சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

அமெரிக்கா நம் மார்க்கத்திற்கும், நமக்கும் மற்றும்  நம் நாணயங்களுக்கும் பொதுவான எதிரி…!!!

செய்தி :

அமெரிக்கா டாலருக்கு நிகரான துருக்கி லிரா நாணயம் சமீபத்தில் தன்னுடைய மதிப்பிலிருந்து 50% மதிப்பிழந்திருக்கிறது. அந்நிய செலவாணி விகிதம் திடீரென உயர்ந்ததும் அதைத்தொடர்ந்து ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியுமே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. இதன் விளைவாக மக்களின் வாங்கும் திறன் கடந்த வருடத்தை விட இந்த வருடம் பாதியாக குறைந்திருக்கிறது. இந்த நிகழ்வு புதிதான ஒன்றல்ல, மாறாக அமரிக்கா-துருக்கி உறவில் ஏற்பட்ட திடீர் விரிசலே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

கருத்து :

முன்னாள் நிதி அமைச்சர் முஹம்மது ஷம்ஷக் மார்ச் மாதம் முதலீட்டாளர்களை  எச்சரிக்கும் விதமாக வெளியிட்ட அறிக்கையில் “இனி எப்போதும் டாலர் நாணயத்தில் கடன் வாங்காதீர்கள்” என்று அறிக்கை வெளியிட்டார். தற்போது எழுந்திருக்கும் நெருக்கடியில் அடங்கக்கூடிய பிரச்சனைகளாக இருக்கும் மற்ற பிரச்சனைகள் – நடப்பு கடன் பற்றாக்குறை, கடன் பங்குகள், வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம், மத்திய வங்கியின் பணக் கொள்கைகள். தேர்தல் விரைவாக நடத்தி முடிக்கப்பட்டதற்கும் இதுவே முக்கிய காரணம். வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகளில் ஏற்பட்டிருக்கும் இந்த நெருக்கடியானது தவிர்க்கமுடியாததும் கட்டுக்குள் கொண்டுவரவும்  இயலாத ஒன்று.

உலக நாடுகளை பொருளாதார ரீதியில் காலனியாதிக்கம் செய்வதற்காக உருவாக்கப்பட்ட மேற்கத்திய பொருளாதார கொள்கையை கொண்டிருப்பது தான் துருக்கியின் இன்றைய நெருக்கடி நிலைக்கு காரணம். ஒரு நாட்டின் உண்மையான பொருளாதாரம் நுகர்தல், கண்டுபிடிப்பு மற்றும் தயாரிப்பு தொழிற்சாலைகள், ஏற்றுமதி- இறக்குமதி ஆகிய இவற்றின் அடிப்படையில் இருக்குமே தவிர, வெறும் உற்பத்தி என்கிற ஒற்றை குறிக்கோளோடு இருக்காது.கடந்த 16 வருடங்களில் துருக்கி வசம் வந்த பணம் வெளிநாடுகளில் அது வாங்கிய கடன் அனைத்தும் விளம்பர நோக்கங்களுக்காகவும், உயர்குடியினரின் ஆசையை நிறைவேற்ற கட்டுமானங்களிலும் செலவிடப்பட்டதே தவிர உண்மையான பொருளாதார மேம்பாட்டிற்காக அவை பயன்படுத்த படவில்லை. மேலும் இவ்வாறு செலவிடப்பட்டதில் லஞ்சம் ஊழல்களை கட்டுப்படுத்தாமல் அவை மேலும் அதிகரிப்பதை தடுக்கவும் தவறியது. கனரக தொழிற்சாலைகள் உருவாக்குவதில் எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. அதேபோல் விவசாயம் கால்நடை வளர்ப்பு, நாட்டின் அத்தியாவசியமான மின்சார சேவைக்கு மின்னுற்பத்தியை மேம்படுத்த எந்த திட்டமும் உருவாக்கப்படவில்லை.

இவற்றிற்கு மாறாக, உயர்குடிகளின் ஆசைகளை நிறைவேற்றி தரும் பொருளாதார கொள்கைகள், மேற்கத்திய நாடுகளை என்றும் சார்ந்திருக்கும்படியான தனியார்மயமாக்கல் கொள்கை, வெளிநாட்டு முதலீட்டாளர்களை கவர்தல், சுற்றுலாவை மேம்படுத்துதல், பங்கு சந்தையை மேம்படுத்துதல் போன்ற கொள்கைகளை ஏற்றுக்கொண்டிருக்கிறது.

நாட்டின் பொதுத்துறை மற்றும் தனியார்துறை நிறுவனங்கள் கடன் என்னும் புதைகுழியில் சிக்கித்தவிக்கின்றன. சுமார் 445 பில்லியன் டாலர் அளவிலான கடன் வட்டியும் முதலுமாக திருப்பி செலுத்த வேண்டியுள்ளது. வெளிநாடுகளிடம் கடன் பெறலாம் என்பதனால் தனிநபர்களும் நிறுவனங்களும் கடனாளிகளாக உள்ளனர். அதிகப்படியான பணப்புழக்கத்தால் நாட்டின் பணவீக்கமும் அதிகரித்திருக்கிறது. கற்பனையான பொருளாதாரம் நிஜப்பொருளாதாரத்தை விஞ்சிவிட்டதன் காரணத்தால் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்றத்தாழ்வுகளையும் நீர்த்துப்போகும் தன்மையையும் ஏற்படுத்தியுள்ளது.

