  முஸ்லிம் உம்மத்துடைய விவகாரங்களை தீர்த்து வைக்க முடியாது.

 

4.டிரம்ப்பின் கனடாவுக்கு எதிரான செயல்திட்டம் இந்த வாரம் மேலும் தெளிவாகியுள்ளது.

கடந்த மாதம், கனடாவின் அயலுறவு அமைச்சரின் பேச்சை காரணமாக முன்வைத்து சவூதி அரசு கனடாவுடன் மோதலில் ஈடுபட தொடங்கியது. எனினும், தற்போது வெளியாகியுள்ள டிரம்ப்பின் கனடாவுக்கு எதிரான நிலைபாடானது சவூதி அனேகமாக கனடாவை தாக்கும் விஷயத்தில் அமெரிக்காவின் வழிகாட்டுதலை பின்பற்றுவதை சுட்டிக்காட்டுகிறது.

 வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட செய்தி ஒன்று:

“குறைந்தபட்சம் தான் எவ்வாறு உணர்கிறேன் என்று கனடா தெரிந்துகொள்ளும் என்பதற்காக” வெளியிட வேண்டாம் என்று தனிப்பட்ட முறையில் தான் கூறிய கருத்துக்கள் வெளியிடப்படுவது சரிதான் என அதிபர் டிரம்ப் வெள்ளியன்று கனடாவை பற்றியும் அமெரிக்காவுடன் கொண்டுள்ள அதன் வர்த்தக உறவு பற்றியும்  இழிந்துரைத்த கருத்துக்கள் சரியானது தான் என்று தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்.

அமெரிக்கர்களுடைய பணிக்கால ஓய்வு பாதுகாப்பு எனும் திட்டமிடப்பட்ட தனது நிகழ்ச்சியிலிருந்து கவனத்தை திருப்பும் விதமாக டிரம்ப், புளூம்பெர்க் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில் கனடாவை விமர்சித்து தான் பேசிய மற்றும் திருத்தியமைக்கப்பட்ட வட அமெரிக்க தாராள வர்த்தக ஒப்பந்தத்தின் (NAFTA) இறுதிகட்ட பேச்சுவார்த்தையில் எந்த விதமான சலுகைகளையும் வழங்குவதற்கு எண்ணம் கொண்டிருக்கவில்லை என கூறிய பகுதியை வெளியிடக்கூடாது என்று ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தை ‘மீறியுள்ளது’ என குற்றம் சாட்டினார்.

வெளியிட வேண்டாம் என்று தனிப்பட்ட முறையில் டிரம்ப் கூறிய கருத்துக்களை ஆரம்பத்தில் புளூம்பெர்க் வெளியிடவில்லை. தி டொரண்டோ ஸ்டார் எனும் கனடாவின் செய்தித்தாள் தான் டிரம்ப்புடைய இந்த கருத்துக்களை வெள்ளியன்று வெளியிட்டது.  புளூம்பெர்க் அதனுடன் எந்தவிதமான சர்ச்சையிலும் ஈடுபடவில்லை.

அமெரிக்க கைப்பாவைகள் அதற்கு கீழ்படியும் அளவில் வேறுபாடுகளை கொண்டுள்ளன ஆனால் முஹம்மது பின் சல்மானோ அமெரிக்காவுடைய திட்டத்திற்கு சேவைபுரிவதற்காக தனக்கு சம்மந்தமில்லாத ஒரு பிரச்சனையில் தனது தேசத்தையே ஈடுபடுத்துவதற்கு முற்படும் அளவுக்கு முழுமையான அளவில் தீர்மானமாக இருக்கிறார்.

Comments are closed.