சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

காசால்லா அரசாங்கத்தின் கவனமின்மை – மனிதர்களை கொள்ளும் சிக்கன்குன்யா வைரஸ்

செய்தி :

சூடானிலுள்ள காசால்லா மாநிலத்தின் தலைநகர் சிக்கன்குன்யா அல்லது கங்காஷா நோய் என்று அழைக்கப்படும் ஒரு கொடிய வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசாங்கம் வழக்கம் போல் அமைதி காக்கிறது இந்த அமைதியானது நோயைப் பற்றி சமூக ஆர்வலர்கள், சமூக ஊடக தளங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, இந்த பிரச்சனையை பொது வெளிக்கு கொண்டு வரும்வரை தொடர்ந்தது.  சமூக ஆர்வலர்கள் மற்றும் சமூக ஊடக தளங்களின் தொடர்ச்சியான தாக்கத்தினால் இந்த பிரச்சினையின் தீவிரத்தை அரசாங்கம் ஒப்புக்கொண்டது.

இந்த நோயின் சீற்றம் அதனால் ஏற்படும் விளைவு மற்றும் அதன் பேரழிவு ஆகியவற்றை சனிக்கிழமை, செப்டம்பர் 22, 2010 அன்று அல் அக்பர் செய்தித்தாள் வெளியிட்டது. அதன்படி, இந்த நோயின் தாக்கம் அதன் பேரழிவின் மதிப்பிடு மற்றும் “சிக்குன்குனியா வைரஸ் தொற்று பற்றி அரசாங்கத்தின் கூற்றுகளை குடிமக்கள் மறுக்கின்றனர் – 4,000 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர், 110 பேர் இந்த நோயால் மரணமடைந்துள்ளனர், பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது … “ஞாயிற்றுக்கிழமை, செப்டெம்பர், 23 ஆம் தேதி அல்-ஜசீரா செய்தித்தாள் தனது தலையங்கத்தில்: “சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையில் வெகுவாக அதிகரித்து வருகிறது எனக் குறிப்பிட்டுள்ளது”. அல் கபார் செய்தித்தாள்: ” காசால்லா அரசாங்கம் நேற்று இரவு ஒரு கர்ப்பிணி பெண் இந்த நோயின் தாக்கத்தால் இறந்த பிறகு, இதே போன்ற பத்திற்கும்  மேற்பட்ட நோயாளிகள் சிக்கன்குன்யா வைரஸ் தொற்று தொடர்பான மாநிலத்தின் இறப்பு எண்ணிக்கை அதிகரித்திருப்பதை ஒப்புக்கொள்கிறது. பாதிப்பு ஏற்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 9,300 என அரசாங்கம் அறிவித்தது அந்த நேரத்தில் 78 முதல் 116 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமற்ற  தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.

கருத்து :

அரசாங்கத்தின் அலட்சியம் பற்றி மக்கள் புகார் செய்தனர், மற்றவர்கள் அதன் அலட்சியத்தை ஒரு சதி என்று கருதினர். ஞாயிறன்று பாராளுமன்றவாதி பைசல் யாஸ் இருந்து ஒரு அறிக்கையை வெளியிட்ட அல்-ஜரிதா செய்தித்தாள்: “மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்களோ அதை அரசாங்கம் செய்திருக்கிறது, அரசு  ஹலபாவிலிருந்து விமானங்களைப் பயன்படுத்தி வைரஸ் பரவுவதற்கு காரணமாகும் கொசுக்களுக்கு எதிராக அவற்றை அழிக்க பூச்சிக்கொல்லி மருந்துகளை விமானம் மூலம் தூவி கொசுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது”.

