சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

சீன இறைமறுப்பாளர்கள் மேற்கத்திய ஏகாதிபத்தியத்திலிருந்து நம்மை பாதுகாக்க போவதில்லை…!!!

செய்தி :

நியூ யார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தியில் :

நூற்றுக்கணக்கான உய்குர் இன முஸ்லிம்கள் மற்றும் மற்ற முஸ்லிம்களை முகாம்களில் வைத்திருப்பதற்காக சீனாவின் மூத்த அதிகாரிகள் மற்றும நிறுவனங்கள் மீது தடைகள் விதிப்பதின் மூலம்  தண்டிக்கலாம் என அமெரிக்க அதிகாரிகள் பரிசீலிக்கின்றனர்.

இத்தகைய பொருளாதார அபராதம், டிரம்ப் நிர்வாகம் மனித உரிமை மீறல்களுக்காக சீனாவின் மீது எடுக்கும் முதல் நடவடிக்கையாக இருக்கும். அமெரிக்க அதிகாரிகள் சீனாவிற்கு விற்கும் கண்காணிப்பு தொழில்நுட்பத்தை  விற்பதை குறைத்து கொள்ள நாடுகின்றனர்.

சிறுபான்மையின முஸ்லிம்களை நடத்தும் முறை குறித்து சீனாவின் மீது கண்டனம் வெளியிடுவது குறித்த தீர்மானம் வெள்ளை மாளிகையில் பேச்சுவார்த்தையில் உள்ளது. ஆனால் 7  சீன அதிகாரிகள் மீது தடை விதிக்க அமெரிக்க கருவூல செயலாளர் மைக் பொம்பியோ கேட்டு கொண்ட பிறகு கடந்த இரண்டு வாரங்களில், இதனை  விரைவாக செயல்படுத்த ஏற்பாடுகள் செய்யப்படுவதாக தெரிகிறது.

கருத்து :

முஸ்லிம்கள் மேற்கத்தியவர்களை இஸ்லாத்தின் எதிரிகளாக பார்த்து பழகி, அவர்களே ஆக்கிரமிப்புக்கும் முஸ்லிம்களின்  சீரழிவிக்கும் காரணம் எனவும் நம்புகின்றனர்.  சில முஸ்லிம்கள் சீனா மேற்கத்தியவர்களை  காட்டினும் நல்ல நட்பு நாடக இருக்கும் என நம்ப தொடங்கினர். இவ்வாறே இதற்கு முந்தைய தலைமுறை சோவியத் யூனியனை நம்பியது. ஆனால் சமீபத்தில் கிட்டத்தட்ட பத்து லட்சம் முஸ்லிகளை சீனா முகாம்களில் வைத்திருப்பதாக வெளிவந்த செய்தியில் சீனாவின் உண்மை முகம் உலகிற்கு வெளிவந்தது.

கடந்த சகாப்தங்களில் நடந்த மிகவும் மோசமான மனித உரிமை மீறலாக இந்த ஜிங்ஜியாங் பகுதியில் சீனா மேற்கொண்டிருக்கும் இந்த நடவடிக்கை கருதப்படுகிறது.

இந்த முகாம்களிலிருக்கும் சீன முஸ்லிம்கள் தினமும் வகுப்புகளுக்கு கலந்து கொள்ள வற்புறுத்தப்படுகின்றனர், மேலும் இஸ்லாத்தை விடும்படி நிர்பந்திக்கப்படுகின்றனர், மேலும் சீன கலாச்சாரத்தையும் கம்யூனிஸ்ட் சித்தார்ந்தத்தையும் கற்கும்படி வலியுறுத்தப்படுகின்றனர். விடுவிக்கப்பட்ட சில நபர்கள் சீன அதிகாரிகள் நிகழ்த்தும் சித்திரவதைகளை கூறினர்.

சீன அதிகாரிகள் இந்த செயல்முறையை “கல்வியின் மூலம் மாற்றம் ” அல்லது “தீவிரவாத எதிர்ப்பு கல்வி” என கூறுகின்றனர். ஆனால் பெரும்பான்மையான முஸ்லிம்கள் அடைக்கப்பட்டுள்ளனர் எனபதை அவர்கள் ஒப்புக்கொள்ள மறுக்கின்றனர்

