சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

இத்லிப்: அரபுப் புரட்சியின் கடைசி கட்டம்.

செய்தி :

போரின் ஒலி சிரியாவிற்கு எதிரான போரில் மீண்டும் அடித்துக்கொண்டிருக்கிறது. பஷாருல் அசாத்தின் படைகளும், மாஸ்கோ மற்றும் தெஹ்ரானில் உள்ள அவனது தோழர்களும் இந்த 7 வருட போரின் இறுதி நிலைப்பாட்டைக் ஒழிக்க தங்களை தயாராக்கி கொள்கிறார்கள். சிரியாவில் நடத்தப்படும் விமான தாக்குதல்கள் மற்றும் படைகளின் அசைவுகள் பற்றிய தினசரி செய்திகள் கேட்கப்படுகின்றது. துருக்கி நடந்துகொண்டிருக்கும் தாக்குதலை விமர்சித்துள்ளது, அதேப்போல் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தினால் தான் தலையீடும் என்ற அச்சுறுத்தல் அமெரிக்க கொடுத்துள்ளது. இந்த போரில் பங்கு பெற்ற அனைவரும், அவர்களின் உண்மையான நோக்கங்களை மறைத்து, உண்மையிலேயே அவர்கள் செய்கின்ற குற்றங்களைக் கவிழ்ப்பதற்காக ஒவ்வொருவரும் ஒரு கதை விளக்குகின்றனர். ‘’’போரில் முதல் பாதிப்பு அடைவது உண்மையே’’’ என்பது நமக்குத் தெரியும், இந்த உண்மையை கற்பனையிலிருந்து பிரித்துக் காட்டுவது மிக முக்கியமானது.

கருத்து :

சர்வாதிகாரி பஷாருல் அசாத்திற்கு எதிரான கிளர்ச்சிக் குழுக்களுக்கு உதவுவதைப் போல் எர்டோகனும் அவரது நெருங்கிய நண்பர்களும் எப்போதும் தங்கள் நடவடிக்கைகளை முன்வைத்துள்ளனர். எழுச்சியின் ஆரம்ப நாட்களிலிருந்தே சிரிய இராணுவத்தில் இருந்த துரோகிகளை பிரித்தெடுத்து, அவர்களுக்கு பயிற்சி அளித்தது சுதந்திர சிரியா இராணுவமாக(FSA) அவர்களை மீண்டும் அனுப்பியது துருக்கி அரசு. Operation Shah Euphrates மற்றும் Euphrates Shield ஆகியவற்றின் மூலம் வட சிரியா மற்றும் இத்லிப் ஆகிய இடங்களில், துருக்கி ஒரு இராணுவ தளத்தை நிறுவியுள்ளது, இன்னும் பல தளங்கள் உள்ளன (இவை வெறுமென கண்காணிப்பு முகாம்கள் என்று கூறியது). ஆனாலும் சிரியாவின் ஆட்சியை எதிர்த்து போராடும் குழுக்கள் அல்லது முஸ்லீம்களை உதவுவதில் துருக்கியின் பங்கு மிக குறைவாக தான் இருந்தது. எந்தவொரு கிளர்ச்சிக் குழுவை கனமான ஆயுதங்களையோ அல்லது தரை மற்றும் வான் ஏவுகணைகளையோ துருக்கி வழங்கவில்லை, மாறாக தன் குறுகிய இலக்குகளை அடைய அக்குழுக்களை பயன்படுத்தியது. அலெப்போ நகரத்திற்கான போரில், கிளர்ச்சி குழுக்களை அங்கிருந்து வெளியேற்றவும், வடக்கு குர்திஸ் பகுதியிலுள்ள யூஃப்ரேட்ஸ் ஷீல்ட் நடவடிக்கையில் குர்துகளிடம் போரிடவும் அவர்களை கட்டாயப்படுத்தியது. இது அலெப்போவிலிருந்த கிளர்ச்சியாளர்களின் சக்தியை பலவீனப்படுத்தியது, மேலும் நகரத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. இதற்கு முன்பே துருக்கி, ரஷ்யா மற்றும் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்திய மோதல் அல்லாத (de-escalation) ஒப்பந்தத்துடன் ஒத்துழைக்க இத்லிபின் கிளர்ச்சியாளர்களை தூண்டியது. 

