சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

செய்திப்பார்வை 12.09.2018

தலைப்புச்செய்திகள் :

1.பிரான்சில் இஸ்லாம்.

2.சிரியா மீது அமெரிக்காவின் போர் மேகம்.

3.பொருளாதார சரிவை சமாளிப்பதில் பாகிஸ்தானில் குழப்பம்.

 

விவரங்கள் :

1.பிரான்சில் இஸ்லாம்

பிரான்சில் இஸ்லாமிய இயக்கங்களை (சங்கங்களை) நிர்வகிக்க அதற்கு பணம் செலுத்த “ஹாலல் வரி” ஒன்றை பிரான்ஸ் அரசு சுமத்த வேண்டும் என்று, பிரெஞ்சு அதிகார உயர்மட்ட பொருளாதார (சிந்தனைக்) குழு தனது அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது.

‘இஸ்லாமிய தொழிற்சாலை’ என்ற தலைப்பில் வெளியான அறிக்கை முலம் இஸ்லாமிற்கும், பிரான்சிற்கும் இடையிலான உறவுகளை மீளமைக்க முனைவதற்கு பிரஞ்சு அதிபர் இம்மானுவல் மேக்ரோனை அந்தக்குழு பரிந்துரைத்துள்ளது.

1980 களில் இருந்து, பிரஞ்சு அரசியல்வாதிகள் புலம்பெயர்ந்தோரின் ஒருங்கிணைப்பை நிர்வகிக்கும் நோக்கத்துடன் “பிரான்சில் இஸ்லாம்” அடிப்படியிலான அமைப்பு ஒன்றை உருவாக்க முயன்றனர்.

பிரான்சில் இளைஞர்களிடையே குறிப்பாக முஸ்லீம்களிடையே ஸலஃபிகள் ““செல்வாக்கு பெற்று விளங்குகின்றனர்” என அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். மேலும் “இஸ்லாமிய தொழிற்சாலை” என்ற கருத்தின்படி, ஸலஃபி கொள்கைகளுக்கு சவாலாக “முஸ்லீம் மத சொற்பொழிவை” பிரான்ஸ் அதிகப்படுத்த வேண்டும்.

2.சிரியா மீது அமெரிக்காவின் போர் மேகம்.

தெற்கு இத்லிப்பில் ரஷ்யாவின் இராணுவ துருப்புகள் படையெடுப்பிற்கு தயாராகின்றன. மற்றும் பஷர் அல்-அசாத்தின் படைகள் கூட்டு நடவடிக்கைக்கு தயாராகி வருகின்றன. சிரியாவின் இத்லிப் மாகாணத்தின் நிலைமையை சமீபத்திய அமர்வுகளில் ஐ.நாவில் உரையாற்றிய அமெரிக்க தூதர் நிகி ஹேலி, ரஷ்யா மற்றும் ஈரான் ஆகியோர் மாகாணத்தில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சிரிய இராணுவ படைகளுக்கு உதவியாக தாக்குதலைத் தொடர்ந்தால் “பயங்கரமான விளைவுகளை” எதிர்கொள்வார்கள் என்று எச்சரித்தார்.

சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் இறுதியாக இத்லிப் மட்டுமே உள்ளது. இந்நிலையில் பிரதான கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இத்லிப் மட்டுமே உள்ளதால், அது சிரியாவின்  எழுச்சியை வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டுவருகிறது. இத்லிப்பில் நடைபெறும் எந்த நகர்வுகளையும் அவர்கள் எதிர்ப்பதாக அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. ஈரான் மற்றும் ரஷ்யா “இரத்தம் சிந்தும் இராணுவ வெற்றியில் ஆர்வம் கொண்டவர்கள்” என்றும் மேலும் அவர்கள் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தினால் அமெரிக்க இராணுவம் அதற்கு தக்க  பதிலடியை தொடர்ந்து கொடுப்பதற்காக செயல்படுவதாகவும் ஹேலி கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இராணுவ தாக்குதல் என்பது “படுகொலை” என்று அவர்கள் நம்பினால், அதற்கு அமெரிக்க இராணுவ பதிலடி கண்டிப்பாக  நடக்கக்கூடும் என்று அவர் பரிந்துரைத்தார்.

அமெரிக்கா எப்போதும் முரண்பாடாக செய்ததை தொடர்ந்து செய்து வருகிறது. அனைவரையும் நீங்கள் விமர்சனம் செய்யுங்கள், ஆனால் யாருக்கும் எதிராக எதுவும் செய்யாதீர்கள். இரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவதால் அல்-அசாத் மற்றும் ரஷ்யாவை  அச்சுறுத்தும் அமெரிக்கா, அவர்கள் மூலம் மற்ற நடவடிக்கைகள் அனைத்தையும் திறம்பட செய்து முடிக்கிறது.

3.பொருளாதார சரிவை சமாளிப்பதில் பாகிஸ்தானில் குழப்பம்.

புதிதாக உருவாக்கப்பட்ட பொருளாதார ஆலோசனைக் குழு பாகிஸ்தானின் கடன் நெருக்கடியைத் தீர்க்க தீவிர இறக்குமதி கட்டுப்பாடுகளை உள்ளடக்கிய ஒரு சுதந்திரமான அணுகுமுறையை பரிந்துரைத்துள்ளது. அதன் வளர்ந்து வரும் பொருளாதார நிதி நெருக்கடியை எவ்வாறு சமாளிக்கலாம் என்பதை பாகிஸ்தான் அரசாங்கத்தால் திடமாக தீர்மானிக்க முடியவில்லை. பாகிஸ்தான் முக்கிய பொருளாதார (கடன்) ஆதாரமாக சீனா உள்ளது, ஆனால் இஸ்லாமாபாத், கடன் பொறியில் சிக்கி விழுந்துவிடுவமோ என்ற கவலையில் உள்ளது.

பிரதமர் இம்ரான் கான் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து மற்றொரு கடனை பெற விரும்பவில்லை என்று உறுதியளித்தார், ஆனால் கடன் வாங்க (விரும்பும்) வாய்ப்பு மட்டும் இன்னும் வெளிப்படையாக உள்ளது, இப்பொழுது அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது, அது பாகிஸ்தான் தன்னைதானே பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அமெரிக்கா இனிமேல் யாரையும் தாங்காது என்று கூறிவிட்டது. இம்ரான் கான் வாக்குறுதிப்படி புதிய பாகிஸ்தான் செயல்படும் ஆனால் அது (முதலாளித்துவ) பொருளாதாரமயமாக்காலாகவே இருக்கும்.

Comments are closed.