ஃபைசல், கோழித் தொழிற்துறையின் முதலீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாக்க கவர்னர், பூச்சிக்கொல்லி கட்டுப்பாட்டு விமானங்களின் வரவை தடுத்தததாக குற்றம் சாட்டினார், மேலும் அவர் மனித உயிர் அதிக மதிப்பு வாய்ந்ததா…? அல்லது முதலீட்டாளர்களைப் பாதுகாப்பதா?  எது முக்கியம் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்த கவனக்குறைவு, மக்களின் துன்பத்தை புறக்கணித்து, ஏற்கனவே இந்த பிரச்சனையை உறுதிப்படுத்தி உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் குறிப்பிடப்பட்ட வலிமையான மற்றும் பரிதாபகரமான யதார்த்தத்தை நிராகரிப்பதில் தொடர்ந்து நிலைத்து நிற்கிறது. முஸ்லீம் நாடுகளில் நிறுவப்பட்ட அத்தகைய அரசுகள் மக்களுடைய விவகாரங்களில் அக்கறை கொள்ளவில்லை; ஏனென்றால் இத்தகைய கேடுகெட்ட இழிநிலை அரசாங்கங்கள் இஸ்லாத்தின் அடிப்படையில் நிறுவப்படவில்லை.

மக்களின் விவகாரங்கள், சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்வாதாரங்களைப் பற்றி தீவிரமாக கவனித்துக் கொண்ட ஒரே அரசாங்கம், அல்லாஹ்வின் தூதரின் வழிமுறையின் படி, கிலாஃபா ராஷிதா (சரியான முறையில் கலிஃபாவை வழிநடத்தும்) அரசு மட்டுமே. இந்த குறிப்பிட்ட சூழ்நிலையில், இந்த பாதிக்கப்பட்ட மாநில மக்களை தனிமைப்படுத்தி அவர்களை நோயிலிருந்து நிவாரணம் பெரும் பொருட்டு நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் கொண்ட ஒரு குழுவை அனுப்பி, நோயை முற்றிலும் ஒழித்து, நோயாளிகளுக்கு தகுந்த சிகிச்சை அளித்து போர்க்கால நடவடிக்கையாக இந்த பிரச்சனையை அரசாங்கம் முன்னெடுக்கும். ஏனென்றால், கிலாஃபா அரசு இஸ்லாமிய சட்டங்களுக்கு பொறுப்பானது, அதன் ஆட்சியாளர்களை மக்களின் விவகாரங்களை கவனிப்பதற்காக அழைக்கிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

الْإِمَامُ رَاعٍ وَهُوَ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ

“நிச்சயமாக! உங்களில் ஒவ்வொருவரும் உங்கள் மீது சுமத்தப்பட்ட பொறுப்புக்கு பாதுகாவலர், அவருடைய குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பானவர்”. ஆட்சியாளர்கள் அலட்சியமாகவும், குற்றச்சாட்டுகளிலிருந்து உண்மைகளை மறைப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களது குற்றச்சாட்டுகளை மறைத்து மக்களை ஏமாற்றுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமைப் பொறுத்தவரை, கடுமையான தண்டனைக்கு இட்டுச்செல்லும் ஒரு குற்றமாக இதனை இஸ்லாம் கருதுகிறது

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக

«مَا مِنْ وَالٍ يَلِي رَعِيَّةً مِنْ الْمُسْلِمِينَ فَيَمُوتُ وَهُوَ غَاشٌّ لَهُمْ إِلَّا حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّة»

முஸ்லீம்கள் மீது ஆட்சி செய்வதற்கு அதிகாரம் கொண்ட ஒரு ஆட்சியாளரின் ஆட்சியில் ஒருவர் இறந்துவிட்டால், அல்லாஹ் அந்த ஆட்சியாளருக்கு சொர்க்கத்தை தடை செய்வான்” (ஆதாரம் : புகாரி).

ஹிஸ்புத்தஹ்ரிர் விலாயா சூடான் அல்லாஹ் (சுபு)விடம் நோயாளிகளுக்கு விரைவான நிவாரணமும், இறந்தவருக்கு அதிகமான இரக்கத்தையும் சொர்க்கத்தையும் வழங்குவதற்காக இறைஞ்சி வேண்டிக்கொள்கிறது . ஹிஸ்புத்தஹ்ரிர் சூடான் மக்களை அல்லாஹ்(சுபு)வின் ஆதரவுடன் நபி(ஸல்)  அவர்கள் வழிமுறையில் இஸ்லாமிய ஷரியாவின் ஆதரவுடன், கிலாஃபா ராஷிதாவை ஸ்தாபிப்பதற்காக அழைக்கிறது இதன்மூலம் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றி மக்களை அமைதியான வழியில் வாழ்ந்து அல்லாஹ்வின் பொருத்தத்தை அடைய அழைக்கிறது.

Comments are closed.