சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

உக்ரைனின் ஜனத்தொகை நெருக்கடி என்பது  சித்தாந்த குறைபாட்டின் வெளிப்பாடாகும்…!!!

செய்தி :

அரசாங்க புள்ளவிவரங்களின் படி, உக்ரைனிய நகரான டினிப்ரோவானது இனிமேல் ஒரு மில்லியன் மக்கள் தொகையை கொண்ட நகராக இருக்காது, ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் அந்நகரத்தில் ஒரு மில்லியன் மக்களுக்கும் குறைவானவர்களே வசித்து வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது. தற்போது 996,787 மக்கள் மட்டுமே வசித்து வருகிறார்கள்.

அரசாங்கத்தின் புள்ளியியல் துறையின் படி 2018 ஆகஸ்டு முதல் தேதி வரை உக்ரைனின் மொத்த ஜனத்தொகையானது 42,248,100 ஆகும். (ஆதாரம்: https://zn.ua/UKRAINE/dnepr-vybil-iz-chisla-gorodov-millionnikov-295237_.html)

கருத்து :

டினிப்ரோ முதன்முறையாக 1976 ஆம் ஆண்டு ஒரு மில்லியனுக்கும் மேலான மக்கள் தொகையை கொண்ட நகரமாக ஆனது. பிறகு, அதன் ஜனத்தொகையானது சோவியத் கூட்டமைப்பு உடைபடுவதற்கு முன்பு வரை அதிகரித்து அதிகபட்சமாக 1993 ஆம் ஆண்டு 1.2 மில்லியன் மக்கள் தொகையை அடைந்தது. அதன் பிறகு, அதன் மக்கள் தொகை குறைந்து 2000 ஆம் ஆண்டின் முடிவில் ஒரு மில்லியனுக்கும் குறைவான நிலையை அடைந்தது. இது  உக்ரைன், மோதலில் ஈடுபட்ட காரணத்தாலும் அதன் கிழக்கு பகுதியிலிருந்து இடப்பெயர்வு மேற்கொண்ட காரணத்தாலும் டினிப்ரோவின் மக்கள் தொகை மீண்டும் ஒரு மில்லியனை எட்டிய 2017 ஆம் ஆண்டு வரை நீடித்து. கடைசியாக 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மீண்டும் அதன் மக்கள்  தொகை ஒரு மில்லியனுக்கும் குறைவான அளவை அடைந்துள்ளது.

இதில் குறிப்பிட வேண்டிய மிகவும் வருத்தத்திற்குரிய விஷயம் என்னவெனில் நிலையான மக்கள் தொகையை  அதிகரிக்கச் செய்யும் தன்மைகளை இந்த நகரம் கொண்டுள்ளது என்பது தான். டினிப்ரோ உக்ரைனின் மாபெரும் தொழில் மையமாகும். அது வார்ப்பு இரும்பு, உருக்கிய உலோகங்கள், குழாய்கள், இயந்திர சாதனங்கள், பலதரப்பட்ட சுரங்க இணைப்புகள், விவசாய உபகரணங்கள், டிராக்டர்கள், தள்ளு வண்டிகள், குளிர்சாதன பெட்டிகள், பலதரப்பட்ட ரசாயனங்கள் உட்பட இதுபோன்று இன்னும் பல பரந்த அளவிலான பொருட்களை தயாரிப்பதற்கான கனரக தொழிற்சாலைகள் அமைப்பதற்கான வசதிகள் பலவற்றை கொண்டுள்ளது. 1950 ஆம் ஆண்டுகள் முதற்கொண்டு விண்வெளித்துறையில் டினிப்ரோ ஆதிக்கத்தை செலுத்தி வந்தது; கட்டமைப்பு துறையான யுழ்னோயே வடிவமைப்பு பணியகம் மற்றும் யுழ்மாஷ் ஆகியவை உலகளாவிய அளவில் இத்துறை வல்லுனர்கள் மத்தியில் பிரசித்தி பெற்றவை. உற்பத்தியை பொறுத்தமட்டில் தாதுக்களும் தாதுக்களிலிருந்து உலோகங்களைத் தயாரித்தலும் இந்நகரத்துடைய தொழில்துறையின் மையமாகும். டினிப்ரோவானது உக்ரைனின் அதிகாரப்பூர்வமற்ற வர்த்தக தலைநகராகும்.

