சமீப பதிவுகள்

செய்திப்பார்வை 05.09.2018

தலைப்புச்செய்திகள்:

1.ஆப்கானிஸ்தானில் தனது இராணுவதளத்தை அமைக்கவுள்ளது சீனா.

2.இத்லிபுக்கான போர் தொடங்கியுள்ளது.

3.ஆப்பிரிக்காவுக்கான புதிய போராட்டம்.

விவரங்கள் :

1.ஆப்கானிஸ்தானில் தனது இராணுவதளத்தை அமைக்கவுள்ளது சீனா.

ஆப்கானிஸ்தானின் பதாக்‌ஷன் மாகாணத்தில் சீனா தனது இராணுவ பயிற்சி தளத்தை அமைக்க தொடங்கி இருக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. சீனா உடனடியாக இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளது, ஆனால் கடல்கடந்து  தனது இராணுவ இருப்பை மெதுவாக விரிவாக்கம் செய்யும்போது அதனை மறைக்க முற்படும்போதெல்லாம் வழக்கமாக இந்த யுத்தியையே சீனா பயன்படுத்தி வருகிறது. ஜிபோட்டியில் கடற்படை தளத்தை திறப்பதற்கு முன்பு இதுபோன்ற யுத்தியையே சீனா பயன்படுத்தியது. சிரியாவின் போர்களித்திலிருந்து உய்குர் வீரர்கள் வெளியேறி சீனாவுக்குள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக சீனா கவலை கொண்டுள்ள காரணத்தால் அங்கு தான், கொண்டிருக்கும் சிறிய அளவிலான இருப்பையும் சீனா மறுத்து வருகிறது. அமெரிக்காவை பொறுத்தமட்டில் சர்வதேச அமைப்புகளின் மூலம் சீனா பலன்களை அனுபவித்து வருவதாகவும் அதேசமயம் அதற்கு பயனளிக்கும் அந்த அமைப்பிற்கு பாதுகாப்பு வழங்குவதற்காக எவ்விதமான செலவீனங்களையும் அது ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் நீண்டகாலமாக விவாதித்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கான சுமையை ஏற்றுக்கொள்ள மற்ற நாடுகள் முன்வரவேண்டும் என அமெரிக்கா நீண்டகாலமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

2.இத்லிபுக்கான போர் தொடங்கியுள்ளது.

கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் இத்லிப் மாகாணத்தில் அரசுக்கு ஆதரவான படைகள் தாக்குதல் நடத்தும் என எதிர்பார்க்கப்பட்டதற்கு முன்கூட்டியே செப்டம்பர் 4ம் தேதி சிரியாவின் வடமேற்கு பகுதியில் ரஷ்யா வான்வழி தாக்குதலை மீண்டும் நடத்த தொடங்கியுள்ளது. இத்லிப் மற்றும் லடாக்கியாவுக்கு இடைப்பட்ட  பகுதியில் 16 இடங்களை குறிவைத்து 30 ஆகாயவழி  தாக்குதல்களை ரஷ்ய போர் விமானங்கள் நடத்தின, என்று இங்கிலாந்திலிருந்து செயல்படும் சிரியாவிலுள்ள மனித உரிமைக்கான கண்காணிப்பகம் அறிவித்துள்ளது. இத்லிபானது பஷார் அல் அசாதுக்கு எதிராக 2011 ஆம் ஆண்டு தொடங்கிய எழுச்சியின் காரணமாக எதிராளிகள் கைப்பற்றிய இடங்களை படிப்படியாக  சிரிய அரசு மீண்டும் கைப்பற்றியதன் காரணமாக சுற்றிவளைக்கப்பட்டுள்ள 70,000 கிளர்ச்சியாளர்களை கொண்ட குழுக்களின் இறுதி கோட்டையாகும். துருக்கியுடைய இராணுவம் இத்லிபின் மேற்கு பகுதியை பாதுகாப்பதற்காக வேண்டி தனது எல்லையோரமாக இத்லிப் மற்றும் சிரிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் இடங்களுக்கு இடையே ஒரு தொடர் இராணுவ நிலையை நிறுவியுள்ளது. சமீபத்தில் இந்த இராணுவ நிலைகளில் வான்வழி தாக்குதல்களை தடுக்கும் கருவிகள் பொருத்தப்பட்டன மற்றும் கான்கிரீட் சுவர்கள் மற்றும் மருத்துவமனைகள் மற்றும் ஹெலிகாப்டர் இறங்கு தளம் ஒன்று ஆகியவை கட்டப்பட்டன. இத்லிபுக்கான போராட்டத்தில் போராட்டக்குழுக்களில் பல, துருக்கி தமக்கு உதவி புரியும் என்று எதிர்பார்க்கின்றன, அவர்களுடைய எதிர்பார்ப்பை துருக்கி நிறைவேற்றுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