இத்லிபிற்கான எந்த ஒரு இராணுவ தீர்வும் பேரழிவு என்பதை துருக்கி வலியுறுத்திய விஷயமானது, அது மக்கள் பெரும் படுகொலைக்கு வழிவகுக்கும் என்பதற்காக அல்ல, மாறாக மற்றொரு காரணத்திற்காக தான் என்பது துருக்கி அதிகாரியின் வாயிலாக வந்தது. 14 செப்டம்பர் அன்று துருக்கிய ஜனாதிபதி பேச்சாளர் இப்ராஹிம் கலின், பிரான்ஸ் ஜெர்மனி மற்றும் ரஷ்யாவின் பிரதிநிதிகளுடன் சந்திப்பு கூட்டத்தில் கூறும்போது, ‘’எல்லோருடைய பொதுவான முடிவு என்னவென்றால்  இராணுவ தீர்விற்கு பதிலாக அரசியல் ரீதியாக தீர்வு இருக்க வேண்டும்’’. இத்லிப் மீது தாக்குதல் நடத்தும் விளைவுகள் மிகவும் தீவிரமாக இருக்கும், மேலும் அது மனிதாபிமான நெருக்கடிகளையும் மீண்டும் அகதிகள் மற்ற இடங்களில் குடியேறுபவையும் ஏற்படுத்தும் என்ற ஒரு பொதுவான ஒருமித்த கருத்து உள்ளது, என்று அவர் கூறினார். ‘’நிச்சயமாக, குடியேற்றத்தின் புதிய அலை துருக்கியில் மட்டும் சுமையாகாது. இது துருக்கியிலிருந்து ஐரோப்பாவரை நெருக்கடிகளின் ஒரு புதிய சங்கிலியை ஏற்படுத்தக்கூடும்’’. இதிலிருந்து தெளிவாக புரிவது என்னவென்றால் துருக்கியின் கவலையானது குஃப்பார்களால் சிரியாவின் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுவதை விட, தாக்குதல்களால் அகதிகளின் குடியேற்றம் தன் நாட்டில் ஏற்படும் என்பதாகும். மேலும், ரஷ்ய வான்வழி தாக்குதல்கள் அங்குள்ள தரைப் படைகளை தரைமட்டமாக்குவது வரவிருக்கும் நில ஆக்கிரமிப்பிற்காக தான் என்பதை உறுதிப்படுத்துகிறது.

