சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

செய்திப்பார்வை 04.09.2018

தலைப்புச்செய்திகள் :

1.ராஷித் நிகாஸ் : ஐரோப்பிய கூட்டமைப்பு முஸ்லிம் பெண்களின் மீது ஒவ்வாமையை கொண்டுள்ளது.

2.ஈரானும் ஈராக்கும் டாலரை அடிப்படையாக மேற்கொண்டு வந்த வர்த்தகத்தை நிறுத்த உள்ளன.

3.பாகிஸ்தானுக்கு வழங்கவிருக்கும் $300 மில்லியன் உதவித்தொகையை அமெரிக்கா ரத்து செய்யவுள்ளது.

விவரங்கள் :

1.ராஷித் நிகாஸ் : ஐரோப்பிய கூட்டமைப்பு முஸ்லிம் பெண்களின் மீது ஒவ்வாமையை கொண்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகள் அனைத்தும்  முஸ்லிம் பெண்கள் அவர்கள் விரும்பும் ஆடையை உடுத்திக்கொள்வதில் அவர்கள்  கொண்டுள்ள சுதந்திரத்தை குறிவைக்கும் வகையில் “இயல்பாகவே” பாகுபாட்டை உடைய சட்டங்களுக்கு ஆதரவு தருவதன் மூலமாக  “இஸ்லாத்துக்கு எதிரான விரோத போக்கை” கடைபிடித்து வருகின்றன என்று அல்ஜீரிய தொழிலதிபரும் அரசியல் ஆர்வலருமான ராஷித் நிகாஸ் கூறினார், இவர் டென்மார்க்கில் நிகாப் அணியும் பெண்கள் மீது விதிக்கப்படும் அபராதத்தொகையை செலுத்துவதற்கு உறுதிப்பூண்டதன் காரணமாக பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தவராவார். பெண்கள் தாம் விரும்புவதை உடுத்துவதற்கான  உரிமைக்கு ஆதரவளிக்க நிகாஸ் தீர்மானமாக உள்ளார் மேலும் அவர் சூடான் மற்றும் ஈரான் போன்ற நாடுகளில் பெண்கள் முக்காடு அணியாமல் இருப்பதற்கான விருப்பத்திற்கு வெளிப்படையாக ஆதரவளித்தவராவார். பிரான்ஸ் அதேபோல் பெல்ஜியம், நெதர்லாந்து, பல்கேரியா, ஸ்விட்சர்லாந்து, ஆஸ்திரியா, டென்மார்க் மற்றும் ஜெர்மானிய நகரமான பவாரியா அனைத்தும் பொது இடங்களில்  முகத்திரையை அணிவதற்கு ஏதாவதொரு வகையிலான தடையை விதித்துள்ளன. டென்மார்க்கில் முழு முகத்தையும் மறைக்கும் முகத்திரையை அணியும் பெண்கள்  மீது அபராதம் விதிக்கப்படுகிறது மேலும் அதற்காக அவர்கள் அந்த நாட்டில் ஏழு நாட்கள் வரை சிறைத்தண்டனை பெறும் வாய்ப்பும் உள்ளது.

மனித உரிமைக்கு ஆதரவாக தனது அமைப்பின் மூலம் 18 நாடுகளில்  செயல்பட்டு வரும் நிகாஸின் அமெரிக்க மனைவியோ முக்காடை அணிவதில்லை, அவர் இதுவரை பல ஐரோப்பிய நாடுகளில் முழுவழுதுமாக 1552 முறை 315,000 யூரோக்கள் அளவுக்கு  அபராதமாக செலுத்தியுள்ளார். அவர் அல்ஜீரியா மற்றும் உலகளாவிய அளவில் மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக செயல்படும்  “ஹஸ்ஸிபா மனித உரிமை அமைப்பு” க்கு தான் தலைவர் எனவும் “என்னுடைய பொருளாதார நிலைக்கு நன்றி, அல்ஜீரீய நீதித்துறையினால் குற்றஞ்சாட்டப்பட்ட மனித உரிமை ஆர்வலர்களின் அபராதங்களையும், ஐரோப்பாவில் நிகாபை அணியும் பெண்கள் மீது விதிக்கப்படும் அபராதங்களையும் மற்றும் ஈரானில் முக்காடை அணிய மறுக்கும் பெண்கள் மீது விதிக்கப்படும்  அபராதங்களையும்  செலுத்துவதற்கான பொருளாதார வலிமை என்னிடம் இருக்கின்றது என்று கூறினார்.  1980 களில் இருந்த பிரான்ஸை போன்று இப்போதிருக்கும் பிரான்ஸ் இல்லை. அது இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம் பெண்களின் மீதும் ஒவ்வாமையை கொண்டுள்ளதாக மாறியுள்ளது. இஸ்லாம் மீதான விரோதபோக்கானது பிரஞ்சு அரசின் அதிகாரப்பூர்வ மதமாக மாறியுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, 2010 முதல் பெல்ஜியம், ஸ்விட்சர்லாந்து, நெதர்லாந்து, ஆஸ்திரியா, பல்கேரியா, ஜெர்மனி மற்றும் டென்மார்க் போன்று ஐரோப்பாவில் உள்ள மற்ற  நாடுகளும் முஸ்லிம் பெண்களின் மீது இயல்பாகவே பாகுபாட்டை கொண்டிருக்கும் இதுபோன்ற சட்டங்களுக்கு வாக்களித்து