3.ஆப்பிரிக்காவுக்கான புதிய போராட்டம்.

சீனா-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மாநாட்டின் (FOCAC) துவக்க விழாவின் போது, ஆப்பிரிக்க நாடுகளுக்கு $60 பில்லியன் டாலர்கள் அளவுக்கு கூடுதலாக நிதியுதவி, முதலீடு மற்றும் கடன்களாக அளிக்கவிருப்பதாக சீன அதிபர் ஜீ ஜின்பிங் அறிவித்தார். 2000 ம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த FOCAC நடைபெறுகின்றது இதில் பெரும்பாலும் மிகப்பெரிய அளவிலான நிதி வழங்குதல் அல்லது கொள்கைகளின் அறிவிப்புகள் வெளியாகின்றன. ஜீயும் 2015 உச்சிமாநாட்டின் போது ஆப்பிரிக்க நாடுகளுக்கு $60 பில்லியன் டாலர்கள் அளவிலான திட்டங்களை அறிவித்தார். சீன அதிபர் சமீபத்திய இந்த நிதியுதவிகளை எவ்விதமான நிபந்தனைகள் இன்றியும் மேலும் ஆப்பிரிக்காவின் ஏழை நாடுகளின் கடன்களை தள்ளுபடி செய்தும் வழங்குவதற்கு முன்வந்தார். இந்த செயல்பாடானது இக்கண்டத்திற்குள் நுழைய விரும்பும் பலமிக்க நாடுகளின் வரிசையில் சீனாவும் சேர்ந்துள்ளது என்பதற்கான உதாரணமாகும். மனிதாபிமானத்தின் அடிப்படையில் சீனா நிதியை வழங்கவில்லை, அதற்கு பகரமாக சிலவற்றை அது எதிர்பார்க்கின்றது  எனும் கசப்பான உண்மையை தற்பொழுது இலங்கை அறிந்துள்ளது. அது வழக்கமாக வளங்கள், துறைமுகங்கள் மற்றும் கனிமவளங்கள் ஆகியவற்றை அடைவதேயாகும்.

பெய்ஜிங்கில் நடைபெற்ற சீனா-ஆப்பிரிக்கா இடையேயான உச்சி மாநாடு, வர்த்தக பற்றாக்குறையை வெளிச்சமாக்கியுள்ளது.

செய்தி :

வளரும் நாடுகளில் கடன் உதவி பெறும் அணுகுமுறை பற்றி பெருகிய விமர்சனங்கள் எழுந்திருக்கும் சூழலிலும்,சீனாவுடனான பொருளாதார உறவுகளை மையமாகக் கொண்டு பெய்ஜிங்கில் நடைபெறவிருக்கும் இரண்டு நாள் உச்சிமாநாட்டிற்காக ஆப்பிரிக்க தலைவர்கள் ஒன்று கூடினர்.