இதுபோன்ற மக்கள்தொகையில் சரிவானது டினிப்ரோவில் மட்டுமல்லாமல் உக்ரைனின் மற்ற நகரங்களிலும் ஏற்பட்டுள்ளது. இதை “ஐநாவுடைய 2012 -2013 உலக நகரங்கள் குறித்தான அறிக்கையில்” வெளிப்படையாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது, அதன் பிரகாரம் உக்ரைனின் நகரங்களான டினிப்ரோ, டோனெட்ஸ்க் மற்றும் ச(z)போரிழியா ஆகியவை மக்கள்தொகை சரிவில் முன்னணியில் உள்ள ஐந்து நகரங்களாகும். (Source: https://censor.net.ua/n221398).

நிச்சயமாக, டினிப்ரோவில் நிலவும் சூழலானது உக்ரைனில் பொதுவாக நிகழும் போக்கையே பிரதிபலிக்கின்றது. சோவியத் கூட்டமைப்பு வீழ்ச்சியடையும் வரை, உக்ரைனின் ஜனத்தொகை 52 மில்லியனை கடந்து உச்சத்தை அடைந்தது. அதனை தொடர்ந்து வந்த 25 ஆண்டுகளில், அதன் ஜனத்தொகையானது கட்டுக்கடங்காத அளவில் சரிந்து 2018 ஆம் ஆண்டில் 42 மில்லியனை அடைந்துள்ளது. அதன் விளைவாக உக்ரைனின் ஜனத்தொகை 20% அளவுக்கு குறைந்துள்ளது.

மக்கள்தொகை மற்றும் சமூக ஆராய்ச்சி நிறுவனத்தின் (NASU) கணிப்புபடி, கருவுறுதல் விகிதம், வாழ்க்கையின் கால அளவு மற்றும் இடம்பெயர்வு விகிதத்தில் மாற்றம் ஏற்படவில்லை எனில் 2050 ஆம் ஆண்டில் உக்ரைனின் ஜனத்தொகை 32 மில்லியனாக குறைந்துவிடும், மேலும் 60 வயதுக்கும் மேற்பட்டவர்களின் தொகை ஒன்றரை மடங்கு அதிகரிக்கும். மேலும் இந்த தொகைகளானது ஜனத்தொகைக்கான காரணிகளின் கண்ணோட்டத்தை மட்டுமே கொண்டதாகும் இதில் இடம்பெயர்வு காரணிகள் கணக்கில் எடுக்கப்படவில்லை.

குறைந்த அளவிலான பிறப்பு மற்றும் அதிக அளவிலான மரண விகிதங்கள், உக்ரைனுக்குள் தகுந்த சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்பை பெறமுடியாத காரணத்தால் தொழிலாளிகளின் இடம்பெயர்வு, ஊழல், அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரமின்மை, குறைந்த சமூக மற்றும் சுகாதார தரநிலைகள் என இவையனைத்தும் மக்கள்தொகை குறைவுக்கான காரங்களாக கூறப்படுகின்றது.

எனினும், தீவிர விசாரணைக்கு பிறகு, மேலே கூறப்பட்ட அனைத்து காரணங்களும் உலகளாவிய அளவில் பொதுவாக நிகழும் நிகழ்வுகளின் வெளிப்பாடே அன்றி வேறெதுவுமில்லை என்பதை நாம் காண்கிறோம்.

இதன் உண்மையான காரணம் என்னவெனில் ஒரு சித்தாந்தத்தின் மூலம் கட்டமைக்கப்பட்ட அரசியல் இயக்கங்கள் மட்டும் கட்சிகளுக்குள் அனைத்து மக்களையும் ஒருங்கிணைப்பதில் உக்ரைன் கொண்டுள்ள சித்தாந்த குறைபாடு தான்.