இஸ்லாத்தின் மீதான விரோதபோக்கை பின்பற்ற தொடங்கியுள்ளன. இந்த நியாயமற்ற சட்டங்களை மட்டுப்படுத்தவும் தீங்கிழைக்காத இந்த பெண்கள் பொது இடங்களில் நிகாப் அணிந்ததற்காக அவர்கள் மீது விதிக்கப்பட்ட அனைத்து அபராதங்களை செலுத்தி ஆடை அணியும் சுதந்திரத்தை அவர்களுக்கு கிடைப்பதை உறுதிசெய்யவும் இந்த பெண்களுக்கு துணையாக எப்போதும் நான் இருப்பேன் என்று தெளிவாக கூறுவதற்கு தனிப்பட்ட முறையில் இவ்வனைத்து  நாடுகளிலும் தலையிட வேண்டியதாக இருக்கின்றது.

[ஆதாரம்: யானி ஸஃபக் வேர்ல்ட்]

நிகாஸின் இந்த முயற்சியானது மேற்கு தற்பெருமை கொண்டிருக்கும் சுதந்திரம் எனும் கருத்திலிருந்து வெளியானதாகும், மேலும் இது மேற்கத்திய அரசுகள் முஸ்லிம் பெண்களின் மீது விளைவிக்கும் தீங்கிற்கு நிரந்தர தீர்வாக அமையாது. இதற்கு முஸ்லிம் பெண்கள் எதிர்பார்க்கும்  அடிப்படையான தீர்வானது கிலாஃபா அர்-ராஷிதா அலா’மின்ஹாஜின் நுபுவ்வாஹ்வை (நபித்துவத்தின் வழிமுறையின் அடிப்படையிலான நேர்வழிபெற்ற கிலாஃபத்) மீண்டும் நிலைநாட்டுவதில் தான் உள்ளது.  கிலாஃபத் மட்டுமே முஸ்லிம் பெண்களை பாதுகாக்கும்.

2.ஈரானும் ஈராக்கும் டாலரை அடிப்படையாக மேற்கொண்டு வந்த வர்த்தகத்தை நிறுத்த உள்ளன.

“ஈரானுக்கும் ஈராக்குக்கும் இடையே டாலரை அடிப்படையாக கொண்டு் நடைபெற்று வந்த வர்த்தகம் நிறுத்தப்பட்டுள்ளது மேலும் தற்பொழுது  பெரும்பாலான பரிமாற்றங்கள் யூரோ, ரியால் மற்றும் தீனாரில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,” என அல்-இ-ஈஷாக் சனியன்று கூறினார். மேலும் அவர் ஈரான் மற்றும் ஈராக் ஏற்றுமதியாளர்களிடையேயான மற்றுமொரு பகுதியிலான பரிமாற்றங்களானது பண்டமாற்று முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் கூறினார். அல்-இ-ஈஷாக் “ஈரானுக்கும் ஈராக்குக்கும் இடையே நடைபெறும் $8 பில்லியன் அளவிலான வர்த்தகத்தில் சிரியதொரு பங்கு மட்டுமே வங்கித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என கூறினார். அது சம்மந்தமான ஏற்பாடாக புதனன்று பாக்தாதுக்கான ஈரானிய தூதர் இராஜ் மஸ்ஜிதி ஈராக்கில் அர்பயீன் விழாவில் பங்கேற்கவிருக்கும் தனது நாட்டு யாத்ரீகர்களுக்கு விசா வழங்குவதற்காக வேண்டி பெறப்படும் டாலருக்கு பதிலாக ஈரானுடைய தேசிய நாணயத்தை (ரியால்) கொண்டு மாற்றியமைக்க வேண்டுவதற்கு ஈராக்கிய அயலுரவு அமைச்சகத்துக்கு வருகை தந்தார், இது  அமெரிக்க பொருளாதார தடையை எதிர்கொள்வதற்கு ஈரான் மேற்கொள்ளும் நாணய மாற்று நடவடிக்கைகளில் ஒன்றாகும். பாக்தாதில் ஈராக்கிய அயலுறவு அமைச்சர் இப்ராஹிம் அல்-ஜாஃபரீயுடனான சந்திப்பு ஒன்றில் முன்வைக்கப்பட்ட மஸ்ஜிதியின் கருத்துக்கள், 2015 ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து வாஷிங்டன் வெளியேறியதற்கு பின்பு அமெரிக்கா விதித்த பொருளாதார தடைகளை எதிர்கொள்வதற்கான ஈரானுடைய திட்டங்களின் அடிப்படையில் முன்வைக்கப்பட்டது. அர்பயீன் விழாவின் போது ஷிஆக்களின் மூன்றாம் இமாமான இமாம் ஹுசைன் (ரலி) அவர்கள் ஷஹீதான நாற்பதாவது நாளை ஆண்டுதோறும் நினைவு நாளாக அனுசரிக்கப்படுகிறது. ஜாஃபரீ, தனது பங்குக்கு, சோதனை காலத்தின் போது குறிப்பாக ஐ.எஸ்.ஐ.எல் தீவிரவாத குழுவின் மீதான போரில் ஈராக்குக்கு ஆதரவாக இருந்து வருவது குறித்து ஈரானை பாராட்டினார், மேலும் அர்பயீன் விழாவை நடத்துவதற்கு ஈரான் மேற்கொள்ளும் முயற்சியில் ஒத்துழைக்கவும் ஒருங்கிணைக்கவும் பாக்தாத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார். [ஆதாரம்: அல்பவபா]

