சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

அமெரிக்காவும் நேட்டோ நாடுகளும் ஆப்கானை இராணுவ தாழ்வாரமாக பயன்படுத்துவது ஏன் ?

செய்தி :

ஆப்கான் இராணுவ அமைச்சகம் கூறியதாவது, ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் மற்ற தீவிரவாத குழுக்கள் தொடர்ந்து தங்களின் நடவடிக்கைகளை விரிவுபடுத்தி உலகின் மற்ற பகுதிகளை அச்சுறுத்துகின்றனர்.”

இதற்கு முன்னர் பிரிட்டன் இராணுவ அமைச்சகம், தங்களுடைய ஆப்கான் விஜயத்தின் பொது, தீவிரவதை குழுக்கள் இங்கிருந்து பிரிட்டன் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளுக்கு அச்சுறுத்தல் கொடுப்பதாக கூறியது. ஜெனரல் ஸ்காட் மில்லர், காபூல் நகரில் கட்டுப்பட்டு தலைமையை மாற்றும் நிகழ்ச்சியில் மேலும் கூறியதாவது, ஆப்கான் மூலம் உலகை அச்சுறுத்தல் இருக்க தீவிரவாதிகள் மீது தொடர்ந்து அழுத்தம் இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்றார். மறுபுறம், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹமதுல்லாஹ் மொஹிப், அதே நிகழ்ச்சியில், நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் என்றார். மேலும் நாம் ஒன்றாக தீவிரவாதத்தை ஆப்கான்  பகுதியில் இருந்து அகற்றுவோம் என்றார்.

கருத்து:

இந்த கங்காணி ஆட்சியாளர்களும் அவர்களுடைய எஜமான்களும் ஆப்கானில் போரை தொடர்வதை நியாயப்படுத்தி அதே சமயத்தில் அமைதி கோஷங்களும் தாலிபான்களுடன் பேச்சுவார்த்தை என கூறி மக்களை ஏமாற்றுவதும் விசித்திரமாக உள்ளது.

ஆப்கான் வியூகம் குறித்து டிரம்ப் அறிவித்து ஒரு வருடம் ஆகிறது, ஆனால் ஆப்கான் முஸ்லிம்களுக்கு குண்டு மலைகளை தவிர எந்த மாற்றமும் ஏற்படவில்லை.  இந்த வியூகத்தின் விளைவாக பொதுமக்கள் 800 நபர்கள் ஆகஸ்ட் மாதம் மட்டும் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த எண்ணிக்கை , கடந்த ஜூலை மாதம் முதல் பெரும் அதிகரிப்பை கண்டுள்ளது, அதனை கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டுக்கூட பார்க்க இயலாது, கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 5000 குண்டுகள் ஆப்கானை தாக்கியுள்ளது. இதற்கு காரணம் அமெரிக்காவும் நேட்டோ படைகளும் முஸ்லிகளுடன் இப்பகுதியில் போராடிக்கொண்டு விருப்பத்தை விளக்குகிறது. மேலும் சீனா மற்றும்  ரஷ்யாவுடனும் இவர்கள் போராடிக்கொண்டிருக்கின்றனர்.

அமெரிக்கா, ஆப்கானை பிளாக் வாட்டர் போன்ற தனியார் பாதுகாப்பு நிறுவனங்களிடம் ஒப்படைப்பது குறித்து விவாதிக்கின்றனர், இதன் மூலம் தீவிரவாதிகளுடனான அமெரிக்க உறவை இந்த நிறுவனங்கள் மூலம் பூர்த்தி செய்து கொள்ளலாம்.

அமெரிக்க அரசியல்வாதிகள், மற்றும் இராணுவ அதிகாரிகள் தீவிரவாத குழுக்களை காரணம் கூறி போரை தொடர்ந்தாலும், சில நேரங்களில் தங்களுடைய இழிவான இலட்சியத்தை வெளிப்படுத்துகின்றனர். சமீபத்தில் முன்னாள் அமெரிக்க ராணுவ தளபதி ஜெனரல் ஜான் நிக்கோலஸன் ஒரு பேட்டியில், “ரஷ்யா ஆப்கானில் தங்களுடைய இராணுவ சாதனைகள் மற்றும் பல ஆண்டு கால இராணுவ முன்னேற்றத்தை தடை செய்ய முயற்சிக்கிறது என்பதை நங்கள் அறிவோம்” என்றார். மேலும் ரஷ்யா, அமெரிக்க மற்றும்  மத்திய ஆசிய கூட்டாளிகளுடன் விரிவை உண்டாக்க ரஷ்யா சந்தர்ப்பத்தை எதிர்நோக்குகிறது எனபது அனைவரும் அறிந்ததே என்றார்.

முன்னர், அமெரிக்கா,ரஷ்யா தாலிபான்களுக்கு ஆயுதங்களை வழங்குவதை குற்றம் சாட்டியுள்ளது, இந்த குற்றத்தை ரஷ்யா மறுத்துள்ளது ஆனால், தாலிபனுடனான தங்கள் அரசியல் உறவை அது துண்டித்தது கிடையாது.

