சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

இத்லிப் நகரில்  தொடரும் பேரழிவு.

செய்தி :

ரஷ்யா, ஈரான், சிரியா ஆகிய நாடுகளால் முன்னெடுக்கப்பட்ட இத்லிப் மீதான இறுதி தாக்குதலின் விளைவுகளைப் பற்றிய ஒரு மோசமான படம் வரைந்து சமீபத்திய ஊடக அறிக்கைகள் காட்டுகின்றன. ஆயினும், வெகுகாலமாக இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதில்லை என்றாலும், படுகொலைகளில் மேற்குலகம் ஒரு அப்பாவி பார்வையாளராக இருக்காமல் ஒரு கூட்டு கொலையாளியாக தன் கைகளில் இரத்தத்தை வைத்திருப்பதில் அது மகிழ்ச்சியாக தான் உள்ளது. இத்லிப் நெருக்கடியைக் கையாள்வதில் உலக மக்களும் நாடுகளும் ஒழுக்கநெறி உணர்வு இழந்து விட்டார்களா?

கருத்து : 

சில நாட்களால் இத்லிப் மீதான ஏற்படும் தாக்குதலின் செய்தி தீவிரமாக அதிகரித்து உலகளாவியளவில் பரவியுள்ளது. ரஷ்யா, சிரியா மற்றும் ஈரான் ஆகியவை பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் அங்கு சிக்கியுள்ளதைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல், இத்லிப் மீது தங்கள் ஆயுதங்களின் முழுத் துயரத்தைத் தளர்த்துவதற்கு ஆர்வமாக உள்ளன. மேற்குலகமும் இஸ்லாமிய எதிர்ப்பின் இறுதிக் கோட்டையின் வீழ்ச்சியை பார்க்க மிகவும் ஆர்வம் காட்டியுள்ளதுடன், ரஷ்யாவை இரத்தக்களரி தாக்குதல்களை தொடங்குவதற்கு பச்சை கொடி காட்டியுள்ளது.ரஷ்யாவும் சிரியாவும் இரசாயன ஆயுதங்களை பயன்படுவதிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்ற நிபந்தனை மட்டுமே ஒரே ஒரு நிம்மதியான விஷயம். என்ன ஒரு குணம் இந்த மேற்குலகம் வைத்துள்ளது? ரஷ்யாவும் அதன் கூட்டாளிகளும் தன் ஆயுதங்களை தயாராக்கி பொதுமக்களை கண்டுக்காமல் இத்லிபை நாசமாக்க உள்ளது. ரஷ்யாவும், சிரியாவும் கற்பனை செய்ய முடியாத அளவிலான படுகொலையை செய்ய இரசாயன ஆயுதங்களை தான் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், ஒவ்வொரு தடவையும் ரஷ்யா நடத்திய இரசாயன தாக்குதலுக்கு பகிரங்கமாக இஸ்லாமிய போராளிகள் மீது  ரஷ்யா குற்றம் சாட்டியது. ரஷ்யா நடத்திய கொடிய இரசாயன தாக்குதல் அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் தலையிட தூண்டும் என்ற பயம் ரஷ்யாவுக்கு உள்ளதால் அது தன் குற்றத்தை இஸ்லாமியர்கள் மீதே சாட்டுகிறது.
இத்லிபின் குடிமக்களை காப்பாற்றுவதற்காக மேற்கு தலையிட விரும்புவதில் சந்தேகம் உள்ளது என்றாலும், போருக்கு பின் சிரியா நாட்டில் தன் பங்கை பெறவும், தன்னுடைய ஆதிக்கம் இருக்க வேண்டும் எனவும் நாடுகின்றது என்பது தெளிவாகிறது.

இத்லிப் அழிக்கப்பட்டபின் சிரியாவில் ரஷ்யாவுக்கும் ஒரு பங்கு உள்ளது. அமெரிக்க இராணுவ தளபதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், சிரியாவில் உள்ள நூற்றுக் கணக்கான அமெரிக்க படைகளின் பாதுகாப்பிற்கு உறுதி செய்ய முடியாது என்று கூறுவதில் மாஸ்கோ தன்னுடைய சில காரியங்களுக்கு விலை கொடுக்க தயாராக உள்ளது என்று தெரிகிறது.அமெரிக்காவும் ரஷ்யாவின் அச்சுறுத்தல்களால் பின்தொடரப்படக்கூடாது என்று எண்ணி தனது படைகளை ரஷ்யாவிலிருந்து வரும் எந்தவொரு தாக்குதலையும் தடுக்க முழு சக்தியைப் பயன்படுத்த உத்தரவு கொடுத்துள்ளது. சிரியாவின் போருக்குப் பின் அதில் வெளிநாட்டு வல்லரசுகளின் பாதிப்பு என்னவாக இருக்கும் என்ற வாக்குவாதம் ஒரு பக்கம் இருக்க,  இத்லிப் குடிமக்களின் விதியைப் பற்றி உலகில் எவரும் ஆர்வமற்ற நிலையில் இருப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

போரின் கொள்கைகள் மற்றும் ஜெனீவா உடன்படிக்கையின் கட்டளைகளின் மீது தன்னை பெருமிதம் கொள்ளும் அதே மேற்குலகம், இத்லிப் மற்றும் முஸ்லிம்களின் பிரச்சனைக்கூறிய மற்ற பகுதிகளில் இதை அகற்றுவிட்டது. அசாத் மீட்டெடுத்த போராளிகளின் இடங்களிலிருந்து, போராளிகளும் அவர்களது குடும்பங்களும் பாதுகாப்பாக வேறு பகுதிக்கு கொண்டு சேர்க்கப்படும் என்ற பேச்சுவார்த்தைகளை பல மாதங்களாக, மேற்குலகமும் ரஷ்யாவும் இஸ்லாமிய போராளிகளுடன் மேற்கொண்டன. இந்த நாளை எதிர்ப்பார்த்து தான் பல மாதங்களாக அமெரிக்கவும் ரஷ்யாவும் திட்டமிட்டன இறுதியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பலியாகுவது தான் முடிவாக இருக்கும்.  இத்லிபின் வரவிருக்கும் படுகொலைக்கு உதவுவதற்கும், ஊக்குவிக்கவும் முஸ்லீம் நாடுகளின் பங்குள்ளது என்பது ஒரு பெரும் அவமானமாகும். இத் துரோகத்தின் முன்னணியில் துருக்கி, ஈரான், சவூதி அரேபியா ஆகிய நாடுகள் – இத்லிபை அழிக்க  ரஷ்யா மற்றும் அமெரிக்காவுடன் சேர்ந்து இரகசியமாக சதித்திட்டங்களை தீட்டின.

முஸ்லீம் உம்மத்தின் ஒரே ஒரு தீர்வு நேர்மையாக வழிநடத்தப்பட்ட கிலாஃபா அரசின் (இஸ்லாமிய அரசு) மறுசீரமைப்பதற்காக வேலை செய்வதாகும், இதன் மூலம் சிரியா, லிபியா, ஏமன் மற்றும் இஸ்லாமிய உலகில் வேறு இடங்களில் வெளிநாட்டு சக்திகள் தங்கள் துரோகம் நிறைந்த போர்களை போரிட அனுமதிக்கப்பட மாட்டார்கள். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) கூறினார், ” நிச்சயமாக இமாம் ஒரு கேடயம் ஆவார், இவர் பின் தான் மக்கள் போர் புரிவார்கள் மற்றும் இவரைக் கொண்டு தான் பாதுகாக்கப்படுவார்கள். [முஸ்லிம்]

 அப்துல் மஜீத் ப்ஹட்டி.

 

Comments are closed.