சோவியத் கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கு பிறகும் கம்யூனிசத்தை நிராகரித்த பின்னரும், உக்ரைனிய மக்களும் அவர்களுடைய அரசியல் தலைவர்களும் குறைந்தபட்சம் இந்த பிராந்தியத்தின் சக்தியாக உருவாக போதுமான ஆற்றலை கொண்டிருக்கும் வகையில் உக்ரைனுடைய மக்களை தன்னுடன் ஒருங்கிணைக்கக்கூடிய புதியதொரு  கருத்தை தேடி அலைந்தனர்.

சித்தாந்தம் ஒன்று இல்லாத காரணத்தால் அது நிலையான உண்மையான அரசியல் தலைமையின் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளது, அதன் விளைவாக அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரமின்மை ஏற்பட்டுள்ளது.

கடந்த 25 ஆண்டுகளாக, உக்ரைனானது ரஷ்யா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு ஆகிய சர்வதேச சக்திகளுக்கு மத்தியிலான இரக்கமற்ற போராட்டக்களமாக உள்ளது என்பதை அனைவரும் நன்கறிவர். மேலும் இந்த அனைத்து சக்திகளும் உக்ரைனுடைய மக்களையும் அதன் ஆற்றலையும் ஒரு வளத்தை போன்றும் இந்த போராட்டத்தில் அடையப்போகும் வெற்றிக்கோப்பையை போன்று மட்டுமே கருதுகின்றனர்.

ஆகவே, இது போன்ற சூழலில் குறைந்த அளவிலான பிறப்பு மற்றும் அதிக அளவிலான இறப்பு விகிதத்தை நாம் கொண்டிருப்பதும், அயல்நாடுகளுக்கு தொழிலாளர் இடம்பெயர்வு செய்வதும், ஊழல் நிலவுவதும், சமூக மற்றும் சுகாதார தரநிலையில் சரிவு ஏற்படுவதும் இயற்கையானதே.

ஆகவே, அண்மைக்காலத்தில்  உக்ரைனின் பொருளாதார மற்றும் தொழில்துறை ஆற்றலின் அடிப்படையாக விளங்கிய டினிப்ரோ போன்ற நகரங்கள்  காலம் செல்லச்செல்ல உயிரற்ற பாலைவனங்களாக ஆகியுள்ளன. இப்போது கையறுநிலை என்னவெனில் உக்ரைனுடைய மக்கள் கம்யூனிசத்தில் எஞ்சியுள்ளதை அதாவது நவீனகால ரஷ்யாவை கைவிடுவதற்கான நோக்கில் அவர்களிடத்தில் முதலாளித்துவ சித்தாந்தம் முன்வைக்கப்பட்டுள்ளது ஆனால் அந்த சித்தாந்தமானது நிலையான முன்னேற்றத்தை அடையும் விஷயத்தில் தோற்றுப்போயுள்ள கருத்தாகும்.

மூன்றாவது மாற்றமானது, இஸ்லாமிய சித்தாந்தத்தை தழுவுவது, நாம் புரிந்துகொள்ளக்கூடிய சில காரணங்களால் அது உக்ரைனுடைய நிகழ்ச்சி நிரலில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. நிச்சயமாக, இதுபோன்ற அவல நிலையானது முன்னேறிய நாடுகள் என்று கூறப்படும் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா உட்பட மனிதன் உருவாக்கிய அமைப்புகளில் உதவியை தேடும் அனைத்து நாடுகளிலும் நிலவுகிறது.

நபித்துவ வழிமுறையின் அடிப்படையிலான நேர்வழி பெற்ற கிலாஃபத் நிலைநாட்டப்படும் வரை இந்த அவல நிலையானது தொடர்ந்து நீடிக்கும் அது இஸ்லாமிய சித்தாந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்படும் அரசாகும் அது நீதி மற்றும் பொருளாதார முன்னேற்றத்தின் கலங்கரை விளக்கமாக விளங்கும், மேலும் அது பல்வேறு நம்பிக்கைகள் கொண்ட மற்றும் தேசங்களை சார்ந்த மக்கள் ஒரே தேசத்தில் ஒருவருடன் ஒருவர் இணைந்து வாழ்வதற்கான உதாரணமாகவும் விளங்கும்.

Comments are closed.