சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

மொரித்தானியாவின் அதிபர் இஸ்லாத்திற்கு எதிரான சிலுவை போரில் சேர்ந்துள்ளார்.

செய்தி :

மொரித்தானியாவின் தற்போதைய  அதிபர் முகமது ஒல்து அப்துல் அஜிஸ் என்பவர் இதற்கு முன்னர் இளங்கலை பட்டம் கூட பெறாமல் இருந்த நிலையில் அவரை உருவாக்கியவர்கள் (வளர்த்துவிட்டவர்கள்) அவருக்காக சிபாரிசு செய்து ராணுவ கல்லூரியில் சேர்த்து விட்டது அறிந்த ஒன்றுதான். இவ்வாறிருக்க அவர் ஆகஸ்ட் 6, 2008 ல் மவுரித்தேனியாவின் முதல் அதிபரான சிதி முகமது ஒல்து ஷேக் அப்துல்லாஹ்வை ராணுவ புரட்சி மூலம் ஆட்சி கவிழ்த்தார். அதிபர் பாதுகாப்பு படையின் தலைமை பொறுப்பிலிருந்து தன்னை நீக்கியதற்காக அப்துல் அஜிஸ் இந்த ராணுவ புரட்சியை நடத்தி ஆட்சியை கவிழ்த்தார். இத்தனைக்கும் அந்த அதிபர் அப்துல் அஜீஸை மொரித்தானியாவின் ராணுவ பதிவியில் ஜெனரல் என்ற உயர் பதவியில் அமர்த்தியும், அதிபர் பாதுகாப்பு படையின் தலைவராகவும் நியமித்து இருந்தார். பதவி ஆசை, மக்கள் மற்றும் நாட்டை கட்டுபடுத்த வேண்டும் என்ற பேராவல் போன்றவைகள் தாம் அப்துல் அஜீஸ் ராணுவ புரட்சி செய்து ஒல்து ஷேக்கை நீக்கியதற்கு காரணமாகும். தற்பொழுது, மூன்றாவது முறையும் அதிபராக வருவதற்கு அவர் மொரித்தானியாவின் அரசியலமைப்பில் மாற்றம் கொண்டு வர உள்ளார். அடக்குமுறை படுத்தவும் வலுக்கட்டாயமாக தன்னுடைய கட்டுபாட்டில் விஷயங்களை கொண்டு வரவும் ‘இஸ்லாமிய தீவிரவாதம்’ என்ற ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார். அவர் கூறுகையில் ‘மதத்தில் அரசியலை சேர்ப்பதின் விளைவு ‘இஸ்ரேலில்’ நடந்த கொடுமையை விட மோசமானதாகும், அரபு நாடுகள் அழிக்கப்படதற்கு பாத்திஸ, நாசரிஸ, கம்யூனிஸ கொள்கைகள் காரணம் இல்லை, மாறாக  இதற்கு முழு காரணம் அரசியல் இஸ்லாம் தான்’ என அவர் கூறியுள்ளார். மேலும் ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது ‘மதத்தையோ அல்லது இஸ்லாத்தையோ பயன்படுத்தி பதவிக்கு வர நினைப்பவர்களே மிகவும் மோசமானவர்கள். இஸ்லாம் வெறும் மதம் தான் அது அரசியல் கட்சியில்லை என்பதை மொரித்தானியா மக்கள் நன்கு அறிந்துள்ளார்கள்’ என குறிப்பிட்டிருந்தார்.

கருத்து :

தவறுக்கு காரணமானவனே தவறை குறை கூறுவது போல, இந்த அப்துல் அஜிஸ் தன்னுடைய பதவிக்காக மக்களின் இரத்தங்களையும் கண்ணியத்தையும் குலைத்து விட்டு, பிறகு அதே விஷயத்தை காரணம் காட்டி மேற்குலகத்தின் ஆதரவை பெற்று தன்னுடைய பதவியை தக்க வைக்க இஸ்லாத்திற்கு எதிராக போர் தொடுத்துள்ளார். இதனை கண்டித்து நவ்காட் (Nouakchott) என்ற இடத்தில் உள்ள பள்ளிவாசலில் ஷேக் முஹம்மது அல் ஹசன் அல் துதி ஜும்மா உரை நிகழ்த்தியிருந்தார். உடனே ஷேக் துதியின் மேற்பார்வையில் இருந்த ‘மர்கஸ் தகாவின் உலமா’ என்ற மையத்தை எந்த ஒரு அறிவிப்பும் செய்யாமல் வெறும் தீவிரவாதத்தை தூண்டுகிறது என்று கூறி அதிபர் அப்துல் அஜிஸ் அதனை மூட உத்தரவிட்டுள்ளார்.

