சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

முதலாளித்துவ பொருளாதார அமைப்பு ஏற்படுத்திய நிதி நெருக்கடி பத்து ஆண்டுகளை கடந்த நிலையிலும் அதன் பாதிப்பை இந்த உலகம் இன்றும் அனுபவித்து வருகிறது…!!!

செய்தி :

2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிதி நெருக்கடி  10 ஆண்டுகளை கடந்த நிலையில்: “அமெரிக்க பொருளாதாரமானது அது  இருக்கவேண்டிய நிலையை விட  கணிசமான அளவில் குறைவாகவே உள்ளது”, அது  “ஒவ்வொரு அமெரிக்கருக்கும் தனது வாழ்நாளிலேயே இல்லாத அளவுக்கு $70,000 அளவுக்கு  தற்போதய வருமான மதிப்பு இழப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை குறிக்கின்றது”, மேலும் “அமெரிக்காவுக்கு மட்டுமே இந்நிலை கிடையாது” என சான்பிரான்சிஸ்கோவின் அமெரிக்க மத்திய ரிசர்வ் வங்கி ஆகஸ்டு 13ம் தேதி அன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

2008 ஆம் ஆண்டில் உலகளாவிய அளவில் ஏற்பட்ட நிதி நெருக்கடியானது நவீன காலத்தில் அனைத்து நிதி சந்தை மதிப்புகளை பொதுவாக சரிவடையச் செய்யும் வகையில் ஏற்பட்ட இரண்டாவது மிகப்பெரிய நிதி நெருக்கடியாகும் என கருதப்படுகிறது.

கருத்து :

கருப்புத் திங்கள் என்று கருதப்படுகிற 1987 ஆம் ஆண்டின் அக்டோபர் 19ம் தேதியானது, வால் ஸ்டிரீட் வரலாற்றிலேயே மிகப்பெரிய அளவிலான சரிவை கண்டது, மேலும் 1987 ம் ஆண்டுக்கும் 2008 ம் ஆண்டுக்கும் உள்ள பொதுவான விஷயம் என்னவெனில் இந்த வீழ்ச்சி குறிப்பிட்ட சில சந்தைகளில் மட்டுமல்லாமல் அது இந்த அமைப்பை சார்ந்ததாக இருந்தது அது பங்குகள், கடன் பத்திரங்கள், தங்கம் மற்றும் பொருட்கள் என அனைத்திலும் பாதிப்பை ஏற்படுத்தி வெகுவிரைவாக உலகளாவிய அளவில் பீதியை கிளப்பியது. 2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட பாதிப்புகள் நம்மிடையே இன்னும் நிலவுகிறது என்றும் ஒட்டுமொத்த உலகும் துன்பத்துக்கு ஆளாகி வருகின்றது எனவும் அறிக்கைகள் கூறுகின்றன. ஐரோப்பியாவில் ஏற்பட்ட கடன் நெருக்கடியானது பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக தூண்டப்பட்டது மேலும் அது ஐரோப்பிய கூட்டமைப்பையும் அவர்களுடைய ஒற்றை நாணய முறையை  தகர்க்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது, அந்த அச்துறுத்தலானது இன்னும் நிலவி வருகிறது. பல்வேறு நிதி சந்தைகள் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டிருப்பதாலும் காகித சொத்துக்கள் எளிதாக தேசங்களை கடந்து செல்லும் வாய்ப்புகள் இருப்பதாலும் ஏதாவது ஒரு நிதி சந்தை அல்லது வங்கி வீழ்ச்சியை சந்திக்கும் போது அது உலகளாவிய அளவில் நெருக்கடியை ஏற்படுத்த காரணமாக அமைகின்றது.