இரு நாடுகளுக்கும் இடையே டாலரை அடிப்படையாக கொண்டு நடைபெறும்  வர்த்தகத்தை நிறுத்துவது அமெரிக்கா ஈரானை தாக்குவதிலிருந்து தடுத்து நிறுத்தாது. மாறாக, ஈரானும் ஈராக்கும் அமெரிக்காவுக்கு எதிராக போலியாக வாய்ச்சவடால் விடுவதை நிறுத்தி இந்த பகுதியிலிருந்து அமெரிக்காவை வெளியேற்றுவதற்காக ஒன்றுபடவேண்டும்.

3.பாகிஸ்தானுக்கு வழங்கவிருந்த $300 மில்லியன் உதவித்தொகையை அமெரிக்கா ரத்து செய்யவுள்ளது.

போராளிக்குழுக்களுக்கு எதிராக இஸ்லாமாபாத் நடவடிக்கை எடுக்க  தவறியுள்ளது என்று கூறி பாகிஸ்தானுக்கு தான் வழங்கவிருந்த $300 மில்லியன் உதவித்தொகையை ரத்து செய்வதாக அமெரிக்க இராணுவம் அறிவித்துள்ளது. சனியன்று பெண்டகனுடைய செய்தி தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் கோண் ஃபால்க்னர் அந்த தொகையை இதர “அவசர முன்னுரிமைகளுக்காக” செலவு செய்யப்போவதாக அமெரிக்க இராணுவம் தீர்மானிக்கும் என்று கூறினார், என பிபிசி செய்தி வெளியிட்டது. “பாகுபாடின்றி அனைத்து தீவிரவாத குழுக்களின் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தானுக்கு நாங்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறோம்” என தனது பேச்சில் கர்ணல் ஃபால்க்னர் குறிப்பிட்டார், இந்த பிரச்சனையை சமாளிப்பதற்கு “திட்டவட்டமான நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுக்க தவறியதால்” சற்று முன்னர் நிறுத்திவைக்கப்பட்ட – $300 மில்லியன் டாலர்கள் உதவித்தொகை – வேறு இடத்தில் பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார். அமெரிக்க அயலுறவுத்துறை அமைச்சர் மைக் போம்பியோ பாகிஸ்தானுடைய புதிய பிரதம மந்திரி இம்ரான் கானை சந்திப்பதற்காக வேண்டி பாகிஸ்தானுக்கு வருகை தருவதற்கு சில நாட்களுக்கு முன்பாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு அதிபர் டொனால்டு டிரம்ப் பாகிஸ்தான்  அமெரிக்காவிடமிருந்து பில்லியன் கணக்கிலான டாலர்களை பெற்றுக்கொண்டு தன்னை ஏமாற்றியுள்ளதாக அதன் மீது குற்றம் சாட்டியிருந்தார். ஆப்கானின் தாலிபான் மற்றும் ஹக்காணி பயங்கரவாத இயக்கம் உட்பட தனது மண்ணில் செயல்புரியும் பயங்கரவாத குழுக்களின் மீது நடவடிக்கைகள் எடுக்க தவறியுள்ளதாக அமெரிக்க அயலுறவுத்துறையும் பாகிஸ்தான் மீது கடுமையாக விமர்சித்தது. ஜனவரி மாதத்தில், அமெரிக்க அரசு பாகிஸ்தானுக்கு பாதுகாப்பு விஷயத்துக்காக வழங்கி வந்த அனைத்து விதமான உதவிகளில் பெரும்பாலானவற்றை நிறுத்துவதாக அறிவித்தது.

[ஆதாரம்: கல்ஃப் நியூஸ்]

முஸ்லிம் இரத்தங்களை சிந்துவதற்காக வேண்டி பாகிஸ்தானிய இராணுவத்துறைக்கு செலுத்திவந்த கூலியை அமெரிக்கா ஒன்றன் பின் ஒன்றாக நிறுத்தி வருகிறது. டிரம்ப்புடைய தலைமையில் எதிர்பார்க்கப்படுவது என்னவென்றால் பாகிஸ்தானிய இராணுவ உயர் அதிகாரிகள் அமெரிக்காவின் இஸ்லாத்துக்கு எதிரான போரில் தானாக முன்வந்து முஸ்லிம்களை கொல்ல வேண்டும் என்பது தான்.

Comments are closed.