திங்கட்கிழமை தொடங்கவிருக்கும் சீனா-ஆபிரிக்க ஒத்துழைப்பு பற்றிய கருத்துக்களுக்காக ஜனாதிபதி ஜி ஜின்பிங் 50 க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க நாட்டு தலைவர்களுக்கு அழைப்புவிடுத்திருக்கிறார். மூன்று ஆண்டிற்கு ஒரு முறை நடைபெறும் இந்த மாநாடு , சீனா ஆப்பிரிக்க கண்டத்திற்கு அதிகமான கடன்கள் கொடுத்துவருவதை காட்டுகிறது. ஜி ஜின்பிங் 2015 ல் தென்னாபிரிக்காவின் ஜோகன்னஸ்பர்கில் நடந்த கடந்த உச்சிமாநாட்டில் ஆப்பிரிக்காவிற்கு உதவி மற்றும் கடனாக $ 60 பில்லியன் அறிவித்தது

சீனாவின் பொருளாதார குறிப்பு பெய்ஜிங் மற்றும் ஆப்பிரிக்க கண்ட நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் கடந்த வருடம் 170 பில்லியன் டாலருக்கு (14 சதவிகிதம்) உயர்ந்துள்ளது.(அல்ஜஸீரா 3வது செப்டம்பர் 2018)

கருத்து:

ஆப்பிரிக்கா ஒரு காலனியாதிக்க நாட்டின் கட்டுபாட்டில் இருந்து விலகி மற்றொரு காலனியாதிக்க நாட்டின் பிடியில் மாட்டிக்கொண்டு ஏமாறபோகிறதா? உதாரணத்திற்கு ஸ்ரீலங்கா போன்று கடன் தொல்லையில் எந்த ஒரு நாடும் மாட்டிக்கொள்ள விரும்பவில்லை. சீனா, ஒன்றும் முதல் அல்லது ஒரே காலனியாதிக்க சக்தியாக இருப்பதில்லை என்பதை விளங்கவேண்டும். ஆப்பிரிக்காவின் பொருளாதார மாற்றங்களை (பிரச்சனைக்கான தீர்வை) ஆப்பிரிக்காவின் வளங்களின் செல்வம் ஏன் ஆற்றவில்லை? ஆப்பிரிக்காவின் செல்வம் எவ்வாறு அதன் நாடுகளையும் மக்களையும் சீனாவிற்கான பொருளாதார அடிமைத்தனத்திற்கு ஈர்க்கப் படுகிறது?

சீனா ஒரு சித்தாந்தத்தின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது, அந்த கருத்தியலிருந்து வெளிவரும் ஒரு உலகக் கண்ணோட்டத்துடன் அது மற்ற நாடுகளை அணுகுகிறது. சீனா,தன் நாடு வளமடைய மற்ற நாடுகளின் செல்வத்தை கொள்ளையடிக்கிறது.

நம் முஸ்லீம் நாடுகள் ஒரு அறிவார்ந்த அரசியல் பார்வையை கட்டமைக்க அல்லது செயல்படுத்த முடியாத ஒரு நிலையில் தான் உள்ளது. ஏனென்றால் அடிப்படைக் கூறாக இருக்கும் ஒரு சித்தாந்த சிந்தனை இல்லை. முஸ்லிம் நாடுகள் நேர்மையற்ற, தகுதியற்ற, விரக்தியுள்ள மற்றும் அவர்களின் எஜமானர்களுக்கு கைப்பாவையாக விளங்கும் நபர்களை தலைவர்களாக கொண்டுள்ள்ளது.