சிரிய கடற்கரையில் ரஷ்யாவின் 25 கப்பல்கள், போர் விமானம் மற்றும் ‘’மார்ஷல் உஸ்டினோவ்’’ என்ற ஏவுகணை கப்பல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு கடற்படை கப்பலை திரட்டியுள்ளது. இவை அனைத்தும் கடற்படை பயிற்சிகளில் தொடர்சியான முறையில் செய்துள்ளன. கிரெம்ளின் செய்தித் தொடர்பாளரான டிமிட்ரி பெஸ்கோவ், இப்பயிற்சிகளை நேரடியாக இத்லிபுடன் தொடர்புடியவை என்று ஒப்புக்கொண்டார். கிரிமியாவில் உள்ள ரஷ்யாவின் ‘’செவஸ்டோபோல் கடற்படை’’ தளம் சிரியாவிலிருந்து 600 மைல்கள் தாண்டி உள்ளது, கிரிமியாவிற்கும் சிரியாவிற்கும் இடையில் துருக்கி உள்ளது. இந்த போர் இயந்திரம் அனைத்தும் போஸ்பொரஸ் வழியாக தான் சிரியாவுக்கு வந்தடைந்துள்ளது. குஃப்பாரின் படைகளை அனுமதித்த துருக்கிய தலைவர்கள், கிளர்ச்சி குழுக்களை ஆதரிப்பதாக வலியுறுத்துகின்றனர். செயல்பாட்டு விவரங்களில் வேறுபாடுகள் இருந்தாலும், சிரியாவில் உள்ள மற்ற நாடுகளின் ஒட்டுமொத்த இலக்குகளை துருக்கிய தலைவர்கள் ஆதரித்துள்ளனர். வரவிருக்கும் படுகொலைப் பற்றி ஜெருசலேத்தில் நடந்த ஒரு செய்தி மாநாட்டில் அமெரிக்கா தெளிவாக கூறியது. அதில் ஜான் போல்டன் வெளிப்படுத்தியதாவது: “அசாத் இரசாயன ஆயுதங்களை மீண்டும் பயன்படுத்தலாம் என்ற சாத்தியப்பாடு பற்றி நாம் நிச்சயமாக கவலை கொண்டுள்ளோம்”..  “இங்கு எவ்வித குழப்பமும் இல்லை: சிரிய ஆட்சி இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துகையில், நாம் மிகவும் வலுவாக பதிலளிப்போம், அவர்கள் இதைப் பற்றி நீண்ட காலமாக சிந்திக்க வேண்டும் என்று போல்டன் கூறினார். ரஷ்யா, ஈரான் மற்றும் அசாத்போன்ற மூவரும் முற்றுகை, பட்டினி, சரணடைதல் போன்ற தந்திரோபாயங்கள் பயன்படுத்தியும் மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் உள்கட்டமைப்புகளை கண்மூடித்தனமான தாக்குதல்களாலும் சிரிய மக்களை தாக்கியுள்ளன. ஆனால் அமெரிக்க அதிகாரிகளின் செயல்பாடு, அசாத் படைகள் இரசாயன ஆயுதங்களின் பயன்பாடுகளை குறைகூறுவதில் மட்டும் இருந்தது.இதே இரசாயன ஆயுதங்களை பல முறை அவர்கள் மக்கள் மீது பயன்படுத்திய போதும், அமெரிக்காவின் நடவடிக்கை வெறுமனே அச்சுறுத்தல்கள் கொடுப்பதை தவிர வேறு ஒன்றுமில்லை. ஏழு ஆண்டுகளின் போருக்குப் பின்பும்,அசாத் ஆட்சியை விமர்சிப்பதை தவிர வேறு எதையும் செய்யாமல் இருப்பதே அமெரிக்க கொள்கை ஆகும். எல்லா  சூழ்நிலையிலும் சிரிய ஆட்சிக்கு மறைமுகமான ஆதரவு அமெரிக்க அளித்துள்ளது என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை 2015-ல் நாட்டின் பெரும்பகுதியை இழந்துவிட்டாலும், இப்போது இத்லிபை திரும்ப பெற்றால் பஷார் அல்-அசாத் பெரும் பிரச்சார வெற்றியைக் கொண்டாடுவான். அவனது ஆட்சியின் சட்டபூர்வமான அடையாளமாக இந்த வெற்றியை பயன்படுத்துவான். சிரியா, ஈரான் மற்றும் ரஷ்யா தங்களது குற்றங்களை மறைக்க இத்லிபில் உள்ள பயங்கரவாதிகளுடன் போரிடுவதாக தொடர்சியாக பிரச்சாரம் செய்கின்றனர். அதே நேரத்தில் சிரியா மற்றும் துருக்கியின் இலக்குகள் எதிரானவை என்று அசாத் கதைக்கட்டுகிறான்.  தொடர்ந்து எர்டோகனை தீவிரவாத குழுக்களுக்கு ஆதரவு தருவதாக குற்றம் சாட்டி, ‘அவர்கள் நாங்கள்’  என்று துருக்கியுடன் தன்னை பிரித்துகாட்டி கதையை உருவாக்கினான். எர்டோகனும் அசாதும் பல பிரச்சினைகளில் நேருக்கு நேர் சந்திக்காமல் இருந்தாலும், இவ்விருவர் கிளர்ச்சியாளர்களின் (பயங்கரவாத) குழுக்களின் பிரச்சனையில் ஒரே பக்கத்தில் உள்ளனர், குழுக்களை சமாளிக்கும் முறையில் மட்டும் தான் வேறுபாடு உள்ளது.