2008 செப்டம்பர் 15 அன்று நிகழ்ந்த  லேமேன் பிரதர்ஸின் சரிவானது நிதி நெருக்கடிக்கான விணையூக்கியாக அமைந்தது, அது அமெரிக்க வங்கிகள் ‘சரிவை சந்திக்க முடியாத அளவுக்கு பெரியதல்ல’ என்பதை வெளிக்காட்டி பீதியை கிளப்பியது. ஒரு மாதத்திற்குள்ளாக, உலக நிதி சந்தையின் சரிவானது அரசுகளுக்கு தமது வங்கிகள் திவாலாகும் நிலையிலிருந்து காப்பதற்காக வங்கிகளில் மூலதனத்தை உட்செலுத்துவதற்கான கட்டாயத்தை   ஏற்படுத்தியது. பிறகு ஐரோப்பிய கடன் நெருக்கடியின் மூலம், மேற்கத்திய பணக்கார நாடுகளும் திவாலாகக்கூடும் என்றும் மற்ற வங்கிகளை போன்று இந்த வங்கிகளையும் மீட்டெடுக்க வேண்டும் எனும் உண்மை வெளியானது. இந்த வங்கிகள் ‘துணை பிரதான அடமானம் (வீட்டுக்கடன்)’ என்று அறியப்படுவதில் அதிக அளவில் முதலீடு செய்து வந்தன, அதாவது வங்கிகள மக்களுக்கு தாங்கள் பெற்ற வீட்டுக்கடனை அடைப்பதில் தவறக்கூடிய அளவுக்கு அபாயகரமான நிலையில் அதிக வட்டி விகிதத்தின் அடிப்படையில்  கடன்களை வழங்கி வந்தன. சரிவுக்கு முன்னர், வீட்டு கட்டுமானத்துறையில் ஏற்ற நிலை இருந்து வந்தது இதன் காரணமாக கடன் பெற்றவர்கள் திவாலாகும் நிலை ஏற்பட்டாலும் அவர்களுடைய வீடுகளின் மதிப்பு அவர்கள் பெற்ற கடன்களை விட அதிகமாக இருக்கும் என்று அறிந்த  காரணத்தால் வங்கிகள் தாம் பாதுகாப்பாக இருப்பதாக உணர்ந்தன. லேமேன் பிரதர்ஸ் மூன்று ஆண்டுகளாக பெருமளவிலான இலாபத்தை அடைந்தது, அதன் பிறகு, வீட்டு கட்டுமான துறை சரிந்த பின்னர், இந்த வங்கியும் சரிவை சந்தித்தது. சான் பிரான்சிஸ்கோவின் மத்திய வங்கி 2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட நெருக்கடியானது “பொருளாதாரத்தின் உற்பத்தித் திறனில் அதிகளவிலான இழப்பை ஏற்படுத்தயுள்ளது” எனக் கூறியது, மேலும் “உற்பத்தியானது நெருக்கடி நிலைக்கு முன்பிருந்த அளவுக்கு திரும்ப வருவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை” எனவும், மேலும் “நிதி சந்தையின் மூலமாக ஏற்படும் தடைகளை தொடர்ந்து அது உற்பத்தித்திறனில் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அறிந்து கொள்வதற்கான பொறிமுறைகள் நம்மிடத்தில் இல்லாதது” ஏன் என்று அவர்கள் அறிந்திருக்கவில்லை எனக் கூறியது.