மேற்கத்திய சட்டங்களை இந்த உலகை பல பிரச்சனைகளின் பக்கம் தள்ளியுள்ளது. உலகளாவிய பொருளாதார பிரச்சனை பல நாடுகளை வறுமையில் ஆக்கியுள்ளது. மேலும் பணம் அச்சடித்தல் தொடர்பான மேற்கத்திய சட்டம் பல நாடுகளை பணவீக்கத்தை சந்திக்க வைத்துள்ளது. மேலும் மேற்கத்திய ஆட்சியமைப்புமுறை அமெரிக்காவில் மட்டும் அல்லாமல் ஐரோப்பாவிலும் இன ரீதியான பிரிவை ஏற்படுத்தியுள்ளது. லிபரல் மனிதாபிமான கொள்கைகளை போலந்து, ஹங்கேரி, பிரான்ஸ், டென்மார்க், ஆஸ்திரியா, ஜெர்மனி, சுவீடன், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் தோல்வியுற்றுள்ளது. மேலும் இந்த நாடுகளில் மேற்க்கத்திய சட்டம் பின்பற்றப்படுவதின் விளைவாக சகிப்புத்தன்மை மற்றும் மரியாதை ஆகியவை அழிக்கப்பட்டு வெறுப்பு மற்றும் மன்னிப்பின்மை ஆகியவை தொடர்ந்து வளர்ந்து வருகிறது.

ஒரே ஒரு சிந்தாந்தம் மட்டுமே அதன் மக்களையும் நிலங்களையும் காப்பாற்றுகிறது மேலும் பேராசை கொண்ட காலனித்துவவாதிகளிடமிருந்து சுரண்டலை தடுக்கிறது என்று சொன்னால் அது இஸ்லாம் மட்டும் தான். இஸ்லாமிய சட்டங்கள் மனிதர்களை கண்ணியமாக நடத்துகின்றன, தனிமனிதனையும் சமுதாயத்தையும் மேம்படுத்துகின்றன, பாதுகாக்கின்றன, மனிதர்களை ஒற்றுமையின் பக்கம் ஒன்றிணைக்கின்றது. நிறம் அல்லது மொழி ஆகிய எந்த வேறுபாடும் இல்லாமல் அனைவரையுமே ஒரே பார்வையில் பார்க்கின்றது.

இஸ்லாம் மனிதர்களுக்கான ஒரு சித்தாந்தமாகும். மனித சமூகத்திற்கு ஏற்ற ஒரே சித்தாதந்தமாகும்.

يَسْئَلُونَكَ مَاذَا يُنفِقُونَۖ قُلْ مَآ أَنفَقْتُم مِّنْ خَيْرٍ فَلِلْوَٰلِدَيْنِ وَٱلْأَقْرَبِينَ وَٱلْيَتَٰمَىٰ وَٱلْمَسَٰكِينِ وَٱبْنِ ٱلسَّبِيلِۗ وَمَا تَفْعَلُوا مِنْ خَيْرٍ فَإِنَّ ٱللَّهَ بِهِۧ عَلِيمٌ

அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; “எதை, (யாருக்குச்) செலவு செய்யவேண்டும்” என்று. நீர் கூறும்; “(நன்மையை நாடி) நல்ல பொருள் எதனை நீங்கள் செலவு செய்தாலும், அதை தாய், தந்தையருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் (கொடுங்கள்). மேலும் நீங்கள் நன்மையான எதனைச் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை அறிந்து (தக்க கூலி தருபவனாக) இருக்கிறான்.” (சூரா பகரா 2:215)

இஸ்லாத்தின் பொருளாதார அமைப்பானது பணக்கார வங்கியாளர்களின் விருப்பத்திற்கு உட்பட்டது அல்ல, மக்களின் அடிப்படைத் தேவைகளை சுரண்டுவது, உலகளாவிய பொருளாதார தொற்றுநோயை ஏற்படுத்துகிற விதத்தில் அமைந்திருக்கும் முதலாளித்துவ பொருளாதார அமைப்பிற்கு முற்றிலும் மாற்றாக அனைவரின் அடிப்படை தேவையை பூர்த்தி செயும் விஷயத்தை கடமையாககொண்டிருக்கும் கொள்கையை உடையது இஸ்லாமிய பொருளாதாரம். அடிப்படை தேவைமட்டுமின்றி அனைவரும் வசதியாகவும் கௌரவமாகவும் வாழ்வதற்கு ஏற்ற வாய்ப்பை ஏற்படுத்தித்தரவும் உதவுகிறது. சொத்துக்கள் மற்றும் சொகுசுகள் ஆகியவை மக்களின் நலனுக்காகவும் நன்மைக்காகவும் செயல்படுகின்றன – மேலும் தனிநபர்கள் மற்றும் சமுதாயம் வளர பயன்படுத்தப்படும்.