ஆனால் இத்லிபை திரும்ப மீட்டுக்கொள்வது எளிதல்ல. நாட்டின் தெற்கே உள்ள பல சமீபத்திய இடங்களை விட இது மிகவும் கடினமாகவும் சிக்கலாகவும் இருக்கும். அண்மைய மாதங்களில் சிரிய இராணுவம் கைப்பற்றிய தாரா, கிழக்கு கௌதா மற்றும் குனிட்ரா போன்ற தெற்கிலுள்ள பகுதிகளை விட கடினமாகும். ஏனெனில்,  தெற்கில் பிரசங்கிக்கப்பட்ட பல போர்நிறுத்தங்கள் இந்த பகுதிகளிலிருந்து கிளர்ச்சியாளர்களின் பாதுகாப்பான இடத்திற்கு  இத்லிப் வழியாக சென்று அங்கு சேர்ந்துள்ளதால், கிளர்ச்சியாளர்களின் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்டது. தெற்கு சிரியா போர்களில் போராளிகளை எதிர்கொண்டதை விட இத்லிபில் மிக அதிக எண்ணிக்கையிலான போராளிகளை அசாத் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். மேலும், இந்தப் போர் இரத்தக்களரியாகவும், விலை கொடுக்கக் கூடியதாகவும் மற்றும் மிகவும் குறைவான கணிக்கக்கூடியதாகவும் இருக்கும். அசாத் சமீபத்தில் நாட்டின் பெரும்பகுதிகளை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த போதிலும், அவரது இராணுவத்தின் கணிசமான பிரிவானது தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தகுதியுள்ளவர்களாக இல்லை,ஏனெனில் அப்பிரிவு முக்கியமான பகுதிகளில் நிறுத்தவைக்கப்பட்ட கடமைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. ஆகவே,அசாத்தின் மிகவும் அனுபவம் வாய்ந்த மற்றும் நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட படைகளை கொண்ட சிரிய இராணுவத்தை கடுமையாக பாதிக்கும்.அதன் வளங்களின் வரம்பை அறிந்த கிளர்ச்சியாளர்களை மற்ற பிராந்தியங்களில் உள்ள அசாத் ஆட்சியை சவால் செய்ய ஊக்குவிக்கும்,

எனவே, சிரியாவின் எதிர்காலம் சிரியா மக்களின் கைகளில் இருந்து அகற்றப்பட்டுவிட்டது. சுற்றியுள்ள பிராந்திய சக்திகளும், உலக சக்திகளும் சிரியா நாட்டின் பிராந்திய கட்டுப்பாட்டுக்கு போட்டியிடுகின்றன. இந்த 7 ஆண்டுகால மோதல்களுக்கான இறுதி தீர்வு தீர்மானிக்கவும் மற்றும் நாட்டின் செல்வாக்கை தக்க வைத்துக் கொள்ளவும் இவர்களை வழிவகுக்கிறது. முஸ்லீம் உலகத்தை இத்லிபின் வரவிருக்கும் படுகொலைக்கு உதவுவதற்கும், ஆதரவு அளித்ததற்கும் இது ஒரு பெரும் அவமானம். குஃப்பார் ரஷ்யா மற்றும் அமெரிக்காவுடன் இரகசியமாக சேர்ந்து இத்லிபின் நாசத்தை நிஜமாக்கி, இத் துரோகத்தின் முன்னணியில் இருந்த நாடு துருக்கி ஆகும்.

அத்னான் கான்

Comments are closed.