இதற்கு முன்னரும் சீனா முஸ்லிம்களுடன் நட்பு பாராட்டியதில்லை குறிப்பாக ஜிங்ஜியாங் பகுதியில்.  முஸ்லிகள் மற்றும சீனர்களின் எல்லையிலிருந்த இப்பகுதி இஸ்லாமிய அரசின் வீழ்ச்சியில் சீனாவால் வலுக்கட்டாயமாக ஆக்கிரமிக்கப்பட்டது, இதற்கே ஜிங்ஜியாங் என பெயர் காரணமாகும். சீனர்களின் இறைமறுப்பு கொள்கையால் இப்பகுதியிலிருக்கும் மக்கள் 1948 ஆம் ஆண்டு மாவோ சேதுங் தலைமையில் நடந்த புரட்சியில் பெரும் துயரத்தை சந்தித்தார்கள். மிகப்பெரிய முஸ்லீம் தொகையை கொண்ட இப்பகுதி சீனாவின் கம்யூனிச அதிகாரிகளால் பெரும் அழுத்தத்துக்கு உள்ளானார்கள்.

மாவோ வின் மறைவுக்கு பிறகு சில விலக்கல்கள் கொடுக்கப்பட்டிருந்தும் தற்போதைய  சீன அதிபர் க்ஸி ஜின்பிங்  மீண்டும் இவர்கள் மீது அடுக்கு முறையை கையாளுகின்றார். சமீபத்தில் ஹுய் முஸ்லிம்கள் நிங்க்ஸியா பகுதியிலிருந்த பள்ளியை இடிக்க முயன்றார்கள், இவர்கள் உய்குர் இனத்தை சாராத உண்மையான சீன குடிமக்களாவர்.

சீனா ஒரு போதும் மற்ற முஸ்லீம் நாடுகளுக்கும் நட்பு நாடு அல்ல. கம்யூனிச சக்திகளான சீனாவையும் சோவியத் நாட்டையும் ஏகாதிபத்திய நாடக பார்த்ததில்லை. ஆனால் சமீபத்திய சீனாவின் நடவடிக்கைகளான நவீன கால பட்டு பாதை திட்டம், கரை மற்றும் பாதை திட்டம் முதலியவை முதலாளித்துவ தன்மைகளை கொண்ட திட்டங்கள் போல் தோன்றுகிறது. முஸ்லீம் நாடுகளுக்கு சீனா அளிக்கும் நிதியுதவி அனைத்தும் அதனுடைய தேவையை பூர்த்தி செய்வதற்காகவேயாகும்.

அல்லாஹ் (சுபு) கூறுகிறான்

(لاَّ يَتَّخِذِ الْمُؤْمِنُونَ الْكَافِرِينَ أَوْلِيَاء مِن دُوْنِ الْمُؤْمِنِينَ وَمَن يَفْعَلْ ذَلِكَ فَلَيْسَ مِنَ اللّهِ فِي شَيْءٍ إِلاَّ أَن تَتَّقُواْ مِنْهُمْ تُقَاةً وَيُحَذِّرُكُمُ اللّهُ نَفْسَهُ وَإِلَى اللّهِ الْمَصِيرُ)

“முஃமின்கள் (தங்களைப் போன்ற) முஃமின்களையன்றி காஃபிர்களைத் தம் உற்ற துணைவர்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம்; அவர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அன்றி (உங்களில்) எவரேனும் அப்படிச் செய்தால், (அவருக்கு) அல்லாஹ்விடத்தில் எவ்விஷயத்திலும் சம்பந்தம் இல்லை; இன்னும், அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களை எச்சரிக்கின்றான்; மேலும், அல்லாஹ்விடமே (நீங்கள்) மீள வேண்டியதிருக்கிறது.” [3:28]

இந்த வசனம் நம்மீது தனிநபர்களாக மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உம்மத்திற்கும் பொருந்தக்கூடிய வசனம். மேற்கத்திய சக்திகளின் ஆக்கிரமிப்பிலிருந்தும், சுரண்டலிலிருந்தும் இறைமறுப்பு சீனாவிடம் சேர்வதில் மூலம் தீர்வு கிடைக்கப்போவதில்லை, மாறாக அல்லாஹ்(சுபு)விடம் திரும்பி, அவனுடைய தீனை முழுமையாக நடைமுறைப்படுத்தக்கூடிய இஸ்லாமிய கிலாஃபா அரசை நிறுவதின் மூலம் மட்டுமே தீர்வு கிடைக்கும். இதன் மூலம் சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் ஜிங்ஜியாங் பகுதி உட்பட ஆக்கிரமிப்பிலிருக்கும் அனைத்து பகுதிகளும் நம்முடைய வலிமையை கொண்டே மீட்க முடியும்.

பாய்க்  நஜாத்.

மத்திய செய்தி ஊடக பிரிவு.

ஹிஸ்புத்தஹ்ரிர்.

Comments are closed.