وَلَا تَأْكُلُوٓا أَمْوَٰلَكُم بَيْنَكُم بِٱلْبَٰطِلِ وَتُدْلُوا بِهَآ إِلَى ٱلْحُكَّامِ لِتَأْكُلُوا فَرِيقًا مِّنْ أَمْوَٰلِ ٱلنَّاسِ بِٱلْإِثْمِ وَأَنتُمْ تَعْلَمُونَ

அன்றியும், உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருளைத் தவறான முறையில் சாப்பிடாதீர்கள்;. மேலும், நீங்கள் அறிந்து கொண்டே பிற மக்களின் பொருள்களிலிருந்து(எந்த) ஒரு பகுதியையும், அநியாயமாகத் தின்பதற்காக அதிகாரிகளிடம் (இலஞ்சம் கொடுக்க) நெருங்காதீர்கள். (சூரா அல் பகரா 2:188)

பூமியிலிருந்து எல்லா செல்வங்களும் மக்களுக்கு சொந்தமானது. தனியார் நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள், காலனித்துவ பெருநிறுவனங்கள் அல்லது வெளிநாட்டு அரசாங்கங்கள் அல்ல. இஸ்லாம் அதன் நாணயத்தை(தங்கம் மற்றும் வெள்ளி) சுழற்சியில் இருக்குமாறு கட்டளையிட்டுள்ளது மேலும் பணம் குறைந்த நபர்களிடத்தில் மட்டும் சுழன்றுகொண்டிருப்பதை தடுத்து அதை பதுக்கிவைக்கும் செயலையும் தடுக்கிறது.

كَىْ لَا يَكُونَ دُولَةًۢ بَيْنَ ٱلْأَغْنِيَآءِ مِنكُمْۚ ِ

மேலும், உங்களிலுள்ள செல்வந்தர்களுக்குள்ளேயே (செல்வம்) சுற்றிக் கொண்டிருக்காமல் இருப்பதற்காக (இவ்வாறு பங்கிட்டுக் கொடுக்கக் கட்டளையிடப் பட்டுள்ளது)
(சூரா அல் ஹஷ்ர் 59:7)

மனிதகுலத்தின் அறியாமை, துணிச்சல், இனவெறி மற்றும் வெறுப்பு ஆகியவற்றின் மோசமான உதாரணங்களை கொண்டுள்ள நபர்களை ஆட்சி அதிகாரத்தில் அனுமதிக்க முடியாது என்று ஒரு ஆளும் முறையை கொண்டுள்ளது இஸ்லாம்.

இஸ்லாம் மிகவும் அறிவார்ந்த நாகரிகத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியது.உலகின் பகுத்தறிவு, மற்றும் புறநிலை சிந்தனையாளர்கள், தவறான தகவல்களுக்கு அப்பாற்பட்டது, தெளிவான கண்களுடன் இஸ்லாமைப் புரிந்துகொள்வதற்கான நேரம் வந்துள்ளது. மேலும் இஸ்லாமிய உம்மாவின் நன்மைக்காகவும், தோல்வியுற்ற தாராளவாத மதச்சார்பின்மையிலிருந்து உலகத்தை காப்பாற்றவும் இஸ்லாமியர்கள் மீண்டும் ஒருமுறை இஸ்லாமியத்தை நடைமுறைப்படுத்தி அதை மற்ற தேசத்திற்கு எடுத்துச் செல்வதற்கான நேரம் வந்துள்ளது.