மேற்கத்திய குப்ஃபார் நாடுகள் பிற நாடுகளின் வளங்களை சுரண்டி தங்களை வளப்படுத்தி கொள்வதற்காக வடிவமைத்த இந்த பொருளாதார கொள்கையின் அறிகுறிகளில் உள்ளவையே மேற்சொன்ன விளைவுகள். முதலாளித்துவம் ஒருபுறம், அரசின் கையாலாகாத்தனம் மறுபுறம் என்கிறநிலையில் இன்று டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா அரசின் உலகளாவிய வர்த்தக போரின் தாக்கமும் துருக்கியை கலக்கமடைய செய்துள்ளது. மாஃபியா கும்பல் தலைவனை  போல் செயல்படும் டிரம்ப் தன் நாட்டின் நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக உலக நாடுகளின் மீது வர்த்தக போர் விதித்து வாட்டி வருகிறது. முஸ்லீம் நாடுகளை ஆட்சிசெய்யும் கையாலாகாத ஆட்சியாளர்களும் அமெரிக்காவிற்கு எதிராக பேசுவதை விட்டுவிட்டு தங்கள் நாட்டின் அரசியல், பொருளாதார மற்றும் இராணுவ விவகாரங்களில் அமெரிக்காவையே சார்ந்திருக்கும் நிலைப்பாட்டை மேற்கொண்டு வருகின்றன. தங்களின் பொருளாதார சரிவிற்கு காரணமானவன் அமெரிக்கா தான் என்று தெரிந்த நிலையிலும் அவனுடன் இராஜிய உறவுகளை மேற்கொண்டு வருகின்றன. நம் முஸ்லீம் நாடுகளின் மீது படையெடுப்பது, அப்பாவி முஸ்லிம்களை கொள்வது, மக்களின் வாழ்வாதாரத்தை பறிப்பது போன்ற பாதக செயல்களில் ஈடுபடும் இந்த அமெரிக்காவுடன் தான் தங்களின் நெருக்கத்தையும் தங்களின் பாதுகாப்பையும் பலப்படுத்திக்கொள்ள முஸ்லீம் நாடுகள் போட்டிபோடுகின்றன. இன்னும் இவர்களுக்கு எதிராக எச்சரிக்கை மணி ஒலித்து தாங்கள் தயாரிப்புடன் இருப்பதாக சொன்ன தலைவர்களும் தங்களுடைய நாட்டில் இன்றும் அமெரிக்காவின் தளவாடங்களை அனுமதித்து, அமெரிக்காவின் சார்பாக பிராந்தியங்களில் போர் நிகழ்த்தி, அவனுடன் இராஜிய, பொருளாதார, இராணுவ ரீதியிலான நட்புறவை இன்றும் தொடர்ந்துகொண்டு வருகிறது.

அல்லாஹ்வின் மார்க்கத்தை நிராகரித்து அவனுடைய கட்டளைகளுக்கு மாறுசெய்யும் இந்த ஆட்சியாளர்கள் ஆட்சியில் உள்ள காலமெல்லாம் முஸ்லீம் உம்மத்தின் துயரம் என்றுமே குறையப்போவதில்லை. நேர்மையான கிலாஃபா ராஷிதாவின்  தலைமையின் கீழ் மட்டுமே இன்று உலக நாடுகளின் வளங்களை உறிஞ்சிக்கொண்டிருக்கும் மேற்கத்திய காலனியாதிக்க நாடுகளின் கொட்டத்தை ஒடுக்கமுடியும்; பொருளாதார நலத்திட்ட உதவிகள் என்ற பெயரில் வட்டியில் மூழ்கடித்துக்கொண்டிருக்கும் நிறுவனங்களை நம் நிலங்களிலிருந்து துரத்த முடியும்; தங்கத்தையும் வெள்ளியையும் அடிப்படையாக கொண்டு நிலையான மற்றும் உறுதியான பொருளாதார அமைப்பை நிறுவ முடியும். தன்னை தற்காத்துக்கொள்ள உலக நாடுகளை    பொருளாதார நெருக்கடியில் சிக்கவைக்கும் அமெரிக்கா மற்றும் இதர காலனியாதிக்க நாடுகளின் முகத்திரையை உலகிற்கு தோலுரித்துக்காட்டி உலகில் நீதியையும் அமைதியையும் நிலைநாட்டும் கிலாஃபா அரசின் வருகை உலகிற்கு நல்வரவாக அமையும் – இன்னும் அது உலகில் தற்போது நிலவும் குழப்பங்கள் அனைத்தையும் நீக்கும், அல்லாஹ் சொல்வதை போல்,

“இன்னும், பூமியில் குழப்பம் செய்ய விரும்பாதே; நிச்சயமாக அல்லாஹ் குழப்பம் செய்பவர்களை நேசிப்பதில்லை”.  (சூரா அல் கஸஸ் 28:77 )

Comments are closed.