சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

செய்திப்பார்வை 05.09.2018

தலைப்புச்செய்திகள்:

1.ஆப்கானிஸ்தானில் தனது இராணுவதளத்தை அமைக்கவுள்ளது சீனா.

2.இத்லிபுக்கான போர் தொடங்கியுள்ளது.

3.ஆப்பிரிக்காவுக்கான புதிய போராட்டம்.

விவரங்கள் :

1.ஆப்கானிஸ்தானில் தனது இராணுவதளத்தை அமைக்கவுள்ளது சீனா.

ஆப்கானிஸ்தானின் பதாக்‌ஷன் மாகாணத்தில் சீனா தனது இராணுவ பயிற்சி தளத்தை அமைக்க தொடங்கி இருக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. சீனா உடனடியாக இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளது, ஆனால் கடல்கடந்து  தனது இராணுவ இருப்பை மெதுவாக விரிவாக்கம் செய்யும்போது அதனை மறைக்க முற்படும்போதெல்லாம் வழக்கமாக இந்த யுத்தியையே சீனா பயன்படுத்தி வருகிறது. ஜிபோட்டியில் கடற்படை தளத்தை திறப்பதற்கு முன்பு இதுபோன்ற யுத்தியையே சீனா பயன்படுத்தியது. சிரியாவின் போர்களித்திலிருந்து உய்குர் வீரர்கள் வெளியேறி சீனாவுக்குள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக சீனா கவலை கொண்டுள்ள காரணத்தால் அங்கு தான், கொண்டிருக்கும் சிறிய அளவிலான இருப்பையும் சீனா மறுத்து வருகிறது. அமெரிக்காவை பொறுத்தமட்டில் சர்வதேச அமைப்புகளின் மூலம் சீனா பலன்களை அனுபவித்து வருவதாகவும் அதேசமயம் அதற்கு பயனளிக்கும் அந்த அமைப்பிற்கு பாதுகாப்பு வழங்குவதற்காக எவ்விதமான செலவீனங்களையும் அது ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் நீண்டகாலமாக விவாதித்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கான சுமையை ஏற்றுக்கொள்ள மற்ற நாடுகள் முன்வரவேண்டும் என அமெரிக்கா நீண்டகாலமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

2.இத்லிபுக்கான போர் தொடங்கியுள்ளது.

கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் இத்லிப் மாகாணத்தில் அரசுக்கு ஆதரவான படைகள் தாக்குதல் நடத்தும் என எதிர்பார்க்கப்பட்டதற்கு முன்கூட்டியே செப்டம்பர் 4ம் தேதி சிரியாவின் வடமேற்கு பகுதியில் ரஷ்யா வான்வழி தாக்குதலை மீண்டும் நடத்த தொடங்கியுள்ளது. இத்லிப் மற்றும் லடாக்கியாவுக்கு இடைப்பட்ட  பகுதியில் 16 இடங்களை குறிவைத்து 30 ஆகாயவழி  தாக்குதல்களை ரஷ்ய போர் விமானங்கள் நடத்தின, என்று இங்கிலாந்திலிருந்து செயல்படும் சிரியாவிலுள்ள மனித உரிமைக்கான கண்காணிப்பகம் அறிவித்துள்ளது. இத்லிபானது பஷார் அல் அசாதுக்கு எதிராக 2011 ஆம் ஆண்டு தொடங்கிய எழுச்சியின் காரணமாக எதிராளிகள் கைப்பற்றிய இடங்களை படிப்படியாக  சிரிய அரசு மீண்டும் கைப்பற்றியதன் காரணமாக சுற்றிவளைக்கப்பட்டுள்ள 70,000 கிளர்ச்சியாளர்களை கொண்ட குழுக்களின் இறுதி கோட்டையாகும். துருக்கியுடைய இராணுவம் இத்லிபின் மேற்கு பகுதியை பாதுகாப்பதற்காக வேண்டி தனது எல்லையோரமாக இத்லிப் மற்றும் சிரிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் இடங்களுக்கு இடையே ஒரு தொடர் இராணுவ நிலையை நிறுவியுள்ளது. சமீபத்தில் இந்த இராணுவ நிலைகளில் வான்வழி தாக்குதல்களை தடுக்கும் கருவிகள் பொருத்தப்பட்டன மற்றும் கான்கிரீட் சுவர்கள் மற்றும் மருத்துவமனைகள் மற்றும் ஹெலிகாப்டர் இறங்கு தளம் ஒன்று ஆகியவை கட்டப்பட்டன. இத்லிபுக்கான போராட்டத்தில் போராட்டக்குழுக்களில் பல, துருக்கி தமக்கு உதவி புரியும் என்று எதிர்பார்க்கின்றன, அவர்களுடைய எதிர்பார்ப்பை துருக்கி நிறைவேற்றுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

3.ஆப்பிரிக்காவுக்கான புதிய போராட்டம்.

சீனா-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மாநாட்டின் (FOCAC) துவக்க விழாவின் போது, ஆப்பிரிக்க நாடுகளுக்கு $60 பில்லியன் டாலர்கள் அளவுக்கு கூடுதலாக நிதியுதவி, முதலீடு மற்றும் கடன்களாக அளிக்கவிருப்பதாக சீன அதிபர் ஜீ ஜின்பிங் அறிவித்தார். 2000 ம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த FOCAC நடைபெறுகின்றது இதில் பெரும்பாலும் மிகப்பெரிய அளவிலான நிதி வழங்குதல் அல்லது கொள்கைகளின் அறிவிப்புகள் வெளியாகின்றன. ஜீயும் 2015 உச்சிமாநாட்டின் போது ஆப்பிரிக்க நாடுகளுக்கு $60 பில்லியன் டாலர்கள் அளவிலான திட்டங்களை அறிவித்தார். சீன அதிபர் சமீபத்திய இந்த நிதியுதவிகளை எவ்விதமான நிபந்தனைகள் இன்றியும் மேலும் ஆப்பிரிக்காவின் ஏழை நாடுகளின் கடன்களை தள்ளுபடி செய்தும் வழங்குவதற்கு முன்வந்தார். இந்த செயல்பாடானது இக்கண்டத்திற்குள் நுழைய விரும்பும் பலமிக்க நாடுகளின் வரிசையில் சீனாவும் சேர்ந்துள்ளது என்பதற்கான உதாரணமாகும். மனிதாபிமானத்தின் அடிப்படையில் சீனா நிதியை வழங்கவில்லை, அதற்கு பகரமாக சிலவற்றை அது எதிர்பார்க்கின்றது  எனும் கசப்பான உண்மையை தற்பொழுது இலங்கை அறிந்துள்ளது. அது வழக்கமாக வளங்கள், துறைமுகங்கள் மற்றும் கனிமவளங்கள் ஆகியவற்றை அடைவதேயாகும்.

Comments are closed.