இத்லிப் நகரில்  தொடரும் பேரழிவு.

செய்தி :

ரஷ்யா, ஈரான், சிரியா ஆகிய நாடுகளால் முன்னெடுக்கப்பட்ட இத்லிப் மீதான இறுதி தாக்குதலின் விளைவுகளைப் பற்றிய ஒரு மோசமான படம் வரைந்து சமீபத்திய ஊடக அறிக்கைகள் காட்டுகின்றன. ஆயினும், வெகுகாலமாக இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதில்லை என்றாலும், படுகொலைகளில் மேற்குலகம் ஒரு அப்பாவி பார்வையாளராக இருக்காமல் ஒரு கூட்டு கொலையாளியாக தன் கைகளில் இரத்தத்தை வைத்திருப்பதில் அது மகிழ்ச்சியாக தான் உள்ளது. இத்லிப் நெருக்கடியைக் கையாள்வதில் உலக மக்களும் நாடுகளும் ஒழுக்கநெறி உணர்வு இழந்து விட்டார்களா?

கருத்து : 

சில நாட்களால் இத்லிப் மீதான ஏற்படும் தாக்குதலின் செய்தி தீவிரமாக அதிகரித்து உலகளாவியளவில் பரவியுள்ளது. ரஷ்யா, சிரியா மற்றும் ஈரான் ஆகியவை பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் அங்கு சிக்கியுள்ளதைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல், இத்லிப் மீது தங்கள் ஆயுதங்களின் முழுத் துயரத்தைத் தளர்த்துவதற்கு ஆர்வமாக உள்ளன. மேற்குலகமும் இஸ்லாமிய எதிர்ப்பின் இறுதிக் கோட்டையின் வீழ்ச்சியை பார்க்க மிகவும் ஆர்வம் காட்டியுள்ளதுடன், ரஷ்யாவை இரத்தக்களரி தாக்குதல்களை தொடங்குவதற்கு பச்சை கொடி காட்டியுள்ளது.ரஷ்யாவும் சிரியாவும் இரசாயன ஆயுதங்களை பயன்படுவதிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்ற நிபந்தனை மட்டுமே ஒரே ஒரு நிம்மதியான விஷயம். என்ன ஒரு குணம் இந்த மேற்குலகம் வைத்துள்ளது? ரஷ்யாவும் அதன் கூட்டாளிகளும் தன் ஆயுதங்களை தயாராக்கி பொதுமக்களை கண்டுக்காமல் இத்லிபை நாசமாக்க உள்ளது. ரஷ்யாவும், சிரியாவும் கற்பனை செய்ய முடியாத அளவிலான படுகொலையை செய்ய இரசாயன ஆயுதங்களை தான் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், ஒவ்வொரு தடவையும் ரஷ்யா நடத்திய இரசாயன தாக்குதலுக்கு பகிரங்கமாக இஸ்லாமிய போராளிகள் மீது  ரஷ்யா குற்றம் சாட்டியது. ரஷ்யா நடத்திய கொடிய இரசாயன தாக்குதல் அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் தலையிட தூண்டும் என்ற பயம் ரஷ்யாவுக்கு உள்ளதால் அது தன் குற்றத்தை இஸ்லாமியர்கள் மீதே சாட்டுகிறது.
இத்லிபின் குடிமக்களை காப்பாற்றுவதற்காக மேற்கு தலையிட விரும்புவதில் சந்தேகம் உள்ளது என்றாலும், போருக்கு பின் சிரியா நாட்டில் தன் பங்கை பெறவும், தன்னுடைய ஆதிக்கம் இருக்க வேண்டும் எனவும் நாடுகின்றது என்பது தெளிவாகிறது.