வருங்காலத்தில் சந்தையின் சரிவு ஏற்படாமல் தடுப்பதற்காக நிதி ஒழுங்குமுறைகள் ஏற்படுத்தப்பட்டது. 2008ல் எடுக்கப்பட்ட துரிதமான நடவடிக்கைகள் அமெரிக்க வங்கிகள் வீழ்ச்சியடையக்கூடிய அளவிலான டோமினோ விளைவிலிருந்து தடுத்து நிறுத்தியது, ஆனால் ஆரம்பத்தில் இந்த வங்கிகளை மீட்டெடுப்பதற்கான சுமையை வரி செலுத்துபவர்கள் ஏற்றுக்கொண்டனர் மேலும் 2010 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட ‘டாட்-ஃபிராங்க்’ சட்டமானது  வருங்கால மீட்டெடுப்புக்காக வரி செலுத்துபவர்கள் மீது சுமையை சுமத்துவதிலிருந்து தடுத்தது, ஆனால் இதுவொரு சோதனை நடைமுறையாகும், மேலும் கடந்த வருடம் டிரம்ப் நிர்வாகம் ‘டாட்-ஃபிராங்க்’ சட்டத்தை நிதி தேர்வு சட்டத்தை கொண்டு மாற்றியமைத்தது, இந்த சட்டத்தை இயற்றியவர்களோ அடுத்த முறை இந்த சட்டம் தம்மை பாதுகாக்கும் என நம்பிக்கை கொண்டருக்கின்றனர். அதிபர் ரூஸ்வெல்ட் ஒருமுறை: “நமது தேசத்திற்கு துணிச்சல்மிக்க,  பரிசோதனைகள் தொடர்ச்சியாக மேற்கொள்வது அவசியமாக இருக்கின்றது. ஒரு வழிமுறையை கையிலெடுத்து முயற்ச்சித்து: அது தோல்வியடையும் போது அதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு வேறொரு வழிமுறையை கையிலெடுத்து முயல்வது இயல்பானதே” என்று கூறினார், இந்த முதலாளித்துவ பரிசோதனை தான் இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது – நாம் அனைவரும் பரிசோதனை எலிகளாக இருந்து வருகிறோம்.

பரிசோதனைக்கான ஒருங்குமுறைகள் இந்த உலகை வருங்காலத்தில் ஏற்படவிருக்கும்  நெருக்கடிகளிலிருந்து காக்க போவதில்லை, ஏனெனில் குறைபாடுகளை கொண்ட வட்டியின் அடிப்படையிலான பொருளாதார அமைப்பிற்கு ஒட்டுப்போட முயல்வது என்பது இந்த பிரச்சனையின் மூலக்காரணத்தை சரிசெய்யாமல்  அப்படியே விட்டுவிடுவதாக இருக்கின்றது. மேலும், ஒழுங்குமுறைகளானது கடந்தகால அனுபவங்களின் அடிப்படையிலேயே அமைக்கப்படுகின்றன, ஆனால் நிதி சந்தைகள் மற்றும் அது தொடர்பான தொழில்நுட்பங்களின் கண்டுபிடிப்புகளோ தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

1987ல் கருப்பு திங்களன்று ஏற்பட்ட பெரும் வீழ்ச்சியானது, புதிய கணினி தொழில்நுட்பத்தின் மூலமாக நிதி பரிமாற்றங்களை துரிதமாக்கி அதன் காரணமாக வீழ்ச்சியை துரிதப்படுத்தி  மேலும் மோசமாக்கியுள்ளது. 2018 ஆம் ஆண்டின் நிதி சந்தைகள் 1987 மற்றும் 2008 ஆம் ஆண்டில் இருந்ததை போன்றதல்ல, மேலும் பல மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகின்றன. சிகாகோவின் மத்திய ரிசர்வ் வங்கி  கடந்த வருடம்: “வருங்கால நிதி சந்தையின் புதுமையில் பிளாக் செயின் தொழில்நுட்பம் முக்கிய ஆதாரமாக விளங்கும் என தெரிகிறது” என கணித்திருந்தது. இவ்வாறு தான் பிட்காயிண் எனும் கிரப்டோ கரண்சி உருவாக்கப்பட்டுள்ளது, ஆனால் பிட்காயிண் மட்டுமல்லாமல், புதுமையான தொழில்நுட்பங்கள் வட்டியை அடிப்படையாக கொண்ட சர்வதேச வர்த்தகங்களை துரிதமாக செயல்பட வழிவகுக்கின்றது, அதேபோல் தேசத்தின் அரசாங்கள் சமாளிக்க முடியாத அளவுக்கு வருங்கால நெருக்கடிகள் மிகவிரைவாக ஏற்படுத்தவும் வழிவகுக்கக்கூடியதாக இருக்கின்றன,  மேலும் அதற்கான விலையை அனைவரும் கொடுக்க வேண்டியதாக இருக்கின்றது.

Comments are closed.