ஆக, ஒல்து அப்துல் அஜிஸ், அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எதிர்க்க கூடிய மற்ற கொடுங்கோல் ஆட்சியாளர்களுடன் சேர்ந்து,  இஸ்லாத்திற்கு எதிராகவும் முஸ்லிம்களுக்கு எதிராகவும் வெளிப்படையான சிலுவை யுத்தத்தை ஆரம்பித்துள்ளார்.

நாம் அவருக்கு அல்லாஹ்வுடைய கடும்கோபத்தை கொண்டு எச்சரிக்கை செய்கின்றோம். மொரித்தானியாவின் நேர்மையான முஸ்லிம்களிடம் இந்த அடக்குமுறையை முடித்து வைக்க நாம் கோரிக்கை விடுக்கின்றோம். நபி (ஸல்) கூறினார்கள்,

«إِنَّ النَّاسَ إِذَا رَأَوا الظَّالِمَ فَلَمْ يَأْخُذُوا عَلَى يَدَيْهِ أَوْشَكَ أَنْ يَعُمَّهُمُ اللَّه بِعِقَابٍ مِنْهُ»

 “மக்கள் அநியாக்காரனை சந்தித்து  அவனை தங்களின் கைகளால் தடுக்க வில்லை என்றால் அல்லாஹ் அவர்கள் அனைவரின் மீதும் தண்டனையை சூழ்ந்து கொள்ளும் நிலை ஏற்படக் கூடும்”.

மேலும் அவர்கள் (ஸல்) கூறினார்கள்…

«كَلَّا، وَاللَّه لَتَأْمُرُنَّ بِالْمَعْرُوفِ، وَلَتَنْهَوُنَّ عَنِ الْمُنْكَرِ، ولتَأْخُذُنَّ عَلَى يَدِ الظَّالِمِ، ولَتَأْطرُنَّهُ عَلَى الْحَقِّ أَطْرًا، ولَتَقْصُرُنَّهُ عَلَى الْحَقِّ قَصْرًا، أَوْ لَيَضْرِبَنَّ اللَّه بقُلُوبِ بَعْضِكُمْ عَلَى بَعْضٍ، ثُمَّ ليَلْعَنكُمْ كَمَا لَعَنَهُمْ»

“நிச்சயமாக நீங்கள் நல்லதை ஏவி தீயதை தடுத்து கொள்ளுங்கள், அநியாயக்காரனின் கையை முடக்கி அவனை ஹக்கை (உண்மையை) எடுத்து கொள்ள வையுங்கள், இல்லையேல் அல்லாஹ் உங்களை சிலரின் உள்ளங்களோடு சேர்த்து உங்களுக்கு முன்னர் (பனூ இஸ்ரவேலை) சபித்தது போல் சபித்து விடுவான்.”

யா அல்லாஹ்! கொடுங்கோல் ஆட்சி இன்னும் நீடித்து கொண்டிருக்கிறது, சர்வாதிகாரிகள் அதிகரித்து கொண்டிருக்கின்றனர், எனவே இந்த மார்க்கத்தை மேலோங்க செய்யும் நபர்களை தயார் செய்வாயாக, அவர்கள் சத்தியத்தின் மக்களை ஆதரித்து அசத்தியத்தின் வீரர்களை அழிக்க செய்வாயாக. நபி (ஸல்) கூறினார்கள்

«…ثُمَّ تَكُونُ مُلْكاً جَبْرِيَّةً فَتَكُونُ مَا شَاءَ اللهُ أَنْ تَكُونَ ثُمَّ يَرْفَعُهَا إِذَا شَاءَ أَنْ يَرْفَعَهَا ثُمَّ تَكُونُ خِلَافَةٌ عَلَى مِنْهَاجِ النُّبُوَّةِ ثُمَّ سَكَتَ»

 “..பிறகு கொடுங்கோல் ஆட்சி வரும், அல்லாஹ் நாடும் வரை அது நிலைத்திருக்கும். பிறகு அல்லாஹ் அதனை நீக்கிவிடுவான். பிறகு நபிவழியில் கிலாஃபா உருவாகும் என்று கூறி அமைதி காத்தார்கள்”.  

Comments are closed.