இத்லிப் அழிக்கப்பட்டபின் சிரியாவில் ரஷ்யாவுக்கும் ஒரு பங்கு உள்ளது. அமெரிக்க இராணுவ தளபதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், சிரியாவில் உள்ள நூற்றுக் கணக்கான அமெரிக்க படைகளின் பாதுகாப்பிற்கு உறுதி செய்ய முடியாது என்று கூறுவதில் மாஸ்கோ தன்னுடைய சில காரியங்களுக்கு விலை கொடுக்க தயாராக உள்ளது என்று தெரிகிறது.அமெரிக்காவும் ரஷ்யாவின் அச்சுறுத்தல்களால் பின்தொடரப்படக்கூடாது என்று எண்ணி தனது படைகளை ரஷ்யாவிலிருந்து வரும் எந்தவொரு தாக்குதலையும் தடுக்க முழு சக்தியைப் பயன்படுத்த உத்தரவு கொடுத்துள்ளது. சிரியாவின் போருக்குப் பின் அதில் வெளிநாட்டு வல்லரசுகளின் பாதிப்பு என்னவாக இருக்கும் என்ற வாக்குவாதம் ஒரு பக்கம் இருக்க,  இத்லிப் குடிமக்களின் விதியைப் பற்றி உலகில் எவரும் ஆர்வமற்ற நிலையில் இருப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

போரின் கொள்கைகள் மற்றும் ஜெனீவா உடன்படிக்கையின் கட்டளைகளின் மீது தன்னை பெருமிதம் கொள்ளும் அதே மேற்குலகம், இத்லிப் மற்றும் முஸ்லிம்களின் பிரச்சனைக்கூறிய மற்ற பகுதிகளில் இதை அகற்றுவிட்டது. அசாத் மீட்டெடுத்த போராளிகளின் இடங்களிலிருந்து, போராளிகளும் அவர்களது குடும்பங்களும் பாதுகாப்பாக வேறு பகுதிக்கு கொண்டு சேர்க்கப்படும் என்ற பேச்சுவார்த்தைகளை பல மாதங்களாக, மேற்குலகமும் ரஷ்யாவும் இஸ்லாமிய போராளிகளுடன் மேற்கொண்டன. இந்த நாளை எதிர்ப்பார்த்து தான் பல மாதங்களாக அமெரிக்கவும் ரஷ்யாவும் திட்டமிட்டன இறுதியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பலியாகுவது தான் முடிவாக இருக்கும்.  இத்லிபின் வரவிருக்கும் படுகொலைக்கு உதவுவதற்கும், ஊக்குவிக்கவும் முஸ்லீம் நாடுகளின் பங்குள்ளது என்பது ஒரு பெரும் அவமானமாகும். இத் துரோகத்தின் முன்னணியில் துருக்கி, ஈரான், சவூதி அரேபியா ஆகிய நாடுகள் – இத்லிபை அழிக்க  ரஷ்யா மற்றும் அமெரிக்காவுடன் சேர்ந்து இரகசியமாக சதித்திட்டங்களை தீட்டின.

முஸ்லீம் உம்மத்தின் ஒரே ஒரு தீர்வு நேர்மையாக வழிநடத்தப்பட்ட கிலாஃபா அரசின் (இஸ்லாமிய அரசு) மறுசீரமைப்பதற்காக வேலை செய்வதாகும், இதன் மூலம் சிரியா, லிபியா, ஏமன் மற்றும் இஸ்லாமிய உலகில் வேறு இடங்களில் வெளிநாட்டு சக்திகள் தங்கள் துரோகம் நிறைந்த போர்களை போரிட அனுமதிக்கப்பட மாட்டார்கள். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) கூறினார், ” நிச்சயமாக இமாம் ஒரு கேடயம் ஆவார், இவர் பின் தான் மக்கள் போர் புரிவார்கள் மற்றும் இவரைக் கொண்டு தான் பாதுகாக்கப்படுவார்கள். [முஸ்லிம்]

 அப்துல் மஜீத் ப்ஹட்டி.