எனவே, தீவிரவாத குழுக்களை காரணம் கூறுவது வெறும் சாக்காகும், உண்மையில் அமெரிக்காவும் நேட்டோ படைகளும் ஒன்றாக நின்று உண்மையான முஸ்லிம்களுக்கான அரசை வர விடாமல் தடுக்கவும், ஆப்கானிலுள்ள வளங்களை சுரண்டவுமே அங்கிருக்கின்றனர்.

தாலிபான் அமெரிக்க மற்றும் மற்ற நாடுகளுடன் பேச்சுவார்த்தையை ரஷ்யா செப்டம்பர் மாதம் அறிவித்திருந்த நிலையில் இது நிகழ்ந்துள்ளது. ஆனால் இந்த பேச்சுவார்த்தையை ஆப்கான் அதிபர் அஷ்ரப் கனி மறுத்ததால் இந்த பேச்சுவார்த்தை நடக்கவில்லை.

18 வருட ஆக்கிரமிப்புக்கு  பிறகும் அமெரிக்கா நாம் போரின் தொடக்கத்தில்தான் உள்ளோம் என கூறுகிறது. ஏனெனில், அவர்களின் ஜனநாயக தேர்தல் அங்கு எடுபடவில்லை. ஆனால் அதிகமான பகுதி தாலிபான் கட்டுப்பாட்டிலுள்ளது. இந்த பேச்சுவார்த்தை வெறும் கண் துடைப்பாகவே உள்ளது. ஆப்கான் தலைவர்களில் அதிகமானோர் அங்கு இருப்பவர்கள் மீதும் அமெரிக்க கொள்கைகள் மீதும் அதிருப்தி கொண்டுள்ளனர்.

அவர்கள் தொடர்ந்து  தோல்வியடையும் திட்டங்களால் கோபத்தை வெளிப்படுத்துகின்றனர். மேலும் போதை பொருட்கள், ஊழல், வேலையின்மை, வறுமை,பாதுகாப்பற்ற நிலை, கடத்தல் ஆபாசம் போன்றவை அதிகரித்து கொண்டே போகிறது.

எனினும், அமெரிக்கா ஒரு சில தாலிபான் நபர்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்க முடியும், ஆனால் மற்றவர்கள் தொடர்ந்து இவர்களின் ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடுவர். ஐ.எஸ்.ஐ.எஸ். பற்றிய விஷயங்களை அரசு பெரிதுபடுத்தி அரசு பேசுகிறது, மேலும் இன்னும் அமெரிக்கா அல்கொய்தா பற்றி பேசுகிறது. இதன் மூலம் அமெரிக்கா மோசமான விளையாட்டை விளையாடுவது தெளிவாகிறது.

இதன் விளைவாக, ஆப்கான் மக்கள் ஒரு போதும் அமைதி, பாதுகாப்பு, நியாயம், செழிப்பு போன்றவற்றை இவர்கள் மூலம் அடையமுடியாது. எனவே, அனைத்து ஆயுத குழுக்களும் அமெரிக்காவுக்கு எதிரான அரசியல் குழுக்களும் இந்த ஆக்கிரமிப்பை போரிட்டு மட்டும் வெல்ல முடியாது என்பதை தெளிவாக விளங்க வேண்டும். அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படையில் தங்களின் அரசியல் விழுப்புணர்வை அதிகரிக்க வேண்டும்.

அவர்கள் ஒன்றிணைந்து அறிவார்ந்த முழுமையான இஸ்லாமிய தீர்வை, இந்த சீர்கெட்ட  கொள்கைக்கெதிராக வெளிப்படுத்தவேண்டும். முதலில் அமெரிக்காவுடனான வியூகம் மற்றும பாதுகாப்பு ஒப்பந்தங்கள் ஆகியவற்றிலிருந்து முழுமையாக வெளிவர வேண்டும். பிறகு, முஸ்லீம் வளங்களை பயன்படுத்தி, இந்த எதிர்ப்பை எதிர்த்து, குர்ஆன் மற்றும் சுன்னாவின் அடிப்படையில் உண்மையான  இஸ்லாமிய அரசை இப்பகுதியில் உருவாக்கி முஸ்லிம்களுக்கு பாதுகாப்பை வழங்க வேண்டும். நாம் அல்லாஹ் (சுபு)வின் மார்க்கத்திற்கு உதவினால் மட்டுமே உண்மையாக அல்லாஹ்(சுபு) நமக்கு பதில் உதவி அளிப்பான்.

ஏனெனில் , அல்லாஹ் (சுபு) கூறுகிறான்

(يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِن تَنصُرُوا اللَّهَ يَنصُرْكُمْ وَيُثَبِّتْ أَقْدَامَكُمْ)

“ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி செய்தால், அவன் உங்களுக்கு உதவி செய்து உங்கள் பாதங்களையும் உறுதியாக்கி வைப்பான்” [47 :7]

சைபியுல்லாஹ்  முஸ்தானிர்.

ஹிஸ்புத்தஹ்ரீர் ஆப்கானிஸ்தான்.

Comments are closed.